.

Saturday, April 2, 2022

குடந்தை ஜெயபால் மறைந்தார்

செங்கொடி தாழ்த்தி அஞ்சலி!


மனக்கண்ணில்  அவர் உருவம்  தெரியும் முன் மணிஓசையாய் இடிமுழக்கக் குரல் கேட்கிறது,

மேடையில் கர்ஜிக்கும் எங்கள் ஜீவா அவர்! எங்களுக்குக் கிடைத்த இன்னொரு ரகு!

 அடைமழையாய்  தமிழ் ஊறும்  நாவுடையான் வளம்பெருக்கும் வானமுதாய் இயக்க வரலாறு பல உரைக்கும் அநீதிகண்டு சீறும் பகத்சிங்  வெடிகுண்டுச் சொற்கள்!

 

குடந்தையில்இயக்கம்கண்டதொலைபேசித்தோழன்

நாடெலாம் ஒற்றுமை நாட்டிய சீலன்!

"எழுத்தர் கேடர் நிலத்தில் வீரம்

விளையாதென்ற எழுத்தை மாற்றிய தீரன்!"

 

 

நூற்றாண்டு நாயகன் புகழ்பேச வாராமல்

நேரே சந்தித்துப் பேசும் அவசரமோ?

ஏன் சென்றாய் எம் தலைவா

குடந்தைத் தோழர்களைக் கண்ணீரில் தவிக்க விட்டு?

 

நீ உயர்த்திய செங்கொடி தாழாது ஒருபோதும்

கீழிறங்கும் கண்ணீராய் கொடி இறங்கும் உன் நினைவில்

 

செம்மாந்து பறக்கும் செங்கொடியாய்

நாம் நினைப்போம் உனை என்றும்

செவ்வணக்கம், ஜெயபாலா! செவ்வணக்கம்!

 

வருத்தத்துடன்:-NFTE-கடலூர் மாவட்ட சங்கம்,











No comments:

Post a Comment