.
Tuesday, August 15, 2017
Monday, August 14, 2017
TMTCLU விழுப்புரம் கிளையின் மூன்றாவது மாநாடு
13.8.2017 காலை விழுப்புரம் தொலைபேசி நிலைய வாயிலில் புதியதாக
அமைக்கப்பட்டிருந்த சங்கக் கொடிக்கம்பத்தில் கொடி யேற்றத்துடன் துவங்கியது. மாநில
உதவிசெயலர் தோழர் AS.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் தோழர் MS.குமார்
கொடியேற்றிட, மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு விண்ணதிரும் கோஷமிட்டார். NFTE
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உரையாற்றினார்.
பின்னர் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள மாவட்ட AITUC
அலுவலகத்தில் மாநாடு துவங்கியது. தோழர்
AS.சுப்பிரமணியன் தலைமையில் தோழர் S.நடராஜன் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும்
வரவேற்றார். தோழர் S.சண்முகம் அஞ்சலி உரையாற்றினார்.
TMTCLU மாநிலப் பொருளாளரும், குடந்தை NFTE மாவட்ட செயலருமான தோழர்
விஜய்ஆரோக்கியராஜ் துவக்க உரையாற்றினார். ( முழு உரை பின்னர்)
Friday, August 11, 2017
Thursday, August 10, 2017
Monday, August 7, 2017
தமிழ் மாநில சேமநலக்கூட்டம்
தோழர்களே!
தமிழ் மாநில சேமநலக்கூட்டம் அடுத்த வாரத்தில் சென்னை
தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலர்கள் தங்களது மாவட்ட
சேம நல சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக தொகுத்து rsridharbsnl@gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
தமிழ்மாநில சேமநலக்குழு உறுப்பினர்.
Sunday, August 6, 2017
புத்தக வெளியீடு..
தோழர் ஆர்.கே அவர்களின் தொழிற்சங்க பணியினைப்பாரட்டி சென்னையில் நடைபெற்ற
விழாவில் நமது கடலூர் மாவட்டத்தில் தோழர் சிரில் அறக்கட்டளை சார்பில் 18-ஆம் ஆண்டு
தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ”வள்ளுவம் காட்டும் வாழ்வியல்
நெறி” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றிய உரையைத் தொகுத்து கடலூர் தொழிற்சங்க
இதழ் தொலைபேசித் தோழன் சார்பில் நூல் வெளியிடப்பட்டது. அந்நூலை தோழர் தா.பாண்டியன்
அவர்கள் வெளியிட தோழர் ஆர்.கே பெற்றுக்கொண்டார்.
அவ்வமயம் தோழர் பட்டாபி அவர்கள் கடலூரில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்
125வது பிறந்தநாள் விழாவில் கலந்து ஆற்றிய சிறப்புரையையும், TMTCLU சார்பில் கடலூரில் நடைபெற்ற
கருத்தரங்கில் சமவேலைக்கு சம ஊதியம் பற்றிய உரையையும், பொதுத்துறை ஊதியம் பற்றி
நியூஏஜ் ஆங்கில பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழாக்கத்தையும் தொகுத்து
ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.
Thursday, August 3, 2017
Wednesday, August 2, 2017
கடலூர் தொலைபேசி கிளை பொதுக்குழு
கடலூர் தொலைபேசி கிளை பொதுக்குழுக்கூட்டம் 01.8.2017 மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலக
வளாகத்தில் தோழர் P.அன்பு தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி
வரவேற்புரை நிகழ்த்தி பொதுக்குழுவை துவக்கிவைத்தார். கிளைத் தோழர்கள்
பெரும்பான்மையாக கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். தோழர்கள் V.இளங்கோவன்,
D.குழந்தைநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் பிரச்சனகளைத்
தொகுத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம், மாநிலத் துணைத்தலைவர்
தோழர் V.லோகநாதன் ஆகியொர் கலந்துகொண்டனர். தோழர் S.ரங்கநாதன் நன்றி தெரிவித்தார்.
கிளையில் ஓய்வுபெற்றத் தோழர்களுக்கு ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில்
பாரட்டு விழா நடத்துவது எனவும் அக்கூட்டத்திற்கு மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் அவர்களை அழைப்பது எனவும்,
கிளையில் உள்ள பிரச்சனகளைத் தொகுத்து நிர்வாகத்திடம்
கொடுப்பது எனவும், அதன் பேரில் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பொறுத்து தொழிற்சங்க
நடவடிக்கை மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கடலூர் தொலைபேசி ஊழியர் குடியிருப்பு பிரச்சனையில் உரிய
கவனம் செலுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
Sunday, July 30, 2017
தோழர் ஆர்.கே
அவர்களின் 55 ஆண்டுகால
நமது தொழிற்சங்கப் பணியினைப் பாராட்டி ஆகஸ்ட்’5 சென்னையில்
நடைபெறும் விழாவிற்கான முதல் தவணை நிதி ரூ.10,000 யை
கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மாநில தலைவர் தோழர் P.காமராஜ்
அவர்களிடம் வழங்கினார்.
