.
Friday, October 2, 2020
Thursday, September 3, 2020
கண்ணீர் அஞ்சலி
திண்டிவனம் தோழர் G.ஜெயச்சந்திரன் JE அவர்களின் தாயார் திருமதி காமாட்சி கணேசன் அவர்கள் இன்று அதிகாலை 3.00 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் (கொரொனா டெஸ்டில் நெகட்டிவ்) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது நல்லடக்கம் சென்னை
கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெறும்.
*கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கம்*
Monday, August 31, 2020
வாழ்வாதாரம் காத்திட நிதியளிப்போம்!
வாழ்வாதாரம்
காத்திட நிதியளிப்போம்!
அன்புள்ள தோழர்களே!
ஒப்பந்த ஊழியர்களாகிய நாம் பத்து மாதமாகச் சம்பளம் வழங்கப்படாமல்
பணியாற்றி கொண்டிருக்கின்றோம். சம்பளம் வழங்குவதில் அக்கறையற்று இருக்கும்
மாநில நிர்வாகத்தின் இந்தப் போக்கை மாற்றிட TMTCLU மாநிலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கினை நடத்துவதற்கு (ஆவண நகல்கள் ஜெராக்ஸ், முத்திரைக் கட்டணம் முதலிய வகையில்) பெரும் செலவு ஆகிறது. நமது நாட்டின் நீதிமன்ற நடைமுறை அவ்வாறு. ஆகவே நமது ஒப்பந்த ஊழியர்களும் வழக்கு நடத்துவதற்கான தங்களின் பங்களிப்பாகத் தங்களால் முடிந்த அளவில் தலா ரூ 100/-ஐ வழங்கிடமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். இது மிகவும் அவசியமும் மிக அவசரமும் கூட.
சென்னை உயர்நீதி மன்றம் ஒப்பந்த ஊழியர்கள் விபரங்கள் அடங்கிய UAN பட்டியல் கோரியுள்ளது. ஆகவே ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் தங்களது UAN சம்மந்தமாக விபரங்களைப் பொதுச் செயலரிடம் விரைந்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
M.S.குமார் A.S.குருபிரசாத் J.கந்தன்
மாவட்ட தலைவர் மாவட்ட செயலர் மாவட்ட பொருளாளர்

