.

Monday, July 27, 2020

நிர்வாகத்துடன் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதின் விளைவாக நாளை 28.7.2020 நடைபெறவிருந்த ஒரு நாள் தர்ணா போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
தோழமையுடன்
BSNLEU NFTE-BSNL
TMTCLU NFTCL TNTCWU
மாவட்டச் சங்கங்கள்

Sunday, July 26, 2020


ஒரு நாள் தர்ணா போராட்டம்

மாவட்டத்தின் வருவாயைப் பாதிக்கும் சுமையாக நாள் தோறும் அதிகரிக்கும் தொலைபேசி பழுதுகள், பிராட்பேண்ட் பழுதுகள், FTTH குளறுபடிகள், FTTH புது வேட்டைக் காடாகி, FTTH இணைப்பு கேட்பவர்களுக்கு முறையான சீனியாரிட்டி லிஸ்ட் கிடையாது, செல் டவர்கள் பழுது, டீசல் இல்லாது சேவை முடக்கம், சிக்னல் கிடைக்காதது என இப்படிக் கவனிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கு…
      ஆனால், பொழுது விடிந்தால் எந்த ஒப்பந்த ஊழியர்களை வேலையை விட்டு விரட்டலாம் என்பதே நிர்வாகத்தின் ஓயாத வேலையா?
வாடிக்கையாளர் சேவை மையம் உட்பட BSNLலில் 8 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய கோரி,
கோவிட் ஊரடங்கு பாதிப்பு காலத்தில் பணிநீக்கம் கூடாது, சம்பள வெட்டு கூடாது என்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அரசின் வழிகாட்டலை மீறிய சட்ட விரோத வேலை நீக்கத்தை ரத்து செய்ய வற்புறுத்தி

BSNL கடலூர் மாவட்டப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு
ஜூலை 28 செவ்வாய் அன்று
ஒரு நாள் தர்ணா போராட்டம்
அநீதி களைய, நியாயம் நிலைநாட்டப்பட அணி திரள்வீர்!

தோழமையுடன்

             BSNLEU            NFTE-BSNL    

          TMTCLU        NFTCL         TNTCWU    

மாவட்டச் சங்கங்கள் 

Wednesday, July 22, 2020

கண்டன ஆர்ப்பாட்டம்
   





ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்










Tuesday, July 21, 2020

மரியாதைக்குரிய அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்


பெறுநர்: உயர்திரு

மரியாதைக்குரிய ஐயா / அம்மையீர்!
வணக்கம். ஒரு முக்கியமான பிரச்சனை குறித்துத் தங்களின் மேலான கவனத்திற்கும், தங்களின் மதிப்புமிக்கக் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

நமது நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். நிறுவனம் லாபகரமாக இயங்க இரண்டு பிரிக்க முடியாத அம்சங்கள் உள்ளன. ஒன்று வருவாயைப் பெருக்குவது. மற்றொன்று செலவுகளைக் குறைப்பது. இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்றே கருதுகிறோம். அதாவது செலவுகளை ஒரேயடியாகக் குறைத்துவிடுவதால் மட்டும் லாபம் கூடிவிடாது; ஏனெனில், உதாரணமாக மனித உழைப்புச் செலவை அளவுக்கு அதிகமாகக் குறைத்தால், அது காகிதக் கணக்கில் லாபமாகத் தோன்றுமே தவிர, அதன் விளைவு பாதகமாக வருவாய் திரட்டும் சேவை செயல்பாடுகளைப் பாதித்துவிடக் கூடும். எனவே அது வருவாயை மீண்டும் குறைத்து லாபத்தைப் பாதித்துவிடும். எனவே குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அதிகபட்ச பணிகளை முடிப்பது என்பதில் ஒரு சமன்பாடு, நிதானம் தேவை என்று கருதுகிறோம். இதனை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறோம்.

