.

Tuesday, January 23, 2018

தமிழ் மாநிலத் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம்,கடலூர்

தோழர்களே!
        கடலூர் மாவட்டச் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு தோழர் M.S.குமார் அவர்களின் தலைமையில் விழுப்புரத்தில் 21.01.2018 அன்று நடைப்பெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நமது மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   TMTCLU சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து  நமது மாநிலத் தலைவர் தோழர் ஆர் கே நமது சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
        துவக்கவுரையாக தோழர் நமது மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்   தனது பாணியில் சங்கத்தின் செயல்பாட்டினைப் பற்றியும் நிதி சம்மந்தமான பிரச்சனைகளையும் எடுத்துக் கூறினார். கடலூர் மாவட்டச் சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என  தமது உரையில் பதிவு செய்தார்.
         மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் நமது சங்கத்தின் அமைப்பு நிலையினை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.  அடுத்து  தோழர் R.அகஸ்ட்டீன் விழுப்புரம், தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் கடலூர், Y.ஹாரூன் பாஷா கிளைச் செயலர் TNV,  தோழர் E.C கண்ணன் கிளைச் செயலர் கள்ளக்குறிச்சி, தோழர் D.ரவிச்சந்திரன் கிளைச் செயலர்/CDM, தோழர் A.பாஸ்கரன் கிளைத் தலைவர்/ULD, தோழர் M.மணிகண்டன் மாவட்ட அமைப்பு செயலர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
        அதனைத் தொடர்ந்து  தோழர் ஆ.சவுரிராஜன் மாவட்டப் பொதுச் செயலர் AITUC, K.முருகன்  மாநிலத் தலைவர் அரசு பணியாளர் சங்கம், K.மோகன் மாவட்டச் செயலர், வங்கி ஊழியர் சங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். NFTE மாநில உதவிச் செயலர் தோழர் G.S.முரளிதரன் இன்றைய சூழலில் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். அதற்கு நாம் உறுதியான எடுக்க வேண்டும். ஆட்குறைப்பை தவிர்க்க நாம் நேர்த்தியான முறையில் நிர்வாகத்திடம் அணுக வேண்டும் என்றார்.
        AITUCயின் அகில இந்தியச் செயலர் தோழியர் வஹிதா நிஜாம்  இன்றையச் சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையை கண்டு AITUC பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டு வருகிறது . AITUC  சங்கம்  உங்களின் தாய்ச் சங்கம். உங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும், நீங்கள் துவக்கப் போகும் அகில இந்திய அமைப்பிற்கு நிச்சயம் எங்களின் ஆதரவு உண்டு என பலத்த கரவொலிக்கிடையே உரையில் பதிவு செய்தார்.
        அடுத்தப்படியாக நமது மாநில தலைவர் தோழர் ஆர் கே  இன்றையச் சூழலில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் செயல்படும் நிர்வாகத்தினை கண்டித்துப்  பேசினார். தொழிலாளர்களை அனுப்பும் போக்கினை நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிடில் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்றார். தொழிலாளர்களை யாரும் கில்லுகீரை அல்ல, அவனும் மனிதனே!, அவர்களும் மதிக்கப்பட வேண்டும் என்றார். அது மட்டுமில்லாது நமது அமைப்பை இன்னும் பலப்படுத்திட அகில இந்திய அமைப்பினை உருவாக்கிட தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் என்றும் அதுவும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்றவுடன் ஒப்பந்த ஊழியர்களின் மத்தியில் மகிழ்ச்சி பொங்க அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பினர்.
