.
Wednesday, May 20, 2015
Tuesday, May 19, 2015
Sunday, May 17, 2015
ஜெகன் நினைவை போற்றுவோம்!
அன்பு கொண்ட நெஞ்சினான்.
ஆற்றல் மிக்க அறிவினான்..
இனிமை கொண்ட நாவினான்..
ஈன்றவளை மிஞ்சும் கருணையினான்..
உறுதி கொண்ட கொள்கையினான்..
ஊக்கம் மிக்க மதியினான்..
எளிமை கண்டு இரங்குவான்..
ஏறு போல் நடையினான்..
ஐயம் போக்கும் தெளிவினான்..
ஒற்றுமை சொல்லும் வழியினான்..
ஓங்கு புகழ் நிறைந்தவனாம்...
ஜெகன் நாமம் போற்றுவோம்...
TMTCLU மாவட்ட செயற்குழு –கடலூர்
அடிமட்ட தொழிலாளர்களுக்காக போராடிய ஒப்பற்ற தலைவர் தோழர்.ஜெகன் பிறந்த நாளான மே-17 ஆன
இன்று இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்து தமிழ் மாநிலம் முழுவதும் கொண்டாடி
வருகிறோம். இந்நாளில் தமிழ் மாநிலத்திலேயே முதன் முதலாக கடலூரில் TMTCLU சார்பில்
சங்கக்கொடி ஏற்றப்பட்டது. சங்கக் கொடியை TMTCLU மாநில துணை செயலாளர்
தோழர் A.சுப்பிரமணியன்-விழுப்புரம் பெரும் கோஷத்துக்கிடையே ஏற்றினார். அதனைத்
தொடர்ந்து கடலூர் மாவட்டசெயற்குழு நமது சங்க வாயிலில் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர்.M.S.குமார்
தலைமையில் தொடங்கியது. மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு அறிமுக உரையாற்றினார்.
மாநில இணைப்பொதுசெயலர் மூத்த தோழர் S.தமிழ்மணி
சங்க வரலாற்று நிகழ்ச்சிகளை தொகுத்து துவக்க
உரையாற்றினார். தஞ்சை மாவட்ட சங்க மாவட்டஉதவி செயலர் தோழர்.கிள்ளிவளவன் அவர்கள்
தனது சிறப்புரையில் கேஷுவல் மஸ்தூர் தொடங்கி TTA வரை தன்னை ஆளாக்கிய நம்
சங்கத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் தோழர்கள் V.இளங்கோவன்-அமைப்பு செயலர்-TMTCLU,
V.முத்துவேலு மாவட்ட அமைப்பு செயலர்-TMTCLU, D.குழந்தைநாதன் மாவட்ட துணை செயலர்-NFTE
ஆகியோரும், ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் தோழர்கள் V.வீராசாமி-விருத்தாசலம்,
S.பாலமுருகன்-பண்ருட்டி, S.ராமசாமி,A.சுப்பிரமணி-விழுப்புரம்,
சுந்தர்-சிதம்பரம் P.ராஜா-கள்ளகுறிச்சி, ஜானகிராமன்-திண்டிவனம், S.அழகப்பன்-உளுந்தூர்பேட்டை
ஆகியோர் பேசினர். NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். நன்றியுரை S.வீராசாமி வழங்கினார்.
கூட்டத்திற்கு தேனீர்,வடை வழங்கிய தோழர்.D.குழந்தைநாதன்,
மதிய உணவு ஏற்பாடு தோழர்கள் V.முத்துவேல், P.குமார், மதிய உணவிற்கு மாம்பழம்
வழங்கிய தோழர். திண்டிவனம் J.ஜெயச்சந்தர், வாழைபழம் வழங்கிய NFTE மாவட்ட
துணைசெயலர் தோழர். P.அழகிரி, பலா சுளைகள் வழங்கிய தோழர்.G.ரங்கராஜுஆகியோருக்கு
மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்கிறோம்.
மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்;
- உறுப்பினர்களாக உள்ள 120 பேரில் 60 பேரிடம் மட்டுமே சந்தா வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களிடமும் சந்தா வசூலிக்க வேண்டும்.
- தலைமை பொது மேலாளர் உத்தரவின்படி பிரதிமாதம் 7-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படவேண்டும்.
- ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட அளவில் தனி அதிகாரி நியமிக்கவேண்டும்.
- சிதம்பரம் கோட்டப்பொறியாளரின் ஒப்பந்த ஊழியர்கள் மீதான விரோதப்போக்கினை இம் மாவட்ட செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
- மாவட்டம் முழுதும் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு UAN முறையில் EPF முறையாக செலுத்தப்படவெண்டும்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் இணைந்து அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.
- விழுப்புரம் பகுதி ஒப்பந்த உழியர்கள் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தப்படவேண்டும்.
- ஜுன் 10 – ல் இரண்டு சங்கங்களின் சார்பில் சென்னையில் நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்க பெரும் திரளாக கலந்து கொள்வது.
- ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க NFTE மாவட்ட சங்கத்துடன் இணைந்து கடலூரில் மே-23 அன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துவது எனவும் இம் மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
Friday, May 15, 2015
Thursday, May 14, 2015
தரைவழி தொடர்பு தொலைபேசி (LANDLINE) இரவு நேர இலவச அழைப்புகள் DOT, BSNL–ல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணியிலிருக்கும்
ஊழியர்களுக்கான தொலைபேசி இணைப்புகளுக்கு இந்த வசதி கிடையாது.