குடந்தை மாவட்ட
செயலர் தோழர் விஜய் தனது மாவட்ட முதல் தவணை நிதியினை மாநில தலைவர் தோழர் P.காமராஜ்
அவர்களிடம் வழங்கினார்.
Friday, July 28, 2017
AITUC சார்பில் நடைபெற்ற கோட்டை நோக்கி பேரணியில்
TMTCLU
சங்கத் தோழர்கள்
தமிழக AITUC சார்பில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சமவேலைக்கு சமஊதியம் தீர்ப்பை
அமுல்படுத்திட வலியுறுத்தி இன்று
(28.7.2017) சென்னையில் AITUC மாநில செயலர் தோழர்
T.K.மூர்த்தி தலைமையில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழகம்
முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணியில்
கலந்துகொண்டனர். AITUC மாநில செயலர் தோழர் சுப்புராயன், தோழியர்
வஹிதாநிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது பகுதியிலிருந்து மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 500க்கும்மேற்பட்ட TMTCLU ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தோழர்கள் மாநிலப்
பொதுச்செயலர் தோழர் R.செல்வம் தலைமையில் திரளாக கலந்து கொண்டனர். தோழர்கள்
P.காமராஜ், தோழர் K.நடராஜன், தோழர் சேது, தோழர் விஜய், மாவட்ட தோழர் இரா.ஸ்ரீதர், தோழர் V.இளங்கோவன்
உள்ளிட்ட தோழர்களுடன், கடலூர் மாவட்டத்திலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான TMTCLU
சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Thursday, July 27, 2017
Wednesday, July 26, 2017
பணித்தன்மைக்கேற்ப ஊதியம்
நமது மாநிலச் சங்கங்களின்
தொடர் முயற்சியின் காரணமாக நமது நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு பணித்தன்மைக்கேற்ப
ஊதியம் வழங்கிட
மாநில நிர்வாகம் உத்திரவு வழங்கியுள்ளது.
நமது NFTE , TMTCLU மாவட்ட
சங்க நிர்வாகிகள் இதன் மீது உரிய கவனம் செலுத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்
கொள்கின்றோம். மற்றும் தொழிலாளர் மீது அக்கறையோடு செயல்பட்ட நமது NFTE , TMTCLU மாநிலச் சங்களுக்கு
நன்றி..
25.7.2017 இந்தியக்கம்யூனிஸ்ட்
கட்சி சார்பில் நீட்
நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதி விலக்குக் கோரியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட
இரு மசோதக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வலியுறுத்தியும், மேலும் பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று
கடலூரில் AITUC மாவட்ட துணைச்செயலர் தோழர் குளோப்
தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட
தோழர்கள் கைது ஆகியுள்ளனர்.
நமது TMTCLU மாநில இணைப்பொதுச்செயலர் தோழர் S.தமிழ்மணி மறியலில்
பங்கேற்று
கைதாகியுள்ளார்.
கடலூர் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டு பின்னர் கைதாகி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தோழர்களை
வாழ்த்திப்பேசினர்.
Monday, July 24, 2017
வேலைநிறுத்த
ஆதரவு ஆர்ப்பாட்டம்..
இன்று (24.7.2017) டெல்லியில் நடைபெற்ற நமது கூட்டணி சங்கங்களின்
கூட்ட அறைகூவல் படி
BSNLEU,
SNEA உள்ளிட்ட
கூட்டமைப்பு சங்கங்கள் விடுத்த ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவாக
26.7.2017
அன்று ஆர்ப்பாட்டம்...
27.7.2017
கருப்பு பேட்ஜ் அணிந்து
தார்மீக ஆதரவு....
கிளைகள் தோறும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
கடலூர் கிளைகள் இணைந்து
26.7.2017
மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம்.
அனைவரும் பங்கேற்போம்...
பொதுத்துறை ஊதிய மாற்றத்தில் அபாயம்
PERILS
OF PAY REVISION IN PUBLIC SECTOR UNIITS
Article by R. Pattbiraman (New Age Weekly 65 /29 dt/July 16 – 22. 2017)
பட்டாபி அவர்களின் முழு கட்டுரைக் காண...
Subscribe to:
Posts (Atom)












































