.

Monday, April 17, 2017

Dr.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் விழா 
மற்றும்
TMTCLU கிளைமாநாடு-சிதம்பரம்.

             14-04-2017 அன்று மாலை 05;00 சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் தோழர்கள் K.நாவு. கிளைதலைவர்-NFTE,V.கிருஷ்ணகுமார் TMTCLU ஆகியோர் தலைமையில் கூட்டம் இனிதே துவங்கியது. தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட உ.செயலர் வரவேற்புரை நிகழ்த்த,தோழர் R.செல்வம் பொதுசெயலர் TMTCLU துவக்கவுரையாற்ற தோழர் V.லோகநாதன் மாநில துணைத்தலைவர் தனது சிறப்புரையில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார். அடுத்ததாக நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பட்டியலை தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் TMTCLU அவர்கள் வெளியிட தோழர்கள் E.டில்லிபாபு. CL, D.ரவிச்சந்திரன்.TT, K.சுந்தர் CL தலைவர், செயலர், பொருளர் என முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை மாநாட்டினை வாழ்த்தி தோழர்கள் A.சுப்பிரமணியன் மாநில உதவிசெயலர் TMTCLU, D.குழந்தைநாதன்.மாவட்ட உதவிச் செயலர் NFTE, V.இளங்கோவன்.மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் NFTE, M.S.குமார் மாவட்டதலைவர் TMTCLU, R.பன்னீர்செல்வம்.கிளைசெயலர் -TMTCLU /கடலூர், A.C.முகுந்தன் மாவட்ட அமைப்புச் செயலர் NFTE, A.S.குருபிரசாத்.கிளைபொருளர்/கடலூர். NFTE, V.பாலகிருஷ்ணன். கிளைசெயலர்-NFTE. /KTL ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நிறைவுரையாற்றிய குடந்தை NFTE மாவட்ட செயலரும், TMTCLU மாநில பொருளாளருமன  தோழர் M.விஜய் ஆரோக்கியராஜ் அவர்கள் தனது உரையில் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள உயர்வு பெற எப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தி பெற்றுள்ளோம் என்பதையும், குடந்தை மாவட்டத்தில் புதிய ஊழியர்களை சேர்ப்பதை தடுத்துள்ளதையும்,ஒப்பந்த ஊழியர்களின் தீர்வடையாத பிரச்சனைகளை பொதுமேலாளருடன் பேசி தீர்த்துள்ளதையும் விளக்கமாகவும், அம்பேத்கரின் அரசியல் சார்ந்த வாழ்க்கை முறையினை விளக்கமாகவும் கூறி புதிய நிர்வாகிகளை வாழ்த்துக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். கூட்டத்தில் 70க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர் இறுதியாக தோழர் S.ரவிச்சந்திரன் JE/STP அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.








தேர்ந்தெடுக்கப்பட் புதிய கிளை நிர்வாகிளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்...

தலைவர்                        : E.டில்லிபாபு
து.தலைவர்கள்              : V.கிருஷ்ணகுமார்
                                       : A.பாலமூர்த்தி
                                       : K.வாசுதேவன்
செயலர்                          : D.ரவிச்சந்திரன் TT
உதவிச் செயலர்கள்      : B.சேகர்
                                       :    சக்திராஜா
                                       : B.கலியபெருமாள்
பொருளாளர்                 : K.சுந்தர்
அமைப்புச் செயலர்கள் : A. நீலமேகம்
                                       : K.மலையரசன்
                                       : S.பாஸ்கர்
                                       : K.கென்னடி
                                       : R.கார்த்திக்கேயன்


Thursday, April 13, 2017

டெலிகாம் டெக்னீசியன் – கவுன்சிலிங்
உத்தரவு வெளியீடு!

நமது மாவட்ட சங்கத்தின் முயற்சியின் விளைவாக  நீண்ட காலமாக நடைபெறாமலிருந்த டெலிகாம் டெக்னீசியன் கவுன்சிலிங் 6.4.2017 அன்று நடைபெற்றது. அதற்கான உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.