மற்றவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தி EXCESS BILLING-ஐ தவிர்த்திடவும்.
கீழ்கண்ட பிளானில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த
வசதி பொருந்தும்.
BBG COMBO ULD 675
|
BBG COMBO ULD 845
|
BBG Combo ULD 945
|
BBG COMBO ULD 999
|
BBG RURAL COMBO UL 650
|
BBG Combo ULD 1495 - 4 MB / 512 Kbps
|
BBG Combo ULD 1495
|
BB - BBG Combo ULD 1445
|
BBG CNT COMBO 630
|
BBG Combo ULD 3500
|
BBG Combo ULD 1800 - 4 MB / 256 Kbps
|
BBG Rural USOF COMBO 350
|
BBG Combo ULD 1800
|
BBG Combo ULD 2250 - 4 MB / 256 Kbps
|
BBG Combo ULD 6300
|
BBG Combo ULD 2250
|
BBG SPEED COMBO 2949
|
BBG RURAL USOF COMBO 999
|
BB - BBG Speed Combo 1745 VDSL
|
BB - BBG Super Speed Combo 2845 VDSL
|
BB - Flexi General Combo Plan 500
|
BB - BBG Combo ULD 2799
|
BBG SUPER SPEED COMBO 5249
|
BBG Super Speed Combo 3899 VDSL
|
BBG Super Speed Combo 7349
|
BB - Flexi General Combo Plan 750
|
BB - Flexi General Combo Plan 1500
|
BBG COMBO ULD 999 CS13
|
BB - Flexi General Combo Plan 1250
|
BBG COMBO ULD 675 - 1MBPS_10GB / 512 KBPS
|
GENERAL FMC 140 URBAN
|
GENERAL FMC 120 RURAL
|
ONE INDIA FMC 195 URBAN
|
General FMC 120 RURAL
|
GENERAL FMC 195 URBAN
|
SPECIAL FMC 450
|
ECONOMY FMC 330
|
SPECIAL PLUS FMC 975
|
SUPER FMC 1450
|
PREMIUM FMC 2450
|
LL - One India With Rent 195 and Free Units
50
|
LL - BASIC SPECIAL RURAL PLAN
|
LL - LL PLAN - 450 - UL- F
|
LL - LL PLAN - 600 - UL- FM
|
GENERAL FMC 170 RURAL
|
LL - LL PLAN - 500 - UL- FM
|
LL - General Rural < 1000 L
|
Wednesday, May 13, 2015
கள்ளக்குறிச்சி தோழர். N.தமிழ்ச்செல்வன்-TM
அவர்களின் பணி ஓய்வு பாராட்டு
விழாவும்,
தோழர்.P.இராமலிங்கம்-SSO
அவர்களின் சேவையை பாராட்டி
பாராட்டுவிழா
கிளைத்தலைவர் தோழர்.K.பாண்டியன் தலைமையில்
இன்று (13-05-2015) நடைபெற்றது.
தோழர்.N.இராஜாராம் கிளை உதவிச்செயலர் வரவேற்புரை நல்கினார். துவக்கவுரையாற்றினார்
மாநில துணைத்தலைவர்
தோழர். V.லோகநாதன்.
மாவட்டதலைவர் தோழர் R.செல்வம்,
மாவட்டசெயலர் தோழர். இரா.ஸ்ரீதர்,
மாவட்ட உதவித்தலைவர் தோழர் S.அன்பழகன்,
மாவட்ட அமைப்புசெயலர் தோழர் K.அம்பாயிரம்,
மாவட்ட உதவிசெயலர்கள் தோழர்.P.அழகிரி, D.குழந்தைநாதன்,
RGB தோழர்.V.இளங்கோவன்
மற்றும்
ஒய்வு பெற்றோர் நலசங்கம் சார்பில் தோழர்.L.ஜெகநாதன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் நாம் அழைத்ததின் காரணமாக
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய
மாநில உதவிசெயலர் தோழர்.P.சென்னகேசவன்
அவர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
நன்றியுரை கிளைபொருளர் தோழர்.R.ராமன் வழங்கினார்.
விழாவை சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்த கிளைசெயலர்
தோழர்.S.மணி அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.
வருமானவரி பிடித்தம்
2015-2016 ஆம் ஆண்டிற்கான வருமானவரி பிடித்தம் ஏப்ரல் '2015 சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
2015-2016 ஆம் ஆண்டிற்கான வருமானவரி பிடித்தம் ஏப்ரல் '2015 சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
தங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் சேமிப்பை தவிர இதர சேமிப்பு, டியூசன் பீஸ், வீட்டுவாடகை ரசீது, வீட்டு லோன், இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றின் விபரங்களை உடனடியாக கணக்கதிகாரி அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து சம்பளத்தில் வரும் பிடித்தத்தை தவிர்க்கவும். தற்போது ரசீது இல்லாதிருப்பவர்கள் அதன் விபரங்களை கடிதம் மூலம் தெரிவிக்கவும். பின்னர் ரசீதை அளித்தால் போதும்.
Subscribe to:
Posts (Atom)



















