.

Friday, August 26, 2022



வருந்துகிறோம்

குடந்தை மாவட்ட மேனாள் மாவட்ட செயலரும், AIBSNLPWA சங்கத்தின்  மாவட்ட செயலருமான தோழர் N.இசக்கி முத்து 26.01.2022 இன்று நள்ளிரவு 01.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மிகவும் துடிப்பு மிக்க தோழராக கடந்த காலங்களில் NFTE பேரியக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.  அனைத்து தொழிற்சங்க பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அற்புதமான தோழர்.

தோழரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு கடலூர் NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

                                                                                                                                                                                                                                                        வருத்தங்களுடன்

                                                                                    NFTE  மாவட்ட சங்கம், கடலூர்


Sunday, August 21, 2022

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில சங்கத்தின் அறை கூவல் இணங்க மாவட்ட செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நமது மூத்த தோழர் E. விநாயகமூர்த்தி நமது கோரிக்கைகளை உள்ளடக்கி நல்லதொரு கோஷம் எழுப்பினார்.

மாநிலத் துணைத் தலைவர் தோழர் A.சகாய செல்வன் ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சை தோலுரித்துக் காட்டினார். ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் க்கு கொடுத்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்பதை புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டு கண்டன உரை ஆற்றினார். 

ஓய்வு பெற்ற சங்கத்தின் AIBSNLPWA மாவட்ட செயலாளர் தோழர் R.அசோகன் மிகத் தெளிவாக 2018 பிறகு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இந்த அரசு திட்டமிடவில்லை என்பதை குறிப்பிட்டு உரையாற்றினார். இதுபோல் ஒன்றிய அரசு எதுவாக இருந்தாலும் தொடர்ந்து பொதுத் துறையின் வளர்ச்சிக்கு துணையில்லாமல் இருப்பது வருத்தத்தக்கது என்பதை பதிவும் வருங்காலத்தில் இது போன்ற கோரிக்கைகளுக்கு அனைத்து சங்கங்களும் போராட்ட முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

மாவட்ட உதவி செயலாளர் தோழர் R. மலர் வேந்தன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற *SEWA தோழர்களுக்கும், ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கும் ,மற்றும் நமது இயக்கத் தோழர்களுக்கும் நன்றி கூறினார். போர்ட்டபிள் ஒலிபெருக்கி வழங்கி உதவிய AIBSNLPWA சங்கத்திற்கு நமது நன்றிகள்.














Tuesday, May 24, 2022

கள்ளக்குறிச்சி கிளை மாநாடு

கள்ளக்குறிச்சி கிளையின் 8வது மாநாடு தோழர் K.செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. சம்மேளன கொடியினை தோழர் K.பாண்டியன் ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் தோழர் A. சகாயசெல்வன் துவக்க உரை ஆற்றினார். கிளைச்செயலர் தோழர் R.ராஜேந்திரன் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தார்.  தோழர்கள் R.செல்வம் பொதுச்செயலர் TMTCLU, மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலர் தோழர் D.குழந்தை நாதன், மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி, விழுப்புரம் கிளைச்செயலர் தோழர் D.சரவணக்குமார் மற்றும் மாவட்ட உதவிச்செயலர் தோழர் S.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாநில செயலர் தோழர் K.நடராஜன் சிறப்புரை ஆற்றினார். தோழர் K.ராமன் நன்றியுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் K.ராமன், N.ராஜாராம், L.ஏழுமலை முறையே தலைவர், செயலர், பொருளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்

D.குழந்தைநாதன்

மாவட்ட செயலர்








Wednesday, May 11, 2022

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்

மாவட்டச் சங்கம், கடலூர்-01.

