.

Friday, September 29, 2017

வருந்துகிறோம்
    மயிலாடுதுறை தோழர் P.சூரியமூர்த்தி TT  இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் சூரியமூர்த்தி பல ஆண்டுகளாக நமது சிதம்பரம் வல்லம்படுகை தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்து மயிலாடுதுறைக்கு மாற்றலில் சென்றவர். அத்தோழரின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். தோழரின் மறைவினால் வருந்தும் தோழரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நமது மயிலாடுதுறை தோழர்களுக்கும் நமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை  மயிலாடுதுறை திருவள்ளுவர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

Thursday, September 28, 2017

கடலூர் பணிஓய்வு பாராட்டு விழா-27.9.2017
கடலூர் GM அலுவலகக்கிளை சார்பில் 30.9.2017 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள் K.ஜெயராமன், C.S.சேகர் மற்றும் தோழியர் V.வசந்தி ஆகியோருக்கு பாராட்டு விழா 27.9.2017 மதிய உணவு இடைவேளையில் கிளைத்தலைவர் தோழர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தோழர் P.ஜெயராஜ் வரவேற்றார். பணிஓய்வு பெறும் தோழர்களை தோழர் E.விநாயகமூர்த்திதோழர் AC.முகுந்தன், தோழர் D.குழந்தைநாதன், தோழர் A.சாதிக்பாஷா, தோழர் R.செல்வம், தோழர் V.இளங்கோவன் மற்றும் தோழியர் V.கீதா ஆகியோர் பாராட்டிப் பேசினர். பின்னர் கிளையின் சார்பில் பணிஓய்வு பெரும் தோழர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

மேலும், மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். (தோழரது முழு சிறப்புரை கீழே இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். கிளைத்தோழர் AS.குருபிரசாத் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த கிளைச்செயலர் தோழர்.S.இராஜேந்திரன் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.






Wednesday, September 27, 2017


பணி நிறைவு வாழ்த்துக்கள்! 
இலாக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்து 30.9.2017 ஓய்வுபெறும்
தோழர் K.ஜெயராமன் TT கடலூர்
தோழர் C.S.சேகர் Motor டிரைவர் கடலூர்
தோழர் R.நாகராஜன் TT கடலூர்
தோழர் S.தட்சணாமூர்த்தி JE விழுப்புரம்
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது. 

தோழர் P.சென்னகேசவன்
பணிநிறைவு வாழ்த்துக்கள்

தமிழகத்தின் பெரும்பான்மையான தோழர்களின் அன்பிற்கும், நெருக்கத்திற்கும் உரியவரான வேலூர் தோழர் சென்னகேசவன் JTO செப்டம்பர் 30 பணிஓய்வு பெறுகிறார். அனைவருடனும் உரிமையோடும் வெளிப்படையாக பழகுகின்ற தோழர் சென்னக்கேசவன்.
இலாக்காவில் மஸ்தூராக நுழைந்து NFTE இயக்கம் போராடிப் பெற்று தந்த பதவி உயர்வுகளை தனது விடாமுயற்சியின் மூலம், பல்வேறு இலாக்கா பதவி உயர்வுகளை முழுமையாகப் பெற்று தற்போது JTOவாக பணி ஓய்வு பெறுகிறார். இவரது சாதனை அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு.
இலாக்காவினில் பெற்ற பல்வேறு உயர்வுகளைப்போல் தொழிற்சங்கத்திலும் நிரந்தர ஊழியராக நுழைந்த ஆண்டிலேயே கோட்டச் சங்க மாநாட்டில் லைன்ஸ்டாப் சங்க அமைப்புசெயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, கோட்டசங்கத்தில் பல பொறுப்புகளை பெற்று பணிஓய்வின் போது மாநில சங்க துணைத்தலைவராக பதவியில் தொடர்கிறார்.
   நமது மாவட்டத்தில்   நடைபெற்ற  பல்வேறு     நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு    தனது     முழுமையான               தொழிற்சங்க செயல்பாட்டினை வெளிப்படுத்தினார். தோழர் சென்னகேசவனின் தொழிற்சங்கப் பணியும், சமூகப்பணியும் முன்னிலும்  முனைப்பாக தொடரவும்,     பணி     ஓய்வுக்காலம்     நலமோடும், வளமோடும் பயனுள்ளதாக அமைந்திட கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பாக தோழர் சென்னகேசவனைப் பாராட்டி வாழ்த்துகிறோம்,


