.

Thursday, February 21, 2019

BSNL/MTNL மறு சீராய்வு

இன்று 21/02/2019 DCC எனப்படும் DIGITAL COMMUNICATIONS COMMISSION (முந்தைய TELECOM COMMISSION)தொலைத்தொடர்பு ஆணையம் டெல்லியில் கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
DCC தொலைத்தொடர்பில் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த உச்சக்கட்ட அமைப்பாகும்.எனவே இந்தக் கூட்டம் மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.
இன்று நடைபெறும் DCC கூட்டத்தில் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்  என தெரிகிறது.
BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அவற்றில்…
·       ஓய்வு பெறும் வயதை 58 என குறைப்பது… 
·       அதன் மூலம் 2019-20 நிதியாண்டில் சுமார் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைக்க வகை செய்வது…
·       விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மேலும் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைப்பது…
·       4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது…
·       காலியாக உள்ள கட்டிடம் மற்றும் இடங்களை வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது…
போன்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர… சீரமைப்பு சம்பந்தமாக DOT தனது பங்காக சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது..
அவற்றில்…
ஊழியர்களின் சம்பளச்செலவு நிறுவனங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவதால், மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL, BHARAT NET போன்ற நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம்
சம்பளச் செலவினங்களை பரவலாக்குவது…
நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்,  நிதி ஆதாரங்களை  உறுதிப்படுத்தவும் வங்கிகளிடம் கடன் கோருவது….போன்ற ஆலோசனைகளை DOT முன்வைத்துள்ளது.
இன்றைய DCC கூட்டத்தில்…
BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்…
BSNL நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இறுதி ஒப்புதல் மத்திய அமைச்சரவையிடம் பெறப்படும்.
எனவே இன்று நடைபெறும் DCC கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காக போராடியும் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை அரசிற்கு மிக வலுவாக தெரிவித்துள்ளதால்..
இன்று நடைபெறும் DCC கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகளை  நிதானத்தோடு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி: காரைக்குடி வலைப்பதிவு


Tuesday, February 19, 2019

இன்றைய 19.2.2019 தினத்தந்தி நாளிதழில் நமது வேலைநிறுத்தம் பற்றி  நமது மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் கட்டுரை.

