.

Friday, June 12, 2015

தோழர்,செல்வம் அவர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சி

நமது மாவட்டத்தலைவரும், TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர்.R.செல்வம் அவர்களின் இளைய புதல்வி செல்வி. S.லாவண்யா திருமண நிகழ்ச்சி  கடலூர் நெல்லிக்குப்பம் சுகம் திருமணமண்டபத்தில் 4-6-2015 அன்று நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி மாநில செயலர் தோழர்.பட்டாபி, மூத்தத் தோழர்.K.சேது, அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன், மாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன், மாநில உதவிச்செயலர்கள் தோழர்கள். P.சென்னகேசவன், K.நடராஜன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், தஞ்சை TMTCLU முன்னாள்  மாவட்ட செயலர் தோழர்,கிள்ளிவளவன், தஞ்சை TMTCLU  மாவட்ட செயலர் தோழர்.கலைச்செல்வன், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள்-தோழர்கள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற மூத்த தோழர்கள், ஒப்பந்த ஊழியர் சங்க தோழர்கள், மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து பல தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 






Thursday, June 11, 2015

ESI  அடையாள அட்டை
ZONE-2, ZONE-3, ZONE-4-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் ESI அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட முகாம் 16-06-2015 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின் பேரில் ESI நிர்வாகத்தினர் இந்த முகாமை நடத்துகின்றனர். தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர இயலாதவர்கள், இருக்கின்றவர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அடையாள அட்டை பெற்றுக்கொண்ட பின் சேர்த்தல் நீக்கல் செய்ய இயலும். ஏற்கனவே அடையாள அட்டை பெற்று அதில் ஏதேனும் திருத்தும் செய்துகொள்ள விரும்புபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Wednesday, June 10, 2015




புதுச்சேரி INDOOR கிளை மாநாடு


புதுச்சேரியில்  9-6-2015 அன்று INDOOR கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில துணைப்பொதுசெயலர் தோழர். P.சென்னகேசவன், நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தலைவராக தோழர்.T.ரகுபதி, செயலராக தோழர்.V.ஸ்ரீதரன், பொருளாளராக தோழர்.K.சுவாமிநாதன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 








Monday, June 8, 2015

போராட்டம் ஒத்திவைப்பு
ஒப்பந்த ஊழியர்களுக்கான பிரச்சினைகளை வலியுறுத்தி 10-06-2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் இன்று 
(08-06-2015) நடைபெற்ற மாநில முதன்மைப் பொதுமேலாளர் உடனான மாநில செயலர்களின்   முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட  சில முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஜூன்-12 அன்று நடைபெறுகிறது.

இரங்கல் செய்தி

 தோழர்  T ராமலிங்கம் SDE (retd) கடலூர்  அவர்களின் தாயார் நேற்று (07-06-2015)  இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இறுதி நிகழ்ச்சி இன்று  (08-06-2015)மாலை  கடலூர் செம்மண்டலம் வரதராஜன் பிள்ளை  தெருவிலிருந்து  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Monday, June 1, 2015


கடலூர் OFC பராமரிப்பு டீம் இன்று (01-06-2016) பழுது சரிபார்ப்பு பணிக்காக கள்ளக்குறிச்சி அருகே இலாக்கா TEMPO TRAVELLER-ல் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி அதில் சென்ற எட்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் திரு.K.பன்னீர்செல்வம்-SDE, தோழர்கள் A.R.கலியமூர்த்தி-MotorDriver,  V.ராஜு-TTA, P.முருகவேல்-TTA, N.ஜெயராமன்-TM, M.சக்திவேல்-TM, D.கிருஷ்ணமூர்த்தி-CL, D.சத்தியமூர்த்தி-CL. அதில் SDE அவர்கள் பலத்த காயமடைந்து புதுவை மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை மியாட் மருத்துவமனையிலும், மற்ற ஆறு பேர் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவர மாவட்ட சங்கம் விழைகிறது.
விபத்து ஏற்பட்டவுடன் கள்ளக்குறிச்சி பகுதி தோழர்கள் அவர்களுக்கு வேண்டிய முதலுதவி செய்து  உடனடியாக மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரிலும் நமது தோழர்கள் உட்பட ஓய்வுபெற்ற தோழர்கள், மற்றும் தோழமை சங்கத் தோழர்களும், அதிகாரிகளும் உடனிருந்து அவர்களுக்கு வேண்டிய உதவி செய்தது பாராட்டுக்குரியது. 



