.

Friday, January 9, 2015


கையெழுத்து இயக்கம் – விழுப்புரம்
08-01-2015 

நமது மாவட்டசெயலர் தோழர்,இரா.ஸ்ரீதர் தலைமையாற்ற
கன்வீனர் BSNLEU தோழர் N.மேகநாதன் வரவேற்புரையில்,
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தோழர். இரா.இராமமூர்த்தி
முதல் கையெழுத்து இட்டு இயக்கத்தை துவக்கிவைத்தார்.
CPI விழுப்புரம் மாவட்டசெயலர் தோழர்.A.V.சரவணன்,
CITU விழுப்புரம் மாவட்டசெயலர் தோழர்.S.முத்துக்குமரன்,
AITUC விழுப்புரம் மாவட்டசெயலர் தோழர்.செளரிராஜன்,
தோழர் K.மோகன், அரசுப்பணியாளர் சங்கம் விழுப்புரம் மாவட்டத்தலைவர் தோழர்.பன்னீர்செல்வம்,
ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் தோழர்.மாணிக்கமூர்த்தி,
காப்பீட்டு சங்கம் சார்பில் தோழர். பாலசுப்ரமணியன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
BSNLEU மாவட்டசெயலரும் கன்வீனருமான K.T சம்மந்தம், AIBSNLEA தோழர். S.நடராஜன், SNEA தோழர் G.மதுரை 
BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர்.A.அண்ணாமலை
ஆகியோர் விளக்கவுரை வழங்கினர்.
NFTE கிளைச்செயலர் கணேசன் நன்றியுரை வழங்கினார்.

இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தோழர்களுக்கு நன்றி.





மாவட்ட செயலக கூட்டம் 07-01-2015


07-01-2014 புதன் கிழமை மாலை கடலூர் மாவட்டசங்க அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர். R.செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் தோழர். V.லோகநாதன், மூத்த தோழர். S.தமிழ்மணி, மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் மற்றும் முன்னனித்தோழர்கள் கலந்துகொண்டனர். அவ்வமயம் செஞ்சியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட உதவிச்செயலர் தோழர். D.குழந்தைநாதன் அவர்களை தோழர். S.தமிழ்மணி அவர்களும் பண்ருட்டி கிளைச்செயலர் தோழர், R.பாஸ்கரன் அவர்களை மாவட்டத்தலைவர் செல்வம் அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

செயலக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
  • 1.      அகில இந்திய வேலைநிறுத்த போராட்ட விளக்க கருத்தரங்கத்தை ஜனவரி-30 அன்று கடலூரில் சிறப்பாக நடத்துவது அதற்க்காக மாவட்டசங்கம் அறிவித்த நன்கொடை ரூ.100 அனைத்து தோழர்களிடமும் உடனடியாகப் பெற்று மாவட்டசங்கத்திடம் வழங்கவேண்டும் என இச்செயலகக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

  • 2.      மக்கள் சந்திப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திய கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சித் தோழர்களை வெகுவாகப் பாராட்டுகிறது. இதே போன்று ஜனவரி-8 விழுப்புரம், ஜனவரி-10 உளுந்தூர்பேட்டை, ஜனவரி-12 நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் சிறப்பாக நடத்த கிளைச்சங்கங்களை கேட்டுக்கொள்கிறது

  • 3.      மின் விபத்தில் உயிர்நீத்த சிதம்பரம் ஒப்பந்த ஊழியர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்களின் குடும்ப நிவாரண நிதி தோழர்களிடம் கேட்டு வழங்கிட வேண்டிக்கொள்கிறது,

  • 4.      தோழர். ஆனந்தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது இதுவரை பதில் தராததால் மீண்டும் நினைவூட்டுக் கடிதம் அனுப்புவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.




தர்ணா போராட்டம் - கடலூர்- 07-01-2015

நாடு தழுவிய தர்ணாப் போராட்டம் 07-01-2015
 அன்று கடலூரில் நடைபெற்றது.
நமது மாவட்டசெயலர்
தோழர்,இரா.ஸ்ரீதர் தலைமையில்
BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர்.A.அண்ணாமலை
வரவேற்புரை வழங்க,
SNEA மத்திய குழு உறுப்பினர் தோழர்.R.அசோகன் துவக்கவுரையாற்றினார்,
NFTE மூத்த தோழர். S.தமிழ்மணி, காப்பீட்டுசங்கத் தோழர்.D.மணவாளன், வங்கி ஊழியர்சங்கம் தோழர் S. ஸ்ரீதரன், AIBDPA- தோழர் S.முத்துகுமாரசாமி,,AIBSNLPWA- தோழர். K.சந்திரமோகன், கடலூர் TANFED பொதுச்செயலர் M.நிஜாமுதீன் ஆகியோர்
போராட்ட வாழ்த்துரை வழங்கினர்.
BSNLEU மாவட்டசெயலரும் கன்வீனருமான K.T சம்மந்தம்,
NFTE மாநிலத் துணைத் தலைவர் தோழர். V.லோகநாதன்,
 BSNLEU தோழர்.  V. குமார், AIBSNLEA தோழர். S.நடராஜன், AIBSNLEA மாவட்டசெயலர் தோழர்.P.வெங்கடேசன், NFTE மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம், NFTE மாநில அமைப்புசெயலர் தோழர். N.அன்பழகன், SNEA தோழர்.P. செந்தில்குமரன், BSNLEU தோழர்.N.மேகநாதன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
நிறைவுரை SNEA தோழர். பால்கி வழங்கினார்

BSNLEU கிளைச் செயலர் தோழர். E. பாலு நன்றியுரையாற்றினார்.






