மாவட்டத்தில் 75 தோழர்கள்/தோழியர்கள் விருப்ப மாற்றலிலும், 67 தோழர்கள்/தோழியர்கள் Long stay-லும் மாற்றலில் செல்கிறார்கள். கடலூர் தோழர்கள் 7 பேர் தவிர  மற்றவர்கள் அந்த அந்த கோட்டப் பொறியாளர் கட்டுப்பாட்டிற்குள் மாற்றலில் செல்கிறார்கள். 

Tuesday, April 11, 2017



08-04-17 அன்று குடந்தை  தஞ்சை மாவட்ட TMTCLU சங்கத்தின்   சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தின் புகைப்படங்கள்.... 










Saturday, April 8, 2017

தோழர் குப்தா அவர்களின் 96-வது பிறந்தநாள் விழா


    கடலூரில்  கடலூர் GM அலுவலக கிளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. AIBSNLPWA ஓய்வு பெற்றோர் நலச்சங்கத் தோழர் P.ஜெயராமன் தோழர் குப்தா அவர்களின்  நினைவுகளை தன்னுடைய சொந்த அனுபவங்களோடு பகிர்ந்துகொண்டார். அப்பொழுது போராட்ட த்திற்காக பெற்ற நன்கொடையில் மிகுதியான தொகையில் வாங்கப்பட்டததுதான் கடலூரில் உள்ள போஸ்டல் ஹவுஸ் கட்டிடம். தோழர் குப்தா கடலூரில் கலந்துகொண்டபோது இந்திய நாட்டிலிலேயே சங்கதிற்கான சொந்தக்கட்டிடம் இந்த போஸ்டல் ஹவுஸ்தான் பெருமையோடு குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். அந்த வகையில் டெல்லி தாதா கோஷ் பவன் இரண்டாவதுதான். 
     தொடர்ந்து தோழர் பால்கி அவர்கள் இன்றைய காலகட்டத்தில் தோழர் குப்தாவின் தோழமை அணுகுமுறையின் தேவையை வலியுறுத்தினார். தோழர் V.இளங்கோவன் நன்றி கூறினார். விடுமுறை நாளான போதும் திரளான ஓய்வுபெற்ற தோழர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 


 சிதம்பரம் கிளையில் நடைபெற்ற விழா


தோழர் குப்தா...
ஒன்று படுத்தல், இணைந்து போராடல்,
தீர்வு காணல்

இவற்றின் அடையாளச்சின்னம், உயர் தனி நாயகன்



....கடலூர் மாவட்ட சங்க வெளியீடு

Friday, April 7, 2017

NFTE-TMTCLU

தோழர்களே!...
       நமது மாவட்டத்தில் ZONE-1ல் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு  புதிய சம்பள அடிப்படையில்  வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

      ஊழியர் நலனில் அக்கறையோடு தொடர் முயற்சி எடுத்திட்ட நமது NFTE  மாவட்ட சங்கத்திற்கு நன்றி...

      தகுந்த நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், ஒப்பந்தகாரருக்கும் நன்றி....

                                                                                    -BY-

                                                                     மாவட்டச் சங்கம், கடலூர்

டெலிகாம் டெக்னிசியன் சுழல் மாற்றல்
நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியினாலும், கிளைச் சங்க தோழர்களின் ஒத்துழைப்பினாலும் ,மாவட்ட நிர்வாகத்தின்  நிதானமான  கடும் உழைப்பினாலும் நேற்று (06-04-2017)சுழல் மாற்றல் நடந்து முடிந்தது. சுழல் மாற்றல் நடத்தி முடித்த  நமது மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி..

சுழல் மாற்றல் பிரச்சனையில் மாவட்ட சங்கத்திற்கு உறுதுணையாக இருந்த  நமது மாநில சங்கத்திற்கு நன்றி....


                                                             -       மாவட்ட சங்கம், கடலூர்.

Wednesday, April 5, 2017

விஞ்சிய இலக்கு....
கூட்டு உழைப்பின் சிறப்பு!
நிர்வாகத்தின் மனம் திறந்த பாராட்டு..