தோழர் பிச்சுமணி
பட திறப்பு

புதுவை NFTE மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர் பிச்சுமணி பட திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம்   26-09-17 புதுவை       மனமகிழ்     மன்றத்தில்    மாவட்ட தலைவர் தோழர் 
M.
தண்டபாணி தலைமையில் நடை பெற்றது. மேனாள் மாநில செயலர் தோழர் சு.தமிழ்மணி தோழர் பிச்சுமணி படத்தை திறந்து வைத்து புகழஞ்சலியாற்றினார்.  தோழர் P.காமராஜ்,  NFTE மாநிலதலைவர் நமது மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர், TMTCLU பொது செயலர் தோழர் R.செல்வம்,  புதுவை மாவட்ட செயலர் தோழர் M.செல்வரங்கன், தோழர் R.தங்கமணி, NFTE முன்னாள் மாவட்ட செயலர். தோழர்  A.ஹரிகரன், NFTE முன்னாள் மாவட்ட உதவி செயலர். ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி ஆற்றினர்.

மற்றும் தோழமை சங்க. தோழர் S.ராஜநாயகம், DGM (F) தோழர்  N.கொளஞ்சியப்பன், BSNLEU,தோழர்  P.ஹரிதாஸ், SNEA ,தோழர்  D.அன்பழகன், AIBSNLPWA. தோழர் K. ஜீவாந்தன், FNTO,.தோழர் V. சேகரன், SEWA    ஆகியோர் பங்கு கொண்டு  தோழரின் புகழை எடுத்து கூறினார்கள். 


Thursday, September 21, 2017

நமது NFTE-TMTCLU சங்கங்களின் சார்பில் தமிழ் மாநிலத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு போனஸாக ரூ 7000/- வழங்கிட கோரி மாநில நிர்வாகத்திடம் 19.9.2017 அன்று  கடிதம் கொடுக்கப்பட்டது.



Monday, September 18, 2017

தோழர் பிச்சுமணி மறைவுக்கு வருந்துகிறோம்.

புதுவை NFTE தொழிற்சங்கத்தின் மூத்த தோழர் எஸ்.பிச்சுமணி நேற்று இரவு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சேலம் கோட்ட மகளிர் மயப் போராட்டத்தில் முன் நின்றவர். 1968 செப்.19 வேலை நிறுத்தத்தில் பங்கேற்று பழிவாங்கப்பட்டவர். வேலை நீக்கம் செய்யப்பட்டவர். புதுவை கோட்டத்தின் முதல் கோட்டத்தலைவர். புதுவை இயக்கங்களில் அவரில்லாமல் எதுவும் இல்லை என்கிற அளவில் தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் பிச்சுமணியின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது. 
கடலூர் TMTCLU மாவட்ட சங்கம் சார்பில் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-9-2017 கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் மாபெரும் தர்ணா நடைபெற்றது. சேலம் மாவட்ட செயலர் தோழர் பாலகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டம் முழுவதுமிருந்து ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Friday, September 15, 2017



டவர் கார்ப்பரேசன் எதிர்த்து
கண்டன ஆர்ப்பாட்டம் -15.9.2017

நாடு முழுவதுமுள்ள 65,000 க்கும் மேற்பட்ட BSNLக்கு உரிமையான  செல் கோபுரங்களை அதை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில்  மத்தியில் ஆளும் மோடி அரசு BSNL டவர்களை இணைத்து தனி நிறுவனம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை அழிக்கவும், தனியார் நிறுவனத்தை ஆதரிக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசைக்  கண்டித்து 15.09.2017 கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் கண்டன உரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள், தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.







Thursday, September 14, 2017


கண்டன ஆர்ப்பாட்டம்
நமது BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனி நிறுவனமாக நிறுவ மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இம்முடிவைக் கண்டித்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நாளை 15.9.2017 மதிய உணவு இடைவேளையில் கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்துத் தோழர்களும், தோழியர்களும் தவறாது கலந்து கொள்வோம்.

ஆர்ப்பரிப்போம்!!                                      வெற்றிபெறுவோம்!!!

Wednesday, September 13, 2017

போராட்ட விளக்கக் கூட்டம்-13.9.2017
தோழர்களே!
இன்று மாவட்ட முழுவதுமுள்ள கிளைகளில் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நேற்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்கள் தோழர்களுக்கு விளக்கப்பட்டது. தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் 

பண்ருட்டி

விழுப்புரம்


திண்டிவனம் 

சிதம்பரம்

வாழ்த்துகின்றோம்
கடலூர், புதுவை தொலைத்தொடர்பு மாவட்ட இணைந்த விளையாட்டுக் கவுன்சில் கூட்டம் இன்று கடலூரில் நடைபெற்றது. கூட்ட்த்தில் புதிய செயலராக தோழர் A.சகாயசெல்வன் MBA.. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழருக்கு கடலூர்  மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.