.

Friday, April 8, 2022

அனைத்திந்திய மாநாடு சகரன்பூர் மே 18-20, 2007
தோழர் குப்தா துவக்க உரை
நான்_விடைபெறுகிறேன்
 ஜெகன் உருவப்பட பேனர் மேடையின் பின்னணியை அலங்கரித்தது. தோழர் குப்தா தமது அறுபது ஆண்டுகால அனுபவச் சாறினைப் பிழிந்து துவக்க உரையாற்றினார். அவர் தமது உரையில்:

 “பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு உங்கள் அனுமதியை முதலில் கோருகிறேன். எந்த அளவு எனது பணியின் தரமும் அளவும் இருந்திருக்குமோ, (அதனை) அனைவரும் அறிந்த அளவிற்குத் தற்போது என்னால் தரஇயலாமல் போயுள்ளது. அதற்கு வயது, நோய் காரணமல்ல; இன்றும் பலமணி நேரம் உழைக்கிறேன். தோழியர் ஜனக்கின் (திருமதி ஜனக் குப்தா) மறைவும் இரண்டு அறுவைச் சிகிச்சைகளும் எனது பணியின் தரத்தைப் பாதித்து விட்டது என்ற உண்மையை நான் மறைக்க விரும்பவில்லை.

 நூற்றாண்டு விழாக் காணும் அற்புதத் தலைவர் #பி.சி. #ஜோஷியால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் முழுநேர ஊழியனாக நான் வேலை பார்த்தேன். அவர் #தியாகம் என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுத் தந்தார். தோழர் #எஸ்.ஏ. #டாங்கே எனக்கு #நிதானத்தைக் கற்றுத் தந்தார். அவர் புதல்வியின் கட்சியில் நான் இல்லையே என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. சிபிஎம் கட்சியின் தோழர் #சுர்ஜித் எனக்குச் #சகிப்புத்_தன்மையை, எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழப்பு ஏதும் கொள்ளாமையைக் கற்றுத் தந்தார்.

 அனைத்தையும்விட  60 ஆண்டு காலச் சேவை முழுவதும் நான் சில அடிப்படை வழிகாட்டுதல்களை வைத்துக் கொள்ளவும் மிகுந்த சகிப்புத் தன்மை கொண்ட தலைவராக நான் இருக்கவும் முடிந்தது. தாதாகோஷ்தான்  என்னை இப்பணியைச் செய்ய வேண்டும் என்றார். நான் அப்படிப்பட்ட முட்டாள் என்று என்னை நடத்திக் கொண்டேன். நான் ஒதுக்கப்பட்டபோது, பஞ்சாபின் தலைவர்கள் கைலாஷ்நாத், தயான் சிங், பெகல்தான் உடன் நின்றவர்கள். ஆயிரக் கணக்கான தோழர்கள் எனது வேலைப் பாங்கை விமர்சித்தாலும் என்னைச் சகித்துக் கொண்டார்கள். தோழர் நம்பூதிரி தாயின் வலியை எனக்கு உணர்த்தினாலும், திரும்ப வரும் மகனுக்காகக் காத்திருக்கும் தாய் போன்ற நிலைக்கு உதவி செய்துள்ளார்.
 பல்வேறு அமைச்சர்களுடன் நான் நல்லுறவு கொண்டிருந்தேன். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் என்று அறியப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்டு (எவரிடமும்) தோழியர் ஜனக் குப்தாவிற்கு மீண்டும் வேலை என்ற அம்சம் உள்ளிட்டு, எனக்காக எதையும் நான் அவர்களிடம் கோரியதில்லை.

 எனக்குச் சகிப்புத் தன்மையைக் கற்றுத் தந்த எனது பெற்றோருக்கு எனது நன்றியைத் தெரிவித்தாக வேண்டும். சங்கக் கணக்கில் ரூ5000 மட்டுமே இருந்தபோது லட்சம் பெறுமான தாதாகோஷ் பவன் வாங்குவதற்குப் போதுமான உதவி செய்தார் எனது தந்தை.

 நம்பூதிரி அரசியல் என்ற போர்வையில் நம்மைவிட்டு கடைசியாகப் பிரிந்தார். NFTE சரிபாதியாகப் பிளக்கப்பட்டது. இப்படிப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரிய ஓரங்கட்டப்பட்ட தலைவர்களையும் வேலைநிறுத்த எதிர்ப்பாளர்களையும் இணைத்துக் கொள்வதையே நமது அனுபவம் நிரூபிக்கிறது. நமது அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. எனது பள்ளத்தாக்கு எவ்வளவு பசுமை நிறைந்ததாக இருந்தது என்பதை எண்ணிப்பார்க்கிறேன். எனவே #நான்_விடைபெறுகிறேன் என்னும் வகையில் அறிக்கையை முன் வைக்கிறேன்.”

*(தோழர் #சு. #தமிழ்மணி தொகுத்து எழுதிய “தபால் தநதி இயக்கம் கடந்து வந்த பாதை” என்ற நூலிலிருந்து )*

*குப்தா நூற்றாண்டு நிறைவு- நினைவாக*

Print Page

Saturday, April 2, 2022

குடந்தை ஜெயபால் மறைந்தார்

செங்கொடி தாழ்த்தி அஞ்சலி!


மனக்கண்ணில்  அவர் உருவம்  தெரியும் முன் மணிஓசையாய் இடிமுழக்கக் குரல் கேட்கிறது,

மேடையில் கர்ஜிக்கும் எங்கள் ஜீவா அவர்! எங்களுக்குக் கிடைத்த இன்னொரு ரகு!

 அடைமழையாய்  தமிழ் ஊறும்  நாவுடையான் வளம்பெருக்கும் வானமுதாய் இயக்க வரலாறு பல உரைக்கும் அநீதிகண்டு சீறும் பகத்சிங்  வெடிகுண்டுச் சொற்கள்!

 

குடந்தையில்இயக்கம்கண்டதொலைபேசித்தோழன்

நாடெலாம் ஒற்றுமை நாட்டிய சீலன்!

"எழுத்தர் கேடர் நிலத்தில் வீரம்

விளையாதென்ற எழுத்தை மாற்றிய தீரன்!"

 

 

நூற்றாண்டு நாயகன் புகழ்பேச வாராமல்

நேரே சந்தித்துப் பேசும் அவசரமோ?

ஏன் சென்றாய் எம் தலைவா

குடந்தைத் தோழர்களைக் கண்ணீரில் தவிக்க விட்டு?

 

நீ உயர்த்திய செங்கொடி தாழாது ஒருபோதும்

கீழிறங்கும் கண்ணீராய் கொடி இறங்கும் உன் நினைவில்

 

செம்மாந்து பறக்கும் செங்கொடியாய்

நாம் நினைப்போம் உனை என்றும்

செவ்வணக்கம், ஜெயபாலா! செவ்வணக்கம்!

 

வருத்தத்துடன்:-NFTE-கடலூர் மாவட்ட சங்கம்,