.

Friday, December 12, 2014


133வது பாரதி பிறந்த நாள்

 

“ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்”

 

என முழங்கிய பாரதியின் 133வது பிறந்த நாள்!!!

    படித்து விட்டு மறந்து விடுவதற்காக?

வாழ்வில் அமுல்படுத்த வேண்டாமா?

 

    அக்டோபர் மாத சம்பளம் நமது மாவட்டத்தில்

எந்த ஒப்பந்த தொழிலாளிக்கும் வழங்கப்படவில்லை.

 

    புதிய ஒப்பந்தகாரர் ஒரு மணிகண்டனுக்கு மட்டும் நவம்பர் மாத சம்பளம் வழங்குவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்.

 

பாரதி வழிகாட்டுகிறார்:

 

அச்சம் தவிர்

ஆண்மை தவிறேல்

ஏறுபோல் நட

செய்வது துணிந்துசெய்

ரௌத்திரம் பழகு

போர்த்தொழில் பழகு

நையப் புடை

அச்சமில்லை அச்சமில்லை அச்ச்சமென்பது இல்லையே!

யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!

எங்கும் அஞ்சோம்! எப்போதும் அஞ்சோம்!

               

 

 

                                                மாவட்டச் சங்கம்.

                                                                                                                                                                NFTE

தமிழ் இலக்கணம்

     தமிழில் இலக்கனச் சட்ட விதிகளை உருவாக்கி விட்டு இலக்கியம் படைக்கப்படுவதில்லை. இலக்கிய ஆக்கங்களை அறிந்து அதன் அடிப்படையில் இலக்கண விதிகள் உருவாக்கப்பபடுகின்றன. அதாவது, தமிழ் இல்கக்கணம் வாழ்க்கை இயல்போடு ஒன்றிப் பயணிப்பது, கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள், எளிதில் விளங்கும்.

     சோறு உண்டான்

         வெற்றிலை தின்றான்

     மேலே உள்ளவற்றை தமிழர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்? வெறும் சோறை உண்டான், வெற்று இலையைத் தின்றான் என்றா? சோற்றின் இனமாகிய குழம்பு , ரசம், மோர், காய்கறி முதலியவற்றோடு உண்டான். வெற்றிலையும் அதன் இனமாகிய சுண்ணாம்பு, பாக்கு இவற்றுடன் தின்றான் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.

     இதனைத் தமிழ் இலக்கணம் ‘’ இனங்குறித்தல்’’ என வகைபடுத்துகிறது. பெயர்சொல் , வினைச்சொல், இடைச்சொல்,மற்றும் உரிச்சொல் என தன்னை உணர்த்துவதோடு தான் இனத்தையும் சேர்த்து பொருள் உணர்த்துவதே இனங்குறித்தல் எனப்படும்..

     ஒரு மகன் “கம்ப்யூட்டர்” வேண்டுமென்று கேட்டால் எந்த தாயும், தகப்பனும் வெறும் மானிட்டரை மட்டும் வாங்கித் தருவதில்லை. மானிட்டரோடு   CPU, UPS, கீ போர்டு , மௌஸ், பிரிண்டர், இணையம் இவையெல்லாம் வைக்க டேபிள், சேர் என பிரித்துக் கேட்கவில்லையே என்று பெற்றோர் மறுப்பதில்லை.

     இனங்குறித்து

              அறிந்து செயல்படுக.

                                                தோழமையுடன்

                                           மாவட்டச் சங்கம், கடலூர்

 

Wednesday, December 10, 2014

நினைவைப்போற்றுவோம்
நெய்வேலி டவுன்ஷிப் மூத்த தோழர்.
S.தியாகராஜன் L.I  (ஓய்வு)
நம்மை விட்டு மறைந்துவிட்டார்.
கிளைசங்கத்திலும்,மாவட்டசங்கத்திலும் பல பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். அரசியலில் மாறுபட்ட சிந்தனையுடன் செயல்பட்டாலும்
 இயக்கம் என்றால் NFTE தான் 
 என வாழ்ந்து காட்டியவர்.
. தோழர்கள்.சிரில், ஜெகன், நெய்வேலி கணேசன் ஆகியவர்களோடு நெருங்கிப்பழகியவர். லைன்ஸ்டாப் இயக்கத்திற்கு வலுவூட்டியவர். அனைத்து மாநாடுகளிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

அவரது நினைவைப்போற்றுவோம்!.