 

மாவட்ட செயற்குழு

 10.05.2022 அன்று காலை 10:00 கடலூர் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் தோழர் G.ரங்கராஜு மாவட்ட துணைத் தலைவர் தலமையில் மிகச் சிறப்பாக துவங்கியது. சம்மேளனக் கொடியினை தோழர் M.ராஜவேலு அவர்கள் ஏற்றி வைத்தார். துவக்கவுரையாக நமது மாநில  உதவிச் செயலர்  அருமை தோழர் P.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். அஞ்சலி உரையினை தோழர் D.ரவிச்சந்திரன் நமது மாவட்ட உதவிச் செயலர் இன்னாள் வரையில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலியினை செலுத்தினார். மேலும் ஆய்படு பொருளினை மாவட்ட செயலர் தோழர் D.குழந்தைநாதன் அறிமுகம் செய்து வைத்து  ஊழியர்களின் மாற்றல் பிரச்சனைகள், ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சனைகள், OUT SOURCING முறைகேடுகள் மற்றும் ,CLUSTER  பிரச்சனைகள், வரவிருக்கும் ஊதிய மாற்றம் , சங்க தேர்தல் மற்றும் அமைப்பு நிலை பற்றியும் மிக தெளிவாக தனது உரையில் பதிவு செய்தார்.

மேலும்  கருத்துரையில் மாவட்டத்திலிருந்து வருகை புரிந்த மாவட்ட சங்க , கிளைச் சங்க நிர்வாகிகள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகளை குறித்து பேசினார்கள். குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவை, கொடுக்கப்பட வேண்டிய ஊதியம், பணித் தன்மை குறித்தும் பேசினார்கள், அதே போல் நிரந்திர ஊழியர்களின் பணி பாதுகாப்பு , சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்திற்கும் மாவட்ட செயலர் பதிலளித்தார்.

 மாவட்ட சங்க தோழர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட செயற்குழுவில் நடைபெற்றது. அதற்கு மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கினார்.  குறிப்பாக மாவட்ட துணைத்தலைவர் தோழர் R.அகஸ்டீன், மாவட்ட உதவி செயலர் தோழர் P.மாயகிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் ஆகியோரின் செயல்பாடுகளை குறித்து மிக தெளிவாக எடுத்துரைத்து அவர்களை வெகுவாக பாராட்டினார். 

  திருச்சி கீரனூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநில சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்வும் நடைபெற்றது. மாநில துணைத் தலைவரும் , விளையாட்டு வீரருமான அருமைத் தோழர் A.சகாய செல்வன் அவர்களுக்கு TMTCLU  மாநில  பொதுச்செயலர் தோழர் R.செல்வம் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.  மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்திரமூர்த்தி அவர்களுக்கு நமது மேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்  விழுப்புரம் பகுதியினை சார்ந்த தோழியர் S.ராணி அவர்களுக்கு நமது  சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் புதியதாக தேர்வு செய்யபட்ட அனைத்து மாநில  சங்க நிர்வாகிகளுக்கு நமது மூத்த தோழர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 மாவட்ட செயற்குழுவிற்கு வருகை புரிந்த நமது  மேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன், மேனாள்  மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் அவர்களும், மேனாள் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.லோகநாதன் ஆகியோர் மாவட்ட சங்க செயல்பாடுகள், இன்னும் செயல்பட வேண்டிய பயணத்தினையும் சிறப்பாக தங்களது வாழ்த்துரையில் பதிவு செய்தனர்.

இறுதியாக நமது சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ்  மைசூரில் நடைபெறவுள்ள நேரடி நியமனம் பெற்று வேலைக்கு வந்தவர்களுக்கான CONVENTION நமது மத்திய சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது , அதில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் நமது நிர்வாகத்தின் இன்றைய செயல்பாடுகள், CLUSTER maintenance, FTTH, OFC OUTSOURCING, ஊதிய மாற்றம். சங்க அங்கீகார தேர்தல் ஆகியவற்றினை பற்றி மிக தெளிவாக பதிவு செய்தார்.


இறுதியாக மாவட்ட பொருளாளர் A.S.குருபிரசாத் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

 தோழியர் B.விஜியலஷ்மி அவர்கள் நமது மாவட்ட செயற்குழுவிற்கு  வருகை புரிந்த அனைத்து தோழர்களுக்கும்,  காலையில் டீ, வடை வழங்கினார். தோழியருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

 தோழமையுடன்

NFTE- மாவட்ட சங்கம், கடலூர்.