.

Sunday, May 30, 2021


*தோழர் செம்மலமுதம் மறைந்தார்*
 
நமது மத்திய சங்க நிர்வாகி 
தோழர் செம்மல் 
இன்று கொரோனா கோரப்பிடியில் சிக்குண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் செம்மல் இந்தி,ஆங்கில மொழி சரளமாக பேசும் திறன்பெற்றவர். அதனால் நமது மத்திய சங்கத்துடன் இணைந்து செயலாற்றிய தோழர். நமது கடலூர் மாவட்ட சங்க நிகழ்வுகளிலும் பங்கேற்று சிறப்பித்த தோழர். தோழரின் மறைவு நமது பேரிழப்பாகும். தோழரின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை சமர்ப்பி க்கிறோம். *கடலூர் மாவட்ட சங்கம்*

Saturday, May 22, 2021


ஒப்பந்தத் தொழிலாளர் வழக்கு வெற்றி!!! வெற்றி!!!

28—04—2021 இறுதித் தீர்ப்பு 
••••• தமிழாக்கம் •••••

P.Nos.34513/2019, 34570/2019 and W.P.No.9515 of 2020

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED :28.04.2021
நீதிமன்ற அவை:
மாண்பமை நீதியரசர் ஆர் சுரேஷ் குமார்

ரிட் மனு எண்கள் 34513 and 34570 of 2019 மற்றும் 9515 of 2020
& நீதிப் பேராணை மனு எண்கள் 35216 of 2019, 35285 of 2019, 
11615 of 2020,18609 of 2020, 20999 of 2020, 
8730 of 2021 and 8734 of 2021
ரிட் மனு எண் 34513 of 2019

1 .Tamil Nadu Telecom Contract Workers Union
Rep. by its General Secretary,
No. 21 R.K. Srinivas Flats,
Bharathiyar 1st Street, Pazhavanthangal Chennai – 600114

2. S.Shanmugasundaram
O/o. BSNL Telephone Exchange,
Palladam, Tirupur Taluk Tamil Nadu – 641664 … …. …. …. மனுதாரர்கள்

எதிர்
1. Bharat Sanchar Nigam Ltd.
(A Govt. of India undertaking) Rep. by its
Chief General Manager Telecom TN Cirlce
No. 16 Greams Road, Chennai – 600006

2. Bharat Sanchar Nigam Ltd.
( A Govt. of India undertaking) Rep. by its
Chairman cum MD Corporate Office
Harish Chander Mathur Lane, Janpath New Delhi – 110001

3. ரீஜினல் தொழிலாளர் நல ஆணையர்
O/o. Deputy Chief Labour Commissioner (Central)
No. 26 A Wing 6th Floor,
Sastri Bhavan
Haddows Road, Nungambakkam Chennai – 600034 … … … பிரதிவாதிகள்

விபரம் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


ஒப்பந்த ஊழியர் இறுதித்தீர்ப்பு - தமிழாக்கம்

Friday, May 21, 2021


BSNL கொரோனா நிதி
=================
BCF -  BSNL COVID FUND

கொரோனா என்னும் கொடிய நோயால் இன்னுயிர் நீக்கும் BSNL ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திட BSNL CORONA FUND உருவாக்கப்பட்டு அதற்கான உத்திரவை BSNL தலைமை அலுவலகம் இன்று 20/05/2021 வெளியிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...

BSNL கொரோனா நிதி 01/04/2020 முதல் 31/03/2022 வரையிலான காலத்தில் அமுலில் இருக்கும். கொரோனோ நோய் போகும் போக்கைப் பொறுத்து கால அளவு நீட்டிக்கப்படலாம்.

7 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட நிதிக்குழு அமைக்கப்படுகின்றது.

NFTE, BSNLEU, AIGETOA.                           மற்றும் SNEA 
சங்கப்பிரதிநிதிகள் தலா ஒருவரும், 
நிர்வாகத்தரப்பில் மூன்று அதிகாரிகளும் 
குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

கொரோனாவால் மரணமுறும் ஊழியர்கள் 
மற்றும் அதிகாரிகள்  குடும்பத்திற்கு 
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

மேற்கண்ட இழப்பீடு போக இறந்த ஊழியர் குடும்பத்திற்கான ஓய்வூதியப்பலன்கள் 
வழக்கம் போல் கிடைக்கும்.

ஊழியர்கள் பங்களிப்பாக   
ரூ.10 கோடியும் 
நிர்வாகப் பங்களிப்பாக ரூ.10 கோடியும் சேர்த்து தற்போது     20 கோடி ரூபாய் துவக்க கால நிதியாக கையாளப்படும். 

