.

Thursday, January 7, 2016

இரங்கல் செய்தி 
கடலூர் OT தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் M.மோகன் TM அவர்களின் தந்தையார் இன்று (7-1-2016) இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதி சடங்கு நாளை (8-1-2016) மாலை 4.00 மணிக்கு   கடலூர் சில்வர்பீச் ரோடு, தீ அணைப்பு நிலையம் பின்புறம் உள்ள நகரில்  நடைபெறும். 

Wednesday, January 6, 2016

புகழஞ்சலி
இன்று நமது இயக்கத்தின் பிதாமகன் தோழர் O.P.குப்தா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் அண்மையில் மறைந்த தொழிலாளர் வர்க்க மூத்தத் தலைவர் தோழர் A.B.பரதன் ஆகியோருக்கு  புகழஞ்சலி கூட்டம்   கடலூர் GM அலுவலக வாயிலில் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் தோழர் K.அசோகராஜன் அவர்கள் தோழர்களின் புகழஞ்சலி வழங்கி சிறப்பு செய்தார். கூட்டத்தில் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் கூட்டம் மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் நடைபெற்றது.  

கடலூர் 





சிதம்பரம்






பண்ருட்டி


கள்ளக்குறிச்சி






விழுப்புரம்





காட்டுமன்னார்கோயில்






செயலகக்கூட்டம்

5-1-2016 அன்று  மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக்கூட்டம் மாவட்ட  தலைவர்  R.செல்வம்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சாதிக்பாஷா, P.அழகிரி, D.குழந்தைநாதன், D.ரவிச்சந்திரன், A.ரவிச்சந்திரன் AC.முகுந்தன் மற்றும்  கிளைச்செயலர்கள் தோழர்கள் மலர்வேந்தன், E.வினாயக மூர்த்தி, S.மணி, V.கிருஷ்ணமூர்த்தி, S.ராஜேந்திரன், பழனிவேலு, S.பாஸ்கரன், V.இளங்கோவன், பாலகிருஷ்ணன் மற்றும் TMTCLU மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு, மாவட்ட தலைவர் MS.குமார்   கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட சங்க செயல்பாடுகள், சரிபார்ப்பு தேர்தலில் நாம் செய்ய வேண்டிய பணிகள், வெள்ளநிவாரண பணியில் நாம் ஆற்றிய பணிகள் பற்றி விளக்கி பேசினார்.
கூட்டத்தில்..
  • ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடாவை விரைவுபடுத்த வலியுறுத்துவது, மீதமுள்ள போனஸ் தொகையை பொங்கல் தினத்துக்குள் பட்டுவாடா செய்ய வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
  • வருகின்ற ஜனவரி’8 அன்று கடலூரில் நடைபெறும் “SERVICE WITH A SMILE”  நிகழ்ச்சியில் நமது தோழர்கள் திரளாக கலந்து கொள்வது,
  • கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்களாகவும், பணமாகவும் அளித்த தஞ்சை, குடந்தை, காரைக்குடி,சென்னை, சேலம் மாவட்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
  • நமது தொடர் முயற்சியின் காரணமாக நீண்ட மாதங்களாக விடுபட்டிருந்த  அரவிந்த் கண் மருத்துவமனையுடனான MOU தற்போது கையெழுத்தானது, அதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி தெரிவிக்கப்பட்டது.

  • ஓய்வு பெற்ற விழுப்புரம் தோழர் S.வீரமணி TM அவர்கள் மாவட்ட சங்கத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/- அளித்தார். மேலும் கடலூரிலிருந்து சென்னைக்கு மாற்றலில் செல்லும் தோழர் T.V. பாலு TM அவர்கள் ரூபாய் 500/ம், நெய்வேலியிலிருந்து பெங்களூரு செல்லும் தோழியர் K. சாந்தா SS அவர்கள் மாநில சங்கத்திற்கு ரூ.1500/ம், மாவட்ட சங்கத்திற்கு ரூ.1500/ம் நன்கொடையை அளித்து தங்களது சங்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறது.










Monday, January 4, 2016





நமது நிறுவனம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தோழர்கள் இனி புதுச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனையில்
சிகிச்சை பெறலாம்.