         நமது தொழிற்சங்கச் தலைவர் தோழர் K.சேது அவர்கள் கடலூர் மாவட்டச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். அடுத்தப்படியாக TMTCLU சங்கத்தின் பிதாமகனும்  மாநில துணைப் பொதுச் செயலாளருமான தோழர் S.தமிழ்மணி அவர்கள் நமது தோழர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். NFTE மாநில தலைவர் P.காமராஜ் தனக்கே உரிய பாணியில் நிர்வாகத்தின்  அணுகுமுறை எப்படி இருக்கிறது அதனை எவ்வாறு அணுகிச் செயல்பட வேண்டும் என்று பதிவு செய்தார்.
        NFTE  மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன்  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு நமது இந்த இரண்டு சங்கங்களும் இணைந்து பல்வேறு செயல்களை தொழிலாளர்களுக்குச் செய்து கொண்டு வருகிறது.  ஆட்குறைப்பினை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்றும் நாம் இன்னும் செய்ய வேண்டிய செயல்பாடுகள் ஏராளம். இந்த கடலூர் மாவட்டச் சங்கம் நல்ல எடுத்துகாட்டாக செயலபடுகிற மாவட்டச் சங்கம் என்றும் . அதனினும் NFTE மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றேன்  எனத் தமது சிறப்புரையில் பதிவு செய்தார்.
        TMTCLU மாநிலப் பொதுச் செயலர் தோழர் R.செல்வம்  நமது மாநிலச்  சங்கத்திற்கு உறுதுணையாக கடலூர் மாவட்டச் சங்கம் விளங்குகிறது. இன்னும் நாம் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு  மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
        இறுதியாக NFTE யின் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  மிக அதிகளவில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. புதிய தலைமையினை உருவாக்கி , அந்த தலைமை இன்னும் துடிப்புமிக்க செயல்பாட்டோடு செயலாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு  புதிய நிர்வாகளை அறிமுக செய்தார். புதிய நிர்வாகிகளை தோழர் S. நடராஜன் முன்மொழிய தோழர் A.சுப்ரமனியன் வழிமொழிந்தார்.
        மாவட்ட மாநாட்டிற்கு தோழர் மனோகர் திருச்சி, அவருடன் சண்முகம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கும், தோழர் M.விஸ்வநாதன் மாவட்டச் செயலர் ,தோழர் M.பாரதிதாசன்  உள்ளிட்ட அனைத்து தருமபுரி தோழர்களுக்கும் , தோழர் R.ராஜேஷ் மாவட்டச் செயலர் குடந்தை , அவரோடு வந்திருந்த அனைத்து குடந்தை தோழர்களுக்கும் , வேலூர் மாவட்ட பொருப்பாளர் தோழர் M.ராஜ்குமார் மற்றும் அவரோட   வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், விருது நகரில் இருந்து வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும், சேலத்திலிருந்து வந்திருந்த மாவட்ட பொருப்பாளர் தோழர் இசையரசன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும்,  தஞ்சை தோழர்களுக்கும்,  புதுவையிலிருந்து வந்திருந்த மாவட்ட செயலர் நாகலிங்கம் உள்ளிட்ட அனைத்து புதுவை தோழர்களுக்கும், திருச்சியிலிருந்து வந்திருந்த தோழர் சன்முகம், தமிழ்செல்வம் உள்ளிட்ட தோழர்களுக்கும்  புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலர் A.S குருபிரசாத் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது.
         நிறைவான தோழர்கள் கலந்து கொள்ள மிகச் சிறப்பாக  காலை உணவு , தேனீர், மதியம் உணவு , தேனீர் வழங்கி  மாநாடு சிறப்பிக்க  அரும்பாடுபட்டு  உழைத்த  தோழர் நடராஜன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்...