Saturday, May 30, 2015

மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.S.அன்பழகன் பணி ஓய்வு பாராட்டு விழா 
28-05-2015 விருத்தாசலத்தில் நடைபெற்றது, கிளைசெயலர் தோழர் V.இளங்கோவன் தலைமையில், மாநில துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன் துவக்க உரையாற்றினார். தோழர்கள். SNATTA மாநிலதுணைத்தலைவர் தோழர்.சிவசங்கரன், கிளை பொருளர் P.கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் R.செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.P.அழகிரி, மாவட்ட அமைப்பு செயலர் தோழர், K.அம்பாயிரம், மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன், முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.R.சுந்தரமூர்த்தி, கிளையின் மூத்தத் தோழர் D.மோகன்ராஜ், TMTCLU மாவட்ட செயலர் தோழர்.G.ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலர் தோழர் பட்டாபி வாழ்த்துரை வழங்கியது மட்டுமிலாமல் இன்றைய அரசியல் சூழ்நிலையையும் அதில் நமது பங்களிப்பையும் விளக்கி பேசினார். தோழர் பட்டாபியின் உரை சிறப்பாக அமைந்தது. பின்னர் ஏற்புரை தோழர் அன்பழகன் வழங்க நன்றியரை வழங்கினார் தோழர் கமலக்கண்ணன். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த கிளைசெயலர் தோழர் இளங்கோவன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

















TMTCLU சங்க கொடியேற்றம்

உளுந்தூர்பேட்டையில் 28-05-2015 அன்று மாவட்டத்தின் இரண்டாவது இடமாக TMTCLU சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கக் கொடியை மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் ஏற்றிவைத்தார். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், TMTCLU மாவட்ட செயலர் தோழர்.G.ரங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர், K.அம்பாயிரம், மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன், தோழர் V.இளங்கோவன், கிளை செயலர் தோழர் M.நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.




சேலம் மாவட்ட மாநாடு

26-05-2015 அன்று இனிதே நடைபெற்றது . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினரும், ஈரோடு மாவட்டசெயலரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலருமான  தோழர். த.ஸ்டாலின் குணசேகரன் எழுச்சியான துவக்க உரை நிறைவான உரையாக அமைந்தது.  
மாநில செயலர் தோழர் பட்டாபியின் அறிக்கைகளைத் தொகுத்து பட்டாபி 100 என்ற நூலை சேலம் மாவட்டத்தின் சார்பாக முதல் பிரதியை தோழர்.ஆர்கே வெளியிட, சேலம் மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழுத்தலைவர். M.சுப்பிரமணியன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் அறிமுகவுரையை மாநில உதவி செயலர் தோழர். தஞ்சை K.நடராஜன் வழங்கினார். இந்நூல் வெளியிட கடுமையாக உழைத்த குடந்தைத் தோழர்.விஜய் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
மாநில செயலர் தோழர் பட்டாபியின் எழுச்சிமிகு சிறப்புரையில் நடந்து முடிந்த வேலைநிறுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை விளக்கினார். தொழிற்சங்கத்தில் சேலம் பகுதியின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
கருத்துரை வழங்கினர் மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.K.சேது.  
தோழர். ஆர்.கே நிறைவுப்பேருரை ஆற்றினார். நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உடன் நமது மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.P.அழகிரி கலந்துகொண்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மாநாட்டிற்கான மண்டபம் முதல் ஊரின் பல பகுதிகளிலும் தோரணங்கள், விழா மேடை அமைப்புகள், உணவு உபசரிப்புகள், சிறப்பான ஆண்டறிக்கை, சிறப்பு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட பொதுமேலாளர், மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைத்து தோழமை சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டது சிறப்பாக இருந்தது. மாநாட்டினை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர்.C.பாலகுமார் மற்றும் இதற்காக உழைத்திட்ட தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.







புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் தோழர் S.சின்னசாமி, மாவட்ட செயலர் தோழர்.C.பாலகுமார், மாவட்ட பொருளராக தோழர்.S.காமராஜ் ஆகியோருக்கும் கடலூர் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 


Friday, May 29, 2015

JTO LICE 2013

We come to know from authorised sources some clarifications have been issued to TN circle regarding calculation of JTO vacancies as per the year wise existing rules.

Regarding  litigation, we  come to know that the Corporate office directed the Circle to go SLP.

இரங்கல் செய்தி



கடலூர் நேரு நகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர்   S ரங்கநாதன் TM அவர்களின் தாயார் இன்று (29-05-2015) காலை இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இறுதி நிகழ்ச்சி நாளை (30-05-2015) காலை கடலூர் சண்முகம் பிள்ளை தெருவிலிருந்து  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tuesday, May 26, 2015

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை கூட்டம்

2014-2015-க்கான 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு இந்த வருடமும்  (16-ம் ஆண்டு விழா) பரிசளிப்பு அளிக்க விழா எடுக்கவிருப்பதால் அதற்குரிய கலந்தாய்வுக்கூட்டம் வருகின்ற 29-05-2015 வெள்ளிகிழமை மதியம் 2-30 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. ஆகவே அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், 

V. லோகநாதன்
செயலாளர்
சிரில் அறக்கட்டளை 








Monday, May 25, 2015

AIBSNLEA கண்டன ஆர்பாட்டம்
AIBSNLEA மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி MANAGEMENT TRAINEE RECRUITMENT-க்கு வெளியிலிருந்து ஆளெடுப்பு நடைபெறுவதைக் கண்டித்தும், BSNL-ல் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டே அப்பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என  வலியுறுத்தியும் கடலூர் GM அலுவலக வாயிலில் கண்டன ஆர்பாட்டம் இன்று (25-05-2015) நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 



Sunday, May 24, 2015

வாழ்த்துக்கள்
கடலூர் AITUC மாவட்ட குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்ட தோழர்கள்


தோழர்.V.இளங்கோவன் 


தோழர்.G.ரெங்கராஜூ 

மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!