Sunday, February 17, 2019



அன்பார்ந்த  தோழனே,,
வருகின்ற பிப்ரவரி 18,19,20 வேலை நிறுத்த "போராட்ட களத்தில் நீ கலந்து கொள்ளவில்லை" எனில்
உன் எதிர்கால வாழ்க்கை "போராட்ட களமாகிவிடும்" என்பதை மறந்துவிடாதே••
"போராட்ட களத்தை வேடிக்கை பார்க்கும் வீணர்களாய் இருந்து விடாதே"
உன் எதிர் கால வாழ்க்கை வீணாய் போய் விடும் என்பதை நினைவில் கொள்••
"உனக்காக போராடும் தோழனை ஏளனமாய் பார்க்காதே".
போராடுபவன் பெறும் வெற்றிக்கனி., போராடுபவனுக்கு இனிக்கும்
உனக்கு அந்த கனி கசக்கும்••
யாரோ போராடட்டும் என இருந்து விடாதே•|
போராடி வெற்றி பெற்றவனின் ஏளன பார்வை உன்னை  காலம் முழுவதும் கொள்ளும்..
அவர் சொன்னார்., இவர் சொன்னார்., என வேலைக்கு சென்று விடாதே••
மூன்று நாட்கள் சம்பளம் போய்விடுமோ என்று கவலை படாதே••
BSNL தனியார் மயமாக்கப்பட்டால் மக்கள் மத்தியில் உன் மவுசு காணாமல் போய்விடும்..
இப்போது உள்ள சலுகைகள்.. பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள், பழைய பென்சன், புதிய பென்சன், எதுவும் கிடைக்காது••
ஏன் இவைகள் எல்லாம் பெற்று தரவில்லை என  சந்தா கொடுத்த உரிமையில் தொழிற்சங்கங்களை எதிர்த்து நீ இனி கேள்வி கேட்க முடியாது..
 BSNL இல்லையென்றால்? தொழிற்சங்கங்களே இனி இருக்காது..
அப்போது யாரிடம் கேள்வி கேட்பாய் ?
உனக்காக,
உன் மனைவி மக்களுக்காக..
எதிர் கால சந்ததிக்காக..
உன் குழந்தைகளின் கல்விக்காக••
நீ வாங்கிய வீட்டு கடன்..
சொந்த கடனை கட்டுவதற்காக.. போராட்ட களத்திற்கு வா..
இன்று போல் என்றும் இருக்க வேண்டுமென நினைத்தால் போராட்ட களத்திற்கு வா.. சுயநலத்திற்காக, அரசியலுக்காக.,
வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதே என்று சொல்லும் தலைவர்களை புறந்தள்ளி விட்டு வா களத்திற்கு..
இந்த ஒரு விசயத்தில் தொழிற்சங்க வித்தியாசம் பார்க்காமல் ஒன்று பட்டு போராடுவோம் வா களத்திற்கு••
இன்று போராடவில்லை எனில்..
இனி எதற்காகவும் போராட முடியாது..
இனியும் ஏன் தயக்கம் 
வா களத்திற்கு,
வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றியாக்குவோம்..
நம் முன்னோர் இரத்தம் சிந்தி, பல உயிர்கள் பலி கொடுத்து பெற்று தந்த உரிமை, சலுகைகளை பேணி காப்போம்••
நம் BSNL பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தி உன்னிடம் மட்டுமே உள்ளது••
நம் BSNL பொதுத்துறை நிறுவனமாக மக்கள் சேவையாற்றிட•• 
நாடு நலம் பெற நாமும் நலம் பெற பிப்ரவரி 18,19,20 மூன்று நாட்கள் மட்டும் வேலைக்கு செல்லாதே••

NFTE மாவட்ட சங்கம்
கடலூர்


இரங்கல் செய்தி
திண்டிவனம் பகுதியில் பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து 60 வயதின் காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெற்ற தோழர் தருமன் இன்று 17.2.2019 இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
தோழரது இறுதி சடங்கு நாளை 18.2.2019 மாலை 4.00 மணியளவில் தோழரது ஊரான நெடிமொழியனூர் என்ற ஊரில் நடைபெறும்.  

Thursday, February 14, 2019


நட்டமடையும் பொதுத்துறை நிறுவனங்கள் –
ஓர் ஆய்வுக் குறிப்பு
n ஆர். பட்டாபி ராமன்
n (மேனாள் மாநிலச் செயலாளர், NFTE தமிழ் மாநிலம்)
(A study on Loss making PSUs – A Note ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)
 தமிழில் மொழிபெயர்த்தவர் தோழர் V.நீலகண்டன் - கடலூர்)



கட்டுரை காண இங்கே கிளிக் செய்யவும்.......

AUAB சார்பில் பிப்18,19,20 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தத்திற்கு நமது அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடமும், மற்றும் நமது வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் பிரச்சார வேன் மூலம் சென்று வாயிற்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. அனைத்து ஊர்களிலும் நமது போராட்டக்கோரிக்கைகள் விளக்கி நமது தோழர்கள் பலர் உரையாற்றினர்.
      11.2.2019 அன்று கடலூரில் துவக்கப்பட்ட கூட்டத்தில் AUAB கூட்டமைப்பு தலைவர்கள் NFTE சார்பில் சம்மேளனச்செயலர் தோழர் S.பழனியப்பன், BSNLEU சார்பில் மாநிலச்செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன், SNEA சார்பில் தோழர் B.பெர்லின் ஐசக், AIBSNLEA தோழர் R.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். அதனைத்தொடர்ந்து 12.2.2019: சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், 
    13.2.2019: பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, 
 14.2.2019: உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, அரகண்டநல்லூர், திருக்கோயிலூர், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது சங்க நிர்வாகிகள் P.சுந்தரமூர்த்தி, V.லோகநாதன், V.இளங்கோவன், D.குழந்தைநாதன், D.ரவிச்சந்திரன், R.அகஸ்டின், S.ராஜேந்திரன், தோழர்கள் R.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனைத்து ஊர்களிலும் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.