தோழமையுடன்
  M.S.குமார்                    J.கந்தன்                     A.S.குருபிரசாத்
   மாவட்ட தலைவர்                                மாவட்ட பொருளாளர்                                     மாவட்ட செயலர்










BSNL அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
கடலூர்மாவட்டம்
 


அன்புள்ள தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.
நமது BSNLல் உள்ள அனைத்து சங்கங்கள் இணைந்து 1.1.2017 முதல் 3வது ஊதியமாற்றத்தை அமுல்படுத்தகோரியும், இரண்டாவது ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் மற்றும் BSNLஐ நலிவடையச் செய்யும் துணை டவர் நிறுவனம் நிறுவுவதைக் கண்டித்து 2017 டிசம்பர் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம்  நடத்தியுள்ளோம். இருப்பினும் நமது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக தனி டவர் நிறுவனத்தை நிறுவி அதற்குரிய அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் ஓய்வு வயது 60லிருந்து 58ஆக குறைப்பு, VRS போன்றவற்றை தடுத்து நிறுத்திட, நமது அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்க மத்திய சங்கங்கள் கூட்டமைப்பு கூடி டெல்லி தலைநகர், மாநில, மாவட்டத் தலைநகரங்களில் சத்தியாக்கிரக போராட்டமும், 30.1.2018 முதல் நாடு முழுவதும் ஒத்துழையாமைப் போராட்டமும் (Work to rule) நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டங்களை விளக்கி அனைத்துக் கிளைகளிலும் விளக்கக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே அனைத்துக் கிளைகளிலும் உள்ள தோழர்கள், தோழியர்கள் முழுமையாக கலந்துகொண்டு கடலூர் மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
K.T. சம்மந்தம் BSNLEU        இரா.ஸ்ரீதர்NFTE                    P.சிவக்குமார் SNEA           S.ஆனந்த் AIBSNLEA                                                       
M.தினகரன் SEWA        V.நல்லத்தம்பி PEWA

மாவட்டச் செயலர்கள்


விதிப்படி வேலை,சத்தியாக்கிரக போராட்ட விளக்கக் கூட்டங்கள்
                     கடலூர் மாவட்ட சுற்றுப் பயணத் திட்டம்
நாள்
கிளை மற்றும் நேரம்
கலந்துகொள்ளும் தலைவர்கள்
24.1.18
புதன்
கடலூர்
GM அலுவலகம்
மதிய உணவு இடைவேளை
தோழர்கள்
R.M. கிறிஸ்டோபர் BSNLE K.நடராஜன்  NFTE
R.அசோகன் SNEA    P.வெங்கடேசன் AIBSNLEA
K.அருணகிரி SEWA     V.நல்லத்தம்பி PEWA
25.1.18
வியாழன்
சிதம்பரம்
(காட்டுமன்னார்கோயில்)
காலை 9.00 மணி
தோழர்கள்
K.T.சம்பந்தம் BSNLEU            R.ஸ்ரீதர் NFTE
A.நடராஜன் SNEA       A.சக்திவேல் AIBSNLEA
N.மனோகரன் PEWA    G.B.சுதாகர்ராஜ் SEWA
நெய்வேலி
மதிய உணவு இடைவேளை
தோழர்கள்
R.V.ஜெயராமன் BSNLEU      R.செல்வம் NFTE
A.நடராஜன் SNEA   T.விஸ்வலிங்கம் AIBSNLEA
பெண்ணாடம்
(விருத்தாசலம், திட்டக்குடி)
மாலை 5.00 மணி
தோழர்கள்
R.விஸ்வநாதன் BSNLEU  P.சுந்தரமூர்த்தி NFTE
D.சிவசங்கரன் SNEA N.செந்தில்குமரன்AIBSNLEA
V.நல்லத்தம்பி PEWA          K.பிரேமா SEWA
27.1.18
சனி
விழுப்புரம்
காலை 9.00 மணி
தோழர்கள்
K.T.சம்பந்தம் BSNLEU    R.ஸ்ரீதர் NFTE
R.வரதராஜன் SNEA  S.நடராஜன்  AIBSNLEA
V.அரிகிருஷ்ணன் PEWA  
S.வாசுதேவன் SEWA
செஞ்சி
மதிய உணவு இடைவேளை
தோழர்கள்
S.பழனி BSNLEU                  R.ஸ்ரீதர் NFTE
R.வரதராஜன் SNEA         S.நடராஜன்  AIBSNLEA
திண்டிவனம்
மாலை 5.00 மணி
தோழர்கள்
N.சுந்தரம் BSNLEU            G.ஜெயராமன் NFTE
R.வரதராஜன் SNEA 
K.கலைச்செல்வன் AIBSNLEA
29.1.18
திங்கள்
அரகண்டநல்லூர்
 காலை 9.00 மணி
தோழர்கள்
N.தேவர் BSNLEU                 R.செல்வம் NFTE
P.சிவக்குமார் SNEA  A.ரமேஷ்குமார் AIBSNLEA
உளுந்தூர்பேட்டை
மதிய உணவு இடைவேளை
தோழர்கள்
P.ரத்தினம் BSNLEU              R.செல்வம் NFTE
P.சிவக்குமார் SNEA           A.சுரேஷ் AIBSNLEA
M.தினகரன் SEWA
கள்ளக்குறிச்சி
மாலை 5.00 மணி
தோழர்கள்
K.T.சம்பந்தம் BSNLEU   N.அன்பழகன் NFTE
P.சிவக்குமார் SNEA  A.ரமேஷ்குமார் AIBSNLEA
S.வாசுதேவன் SEWA







