.

Friday, February 26, 2016

நெஞ்சம் நிறைந்த விழா
         
 இம்மாதம் ஓய்வு பெற உள்ள துணைப் பொது மேலாளர்      திரு, ப. சாந்தகுமார் அவர்களுக்குப் பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றம் சார்பாக நேற்று மாலை அலுவலக திறந்தவெளி மாடியில் சிறப்பான பிரிவு உபசார விழா நடைபெற்றது.  மனமகிழ் மன்றம் என்ற ஒன்று தற்போது செயல்பட வில்லை என்பதுதான் உண்மை.  என்றாலும், அதனினும் சிறப்பாக GM அலுவலக அனைத்துத் தளங்களில் செயல்படும் அனைத்து செக்ஷன்களின் சார்பாக ஓரே விழாவாக நடத்த வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவு – வெற்றி -- தான் இந்த விழா.  தோழியர்கள் தோழர்கள் அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஊழியர்கள் என திரளான நல்உள்ளங்கள் மகிழ்வாக நடத்திய விழா.
     விழாவின் மிகப்பெரிய வெற்றி மீண்டும் மனமகிழ் மன்றத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற ஆவல் அனைவர் மனங்களிலும் எழுந்துள்ளதேயாகும்.
     விழாவிற்கு AGM (Admn)  திரு மகேஷ் தலைமையேற்க, துணைப்பொதுமேலாளர்(சிஎம்) திருமதி ஜெயந்திஅபர்ணா,  துணைப் பொதுமேலாளர் (சிஎப்ஏ) திரு.சமுத்திரவேலு முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக நமது முதுநிலைப் பொதுமேலாளர் திருமதி.லீலா சங்கரி அவர்கள் மாலைநேர விழாவில் முழுமையாகப் பங்கேற்றது விழாவின் வெற்றிக்கு மகுடம் சூட்டியதாக அமைந்தது.
     ஓய்வு பெறஉள்ள திரு, சாந்த குமார் அவர்களை வாழ்த்தி GM அலுவலத்தின் கீழ்க்கண்ட அதிகாரிகள் ஊழியர்கள் உரையாற்றினர். திரு, R அசோகன் (AGM Trans). திரு S இரவி SDE (vig) திரு சௌந்திரராஜன் CAO திரு தனசேகரன் AO திரு பாண்டுரங்கன் AGM , திருமதி பூங்குழலி JAO, திருமதி கலைவாணி SDE- திரு சிவாஜி JAO, ஊழியர்கள் திருவாளர்கள் A.அண்ணாமலை, இரா.ஸ்ரீதர், P.ஜெயபாலன்  என பலரும் சிறப்பாக சுருக்கமாக வாழ்த்துரைத்தனர்
    
