.

Sunday, December 18, 2016


PEWA மாநிலசெயலர் தோழர்  N.பாலகிருஷ்ணன்

பணிஓய்வு பாராட்டு விழா   

இன்று 18.12.2016 காலை மயிலாடுதுறையில் PEWA  பாட்டாளி தொழிற்சங்க மாநில செயலர் N.பாலகிருஷ்ணன் அவர்கள் இலாக்காவிலிருந்து  பணி ஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு பாராட்டுவிழா பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் தோழர் V.அரிகிருஷ்ணன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தோழர் N.பாலகிருஷ்ணன் அவர்களின் அழைப்பை ஏற்று நமது மாநில சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ், மாநில செயலர் தோழர் K.நடராஜன், மூத்தத்தோழர் குடந்தை R.ஜெயபால் நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், குடந்தை மாவட்ட தலைவர் தோழர் C.கணேசன் மற்றும் AIBSNLEA  கடலூர் மாவட்ட உதவிசெயலர் தோழர் T.விஸ்வலிங்கம்   ஆகியோர் கலந்துகொண்டு தோழரின் இலாக்கா  பணியினை  பாராட்டி வாழ்த்துரைத்தனர். மேலும் காரைக்கால்,மயிலாடுதுறை தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Saturday, December 17, 2016


தகவல் பலகைக்கு கிளிக் செய்யவும்

தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு
டெலிகாம் டெக்னிசியன் கவுன்சிலிங், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மீது விரைவான தீர்வு கோரி  17.12.2016 அன்று தர்ணா போராட்டம் அறிவித்தோம். நிர்வாகம் நமது மாவட்ட சங்கத்தை 16-12-2016 காலை பேச்சுவார்த்தைக்கு வரும்படி   ( 15-12-2016 ) மாலை அழைப்பு விடுத்தது.
அதன் அடிப்படையில் இன்று காலை 11:30 மணியளவில் நிர்வாகத்தோடு நடைபெற்ற  பேச்சுவார்த்தையில்  மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் அவர்களும்  கலந்து கொண்டார்கள்.

பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக தீர்வு எட்டப்பட்டதன் அடிப்படையில் நாளை நடைபெறவிருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

விபரம்:
v மங்களம்பேட்டையில் EOI டெண்டரில் உபரியென தவறுதலாக நிறுத்தப்பட்ட தோழர் ஜீவானந்தம் அவர்களை உடனடியாக பணிக்கு எடுத்து கொள்வது, சிவில் பகுதி ஒப்பந்த ஊழியர்  தோழர் முருகன் அவர்களுக்கு வழங்கப்படாத பல மாத ஊதியம் விரைவாக வழங்கிட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
v மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த   தினக்கூலி ஊழியர்களுக்கான (01-04-2016 முதல்) புதிய ஊதியம் BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  அமுல்படுத்திட  மாநில நிர்வாகத்திடமிருந்து உரிய அனுமதியை பெற்று விரைவில் நடைமுறைபடுத்த உறுதியளித்துள்ளது.
v 01-10-2016 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு ரூ 4/- உயர்த்தி வழங்க மாவட்ட நிர்வாகம் உத்திரவு பிறப்பித்துள்ளது.
v 01-01-2017 முதல் புதிய டெண்டரில் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை, 8.33% போனஸ் ( குறைந்தபட்ச போனஸ் ரூ7000/-) முதலிய ஷரத்துக்களை ஒப்பந்தத்தில் சேர்க்கவும், அதனை கறாராக அமுல்படுத்தவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.   
v மற்றும் பிற ஒப்பந்த ஊழியர் பிரச்சனை, நிரந்திர ஊழியர்களின் மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் மீது விரைவாக தீர்வு காணப்படும் என  நிர்வாகம்  உறுதியளித்துள்ளது.

டெலிகாம் டெக்னிசியன் கவுன்சிலிங்
நிர்வாகம் பிற்பகலில் அனைத்து சங்கங்களையும் அழைத்து TT (டெலிகாம் டெக்னிசியன்) கவூன்சிலிங்  பற்றி விவாதித்தது.
v 10-01-2017 அன்று கவுன்சிலிங் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
v கவுன்சிலிங் குறித்து விபரமான இறுதி பட்டியல் 21-12-2016 அன்று இறுதி செய்யப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
 நமது கோரிக்கைகளின் மீது ஏற்பட்ட முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு நாளை நடைபெறவிருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
தர்ணாவில் திரளாகக்  கலந்து கொள்ள  தயாரிப்புகளை செய்த  கிளைச் செயலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
நிர்வாகத்திற்கு நமது நன்றி!!



