.

Friday, February 26, 2016

உளுந்தூர்பேட்டை தோழர் நசீர்பாஷா 
அவர்களின்
 பணிஓய்வு பாராட்டுவிழா 

25-02-2016 அன்று உளுந்தூர்பேட்டை கிளைத்தலைவர் தோழர்.மணிபாலன் தலைமையில் நடைபெற்றது. தோழர் அம்பாயிரம் வரவேற்புரையாற்ற, மாநிலத் துணைத்தலைவர் தோழர்.லோகநாதன் துவக்கவுரை நிகழ்த்தினார். மேலும் தோழர்கள். அழகிரி, குழந்தைநாதன், முகுந்தன், கடலூர் ராஜேந்திரன், கடலூர் இளங்கோவன், விருத்தாசலம் இளங்கோவன், லாரன்ஸ், உளுந்தூர்பேட்டை சேகர், கோவிந்தசாமி, கடலூர் முத்துவேலு, TMTCLU மாவட்டதலைவர் தோழர் குமார் மற்றும் ஒய்வுபெற்றோர் நலச்சங்க தலைவர் ஜெயராமன், மீசை ஆறுமுகம், ஜெகநாதன் ஆகியோர் தோழரை வாழ்த்தி பேசினர். நமது மாவட்டத்தலைவர் தோழர் செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோரும் தோழரை வாழ்த்தி பேசினர். மூத்தத் தோழர் தமிழ்மணி நிறைவுரை ஆற்றினார். தோழர் நசீர்பாஷா ஏற்புரை நிகழ்த்திட தோழர். P.முத்துவேல் நன்றியுரையாற்றினார்.
தோழரின் குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.



 



Wednesday, February 24, 2016

செயலகக்கூட்டம்-23-02-2016
மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. மாவட்ட உதவிச்செயலர் தோழர் P.சென்னகேசவன், மாநிலப் பொருளர் தோழர் K.அசோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் அறிவுறுத்தலின்படி பண்ருட்டிக் கிளை அமைப்பு பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் நமது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வேலூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கான ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையினை கிளைச்செயலர்கள் மாவட்ட செயலரிடம் வழங்கினர்.
மாநில துணைத்தலைவர் தோழர். லோகநாதன், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கூட்டத்தில் மூத்த தோழர் தமிழ்மணி கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  

Sunday, February 21, 2016


செயலகக் கூட்டம்
வருகின்ற 23-02-2016 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக் கூட்டம் மாவட்ட  தலைவர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

பணிக்குழுகூட்டம்-தமிழ்மாநிலம்

20-02-2016 அன்று சென்னையில் உள்ள நமது தமிழ்மாநில சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர்.லட்சம் தலைமையில் மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு நடைபெறவிருக்கின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  நமது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கூட்டம் நடைபெற்றது. வரும் தேர்தலில் நமது தமிழ்மாநிலத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிட முழுமையாக பணியாற்றிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நமது மாவட்ட செயலர் தோழர்.இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டார்.


நமது மாவட்டத்தில் நமது தேர்தல் நிதியான ரூபாய்.300-யை உடனடியாக தோழர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 





கும்பகோணம் மகாமகத்தை ஒட்டி நமது BSNL சார்பில் குடந்தை ரயில்நிலையம் அருகில் TELECOM CENTRE போட இரயில்வே நிர்வாகத்தை அணுகியது. ஆனால் குடந்தை ரயில்வே DRM அவர்கள் அனுமதி மறுத்தார். இதனை அறிந்த குடந்தை மாவட்ட சங்கம் குடந்தை தபால் பிரிவு NFPE P3  மாவட்ட செயலர் தோழர்.பெருமாள் அவர்களை சந்தித்து நிலைமையை கூற தோழர் தலைமை தபால் நிலையம் அருகிலும், RMS அருகிலும் அனுமதி பெற்றுக் கொடுத்தார். மேலும் SEWA மாநிலத்தலைவர் தோழர் கனகராஜ் அவர்கள் ரயில் நிலையம் அருகில் உள்ள CHRIST THE KING பள்ளியின் தாளாளரிடமும்  அனுமதி பெற்றுக்கொடுத்தார். நமது குடந்தைத் தோழர்கள் திட்டம் சொன்னதும் உற்சாகம் தந்தார் DGM(CFA), உடன் திட்டமிட்டார்  PRO திரு.சிவசங்கரன் கூட்டு
முயற்சிக்கு ஈடு இணையில்லை என்பதை  நமது குடந்தைத் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர். விஜயுடன் இணைந்து சாதித்துள்ளனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