மார்ச் 2017 முடிய புதிய இணைப்புகள் வழங்க மாநில நிர்வாகம் நிர்ணயித்த இலக்கை விஞ்சியது கடலூர் மாவட்டம்.
அதற்குப் பேருதவியாக இருந்தது சங்கங்கள் நடத்திய மேளாக்கள். அதனை அங்கீகரித்து இன்று மதியம் முதன்மைப் பொது மேலாளர் திரு.மார்ஷல் ஆன்டனி லியோ அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பாராட்டினார்.
அப்போது நமது மாவட்ட  செயலர் தோழர் இரா.ஸ்ரீதருக்கு நிர்வாகத்தின் சார்பில் முதன்மைப் பொது மேலாளர் துண்டு அணிவித்தார். உதவிச்செயலர் தோழர் D.குழந்தைநாதன் உடனிருந்தார்.
NFTE மாவட்ட சங்கத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேளாக்கக்களை சிறப்பாக நடத்திய கடலூர் தோழர்கள் E.விநாயகமூர்த்தி, S.இராஜேந்திரன், சிதம்பரம் தோழர் V.கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி தோழர் V.லோகநாதன் முதலான குழுவினருக்கும்ம அனைத்து தோழர்களுக்கும், CSC தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

இன்னும் கூடுதல் உற்சாகத்தோடு நமது செயல்பாடு விளங்கட்டும்!







ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி
நமது பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்திட NFTE,TMTCLU மாநில சங்கம் விடுத்த வேண்டுகோளின்படி இன்று (5.3.2017) கடலூர் மாவட்டத்தில் பல கிளைகளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உளுந்தூர்பேட்டை 


காட்டுமன்னார்கோயில் 
 கள்ளக்குறிச்சி 
 பண்ருட்டி 


திண்டிவனம் 
விழுப்புரம்  





கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் மாலை 5.00 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் MS.குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை பொதுச்செயலர் தோழர் S.தமிழ்மணி, மாநில பொதுசெயலர் தோழர் R.செல்வம், மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். தோழர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Sunday, April 2, 2017

கள்ளக்குறிச்சி தோழர் K.பாண்டியன் பணி ஓய்வு
அன்பானவர், மிகவும் அமைதியான குணம். நிறைகுடம் தளும்பாது என்பார்களே அத்தகைய அமைதி. ஆனால் கொண்ட கொள்கையில் உறுதி. கல்லை பகுதி NFTEசங்க செம்பதாகை உயர்த்திய காணரும் வீரர்.அவரது பனி ஒய்வு 30.3.2017-ல் கல்லை மூத்த தோழர் P.அழகிரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பாராட்டிற்குரிய விழா ஏற்பாடுகள். தோழர் K.செல்லமுத்து மிக அற்புதமாக வரவேற்புரையை அனைவரும் மகிழும் வண்ணம் நிகழ்த்தினார். தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக வளர்ந்து வரும் சேலம் மாவட்ட செயலர் தோழர் C.பாலகுமார் விழா சிறப்புரை ஆற்றினார். நாம் எதிர்கொள்ள உள்ள 2017 ஊதிய மாற்றத்தை மையமாக வைத்து, நாம் முன்பு சந்தித்த சம்பள குழுக்களின் அனுபவங்களோடு ஒப்பிட்டு சிறப்பாக உரையாற்றினார்.
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தனது உரையில் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு ஒரு பிரிண்டர் தேவை என்ற வேண்டுகோளை முன்வைத்தார். உடனடியாக தோழர் பாண்டியன் எழுந்து பிரிண்டருக்கான முழுத்தொகையையும் தானே அளிப்பதாக கூறி அதற்குரிய தொகை ரூ.13,500யை மாவட்ட செயலரிடம் அனைவரின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே ரொக்கமாக வழங்கினார்.
தோழருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

மாவட்ட சங்க அலுவலகத்தில் புதிய கலர் பிரிண்டர் 

தோழர் வழங்கிய தொகையில் நேற்று (1.4.2017) புதிய கலர் பிரிண்டர் வாங்கப்பட்டது. மாவட்ட சங்க அலுவலகத்தில் AIBSNLPWA மூத்தத் தோழர் P.ஜெயராமன் அவர்கள் தனது கரங்களால் புதிய பிரிண்டரின் முதல் பிரதியை எடுத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.