ஆனால் நமது மேல்மட்ட நிர்வாகம் செலவுகளைக் குறைப்பது என்பதன் பெயரால், பணி பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல், ஒப்பந்த ஊழியர்களை நாளும் நீக்கும் போக்கை கடைபிடிபை, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என்பதையும் தாண்டி, ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கம், முதற்கண் நிறுவனத்தின் ஊழியர் என்ற வகையில் நிறுவனத்க்கிறது. ஒரு தொழிற்சங்கம் என்ற வகையில் ஒப்பந்த ஊழியர்களின் பணி பாதுகாப்தின் நலனை முன்னிறுத்தி இதனை எழுதுகிறோம். சில அடிப்படை தகவல்கள் வருமாறு:

நமது மாவட்டத்தில் 350 அலகுகள் அடிப்படையில் சுமார் 400 ஒப்பந்தப் பணியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார்கள். தொடர்ந்து பல நிலைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. இவ்வாறு 2020மே மாதமே 50 சதவீதமான ஒப்பந்தப்பணியாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த நிலையில் கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டுதல் காரணமாக  ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே மறுபடியும் 25% ஒப்பந்த ஊழியர்களை நீக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் தற்போது, மேலும் ஆட்குறைப்புக்கான முன்மொழிவை தந்துள்ளது. அதன்படி, எந்தெந்த அதிகாரிகளின் கீழ் எவ்வளவு ஆட்குறைப்பு என்பதற்கான பட்டியல் வருமாறு:

TRA AO (CMTS) CSC  AGM (CM) AGM   ( Trans & NWP) AGM (BSS)
1                2            3                   4                      4                                2

Legal AO (D) GM (o) FTTH EOI                           HK
    1                1      1              4          24                  Totally abolished


இது குறித்து எங்களது மாவட்டச் சங்கம் கடலூர் பொது மேலாளருக்குச் சமர்ப்பித்த கடிதத்தின் நகலை இணைத்துள்ளோம். அதன்படி, எங்களது சங்கம் வலியுறுத்துவது கார்ப்பரேட் அலுவலகம் நிர்ணயித்த அளவீட்டின்படி முழுமையாக 100 சதவீதம் ஏற்கனவே ஒப்பந்தப் பணியாளர்கள் நமது மாவட்டத்தில் குறைக்கப்பட்டு விட்டார்கள். எனவே மேலும் குறைக்கத் தேவை இல்லை என்பதாகும். மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளோம். EOI கீழே தற்போது செக்குரிட்டி பணிபுரியும் ஒப்பந்த ஊழியரை நீக்கிவிட்டு அந்த இடங்களில் TMபோன்ற நிரந்தர ஊழியர்களை நியமிப்பதால், தொழில்நுட்ப பணி பாதிக்கும் என்பதையும், அது அவர்களது தொழில்நுட்பத் திறனையும் வீணடிக்கப்படுவதாகும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டதற்கும் மேல் தற்போது ஏசி பிளான்டில் பணியாற்றும் 18 ஊழியர்களை நிர்வாகம் நீக்கி உள்ளது. அவர்களது பணியைப் பிற ஊழியர்களே கவனிக்க நேரும். இரவு 11 மணிக்குத் தொலைபேசியில் அழைத்து நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று உத்தரவிடுகின்ற மனப்பான்மை நமது மாவட்டத்தில் இருப்பது வேதனை தருவதாகும்.

இந்நிலையில் தலமட்ட நிர்வாக அதிகாரி என்ற வகையில் தங்களுக்குத்தான் தங்கள் பகுதி குறித்தும், அதன் பணியாளரின் அத்தியாவசிய தேவை குறித்தும் தெளிவாக மதிப்பிட முடியும் என்பதால் உங்களிடம் வெளிப்படையாக ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறோம். உங்கள் பகுதியில் முன்மொழியப்பட்ட இந்த ஆட்குறைப்பு நியாயம், அவர்கள் இல்லாமலேயே சேவையை, வருவாய் பெருக்க நடவடிக்கைகளைச் சமாளிக்க முடியும் என்று நீங்கள் கருதினால் அதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுகிறோம். அவ்வாறு அல்லாமல் இந்த ஆட்குறைப்பு சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதினாலோ, அல்லது இத்தகைய பணிகளைச் செய்ய இன்னும் கூடுதல் ஆட்கள் இருந்தால் வளர்ச்சிக்கு அது உதவும் என்று கருதினாலோ அதையும் வலியுறுத்தி உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறோம். 