Sunday, January 3, 2016

வெள்ள நிவாரண முன்பணம்
தமிழகத்தில் உடனடியாக வெள்ள நிவாரண முன்பணம் வழங்கிட அகில இந்தியசங்கத்தின் தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்கள் நமது நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் திரு.அனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

இதனடிப்படையில், தமிழக முதல்வர் நமது பிரதமருக்கு நிவாரண தொகை கேட்டு எழுதியிருந்த கடிதத்தின் (G.O Letter) நகலை நமது மாநிலசங்கம் முதன்மைப் பொதுமேலாளரை சந்தித்து அளித்துள்ளது. இந்த நகலை நமது கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து ஆவண செய்வதாக மாநிலநிர்வாகம் உறுதி அளித்துள்ளது.    

  



BSNL-ன் இலவச செல்போன் சர்வீஸ்

நமது BSNL நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் TNSDC நிறுவனம் இணைந்து  இலவச செல்போன் சர்வீஸ் ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் நாளை (04-01-2016) முதல் கட்டமாக கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில்  துவங்குகிறது. http://rgmttc.bsnl.co.in/jobportal/ என்ற முகவரியில் பதிவு செய்துகொள்ளவும்.   10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தோழர்கள் தங்களது குழந்தைகள், உறவினர் குழந்தைகளிடம்  விபரங்களை கூறி பயன்பெறவும். 
செயலகக் கூட்டம்

வருகின்ற 5-01-2016  செவ்வாய்கிழமை  மாலை 5..00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக் கூட்டம் மாவட்ட  தலைவர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

Saturday, January 2, 2016


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 
முதுபெரும் தலைவர்  தோழர் A.B. பரதன் மறைவிற்கு நமது அஞ்சலி 
01-01-2016 முதல் IDA 4.5% உயர்வு...
01-01-2016 முதல் IDA 4.5% சதவீதம் உயந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA...(107.9% + 4.5%) 112.4% சதவீதம் ஆகும்.
FESTIVAL ADVANCE
விழாக்கால முன்பணம்
விண்ணப்ப தேதிகள்

விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE விண்ணப்பிப்பதற்கு
மாநில நிர்வாகம்
கீழ்க்கண்டவாறு தேதி நிர்ணயம் செய்துள்ளது.
தோழர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பொங்கல் மற்றும் குடியரசு தினம்         
 04/01/2016
புனித வெள்ளி                                                
 03/03/2016
தமிழ் வருடப்பிறப்பு                                    
 01/04/2016
ரம்ஜான்                                                             
 01/07/2016
சுதந்திர தினம்                                                
 01/08/2016
விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத்         
 25/08/2016
தசரா, முகரம் மற்றும் தீபாவளி             
 03/10/2016
மிலாடி நபி,கிறிஸ்துமஸ்& புது வருடம் 
 07/12/2016


TMTCLU
கிளை பொதுக்குழுக்கூட்டம் சிதம்பரம்.


புத்தாண்டு தினமான 01-01-2016 மாலை சிதம்பரம் கோயில் தொலைபேசி நிலையத்தில் TMTCLU பொதுக்குழுத்தோழர் H.இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிதம்பரம் பகுதி ஒப்பந்த ஊழியர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது ஒப்பந்த ஊழியர் தோழர் K.சுந்தர் வரவேற்புரை வழங்க துவக்கவுரையாக தோழர் R.செல்வம் மாநில பொதுசெயலர் ஒ.ஊ.சங்கம் உரையாற்றினார். அவர் 2014 காரைக்குடியில் துவங்கி இன்றுவரை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையும் , போராட்டங்களையும் பற்றி விளக்கி பேசினார். மற்றும் கோவையில் நடைபெறவுள்ள AITUC மாநாட்டில் நாம் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டிய அவசியத்தை கூறினார். அதனை தொடர்ந்து தோழர்கள் A.சுப்பிரமணியன் மாநில துணைப்பொதுசெயலர், M.S.குமார் மாவட்ட தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் M.S.குமார் பேசும் பொழுது AITUC மாநாட்டு நிதி வசூல், சந்தா நிலுவைகளை உடனடியாக வழங்கி சங்கத்தை வலுபெற செய்ய வலியுறித்தினார். நிறைவுரையாக தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE அவர்கள் உற்சாகம் நிறைந்த உரையுடனும் தோழர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியும் ஆலோசனைகளை வழங்கியதோடு ஒப்பந்ததாரர்களுடன், நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை போராட்டங்களை பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். கூட்டத்தில் சிதம்பரம் NFTE கிளை சங்க தோழர்களும் மாவட்டசங்க தோழர்களும் கலந்துக்கொண்டனர். தோழர் B.சேகர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.