இரங்கல்

NFTE தமிழ் மாநில அமைப்புச்செயலர் திண்டுக்கல் தோழர்.விஜயரெங்கன் 
அவர்களின் துணைவியார் திருமதி.அன்னலட்சுமி  அவர்களின் மறைவுக்கு  மாவட்ட சங்கத்தின்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.

Tuesday, December 9, 2014

மாவட்ட செயலக கூட்டம் 11-12-2014

மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 11-12-2014 அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

ERP

ERP செயல்படுத்துவது சம்பந்தமாக PGM (FINANCE ) தலைமையில் நடைபெற்ற அனைத்து தொழிசங்கங்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த மாத சம்பளம் ERP மூலம் வழங்கப்படும் எனவும் GPF PAYMENT பொங்கல் வருவதால் MANUAL ஆக வழங்க பரிசீலிப்பதாகவும் LIC பிடித்தம் ERP மூலம் செய்யப்படும் எனவும் RD, கூட்டுறவு பண்டக சாலை பிடித்தம்,  RECREATION CLUB சந்தா ஆகியவை பிடித்தம் போன்றவை தற்போது ERP மூலம் செய்ய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 11 நாடு தழுவிய கோரிக்கை நாள்- BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

நமது கடலூர் மாவட்டத்தில் BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் 11-12-2014 அன்று காலை  அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.கடலூரில் மதிய உணவு இடைவேளையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மத்திய அரசே.. BSNL நிர்வாகமே..

காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு 
கோபுர பராமரிப்புக்காக  துணை நிறுவனம் ஏற்படுத்தாதே..
கிராமப்புறங்களில்  சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு.. 
BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு..
அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..
BSNL - MTNL இணைப்பை நிறுத்து..
அநியாயமாக  பெறப்பட்ட SPECTRUM கட்டணத்தை திருப்பி வழங்கு 
வாங்கும் சம்பள அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை நிர்ணயம் செய்..
அலைவரிசை ஒதுக்கீட்டை  BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI  முடிவை ரத்து செய்..
ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி..
BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
BBNL - அகன்ற அலைவரிசை பரமரிப்பு நிறுவனத்தை BSNL உடன் இணை..
4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே  வழங்கு..
ஓய்வூதியர்களுக்கு 78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றம் ஏற்படுத்திட உத்திரவிடு..
புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
மத்திய மாநில பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாய சேவையாக்கு..
ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை  கட்டயமாக்காதே...

Monday, December 8, 2014

BSNL
அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் கூட்டமைப்பு
FORUM OF BSNL UNIONS AND EXECUTIVE ASSOCIATIONS

05/12/2014 கூட்ட முடிவுகள்
·         25/02/2015 அன்று
             பாராளுமன்றம் நோக்கிய பேரணி   எழுச்சியுடன் நடத்துவது.
·         பிரதமருக்கு கொடுக்கப்படும் கோரிக்கை மனுவில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேரின்  கையெழுத்து பெற்று அளிப்பது.
·         2015 ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் மாநிலங்கள் தழுவிய கருத்தரங்கங்களை நடத்துவது.
·         17/03/2015ல் நாடுதழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம்  
தயாராவீ ர்... தோழர்களே...

நம் வீ டு  காக்க...
நம் நாடு காக்க...
நமது BSNL  காக்க..


Saturday, December 6, 2014

டிசம்பர் 6
அண்ணல் அம்பேத்கார்

நினைவு தினம்

Friday, December 5, 2014

வருந்துகிறோம்
அரகண்டநல்லூர் தோழர். A.திருமால்,TM அவர்கள் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு
இன்று மதியம் 12-மணியளவில் இயற்கை எய்தினார். தோழரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் அவரது உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின்


 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவு-அஞ்சலி

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. 

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன.

வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி

| உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. |

நாட்டின் கடைக்கோடி சாமானிய ஏழைகளுக்கும் சட்டம், நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கித்தான் அவரின் செயல்பாடுகள்.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல வடிவங்களைக் கடந்துவந்தவர். இந்தப் பயணம் நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார்.

பொதுவுடைமை இயக்கத் தொடர்பு

அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தார். அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டிக்கு இடம்பெயர்ந்தது. புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார். இதனால் ஒரு சமயம் நீதிபதி ஒருவர்கூட அவரைத் தனியே அழைத்து “கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆஜராகி ஏன் பெயரைக் கெடுத்துக்கொள்கிறீர்கள், உங்களை போலீஸார் உளவு பார்ப்பார்கள்” என்று எச்சரிக்கையும் செய்தார். நாடு விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், காவல் துறையினர் கோபத்துடன் இருந்தனர். தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தில் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, காவல் துறை அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.

பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்த லில் போட்டியிட்டபோது, வி.ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயலசீமா மக்களுக்குக் கஞ்சித் தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலைகுறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தையும் வறுமையையும் மக்கள் எதிர்கொண்ட நிலையில், அன்றைய முதல்வர் ராஜாஜி, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகை அறிவித்தார். அரசு ஊழியர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை, வி.ஆர். கிருஷ்ணய்யர் 1952 ஜூலையில் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை சுட்டிக்காட்டியது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

அமைச்சர் கிருஷ்ணய்யர்

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது. கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி.ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர். காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி.ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார். ‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சட்டமன்றத்திலிருந்து நீதிமன்றத்துக்கு

1959-ல் அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் 1960-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார். இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியதும், கட்சி பிளவுபட்ட சூழலில் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி.ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார். அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி.ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது செங்கோல் ஏந்தி 'உஸ்’என்று ஒலி எழுப்பி, ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேய நீதிபதிகள், இந்தியர்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காகப் பின்பற்றிய அந்த வழக்கம் ஜனநாயக சமூகத்துக்கு ஏற்றதல்ல என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் அதை மறுத்தார்.

நெருக்கடி நிலை

1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் அவருடைய தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. வெறும் சட்டவாதமாக மட்டும் வழக்குகளைப் பார்க்காமல் அவற்றின் பின்னால் உள்ள சமூக, அரசியல், ஜனநாயகப் பிரச்சினைகளை அவர் தனது தீர்ப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார். 1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முன் வந்தது. இந்திரா காந்தி பிரதமராகத் தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பால் ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு உருவானது. இதன் தொடர்ச்சியாகத்தான், 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை அவர் அறிவித்தார்.

ஏழைகளுக்கான நீதி

உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் வழங்கிய பல தீர்ப்புகள் ஏழைகளுக்கு அனுசரணையாக இருந்தன. இக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாமானிய மக்கள் எழுதிய கடிதங்கள்கூட சில சமயம் வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மரண தண்டனையை வி. ஆர். கிருஷ்ணய்யர் முற்றிலுமாக எதிர்த்தார். அதை, தண்டனை வடிவமாகக் கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார். மேலும், இலவசச் சட்ட உதவி முறைக்கு அவர் உயிர்கொடுத்தார். 1980 நவம்பர் 14 வரை உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின்பும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும், முகம் அறியாத அனைவருக்காகவும் அவர் குரல்கொடுத்துக்கொண்டிருந்தார்.

பழங்குடியினருக்கான நீதி

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், கர்நாடக - தமிழக அதிரடிப்படையினர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1996-ல் ‘பழங்குடி மக்கள் சங்கம்’ சார்பில் நாங்கள் மனுத் தாக்கல் செய்தோம். வழக்கை எப்படி நடத்துவதென்ற விதி இல்லை என்று, மாவட்ட மனித நீதிமன்றத்துக்கே அந்த மனு திருப்பி அனுப்பப்பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு நாங்கள் எழுதிய கடிதத்துக்கு அவர் எடுத்த நடவடிக்கையால், உயர் நீதிமன்றம் அதை வழக்காக எடுத்துக்கொண்டது. அதிரடிப்படை யின் அத்துமீறல்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த அந்த வழக்கு உதவியது. பழங்குடியினருக்காக நாட்டின் முக்கியமான மனிதர்கள் ஆதரவு தர முன்வந்தது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கியது. அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு, 1999-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர்கள் சென்றது, அரச வன்முறையை அம்பலப்படுத்த உதவியது. இந்தப் பின்னணியில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். அதிரடிப்படையின் அத்துமீறல்களை விசாரிப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் குழு அமைக்கப்படுவதற்கு அந்தக் கடிதம் உதவியது.