தற்போது ஏறத்தாழ                                                 180 ஊழியர்கள் மரணமுற்றுள்ளார்கள்.                          எனவே 18 கோடி ரூபாய் இப்போதே இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது.

ஊழியர்கள் பங்களிப்பாக ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். சம்பளப்பிடித்தம் கட்டாயமல்ல. ஊழியர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

அடுத்த கட்டப்பங்களிப்பு நிதி தேவையைப் 
பொறுத்து முடிவு செய்யப்படும்.

ஊழியர்கள் மரணமுற்ற ஒரு மாத காலத்திற்குள் 
அவரது வாரிசுதாரர்கள்  உரிய இறப்புச்சான்றிதழ் மற்றும் மருத்துவச்சான்றிதழ்களோடு 
விண்ணப்பிக்க வேண்டும்.

20/05/2021 உத்திரவு வெளியிட்ட தேதிக்கு முன்பாக கொரோனாவால் இறந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். அத்தகைய ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 18/06/2021க்கு முன்பாக நிர்வாகத்திடம் உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.

Sunday, May 16, 2021


தோழர் ஜெகன் பிறந்த நாள்

(17.05.2021)

அன்பு கொண்ட நெஞ்சினான்.
ஆற்றல் மிக்க அறிவினான்..
இனிமை கொண்ட நாவினான்..
ஈன்றவளை மிஞ்சும் கருணையினான்..
உறுதி கொண்ட கொள்கையினான்..
ஊக்கம் மிக்க மதியினான்..
எளிமை கண்டு இரங்குவான்..
ஏறு போல் நடையினான்..
ஐயம் போக்கும் தெளிவினான்..
ஒற்றுமை சொல்லும் வழியினான்..
ஓங்கு புகழ் நிறைந்தவனாம்...

ஜெகன் நாமம் போற்றுவோம்...

Tuesday, May 4, 2021

கண்ணீர் அஞ்சலி.
      

விழுப்புரம் 
தோழர் R. ஜெயபால் மறைந்தார்

 நமது NFTE பேரியக்கத்தின் முன்னாள் மூன்றாம் பிரிவு கடலூர் மாவட்டத் தலைவராகவும், பின்னர் ஒருங்கிணைந்த சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் திறம்பட பணியாற்றிய தோழர், மாற்றுக் அரசியல் கருத்து இருப்பினும் தோழர் ஜெகன் அவர்களின் வழி கேட்டு நடந்திட்ட தோழர். கடலூர் மாவட்ட,  விழுப்புரம் கிளைச் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான மரியாதைக்குரிய தலைவர்
 *தோழர்  R .ஜெயபால்* 
அவர்கள் இன்று 4.5.2021 அதிகாலை 2.40 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம், அவரை பிரிவில் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கும் கடலூர் மாவட்ட nftebsnl சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 *தோழமையுடன்*
*D.குழந்தை நாதன்*
*மாவட்டச் செயலர்*

  நமது மூத்த தோழர் R.ஜெயபால் கலந்து கொண்ட நிகழ்வுகள்











Saturday, May 1, 2021

இந்த உலகத்தின் முதுகெலும்பே உழைப்பாளர்கள். இந்த உலகம் இன்று இருக்கும் இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம் உழைப்பு. ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பும் ஈடு இணையில்லாதது. ஒரு காலத்தில் கொத்தடிமைகளாக இருந்த இந்த தொழிலாளர்கள் தங்களை தாங்களே விடுவித்துக்கொண்டு மீண்டும் சுதந்திர காற்றை சுவாசித்த நாளே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம்.


உலகெங்கும் தொழிலாளர் உண்டு-அவர்
உயர்வுக்கு வழி செய்தல் நன்று ...

ஏற்றம் அடைந்திட வேண்டும்-அவர்
ஏழ்மை அகன்றிட வேண்டும்

பாடுபடும் தொழிலாளி-அவர்
பாரினில் உயர வேண்டும்...

 தொழிலாளியின் வியர்வை

தங்கத்தை காட்டிலும் மதிப்பானது...!

வைரத்தை விட ஜொலிப்பானது....!!
முத்தை விட அழகானது.....!!!

 

உலகின் படைப்புக்கள் எங்கள்
உழைப்பெனும் உளியால்
செதுக்கபட்டவை....

 

இரத்தமும்,வியர்வையும்
விலையாக கொடுத்து
தொலைபேசியினை சேவையாக தந்தோம்....

வியர்வை துளிகளை
ஒன்றினைத்தே...

உங்கள் கையில் உலகத்தினை தந்தோம்..

 அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்

                      வாழ்த்துக்களுடன்: NFTE மாவட்ட சங்கம், கடலூர்.