.

Sunday, July 28, 2019


தோழர் பட்டாபி அவர்கள் தனது வலைதளத்தில் (http://www.pattabiwrites.in) "Contract Labour Issue Tender Document/ Agreement Speaks So" எழுதிய ஆங்கிலக் கட்டுரை கடலூர் தோழர் வெ.நீலகண்டன் தமிழில் மொழிபெயர்த்து புத்தகவடிவில் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் கடந்த 25.7.2019 கடலூரில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்டது. அதன் pdf வடிவத்தின் நகல் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



Friday, July 26, 2019

உண்ணாவிரத போராட்டம் விலக்கு..
நமது கோரிக்கைகளை வலியுறுத்தி 27.07.2019 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது.  மாநிலச் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக  இன்று (26.7.2019) மாலை நமது பொதுமேலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.

 மாலை 05.15 மணியளவில் மாவட்டச்செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்டப்பொருளர் தோழர் A.S.குருபிரசாத் உடன் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் பொதுமேலாளரை சந்தித்தனர். முதலில் நமது பொதுமேலாளர் தனது வருத்தத்தை பதிவுசெய்தார். நாமும் நமது உறுதியான நிலைபாட்டினை எடுத்துரைத்தோம். மேலும் மாவட்ட நிர்வாகம் பிரச்சனைகளை மிக விரைவாக தீர்த்துவைப்பதாக  உறுதியளிக்கப்பட்டது.

                  
 நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்..

  • தோழர் K.முத்துக்குமார் JE /OFC  விழுப்புரம், உடனடியாக  Sales & Mktg  பகுதிக்கு மாற்றல் செய்யப்படுவார். மேலும்  தோழரின் Rule-8 விருப்ப மாற்றல் உத்தரவு தேர்தல் சரிபார்ப்பிற்குப்பின்  வழங்கப்படும்.
  • TT/Sr.TOA/JE கேடர் மாற்றல் பொறுத்தவரை பெரும்பான்மையான தோழர்களுக்கு  மாற்றல் உத்தரவு பொதுமேலாளரின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர்  தேர்தல் சரிபார்ப்பிற்கு பின்  வழங்கப்படும். 

  •  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை பொறுத்தவரை நீக்கப்பட்ட தோழர்களுக்கு படிப்படியாக மீண்டும் பணி வழங்கப்படும் எனவும், கல்லைத்தோழரின் மாற்றல் பிரச்சனை புதிய டெண்டரில் பரிசீலிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 இதனடிப்படையில் நமது உண்ணாவிரத போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்திட்ட, உண்ணாவிரத போராட்டத்திற்கு  ஆயத்தமாக இருந்த கிளைகளுக்கும், அனைத்து தோழர்களுக்கும் நன்றி. மேலும் தொடர் முயற்சி செய்திட்ட மாநிலச் சங்கத்திற்கும் நன்றி.......

Thursday, July 25, 2019

பணி ஓய்வு பாராட்டு விழா
கடலூர் BSNL பொதுமேலாளர் அலுவலகக் கிளை சார்பில் பணி ஓய்வு பெறும் சிரில் நினைவு அறக்கட்டளை தலைவரும், GM அலுவலக தலைவருமான தோழர் .சீனிவாசன், மற்றும் ஓய்வு பெற்ற தோழர் T.பாலாஜி ஆகியோரின் பாராட்டு விழா இன்று 25.7.2019 நடைபெற்றது. தோழியர் V.கீதா தலைமையில் தோழர் S. இரவி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் சங்க துணைத் தலைவரும் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை செயலருமான தோழர் V.லோகநாதன் துவக்கவுரை ஆற்றினார். வாழ்த்துரை யாக தோழர்கள் மாநில உதவி செயலர் தோழர் சுந்தரமூர்த்தி, மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் இளங்கோவன், TMTCLU பொதுச்செயலர் தோழர் ஆர்.செல்வம், மாவட்டத் தலைவர் தோழர் கணேசன், முன்னாள் மாவட்ட பொருளர் தோழர் சாதிக்பாஷா, மாவட்ட உதவி செயலர் தோழர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர் பன்னீர் செல்வம், மணி, கடலூர் தொலைபேசிக் கிளை செயலர் தோழர் விநாயகமூர்த்தி, மற்றும் TMTCLU மாவட்ட தலைவர் தோழர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்கள் BSNL புத்தாக்கம் மற்றும் இன்றைய நிலை பற்றி சிறப்பாக சிறப்புரை ஆற்றினார். பணி ஓய்வு பெற்ற தோழர் கள் ஏற்புரை வழங்கினர்.
விழாவில் தோழர் பட்டாபி அவர்கள் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள (http://www.pattabiwrites.in) "Contract Labour Issue-Tender Document/ Agreement Speaks So" என்ற ஆங்கிலக் கட்டுரை யின் தமிழாக்கத்தை நூல் வடிவில் கடலூர் மாவட்ட சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. நன்றியுரை தோழர் சகாயசெல்வன் வழங்கினார். சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளை செயலர் தோழர் ராஜேந்திரன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.



கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத மெத்தனபோக்கை கண்டித்து அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்  23.07.2019 அன்று நடைபெற்றது. கடலூரில் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும் R. பன்னீர்செல்வம் மாவட்ட அமைப்புச் செயலர், செஞ்சியில் TMTCLU மாநில பொதுச் செயலாளர் தோழர் ஆர்.செல்வம், உளுந்தூர்பேட்டையில் மாநில உதவித் தலைவர் தோழர்  V.லோகநாதன், விழுப்புரத்தில் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், விருத்தாசலம் மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, திண்டிவனத்தில் மாவட்ட செயலர் தோழர் D. குழந்தைநாதன், சிதம்பரம் தோழர் A.S.குருபிரசாத் மாவட்ட பொருளாளர், பண்ருட்டியில் மாவட்ட உதவிச் செயலர் தோழர் M.மஞ்சினி. நெய்வேலியில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் மாயகிருஷ்ணன் அப்துல்லா, கள்ளக்குறிச்சியில் முன்னாள் மாவட்ட  உதவித் தலைவர் தோழர் P. அழகிரி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.














  


Monday, July 8, 2019

நமது அகில  இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE ) முன்னாள் பொது செயலாளர் தோழர் டி ஞானையா நினைவு நாள். - ஜூலை 8 , 2017 .  தோழருக்கு  நமது  கடலூர் மாவட்ட சங்கத்தின் நினைவார்ந்த அஞ்சலிகள் !
அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து.தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .1941 அக்டோபரில் அஞ்சல்  துறையில் எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் .
திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும் & 1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார்.அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர்


Saturday, July 6, 2019


கண்டன ஆர்ப்பாட்டம்
BSNL நிறுவனத்தை சீர்குலைக்க சதி செய்யும் வகையில் தனியார் கம்பெனி (JIO) வாட்ஸ் ஆப் போன்ற சோஷியல் மீடியா மூலம் வதந்திகளை பரப்புவதை கண்டித்து 05.07.2019  அன்று தமிழகம் முழுவதும் BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நமது கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.