Thursday, January 8, 2015

இரங்கல்

நம்முடைய AGM CM திரு G குப்புசாமி அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என அறிவிக்க வருந்துகிறோம்.  அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூர் வெளிசெம்மண்டலம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் 

Wednesday, January 7, 2015

தர்ணா போராட்டம் வெல்லட்டும்

நாட்டின் அபரிதமான வளர்ச்சிக்கு தேவை பொதுத்துறை
நிறுவனங்கள்தான் என்று கூறியதோடு மட்டுமில்லாமல்
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்
அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்கள்
நாட்டில் ஆங்காங்கே தனியார் பைனான்சியர் கம்பனிகளாலும்
தனியார்துறை வங்கிகளாலும் மக்கள் அல்லல்படுவதனை
கண்டு மனம் தாங்க முடியாமல்தான் அனைத்து தனியார்
வங்கிகளையும்பொதுத் துறை வங்கிகளாக மாற்ற அதிரடி
உத்தரவினை பிறப்பித்தார் அன்றைய
பாரதப் பிரதமர் திருமதி இந்திரா அவர்கள்

ஆனால் இன்று படித்த மேதாவி அரசியல் தலைவர்கள் நாட்டின்  விலைமதிப்பில்லாத சொத்துகளை அந்நிய நாட்டுக்கு கம்பெனிகள்  வளம் பெற   சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று  விற்கிறார்கள்
இன்றைய அரசியல் தலைவர்கள்

தீவிரவாத தாக்குதலில் இறந்து போன ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் அவர்களுக்கு உடனடியாக பொதுத்துறையான LIC - யின் இன்சுரன்ஸ் மூலம் பல லட்சங்களை கொடுத்தது. அதே வேளையில்  தனியார்இன்சுரன்ஸ் கம்பெனி தீவிரவாத தாக்குதலில் இறந்தால் எங்கள் கம்பெனி சட்டதிட்டங்களின்படி தரமுடியாது என்றது.

செல் சேவை முதன் முதலில் தனியாருக்குதான் மத்திய அரசாங்கம் வழங்கியது அப்போது செல் அழைப்பு (OUT GOING) கட்டணமும் சரி, வரும் அழைப்புகளுக்கும் (INCOMING) சரி, கட்டணங்கள் அதிகப்படியான தொகைதான் வசூலிக்கப்பட்டது. ஆனால் பொதுத்துறை நிறுவனமான BSNL செல் சேவை தொடங்கியவுடன் வரும் அழைப்பு கால்களுக்கு இலவசம்  என்றும், அழைப்பு கட்டணங்களுக்கு குறைந்த கட்டனமும் வழங்கிய  பெருமை பொதுத்துறையானயான BSNLஐ சாரும்.
இன்று ரயில்வே துறையினையும் தனியார்மயம்
இன்னும் பல துறைகளையும் தனியாருக்கு என்றால்
நாட்டின் நிலைமை என்ன!! மக்களே சிந்தியுங்கள்!!! ....
அன்று நாட்டை கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள்.......
கொல்லைபுறமாக வந்து கொள்ளையடித்துச் சென்றனர்....
இன்று நமது நாட்டின் விளைமதிப்பில்லாத சொத்துகளை கொள்ளையடிக்க  அந்நிய நாட்டின் கம்பனிகளுக்கு     இந்திய அரசு முன் வாசலை திறந்து  சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.
.அன்று  பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பபடவில்லை .                     தேச வளர்ச்சிக்காகவும், வேலை வாய்ப்பிற்க்காகவும் தான் உருவாக்கப்பட்டது...
நமது தியாக தலைவர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைக்க அனுமதிக்கமாட்டோம்.
தோழர்களே  சிந்தீப்பீர்.... முதலில் நமது குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பொதுத்துறையின் அவசியமும் அதனால்   நாட்டு மக்கள் அடையும் பயனையும் விளக்கி சொல்வோம் ... நிச்சயம் மாற்றம் உண்டாகும்..

தேசம் காக்க........ பொதுத்துறை சொத்துகளை பாதுகாக்க............. ஒன்றினைவோம்.......
உங்களது தர்ணா போராட்டம் வெல்லட்டும்
வீர வாழ்த்துகளுடன்....

இவண் : தமிழ்மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மாவட்டச் சங்கம்,(TMTCLU)

Tuesday, January 6, 2015

தோழர் குப்தாவின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி

தோழர் குப்தாவின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி கடலூரில் 06-01-2015 அன்று காலை GM அலுவலகத்தின் முன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் R செல்வம் தலைமை தாங்கினார். SNATTA  D சிவசங்கர், AIBSNLEA  P வெங்கடேசன், BSNLEU RV ஜெயராமன்,  SNEA  R அசோகன், NFTE மூத்த தோழர் நீலகண்டன் ஆகியோர் குப்தாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.முன்னாள் மாநில செயலர் S தமிழ்மணி குப்தாவின் நினைவை போற்றி சிறப்புரையாற்றினார்.







சிதம்பரத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி 







பண்ருட்டியில் நடைபெற்ற நினைவஞ்சலி 


திண்டிவனத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி 


நெய்வேலியில் நடைபெற்ற புகழஞ்சலி