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், சமூகத்துக்குத் தொடர்ந்து நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறார். மூத்த தலைமுறையினர், முக்கியமாகச் செய்ய வேண்டிய அரும் பணி இது. அவரை நினைவுகொள்வோம்.

நன்றி: தி ஹிந்து தமிழ் 

Wednesday, December 3, 2014

சிதம்பரம் தோழர்.K.லட்சுமிநாராயணன், TM அவர்களின்
இளைய புதல்வன் L.முரளிதரன்
இன்று ( 3-12-2014 புதன்கிழமை) மதியம் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்டச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி மரியாதை நாளை (05-12-2014) காலை 9-00 மணிக்கு அவரது இல்லத்தில்

(சிதம்பரம்-மணலூர், காளியம்மன் கோயில் தெரு) நடைபெறும்
டிசம்பர்-6
அண்ணல் அம்பேத்கார் நினைவு நாள்
தோழர்களே!.
அம்பேத்கார் தனது வாழ்நாளில்  பல போராட்டங்களை சந்தித்தவர். மறைவுக்குப் பின்னும் சமூக விடுதலை போராட்டத்தின்
திசை காட்டி, ஊற்றுக்கண்!.
சென்னை மாநில சங்கம் நடத்தும் அவரது நினைவு நாளில் வாழும் காந்தி, தியாக சீலர் தோழர். நல்லக்கண்ணு உரையாற்றுவது, மேன்மையானது.
பென்ஷன் பாதிப்பு பற்றி கவலைப்படாது போராடிய  
நம் தோழர். C.K.M பேசுவது பொருத்தம்.
ஆனால்
நவம்பர்-27 அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், ஓரம்கட்டி, ஒதுங்கி,
 நீங்காத கரையாக மாறிப்போய்

தன்னை தானே ஒப்பந்த தொழிலாளிகளின்  மா...................நில செயலாளர் மற்றும் மா..................வட்டச் செயலர் என தம்பட்டம் அடிப்பவரா.....போராளிகளோடு சரிசமமாக உட்காருவது?
வெட்ககேடு.....
ஒப்பந்த தொழிலாளர்களே சிந்திப்பீர்!!!
வாழ்த்துகிறோம்     

           திரு B. மகேஷ் SDE(Vig) அவர்கள்  பதவி உயர்வு பெற்று, கடலூர் GM(o)  அலுவலகத்தில் AGM(Admn) ஆக பொறுப்பேற்றுள்ளார்.
          

  பதவி உயர்வின் மகிழ்ச்சியும், கூடுதல் பொறுப்பையும் , மாற்றலினால் ஏற்படும் வலியையும் உணர்ந்தவர். கடலூரில் அவரது பணிக்காலம் மேலும் சிறப்படைய 
தோழமையுடன் வாழ்த்துகிறோம்.
                                                

Tuesday, December 2, 2014

மாவட்டசங்கம் வாழ்த்துகிறது
டெலிகாம் மெக்கானிக் தேர்வில் வெற்றி பெற்ற
                          கீழ்கண்ட தோழர்களுக்கு           
நமது வாழ்த்துக்கள்.
தோழர். R. விஸ்வநாதன் – கடலூர்
தோழர்.A.சகாயசெல்வம் - கடலூர்
தோழியர். V. மகாலட்சுமி-திண்டிவனம்
தோழியர். S. அம்பிகா -புதுவை
தோழர்கள் வெற்றிபெற பயிற்சி வகுப்பெடுத்த

தோழர்கள். D.அன்புதேவன்- TTA, S. குருபிரசாத்-TM, M.S.குமார் ஆகியோருக்கு நன்றி!