.

Saturday, August 31, 2019


இன்று 31.8.2019 நமது இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெறும்

·      தோழர்S.இராஜூ SDE  சிதம்பரம் (விருப்ப ஓய்வு)
·      திருமதி M.மெஹருன்னிசா A.O கடலூர்
·      தோழர் D.திருவிக்ரமன் TT திண்டிவனம்
·      தோழர் R. மோகன் TT பெண்ணாடம்
·      தோழியர் M.ஃபாத்திமா ATT திண்டிவனம்
ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க

 கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

Tuesday, August 20, 2019


அன்பார்ந்த தோழர்களே, 

நாளைய தினம் நடைபெறவுள்ள BSNL நிர்வாக குழுவில்,ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்க நடைபெறும் முயற்சிகளுக்கு எதிராக, நாளைய தினம் (21.08.2019) நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அகில இந்திய AUAB அறைகூவல் விடுத்துள்ளது.  இந்த பிரச்சனையின் தன்மையை புரிந்துக் கொண்டு, வெகுவாக ஊழியர்களையும், அதிகாரிகளையும் திரட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட மாநில சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.எனவே நமது கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் AUAB சார்பில் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
D. குழந்தை நாதன்
மாவட்ட செயலாளர்

Thursday, August 8, 2019


AUAB  தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2000ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி 07.08.2019 அன்று அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டது. அதனையொட்டி அனைத்துக் கிளைகளிலும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.




Wednesday, August 7, 2019




தோழர்களே
 நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதிய பட்டுவாடா செய்யாததை கண்டித்து மத்திய  தொழிலாளர் நல ஆனையர் , புதுவை அவர்களிடம் 26-07-2019 அன்று  நமது NFTE-TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில்   மனு கொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த தொழிலாளர்  நல ஆணையர் நமது நியாயமான கோரிக்கையின் மீது உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து , உடணடியாக 08.08.2019 அன்று பேச்சுவார்த்தைகு நிர்வாக தரப்பிலும் ஒப்பந்தகாரர் தரப்பிலும் , நமது சங்க பொறுப்பாளர்களை அழைத்தனர்.
இருப்பினும் நமது நியாயமான கோரிக்கையினை  அறிந்து தொழிலாளர் நல ஆணையர் 06.08.2019 அன்றே பேச்சுவார்த்தைக்கு வருமாறு  நம்மையும் , நிர்வாக தரப்பினையும் , ஒப்பந்தகாரரையும் அழைத்தார். பேச்சுவார்த்தையில் நமது  தொழிலாளர்களின் நிலையை அறிந்து உடனடியாக ஒரு மாத சம்பளம் கொடுப்பதற்கு உரிய  நடவடிக்கை எடுத்திட ஒப்பந்தகாரரையும், நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டார்.  அதுமட்டுமில்லாமல் தொழிலாளர்களின் நிலையை அறிய  Labour Enforcement Officer (LEO) புதுவை அவர்களின் தலைமையில்   நேரடியாக களத்தில் ஆய்வு செய்கிறோம் என உதவி தொழிலாளர் நல ஆணையர் உறுதியளித்துள்ளார்.  விரைவில் நமது தொழிலாளர்களின் நலன் காக்கும் என நம்புகிறோம்.
எனவே நமது நியாயமான கோரிக்கையின் மீது உரிய கவனம் எடுத்து செயல்பட்ட  உதவி தொழிலாளர் நல ஆணையர் அவர்களுக்கு நன்றி... நமது சங்கத்தின் சார்பில்   இரா.ஸ்ரீதர், A.S.குருபிரசாத், M.S.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                                                                               தோழமையுடன்
                                                                             NFTE-TMTCLU  கடலூர்.