வருந்துகிறோம்...
கடலூர்  தோழர் M.மோகன் டெலிகாம் டெக்னீசியன் அவர்களின் மனைவி உடல் நலக்குறைவினால் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (16.12.2016) காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது மறைவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்ச்சி இன்று (17.12.2016) மாலை தோழரது இல்லத்தில் (கடலூர் வண்ணாரப்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகில்) நடைபெறும்.

வருந்துகிறோம்...
கடலூர் ஒய்வு பெற்ற தோழர் V.பெருமாள் டெலிகாம் டெக்னீசியன் அவர்களின் மனைவி உடல் நலக்குறைவினால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையிலிருந்தார் சிகிச்சை பலனின்றி இன்று காலை (17.12.2016) 5.00 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது மறைவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அம்மையாரது இறுதி நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் நடைபெறும்.

Thursday, December 15, 2016

பாராட்டுகள்!!  நன்றிகள்!!!

BSNL நிறுவனத்தின் செயல்பாட்டை சீரழிக்க தனி செல் டவர் கார்ப்பரேஷன் அமைக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து இன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் வெற்றி வாழ்த்துக்கள்!! பாராட்டுகள்!! நன்றிகள்!!!

Friday, December 9, 2016




விடுமுறை தேதி மாற்றம்

மீலாது நபிக்கான விடுமுறை தேதி தமிழகத்தில்

12.12.2016 திங்கள்கிழமைக்குப் பதில்

13.12.2016 செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை மாநில நிர்வாகம்

இன்று உத்தரவிட்டுள்ளது.

Wednesday, December 7, 2016

                     கண்ணீர் அஞ்சலி
           தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கை ஆசிரியரும்,  நாடக ஆசிரியரும், நடிகர், அரசியல் ஆலோசகர் என பன்முகம் கொண்ட திரு  சோ.இராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார். அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்  கொள்கின்றோம்.

Tuesday, December 6, 2016

4.12.2016 அன்று நடைபெற்ற GM அலுவலக கிளைமாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் பட்டியல்

தலைவர்                                  :         தோழர் K.சீனிவாசன் OS Phones
உதவித்தலைவர்கள்               :         தோழர் P.சுப்ரமணியன் OS Genl
தோழர் N.ராஜாராம்  OS Genl
தோழியர் M.மோகனா OS Genl
தோழர் S.ராஜூ JE OFC

செயலாளர்                              :         தோழர் S.ராஜேந்திரன் TT VPT
உதவி செயலாளர்கள்             :         தோழர் J.ஜலதரன் TT
                                                          தோழர் A.சகாயசெல்வன் TT
                                                          தோழர் K.V.பாலச்சந்தர் JE
                                                          தோழியர் S. சுசரிதா OS
பொருளாளர்                           :         தோழர் A.S.குருபிரசாத் TT
அமைப்பு செயலாளர்கள்       :         தோழர் K.மகேஷ்வரன் JE
                                                          தோழர்S.விஜயானந்த் TT
                                                          தோழியர் R.மைதிலி OS
                                                          தோழியர் K.சாந்தி Sr.TOA   
தணிக்கையாளர்                     :         தோழர் S.ரவி OS  T
                                   
தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!

அஞ்சலி....

மறைந்தார் தமிழக முதல்வர்

செல்வி ஜெ.ஜெயலலிலதா

கடலூர் மாவட்ட சங்கத்தின்  அஞ்சலி....


Sunday, December 4, 2016

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

TM சுழல் மாற்றலுக்கான கவுன்சிலிங் நடத்துவதில் உள்ள நிர்வாக காலதாமத்தை கண்டித்து 5.12.2016 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 7.12.2016 அன்று அதிகாரிகள் சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒத்திவைக்கப்படுகிறது. 8.12.2016 அன்று நிர்வாகத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நமது ஆர்ப்பாட்ட தேதி அறிவிக்கப்படும்.