பின்னர் துணைப்பொது மேலாளர் (சிஎம்) திருமதி ஜெயந்தி அபர்ணா,  துணைப்பொது மேலாளர் (சிஎப்ஏ) திரு சமுத்திரவேலு மற்றும் நமது முதுநிலைப் பொதுமேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்களும் சிறப்புரையாற்றினர்.
     வாழ்த்துரைத்த அனைவரும் ஓய்வு பெற உள்ள              திரு ப.சாந்தகுமார் அவர்களுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை அதன் மூலம் அறிந்து கொண்ட அவரது நல்லியல்புகளை, பணி நேர்த்தியை, தாம் சந்தித்த பிரச்சனைகளின் போது அவர் வழிகாட்டிய மேன்மையை அளித்த ஆலோசனைகளை,  அவரது எளிமையை சிறப்பாக எடுத்துக் கூறினர். அனைவராலும் அவரது மனித நேயமும் ஓடிச் சென்று நலியுற்றவர்களுக்கு உதவும் தயாள குணமும்  புகழ்ந்துரைக்கப்பட்டது.. 
     தமது ஏற்புரையில் புகழுரைகளைத் தன்னடக்கத்துடன் மறுதலித்து, தாம் வாழ்வில் கடைபிடித்தொழுகும் தனிமனித ஒழுக்கம் என்ற ஒன்றே தன்னுடைய இலாக்கா பணியில், பழகும் அணுகுமுறையில் பிரதிபலித்தது என்றார்.  இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றி தாம் பெற்ற அனுபவங்கள் ஏராளம். தென்கோடி குமரி  போல மேற்கு முனை இங்கிருந்து 2000 கிலோ மீட்டர் உள்ள பூஜ் மாவட்டத்தில் மொழியறியா சூழ்நிலையில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பல இடங்களில் பணியாற்றியதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஊழியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..  கடலூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தின் வருவாய் ரூபாய் 100 கோடியைத் தாண்டியுள்ளது.  செலுவுகளை இன்னும் குறைக்க விரும்பும் நமது GM அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாததற்கு காரணத்தைக் கூறிய போது பிரச்சனையை வெறும் எண்களாகப் பார்க்காது வேர் பிடித்த மண்ணின் தன்மையோடு பார்க்கும் ஆழமான பார்வை புரிந்தது.
திரு சாந்த குமார் கூறினார் இந்த கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டம் கடலூர் விழுப்புரம் என்ற பரந்து விரிந்த இரண்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது. மேலும் 60 சதத்திற்கும் மேல் கிராமப்புறங்களை உள்ளடக்கியது.  கிராமங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் வருவாய் குறைவு என்றாலும் நாம் தாம் தமிழகத்திலேயே – வேண்டுமெனில் தஞ்சையைச் சொல்லலாம் – நிறைவான கிராமப்புற சேவையை அளிக்கிறோம் என்றார்.  மேலும் இப்போதுதான் பல தொலைபேசியகங்கள் மற்றும் டவர்களின் பேட்டரிகளைப் புதிதாக மாற்றி உள்ளதால் செலவு கூடி உள்ளது.  ஆனால் அந்த முதலீடுகளால் தான் நமது சேவை மேம்பட்டு நமது வருவாய் அதிகரித்துள்ளது எனக் கூறி நிறைவு செய்தார்.
     திருமதி சித்ரா AO நன்றி கூறினார். தமது நன்றி உரையில் நமது அலுவலகத்தில் விழாகள் இதுபோல ஒன்றாகவே நடத்தப்பட வேண்டும் என்ற விழைவை வெளிப்படுத்தினார்.
                GM அலுவலகத்தின் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் திரு. சாந்த குமார் அவர்களுக்கு தனித்தும் இணைந்தும் நினைவுப் பரிசு அளித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியது அடித்தட்டு மக்களோடு அவர் கொண்ட நேயமான உறவை அவரது எளிவந்த தன்மையை எடுத்துக் கூறுவதாக இருந்தது.
     விழா முடியும் வரை அனைவரும் பங்கேற்றது நெஞ்சம் நிறைந்ததாக அமைந்தது. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான சுவையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
     களப்பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.  விழாவின் வெற்றியில் விழாக் குழுவில் இடம் பெற்ற தோழர்களின் ஒன்றிணைவும் உழைப்பும் வெளிப்பட்டது.

     தொடர்க தோழமை!  சிறக்கட்டும் செயல்பாடு !   
உளுந்தூர்பேட்டை தோழர் நசீர்பாஷா 
அவர்களின்
 பணிஓய்வு பாராட்டுவிழா 

25-02-2016 அன்று உளுந்தூர்பேட்டை கிளைத்தலைவர் தோழர்.மணிபாலன் தலைமையில் நடைபெற்றது. தோழர் அம்பாயிரம் வரவேற்புரையாற்ற, மாநிலத் துணைத்தலைவர் தோழர்.லோகநாதன் துவக்கவுரை நிகழ்த்தினார். மேலும் தோழர்கள். அழகிரி, குழந்தைநாதன், முகுந்தன், கடலூர் ராஜேந்திரன், கடலூர் இளங்கோவன், விருத்தாசலம் இளங்கோவன், லாரன்ஸ், உளுந்தூர்பேட்டை சேகர், கோவிந்தசாமி, கடலூர் முத்துவேலு, TMTCLU மாவட்டதலைவர் தோழர் குமார் மற்றும் ஒய்வுபெற்றோர் நலச்சங்க தலைவர் ஜெயராமன், மீசை ஆறுமுகம், ஜெகநாதன் ஆகியோர் தோழரை வாழ்த்தி பேசினர். நமது மாவட்டத்தலைவர் தோழர் செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோரும் தோழரை வாழ்த்தி பேசினர். மூத்தத் தோழர் தமிழ்மணி நிறைவுரை ஆற்றினார். தோழர் நசீர்பாஷா ஏற்புரை நிகழ்த்திட தோழர். P.முத்துவேல் நன்றியுரையாற்றினார்.
தோழரின் குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.