ஆனால், ஒரு சங்கடம் இரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்தவுடன் குடந்தை மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகத்திடம் பிரச்சனையை எடுத்து சென்று ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற முயற்சித்திருக்கவேண்டும்.
பிரிவு உபசாரவிழா 19-02-2016
திருமதி லக்ஷ்மிபாய் SDE General அவர்கள் சென்னைக்கு மாற்றலில் செல்வதை ஒட்டி அவருக்கு கடலூர் GM அலுவலக மூன்றாம் தளத்தில் பணிபுரிபவர்கள்   சார்பில் பிரிவு உபசாரவிழா 19-02-2016 மாலை நடைபெற்றது. திரு.சாந்தக்குமார் DGM Fin, திரு.மகேஷ் AGM(Admn), திரு.ரவி SDE (Legal), திரு.வரதராஜன் SDE(Admn) மற்றும் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், தோழியர்.மோகனா, தோழர் குருபிரசாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தோழியர் வாசுகி அவர்கள் திருமதி லக்ஷ்மிபாய் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். மனமகிழ்மன்ற  உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை GM அலுவலக மூன்றாம் தள தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Tuesday, February 16, 2016

நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட மடல்களை
பல்வேறு பிரச்சினைகளின் தீர்விற்காக
BSNL நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது.

JTO இலாக்காத்தேர்வு

3 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறவிருந்த JTO  இலாக்காத்தேர்வு நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இளம் TTA தோழர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மேலும் JTO பதவிகள் நிரப்பப்படாத நிலையில் BSNL சேவை வெகுவாக பாதிக்கப்படும் நிலையும் உருவாகும். எனவே நிர்வாகம் இப்பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு தேர்வு நடப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது..

JAO இலாக்காத்தேர்வு

ஏறத்தாழ 3 ஆண்டுகளாக JAO இலாக்காத்தேர்வு நடைபெறாததால் தற்போது நடத்தப்படவிருக்கும் JAO இலாக்காத்தேர்விற்கு 55 வயதுடைய தோழர்களையும் தேர்வெழுத  சிறப்பு அனுமதி வழங்குமாறு BSNL நிர்வாகத்தை மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

GPF வைப்பு நிதி ஒதுக்கீடு

GPF பட்டுவாடா வழங்குவதற்கான  நிதி ஒதுக்கீட்டை
மாநிலங்களுக்கு உடனடியாக மேற்கொள்ளுமாறு
BSNL நிர்வாகத்தை மீண்டும் நமது சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உண்ணாவிரதப்  போராட்டம்  ஒத்திவைப்பு                                                                   

தோழர்களே !..

        இன்று ( 16-02-2016) நடைபெறவிருந்த ஒப்பந்தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்  ஒத்திவைக்கப்படுகிறது என்பதனை தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                                            தோழமையுடன் 
                                                                               மாவட்டச் சங்கங்கள் , கடலூர்.

Wednesday, February 10, 2016


                                                   வெள்ள  முன்பணம் 
11-02-2016 அன்று  வெள்ள  முன்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் வெள்ள முன்பணம் பெற விண்ணப்பித்த அனைத்து அதிகாரிகளுக்கும்  மற்றும் ஊழியர்களுக்கும்  கிடைக்கும். நமது மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது. அதனை நமது மாநில  சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நமது மாநில சங்கமும் உனடியாக  PGM (F) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக வெள்ள  முன்பணம்  வழங்க உரிய நடவடிக்கை  எடுத்த நமது PGM (F )  அவர்களுக்கும் , ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட நமது மாநில சங்கத்திற்கும்  நமது மாவட்டத்தின் சங்கத்தின் சார்பாக  நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.. 

Monday, February 8, 2016

வருந்துகிறோம்!!

விருத்தாசலம் மூத்தத் தோழர் D.மோகன்ராஜ் TM அவர்களின் தாயார் இன்று      (08-02-2016) மாலை 3-00மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது இறுதி நிகழ்ச்சி நாளை காலை 10-மணிக்கு விருத்தாசலம் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

Sunday, February 7, 2016



நமது குரூப் C  and D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில்
ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக 
குரூப் C ஊழியர்களுக்கு ரூபாய். 500/-ம்
குரூப் D ஊழியர்களுக்கு ரூபாய். 300/-ம்
வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்
சேர்த்து வழங்கப்படும். ஆனால் 2016 ஜனவரி சம்பளத்தில்
இந்த தொகை வழங்கப்படவில்லை.
உடனடியாக... நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. பிரச்சனையின்
தன்மையை உணர்ந்து 02-02-2016 அன்று நிர்வாகம்
இதற்கான உத்தரவை வெளியிட்டது.
2016 பிப்ரவரி மாத சம்பளத்தில்... குரூப் C ஊழியர்களுக்கு
ரூபாய். 500/-ம் குரூப் D ஊழியர்களுக்கு

ரூபாய். 300/-ம் வழங்கப்படும்.