.

Thursday, September 16, 2021



செப்டம்பர் – 17
சமூக நீதி நாள்...
தந்தைப் பெரியார் பிறந்த நாள்

இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் குமாரமங்களம் பிர்லா மட்டும் அல்லாமல் அரசும், வங்கிகளும் முடிவு செய்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் வோடபோன் ஐடியா வைத்திருக்கும் வங்கி கடன் மற்றும் AGR கட்டண நிலுவை தான்.

வோடபோன் ஐடியா நிறுவனம்
வோடபோன் ஐடியா நிறுவனம் திவாலாகிவிட்டால் கட்டாயம் அனைவருக்கும் நஷ்டம் தான்,இந்நிறுவனத்திடம் இருந்து எந்தத் தொகையும் வாங்கமுடியாது.இதனை உணர்ந்து தான் கடந்த வாரம் மத்திய டெலிகாம் அமைச்சகம் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மட்டும் அல்லாமல் AGR கட்டண பிரச்சனையில் சிக்கியுள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கும் சேர்த்து சில முக்கியமான சலுகை மற்றும் தளர்வுகள் அடங்கிய திட்டத்தை நாடாளுமன்றத்தில் வைத்தது.

நாடாளுமன்றத்தில் ஆலோசனை
இந்த திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், மத்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆஃபரை அறிவித்துள்ளது. இது வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மட்டும் அல்ல மொத்த முதலீட்டுச் சந்தைக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

4 வருட சலுகை
மத்திய டெலிகாம் துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள திட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது AGR கட்டணத்தைச் செலுத்துவதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அடுத்த 10 வருடத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஆனால் அடுத்த 4 வருடத்திற்குச் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளது. அதாவது 4 வருடம் AGR நிலுவையைச்செலுத்தத் தேவை இல்லை என்பது தான்.

ஆனால் இது பெரிய விஷயம் இல்லை, இதைவிடவும் ஒரு ஷாக்கிங் மேட்டர் உள்ளது.

பங்கு கைப்பற்றல் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்கு இணையாக மத்திய அரசு இந்நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்தை டெலிகாம் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.


அரசு சொத்துக்கள் விற்பனை
மத்திய அரசு நாட்டின் முன்னணி அரசு நிறுவன சொத்துக்களையும், பங்குகளையும் விற்பனை செய்து வரும் இந்த நேரத்தில் வோடபோன் ஐடியா போன்ற கடனில் மூழ்கியிருக்கும் தனியார் நிறுவனத்தில் பங்குகளைக் கைப்பற்றுவது மிகப்பெரிய கேள்வியாக  உள்ளது. ஆனால் இது வோடபோன் ஐடியாவுக்கும், இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட்.


நிலுவை தொகை சுமை
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலுவை தொகைக்கு இணையாக நிறுவன பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம், இந்நிறுவனத்தின் நிலுவை தொகை சுமையைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு அரசு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.

BSNL க்கு சலுகை கிடையாது  தனியாருக்கு சலுகை தாரை வார்த்து கொடுக்க படுகிறது.