Thursday, December 1, 2016

அஞ்சலி
          
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், விடுதலை போராட்ட தியாகியுமான தோழர் R. நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் ( வயது 82 )அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தோழியர் ரஞ்சிதம் ஆசிரியர் பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணல்விளை ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
நல்லகண்ணுவின் பொதுவாழ்க்கை வெற்றிகரமாக அமையவும், மக்களின் நன்மதிப்பைப் பெறவும் இவரது ஆதரவும், ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.
கணவரின் பொதுவாழ்க்கையையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்த தோழியர் ரஞ்சிதம், கல்விப் பணியில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வந்தார்'.

தோழியர்ரஞ்சிதம் உடலுக்கு நாளை (டிச.2) மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் இறுதிச் சடங்குகள் காரியங்கள் நடைபெறும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கின்றோம்.
             தோழமையுடன்
  NFTE- மாவட்ட சங்கம்,கடலூர்.
TMTCLU- மாவட்ட சங்கம்,கடலூர்.

Wednesday, November 30, 2016

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்!!



குடந்தை மாவட்டத்தின் துடிப்புமிக்க தோழரும், குடந்தை மாவட்டத்தில் E3 மாவட்ட செயலராகவும், தமிழ்மாநில சங்கத்தில் மாநில நிர்வாகியாகவும், பல்வேறு பொறுப்புகளையும் வகித்த திறன்மிக்க தோழர் G.கலியமூர்த்தி off.Supdt(Genl) அவர்கள் இன்று (30.11.2016) தனது இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அத்தோழரது பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, November 29, 2016

TM சுழல் மாற்றல்
        ஆர்ப்பாட்டம்


தோழர்களே!
TM சுழல் மாற்றல் புதிய ஒன்றல்ல. நான்காவது முறையாக அமுல்படுத்தபட வேண்டிய ஒன்று. எனவே தாமதமின்றி நடத்தி இருக்க முடியும். கிளைச்செயலர்களின் ஒத்துழைப்போடு மாவட்ட சங்கம் நிர்வாகம் வழங்கிய மாற்றலுக்குரிய தோழர்களின் பட்டியலை முழுமைசெய்து நிர்வாகத்திடம் அளித்துவிட்டோம். பல சுற்று பேச்சு வார்த்தையும் நடத்திவிட்டோம். ஆனால், என்ன காரணத்தினாலோ நிர்வாகம் சுழல் மாற்றலுக்கான கலந்தாய்வு தேதியை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது. மேலும் தாமதம் நியாயமற்றது. எனவே தாமதமின்றி உடனடியாக சுழல் மாற்றலை நடைமுறைப்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்தி முதற்கட்டமாக கிளைகளில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
கிளைகள் தோறும் வருகின்ற டிசம்பர் 2-ந் தேதி வெள்ளிக்கிழமை 
 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சக்தி மிக்கதாக நடத்திட வேண்டுகிறோம்.

தோழமையுடன்
        R.செல்வம்                               இரா.ஸ்ரீதர்
        மாவட்ட தலைவர்                                                மாவட்ட செயலர்


குறிப்பு: கடலூரில் மதிய உணவு இடைவேளையில் GM அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

Monday, November 28, 2016

PIMS மருத்துவமனைக்கு அங்கீகாரம்

புதுவை PIMS மருத்துவமனைக்கு சில நாட்களாக அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பில் தொகை நிலுவையில் இருந்த காரணத்தினால் தோழர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கப்பட்டு வந்தது. 17.11.2016 இரவு நெய்வேலி தோழர் N.ராதாகிருஷ்ணன் T.T அவர்களுக்கு அவசர சிகிச்சை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். உடனடியாக மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அன்று இரவே புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மறுநாள் மாவட்ட நிர்வாகத்திடம் நமது கடுமையான அதிருப்தியை பதிவு செய்தோம்.  நிர்வாகம் சூழ்நிலையை புரிந்து கொண்டு மிக விரைவாக செயல்பட்டு 21.11.2016 முதல் PIMS மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தோழர்கள் இனி சிகிச்சைக்கு PIMS மருத்துவமனைக்கு செல்லலாம். 
காலதாமதமாக முடிவெடுத்தாலும் நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.  

Sunday, November 27, 2016

சம்மேளனதின சிறப்புக்கூட்டம் விழுப்புரம்

28-11-2016 மாலை 5.00 மணியளவில்
விழுப்புரம்  கிளைசார்பில் நடைபெறும்
சம்மேளனதினசிறப்புக்கூட்டதில்

சம்மேளன செயலர்
தோழர் G.ஜெயராமன்
மற்றும்
நமது தமிழ்மாநில செயலர்
தோழர் K.நடராஜன்

ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.