.

Saturday, January 24, 2015

குன்றென... நிமிர்ந்து நிற்கும்... நமது பாரம்பரியம்...
GPF நிலையை...
அறிந்து... அறிந்திட... அறிய பல தகவல்...


தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)
தொலைத் தொடர்பு மாவட்டங்களில் இருந்து GPF தொகை 
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.

இதற்கான நிதியினை நமது மத்திய, மாநில
சங்கத்தின் தொடர் முயற்சியால் முழுமையாக  21-01-2015 
அன்று நமது மத்திய நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. 

இந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 
22-01-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும்
என்று நமது மாநில சங்கத்திடம் தெரிவித்தது.

ஒரு சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஊழியர் இறப்பு காரணமாக 
அவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி வழங்க நிர்வாகம் முற்பட்ட போது புதிய மென்பொருள் 
ERP அமுலாக்கத்தின் குளறுபடி காரணமாக 22-01-2015 அன்று GPF 
தொகை வங்கிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...
மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி சரி செய்யப்பட்டு 23-01-2015 
இன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு 
விண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான
தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு
அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-01-2015 (குடியரசு தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி 
(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு 
அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட 
மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ERP... நிதி நெருக்கடி... உள்ளிட்ட... பல்வேறு பிரச்சனைகளின் 
தாக்கத்தில் இருந்து ஊழியர்களின் பிரச்சனைகளை
பாரம்பரிம் குன்றாமல் காக்க போராடி வரும் 
நமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்.

அறிந்திட முடியாத......! 
பல செய்திகளை... பல தகவல்களை... பல புள்ளி விவரங்களை... கடைநிலை தொண்டன் கூட அறிந்திட செய்திடும். 
நமது மாநில செயலரின் மரபை போற்றுவோம்.

அந்நிலை... இந்நிலை... எந்நிலை... ஆனாலும் 
ஊழியர் நலன் நிலைக்காக போராடி வரும் 

நமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்...! போற்றுவோம்...!! போற்றுவோம்...!!!

Wednesday, January 21, 2015

ஜனவரி 21 - தோழர் லெனின் நினைவு தினம்


விசாலத்தை விழுங்கிய 
கூர்மையான சிறு சிறு கண்கள்....
குருந்தாடிப் பொந்துக்குள் 
யுகப்புரட்சி....
தேசத்தின் அதிபர் ஆனாலும் 
தோழர்களோடு தோழனாய்;
மரக்கட்டைச் சுமையைப் 
பகிர்ந்து கொண்ட 
தோழமைத் தோள்கள்....
வெளிச்சமாய் தோழர் லெனின் 
('வெளிச்சப்புள்ளிகள்' கவிதை நூலில் கோவி. செயராமன்)

                 1870 ஏப்ரல் 22-ல் பிறந்த லெனினின் நினைவு தினம் இன்று -ஜனவரி 21 (மறைந்த ஆண்டு 1924)
                 மார்க்சிய வழியில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய மூன்று முனைகளிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு தனது சொல்லாலும் செயலாலும் அரிய பொக்கிஷங்களை வாரி வழங்கி இன்றும் நமக்கு வெளிச்சத்தை காட்டுபவர். தொடர்ந்து லெனினைப் பயில வேண்டுவது அவசியம்.

 லெனின் கூறுகிறார்:
"ஒருவன் சமுதாயத்திற்காக பாடுபட விரும்பினால் முதலில் அவன் குறைந்தபட்சம் நேர்மையாளனாகவும், உழைப்பாளனாகவும் இருத்தல் வேண்டும்.
  •  மக்களிடம் செல்ல வேண்டும்; மக்களிடமிருந்து படிக்க வேண்டும்.
  • லட்சியத்தை நோக்கி மக்களை (வர்க்கமாக)திரட்ட வேண்டும்.
  • முடிவுக்குப்பின் செயல்பட தொடங்கிவிட வேண்டும்; கால தாமதம் கூடாது.
  • கடமை ஆற்றுவதை வழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.
  • தவறான போக்குகள் எல்லாவற்றையும் எதிர்த்து போராட வேண்டும்.
  • சேவை, உதவி செய்வதற்கு உபகாரம் எதையும் பெறக்கூடாது. 
என்பவை  அவரது வழிகாட்டு வாழ்நெறிகள்!
        
 "தவறு செய்தால் பரிசீலித்து ஒத்துக்கொள்வோம் தவறுகளிலிருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வோம்" என்பது லெனின் கொள்கையின் அடிப்படை அம்சம். இதனை புறக்கணித்ததின் விளைவே சோவியத் வீழ்ச்சி.
     
      தோழர் லெனினை தொடர்ந்து பயில்வோம்! 
           பயின்றபடி இயங்க முயல்வோம் !!

Tuesday, January 20, 2015



குறிப்பு: கருத்தரங்க சுவரொட்டி BSNLEU மாவட்ட செயலர்களுக்கு கூட்டமைப்பு சார்பாக அனுப்பப்பட்டுள்ளது.  

Saturday, January 17, 2015

17-01-2015
ஒற்றுமைக்கான முயற்சி

தோழர்களே!..
காணும் பொங்கல் தினமான 17-01-2015 அன்று
மாவட்ட சங்க அலுவலகத்தில் ஒரு நல்ல முயற்சி
கடலூர் மாவட்டத்தில் அனைவரின் மரியாதைக்குரிய மூத்ததோழர் T.ரகு அவர்கள் நமது மாவட்டத் தலைவர் தோழர். R.செல்வம், மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்து ஒற்றுமைக்கான தேவையை பற்றியும், நடைபெற்ற நிகழ்வுகளின் தாக்கங்களை பற்றியும் மனம் திறந்து கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட உதவித்தலைவர் தோழர்.P.அழகிரி, மாவட்ட உதவிச் செயலர் தோழர்.D.ரவிச்சந்திரன், தோழர்கள் K.மகேஸ்வரன், V.இளங்கோவன் முதலியோர் திறந்த மனதோடு தங்களது கருத்துகளை கூறினார்கள். மற்றும் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A.C.முகுந்தன், GM(O) கிளைச்செயலர் தோழர். S.ராஜேந்திரன், V.முத்துவேல், R.நந்தகுமார் மற்றும் P.குமார் ஆகியோர் உடனிருந்தனர்...

எந்த முயற்சியும் உடனடியாக பலன் தந்துவிடுவதில்லை. என்றாலும், பலன் தராது போகாது. நாமும் நம்பிக்கையோடு எதிபார்க்கின்றோம். நமது தோழர் ரகுவின் முயற்சி வெற்றி பெறவேண்டுமென்று!...

மேலும் தோழர் ஆர்.கே அவர்களின் ஆலோசனைகளை நாம் பெற வேண்டும் என்ற அவரின் கருத்தை மனதார வழிமொழிகின்றோம்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு....

ஒரு கூட்டத்துடன் நாம் எதையும் முடிந்து விட்டதாக கருதுவதில்லை.


“நாம் விடாப்பிடியான நம்பிக்கையாளர்கள், பாறையில் விதைத்தாலும் ஒரு நாள் முளை விடும் என்ற மாற்ற முடியாத எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டவர்கள்” என்பது அடிக்கடி தோழர் ரகு கூறும் வாசகம்.