.

Friday, August 26, 2022



வருந்துகிறோம்

குடந்தை மாவட்ட மேனாள் மாவட்ட செயலரும், AIBSNLPWA சங்கத்தின்  மாவட்ட செயலருமான தோழர் N.இசக்கி முத்து 26.01.2022 இன்று நள்ளிரவு 01.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மிகவும் துடிப்பு மிக்க தோழராக கடந்த காலங்களில் NFTE பேரியக்கத்தில் செயல்பட்டு வந்தவர்அனைத்து தொழிற்சங்க பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அற்புதமான தோழர்.

தோழரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு கடலூர் NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

                                                                                                                                                                                                                                                        வருத்தங்களுடன்

                                                                                    NFTE  மாவட்ட சங்கம், கடலூர்


Sunday, August 21, 2022

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில சங்கத்தின் அறை கூவல் இணங்க மாவட்ட செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நமது மூத்த தோழர் E. விநாயகமூர்த்தி நமது கோரிக்கைகளை உள்ளடக்கி நல்லதொரு கோஷம் எழுப்பினார்.

மாநிலத் துணைத் தலைவர் தோழர் A.சகாய செல்வன் ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சை தோலுரித்துக் காட்டினார். ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் க்கு கொடுத்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்பதை புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டு கண்டன உரை ஆற்றினார். 

ஓய்வு பெற்ற சங்கத்தின் AIBSNLPWA மாவட்ட செயலாளர் தோழர் R.அசோகன் மிகத் தெளிவாக 2018 பிறகு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இந்த அரசு திட்டமிடவில்லை என்பதை குறிப்பிட்டு உரையாற்றினார். இதுபோல் ஒன்றிய அரசு எதுவாக இருந்தாலும் தொடர்ந்து பொதுத் துறையின் வளர்ச்சிக்கு துணையில்லாமல் இருப்பது வருத்தத்தக்கது என்பதை பதிவும் வருங்காலத்தில் இது போன்ற கோரிக்கைகளுக்கு அனைத்து சங்கங்களும் போராட்ட முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

மாவட்ட உதவி செயலாளர் தோழர் R. மலர் வேந்தன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற *SEWA தோழர்களுக்கும், ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கும் ,மற்றும் நமது இயக்கத் தோழர்களுக்கும் நன்றி கூறினார். போர்ட்டபிள் ஒலிபெருக்கி வழங்கி உதவிய AIBSNLPWA சங்கத்திற்கு நமது நன்றிகள்.