                   மாவட்ட செயற்குழு
12-02-2019 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் கொடியேற்றிட வெளிப்புற பகுதி  கிளைச் செயலர் தோழர்              E.விநாயக மூர்த்தி வின்னதிர கோஷமிட,  மாவட்ட தலைவர் தோழர் G.கனேசன்  தலைமையில் செயற்குழு  துவங்கியது. செய்றகுழுவிற்கு வந்திருந்தவர்களை மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். செயற்குழுவில்  மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் பெரும்பான்மையோர் பங்கேற்றனர். சிறப்புரையாக தோழர் S.பழனியப்பன்  அகில இந்திய துணைத் தலைவர்  பங்கு பெற்று நமது இன்றைய BSNL  நிலைமை, நாம் செய்ய வேண்டிய செயல்பாடுகள் போன்றவற்றினை  பதிவு செய்தார். மற்றும் மாவட்ட சங்க, கிளைச் சங்க நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். நிறைவுரையாக தோழர் இரா.ஸ்ரீதர்  வேலை நிறுத்தத்தின் அவசியத்தை சங்க நிர்வாகிகளிடம் தெளிவு பெற எடுத்துரைத்தார். இறுதியாக  தோழர் D.குழந்தைநாதன்  நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது.
தீர்மானம்
v 18,19,20 தேதிகளில்  நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்ததில் முழுமையாக  பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.
                                    
v வாழ்வாதார பிரச்சனையாக தேச நலனில் அக்கறையோடு செயல்படும் மக்களின் நிறுவனமான BSNLஐ காக்க ஒன்றினைந்து போராடிட பங்கேற்றிடுவோம் வேலை நிறுத்தத்தில்.
                                                                                   தோழமையுடன்
  இரா.ஸ்ரீதர்

                                                                 மாவட்டச் செயலர், NFTE.











Friday, February 8, 2019

மாவட்ட செயலக கூட்டம்-11.2.2019

வருகின்ற 11. 2. 2019 திங்கள் கிழமை காலை 9 மணியளவில் கடலூர் தொழிற்சங்க அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அவசர செயலக கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர் G. கணேசன் தலைமையில் . ஆகவே மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

ஆய்வு பொருள்:
பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தம்.
JE பணி நியமனம்
TT விருப்ப மாற்றல்
அமைப்பு நிலை
மாவட்ட அளவிலான பிரச்சினைகள்.

தோழமையுள்ள
இரா. ஸ்ரீதர்
 மாவட்டச் செயலர்
Special CL letter

Monday, February 4, 2019

புதிய கிளை துவக்கம்

(அரங்கண்டநல்லூர் கிளை)

தோழர்களே!.. நமது அரங்கண்டநல்லூர்  பகுதிக்கு உட்பட்ட  இடத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் TNTCWU  சங்கத்திலிருந்து விலகி நமது TMTCLU சங்கத்தில் இணைத்து கொண்டனர். மாவட்ட சங்கத்தின் சார்பில் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
    மாவட்டச் சங்கம், TMTCLU
               கடலூர்.






   



                                                                                              

Saturday, February 2, 2019

NFTE
TMTCLU
மாவட்ட செயலக கூட்டம்

தோழர்களே
         நமது மாவட்ட சங்கத்தின் செயலக கூட்டம்    எதிர்வரும்   06-02-2019 அன்று மாலை 05.00 மணியளவில் காமாட்சி திருமண மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. மற்றும்   நமது மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் M.கபிலன் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. ஆகையால் TMTCLU சங்க பொருப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

       சிறப்புரை : தோழர்   R.தங்கமணி
                                      மாவட்ட செயலர், புதுவை

நன்றி

                                                                                தோழமையுடன்

                                                                                 TMTCLU                        
மாவட்டச் சங்கம், கடலூர்