Monday, January 22, 2018

புதிய நிர்வாகிகளுக்கு  வாழ்த்துக்கள்.....

Thursday, January 11, 2018

வருந்துகிறோம்

  நம்முடன் பணிபுரியும் தோழர் R.நந்தகுமார் JE/ NIB CDL...அவர்களின் தந்தையும்  நமது இலாகாவில்  கேபிள் ஜாய்ண்டராக  பணி புரிந்து ஓய்வு பெற்றவருமான தோழர் V.ரங்கராஜ் அவர்கள் இன்று ( 11-01-2018 ) காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
  அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட சங்கங்களின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்...
 அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை  காலை  கடலூர் மஞ்சகுப்பம்..  தஷ்ணாமூர்த்தி நகரிலுள்ள அவரது  இல்லத்திலிருந்து புறப்பட்டு பெண்ணை நதிக்கரையில்  நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...

NFTE-TMTCLU
மாவட்டச் சங்கங்கள்..கடலூர்.

தோழர்களே.
வரும் 12-01-2018 அன்று நடைபெறவிருந்த நமது  மாவட்ட செயற்குழு  போக்குவரத்து தொழிலாளர்களின்  போராட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால்  மாவட்ட செயற்குழு  ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும் .

          தோழமையுடன்
              இரா.ஸ்ரீதர்
                                                         மாவட்டச் செயலர்

Monday, January 8, 2018

BSNL நிறுவனத்தில் உள்ள 66000 செல் கோபுரங்களைப்
பிரித்து..........! தனித் துணை நிறுவனம் உருவாக்கிட., ஒப்புதல்
அளித்துள்ள., மத்திய அமைச்சரவையின் முடிவைக் கண்டித்து...!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள்......!
வேலை நிறுத்தம் நடத்திய..........! களத்தின்...!
கனல்...! அடங்காத நிலையில்.,
&
மத்திய அரசு தன்னிச்சையாக., BSNL TOWER
CORPORATION LIMITED (BTCL) என்ற பெயரில்., ஒரு தனி
நிறுவன உருவாக்கத்தையும்., மேலும்...! அந் நிறுவனத்திற்கு.,
திரு. அமித் யாதவ், IAS., அவர்களை...............! தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குனர் (Chairman & Managing
Director)-ஆக நியமித்துள்ளதையும்
கண்டித்து...............!
&
08-01-2018 அன்று., ஆர்ப்பாட்டம் நடத்திட.,
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு (ALL UNIONS AND ASSOCIATIONS
OF BSNL) அறைகூவல் விடுத்துள்ளது.
அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!
நமது கடலூர் GM அலுவலக வாயிலில்...!
8.1.2018 மதிய உணவு இடைவேளையில்
கூட்டமைப்பு சார்பாக...!

ஆர்ப்பாட்டம்...!

Thursday, January 4, 2018


மாவட்ட செயற்குழு ஒத்தி வைக்கபடுகிறது..

நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த  நவம்பர் மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து சென்னையிலுள்ள நமது தலைமை பொது மேலாளர் அலுவலக முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அந்த போராட்டத்திற்கு நேரடியாக நமது மாவட்ட தலைவர்   R.செல்வம் , மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதால் இன்று நடைபெற இருந்த (04-01-2018 ) மாவட்ட செயற்குழு ஒத்தி வைக்கபடுகிறது.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
   தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்டச் செயலர்