.

Sunday, January 4, 2015

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

அன்புள்ள தோழர்களே!       தோழியர்களே!!

     வேறுவழியின்றி இதனை எழுதுகின்றோம். புத்தாண்டில் சிதம்பரம் மின் விபத்தில் ஒரு BSNL ஒப்பந்தத் தொழிலாளி பரிதாபமாக மரணமடைந்தார். அவரது உடற்கூறு ஆய்வு, போலீஸ் வழக்கு, பூத உடல் இறுதிச் சடங்கு  எதுவும் முடியவில்லை. குடும்பத்தினர் மற்றும் கூடி இருந்தோர் கண்ணீர் காயவில்லை.

     அதற்குள் ஒரு கும்பல் கீழ்த்தரமான அரசியலைத் துவக்கி விட்டது. பிணத்தை வைத்துப் பிழைப்பை நடத்தும் கீழ்மை குணக்கேட்டை அரங்கேற்றியது. புனிதர் வேடமிட்டு வசூல் வேட்டையைத் தொடங்கிவிட்டது.

     துக்க வீட்டில், அதிகாரி – நிரந்திர ஊழியர்கள் இவர்கள் எல்லாம் ஒப்பந்த தொழிலாளிக்கு எதிராய் நிற்பவர்கள் என ஒரு நாடகம்....

     இறந்தவர் இறுதிச் சடங்குகள் முடிவதற்குள் அதே நிரந்திர ஊழியர்களிடம் கடலூரில் வசூல் வேட்டை நடத்தியது  இன்னொரு நாடகம்...

     மறுநாளும் இறுதிச்சடங்குகள் வரை NFTE-மாவட்டச் செயலரும், சிதம்பரம் முன்னணி தோழர்களும் சுடுகாட்டில் இருந்த போது கடலூரில் இத்தனை டிராமாக்கள்...
               
உண்மை வூட்டை விட்டுப் புறப்படும் முன்பே....
பொய்யும் புனைச் சுட்டும், வதந்திகளும் ரெக்கை கட்டி
உலகைச் சுற்றி வந்து விடும் எனபது தான் எத்தனை உண்மை..
கருணை மனம் படைத்த நம் அதிகாரிகளும் ,தோழர்களும் போலிகளை நம்பி தவறானவர்களுக்கு நன்கொடை தந்தது அறிந்து இதனை வெளியிடுகின்றோம்.

உப்புக் கல்லை வைரம் என்று நம்பி ஏமாறாதீர்கள்..

கருணையோடு இருப்பது வேறு.. உங்கள் கருணையை – நல்ல உள்ளத்தைப் – பொய்யர்கள் பகடைகாயாய் பயன்படுத்திக்
கொள்வதைப் பார்த்துப் கொண்டிருப்பது வேறு.

     பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ கடலூர் அனைத்து மாவட்ட சங்கங்களின்சார்பில் முறையான அறிக்கை தனியே வருகிறது.

     நன்கொடைகளை முறைபடுத்தி உதவுவோம்..
                                                            தோழமையுள்ள
                                                                  இரா.ஸ்ரீதர்
                                                            NFTE-மாவட்டச் செயலர்.
                                                                

மக்கள் சந்திப்பு இயக்கம் பண்ருட்டி 03-01-2015

 BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து ஒரு கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பண்ருட்டியில் மக்கள் சந்திப்பு இயக்கம் 03-01-2015 அன்று நடைபெற்றது.














சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள்
சொசைட்டியின் 90வது பேரவைக்கூட்டம் 03-01-2015 அன்று
சென்னை வடபழனியில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • Ø  2013-2014க்கான டிவிடெண்ட் 12 சதமாகும். ஜனவரி மாத சம்பளத்தில் சரிகட்டப்படும்.
  • Ø  கம்ப்யூட்டர் கடன் ரூ.30000/- பொங்கலுக்குள் வழங்கப்படவுள்ளது. மாதம் ரூ.1000 வீதம் 30 மாதம் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்ப படிவம் RGBக்களிடம் கிடைக்கும்.
  • Ø  1-04-2015 முதல் சாதரணக்கடன் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயரவுள்ளது.
  • Ø  1-04-2015 முதல் Wind off  மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் மாதா மாதம் Wind off  செய்யலாம்.
  • Ø  1-04-2015 முதல் THRIFT FUND ரூ.500லிருந்து ரூ.800 ஆக உயரும். அதற்கான வட்டிவிகிதம் 8 சதத்திலிருந்து 9 சதமாக இருக்கும்.
  • Ø  1-04-2015 முதல் குடும்ப நல சேமநிதி ரூ,800லிருந்து ரூ.1200 ஆக உயரும்.
  • Ø  1-04-2015 முதல் குடும்பநலன் இன்சூரன்ஸ் தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
  • Ø  ரேக்கரிங் டெபாசிட் சொசைட்டியில் செய்யலாம். அது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். குறைந்தபட்சத் தொகை ரூ.500/-, சேமிப்புக்காலம் 1,2,3,4,5 ஆண்டுகள், வட்டி விகிதம் 10 சதமாகும்.