 



Wednesday, February 24, 2016

செயலகக்கூட்டம்-23-02-2016
மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. மாவட்ட உதவிச்செயலர் தோழர் P.சென்னகேசவன், மாநிலப் பொருளர் தோழர் K.அசோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் அறிவுறுத்தலின்படி பண்ருட்டிக் கிளை அமைப்பு பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் நமது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வேலூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கான ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையினை கிளைச்செயலர்கள் மாவட்ட செயலரிடம் வழங்கினர்.
மாநில துணைத்தலைவர் தோழர். லோகநாதன், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கூட்டத்தில் மூத்த தோழர் தமிழ்மணி கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  

Sunday, February 21, 2016


செயலகக் கூட்டம்
வருகின்ற 23-02-2016 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக் கூட்டம் மாவட்ட  தலைவர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

பணிக்குழுகூட்டம்-தமிழ்மாநிலம்

20-02-2016 அன்று சென்னையில் உள்ள நமது தமிழ்மாநில சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர்.லட்சம் தலைமையில் மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு நடைபெறவிருக்கின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  நமது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கூட்டம் நடைபெற்றது. வரும் தேர்தலில் நமது தமிழ்மாநிலத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிட முழுமையாக பணியாற்றிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நமது மாவட்ட செயலர் தோழர்.இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டார்.


நமது மாவட்டத்தில் நமது தேர்தல் நிதியான ரூபாய்.300-யை உடனடியாக தோழர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 





கும்பகோணம் மகாமகத்தை ஒட்டி நமது BSNL சார்பில் குடந்தை ரயில்நிலையம் அருகில் TELECOM CENTRE போட இரயில்வே நிர்வாகத்தை அணுகியது. ஆனால் குடந்தை ரயில்வே DRM அவர்கள் அனுமதி மறுத்தார். இதனை அறிந்த குடந்தை மாவட்ட சங்கம் குடந்தை தபால் பிரிவு NFPE P3  மாவட்ட செயலர் தோழர்.பெருமாள் அவர்களை சந்தித்து நிலைமையை கூற தோழர் தலைமை தபால் நிலையம் அருகிலும், RMS அருகிலும் அனுமதி பெற்றுக் கொடுத்தார். மேலும் SEWA மாநிலத்தலைவர் தோழர் கனகராஜ் அவர்கள் ரயில் நிலையம் அருகில் உள்ள CHRIST THE KING பள்ளியின் தாளாளரிடமும்  அனுமதி பெற்றுக்கொடுத்தார். நமது குடந்தைத் தோழர்கள் திட்டம் சொன்னதும் உற்சாகம் தந்தார் DGM(CFA), உடன் திட்டமிட்டார்  PRO திரு.சிவசங்கரன் கூட்டு
முயற்சிக்கு ஈடு இணையில்லை என்பதை  நமது குடந்தைத் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர். விஜயுடன் இணைந்து சாதித்துள்ளனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

ஆனால், ஒரு சங்கடம் இரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்தவுடன் குடந்தை மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகத்திடம் பிரச்சனையை எடுத்து சென்று ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற முயற்சித்திருக்கவேண்டும்.
பிரிவு உபசாரவிழா 19-02-2016
திருமதி லக்ஷ்மிபாய் SDE General அவர்கள் சென்னைக்கு மாற்றலில் செல்வதை ஒட்டி அவருக்கு கடலூர் GM அலுவலக மூன்றாம் தளத்தில் பணிபுரிபவர்கள்   சார்பில் பிரிவு உபசாரவிழா 19-02-2016 மாலை நடைபெற்றது. திரு.சாந்தக்குமார் DGM Fin, திரு.மகேஷ் AGM(Admn), திரு.ரவி SDE (Legal), திரு.வரதராஜன் SDE(Admn) மற்றும் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், தோழியர்.மோகனா, தோழர் குருபிரசாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தோழியர் வாசுகி அவர்கள் திருமதி லக்ஷ்மிபாய் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். மனமகிழ்மன்ற  உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை GM அலுவலக மூன்றாம் தள தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.