தங்களுடைய கருத்து எதுவாயினும் அதனை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம். இனியும் பழைய பல்லவியாக, ‘தொழிற்சங்கம் கண்மூடித்தனமாக ஊழியர் குறைப்பை எதிர்க்கிறார்கள்’ என்று சொல்லி நிர்வாகம் எங்கள் நியாயமான விளக்கங்களை ஏற்க மறுப்பதை நாங்கள் தயாராக இல்லை. ஆட்குறைப்பு தவறு என்பது ஒற்றை நிலைபாடாக இருந்தால் நமது நிறுவனத்தில் சங்கங்கள் விருப்ப ஓய்வு திட்டத்தையே ஏற்றிருக்க மாட்டார்கள். நிர்வாகம் BSNL நிறுவனத்தின் நலனையே புறக்கணித்து, விஞ்ஞானபூர்வமான ஆய்வுப் பார்வை எதுவுமின்றி காகிதக் கணக்கில் செலவுகளைக் குறைத்துக் காட்டுவதையே எங்கள் சங்கம் ஏற்க மறுக்கிறது. இது அனைவரையுமே எதிர்காலத்தில் பாதிக்கும் என அஞ்சுகிறோம். 

தங்களின் மேலான மதிப்புறு கருத்துகளை வரவேற்கிறோம்.

இறுதியாக நாங்கள் ஒன்றை உறுதியாக நம்புகிறோம். “#கறுப்பர் உயிர்களும் முக்கியம்” என்பது போல  “#ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் முக்கியம்”
வாழ்த்துகளுடன், 
                 தங்கள் உண்மையுள்ள, 
                  (D. குழந்தைநாதன்)
இணைப்பு மாவட்டச் செயலாளர் NFTE
மாவட்டப் பொதுமேலாளருக்குச் சமர்ப்பித்த கடித நகல்.

நகல்:- மாவட்டத்தின் பிற அதிகாரிகள்.

தோழர்களே!.
       வணக்கம், நமது நிறுவனத்தில் தொடரச்சியாக பாடுப்ட்டு வரும் நமது ஒப்பந்த தொழிலாளர்களை இந்த கொரானா நோய் தொற்று  காலத்திலும்  மனிதாபிமானம் பாராமல்  மாதம் இரு முறை ஆட்குறைப்பு செய்து வருகிறது நமது மாவட்ட நிர்வாகம் .. நாமும் இதன் மீது கடிதம் கொடுத்தும் எதிர்ப்பினை பதிவு செய்தோம்...
     
 அதனையும் மீறி நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டலின் படி தான் தாங்கள் நடந்து கொள்வதாக நம்மிடம் சொல்லி வருகிறது.  சுமார் 50% ஆட்குறைப்பு செய்தாக வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு வருகிறது மாவட்ட நிர்வாகம்.  இரு தினங்களுக்கு முன்பாக நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் கடிதமும் கொடுத்துள்ளோம்.. அதில் சுமார் 50% சதவிதம் ஆட்குறைப்பு செய்து விட்டீர்கள் . இனி யாரையும் வேலையினை விட்டு நீக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு நமது கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் கடிதம்  கொடுத்துள்ளோம்.... அதன் நகல் கீழே பதிவிடப்பட்டுள்ளது...



Wednesday, July 1, 2020

அன்பார்ந்த தோழர்களே!
03.07.2020 வெள்ளிக்கிழமை அன்று நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர்விரோத குறிப்பாக BSNL விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாமும் அதில்பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.எனவே கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் 03.07.2020 அன்று  BSNLEU--NFTE சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்
D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர்கள்