                                                                                              தோழமையுள்ள..
V.கிருஷ்ணமூர்த்தி,
 இயக்குனர்.

சென்னை சொசைட்டி

Saturday, January 3, 2015

BSNL அதிகாரிகள் – ஊழியர்கள் கூட்டமைப்பு  

பரிதவித்து நிக்குது ஒரு குடும்பம்!
உதவுவது நம் கடமை!!
கை ஏந்திக் கேட்கின்றோம், நன்கொடை தாரீர்...

அன்புள்ள தோழர்களே!.. தோழியர்களே!...
தோழர்  R.பாலசுப்ரமணியன் என்ற ஒப்பந்த ஊழியர்  சிதம்பரத்தில் புத்தாண்டு தினத்தில்  - பழுது நீக்க சென்ற இடத்தில் – நடந்த விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

     BSNL-லுக்காக பணியாற்றிய  அந்தத் தொழிலாளி  இன்று இல்லை!.. அவரது சொற்ப ஊதியத்தை நம்பி இருந்த ஒரு குடும்பமோ இன்று நிற்கதியாய் உள்ளது...நம் எல்லோர் கண்களிலும் செய்தி அறிந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது....

ஒப்பந்த ஊழியர் என்பதனால் இழப்பீடு ஏதும்
பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பில்லை...

ஆனால் அவரது தோழர்களான நம்மால் அவர் குடும்பத்திற்கு நிச்சயம் உதவ முடியும். இதுபோல முன்பும் உதவி இருக்கின்றீர்கள்
அந்த நம்பிக்கையில் வேண்டுகின்றோம்...

உதவுங்கள் , பெரிய மனதோடு
                  ஓரிரு கண்ணீர்த் துளிகளையாவது
                                                துடைக்க முயல்வோம்!..

வழுக்கும் நிலத்தில் ஊன்றுகோலாய்...வாழ்க்கை இழந்தவர்களுக்கு  
உங்கள் உதவி புதிய நம்பிக்கையைத் தரட்டும்.

     கண்ணீரோடு வேண்டுகின்றோம்!..
                              தாராளமாக நிதி அளிப்பீர்!...
தோழமையுள்ள
K.T.சம்பந்தம் D/S, BSNLEU          இரா.ஸ்ரீதர் D/S ,NFTE ,                            R.ஜெயபாலன் D/S ,FNTO
C.பாண்டுரங்கன் D/S SNEA ,   P.வெங்கடேசன்  D/S ,AIBSNLEA
G.ரங்கராஜ் D/S ,TMTCLU,          M.பாரதி D/S ,TNTCWU,
                                                                                                
NFTE -  BSNLEU  -  FNTO -  SNEA – AIBSNLEA - TMTCLU – TNTCWU மாவட்டச் சங்கங்கள்...            

Thursday, January 1, 2015


தோழர்கள் கவனத்திற்கு

டிசம்பர் மாத சம்பள பட்டியலை காண http://eportal.erp.bsnl.co.in என்கிற வலைதளத்தில்  தங்கள்   HRMS      எண்ணின் இறுதி 8 எண்கள் (அதாவது முதல் எண்ணை தவிர்த்து)  user name      ஆகவும்           bsnltn@123            ஐ               password          ஆகவும் பயன்படுத்தி   (முதன்முறை மட்டும்)   login ஆகவேண்டும்.

அதில்  Benefits and Payments -ல் salary statement                 சம்பள பட்டியலை பார்க்கலாம்