.

Showing posts with label Election. Show all posts
Showing posts with label Election. Show all posts

Friday, April 19, 2013

வெற்றியினைக் கொண்டாடுவோம்.

BSNLEU விற்கு, சந்தா பிடித்தம் செய்யும் திட்டத்தின்படியே, 1,14,535 உறுப்பினர்கள் உள்ளனர் என மேடைதோறும் முழ்ங்கினார் தோழர் அபி. அவர்கள் மட்டுமே 51% க்கு மேல் பெற்று NFTE இல்லாமல் போய்விடும் என ஆனித்தரமாக எழுதியிருந்தார்.

அது மாத்திரமல்ல, NFTEக்கு 42 ஆயிரம் உறுப்பினர்கள் கூட கிடையாது. ஆகவே NFTEக்கு இரண்டாவது அங்கீகாரம் கூட கிடைக்காது என்றார்.

ஆனால் இன்று BSNLEUவோ 99,380 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அவரது கூற்றின்படியே 15,000 க்கும் மேற்பட்ட BSNLEU உறுப்பினர்களின் வாக்குகள் NFTEக்கு வாக்காக மாறியுள்ளது. 

தோழர் அபியின் அரூடம் ஏன் பொய்த்துப் போனது?  

BSNLUE வின் வாக்குகள் ஏன் குறைந்தது? 

நமது சங்கம் கூடுதலாக 20,000 வாக்குகள் பெற்றது எங்கனம்?

ஊழியர்கள் நம்மை விரும்புகிறார்கள், நம்புகிறார்கள் என்பதைத்தான்  அகில இந்திய மற்றும் தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபிக்கிறது! நம்மைப் பணிசெய்ய தொழிலாளர்கள் பணித்துள்ளனர். அதனைச் சிரமேற்கொள்வது நமது கடமை.

சென்னையில் கூட சம்பளத்தின் மூலம் சந்தா பிடிக்கும் எண்ணிக்கையின் படி BSNLEU குறைவாகவும், நாம் அதிகமாகவும்தான் வாக்குகள் பெற்றுள்ளோம்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, நமக்கு, தொழிலாளர்களுக்காக  அங்கீகாரத்தோடு போராடும் வாய்ப்பும் தருணமும் வந்து விட்டது. 

இனி JCM அமைப்புகளில் இடம் பெறுவதால், நம்மால் மேலும் வலுவோடு  ஊழியர் நலன் காக்க வாதாட இயலும்! போராட முடியும்!

எட்டு ஆண்டுகள் அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நம்மால் பல்வேறு பிரச்சினைகளத் தீர்க்க முடிந்திருக்கும் போது, இப்போது அங்கீகாரமும் பெற்ற நிலையில், மேலும் உத்வேகத்தோடு, புத்துணர்வோடு, ஆற்றலுடன் நம்மால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அல்லவா?  


Click here - break up of votes

Thursday, April 18, 2013

Results

 Tamil Nadu Results - Printable format-Click here

கடலூர் மாவட்டத்தில் மிண்டும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தோழர்களுக்கும் தோழியர்களுக்கும், தோழமைச் சங்கங்களுக்கும் நமது 
நெஞ்சு நிறை நன்றி. 

ஒட்டு எண்ணிக்கை

கடலூரில் 10 மணியளவில் ஒட்டு எண்ணிக்கை துவங்கியது.

தகவல் அவ்வப்போது நமது தளத்தில் 'அப்டேட்' செய்யப்படும்.

Wednesday, April 17, 2013

பதிவான வாக்குகள்

மாவட்டம்                     மொத்தம் /பதிவானவை 

 கடலூர்:                                935               924
திரு நெல்வேலி                799                779
காரைக்குடி                         492                487
வேலூர்                               1197              1186   
தூத்துக்குடி                         483                 477   
சேலம்                                1430                1412 
கும்பகோணம்                   565                 556
திருச்சி                               1570                1538
கோவை                            1839                1783
தஞ்சை                                803                  793
மதுரை                               1831                1772
தர்மபுரி                                411                   411  
ஈரோடு                              1037                1016
கூனூர்                                 223                  229
நாகர்கோவில்                 496                   475
விருதுநகர்                        529                   523
புதுச்சேரி                           361                   359

==================================================================

6வது சரிபார்ப்பு தேர்தல் - கடலூர் மாவட்ட விவரங்கள்

     நமது கடலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

    உட்கோட்டங்கள்     Votes     Polled 

    கடலூர்              281      276


    திண்டிவனம்          93       93

    விழுப்புரம்           193       192

    நெய்வேலி           101        99

    கள்ளக்குறிச்சி         66       64

    விருத்தாசலம்         87       87


    சிதம்பரம்             114       113

    மொத்தம்             935      924

    வாக்குப்பதிவு சதவிகிதத்தில்    -   98.82%


NFTE - க்கு வாக்களித்த தோழமை உள்ளங்களுக்கும், அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தேற உதவிய அனைத்துச் சங்க தோழர்கள்  மற்றும் நிர்வாகிகளுக்கும்,  சிறப்பாக வாக்குப் பதிவு நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கும்  நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, April 15, 2013

தேர்தல் - ஏப்ரல் 16


அருமைத் தோழர்களே! 


நெடுங்காலம், செழுமிய  தொழிற்சங்க 

அனுபவம் மிக்க  NFTE இயக்கம் உங்களை 

விரும்பிக் கேட்டுக்கொள்வதெல்லாம், நமது 

துறையினை பாதுகாத்திட, நம்மைப் பாதுகாத்திட 

எண் (15) - ல் வாக்களியுங்கள் என்பது தான். 



ஒன்பது ஆண்டு கால BSNLEU காலத்தில் , நாம் 

நமது எதிர்காலத்தை வளமாக்கக் கூடிய 

அனைத்து சந்தர்ப்பங்களையும் வீணடித்தோம். 


நமது சுய மரியாதையை இழந்தோம். 


பொருளாதார வாய்ப்புக்களை இழந்தோம். 


போனஸ் இழந்தோம்.    


LTC இழந்தோம். 


மெடிக்கல் இழந்தோம்.



சற்றெ யோசிங்கள் தோழார்களே இந்த இழப்பு 

பட்டியல் இன்னுமும் உங்களுக்குத் தேவையா? 

இனியும் தொடர வேண்டுமா? தொடர 

அனுமதிக்கப் போகிறோமா? 


இழந்த தன்மானத்தைத் திரும்பப் பெற 

வேண்டாமா?


நமது நிறுவனம் செழிக்க வேண்டாமா?


நாமும் நமது சந்ததியினரும் வளமாக இருக்க 

வேண்டாமா?



தொழிற்சங்கக் போர்க்குணத்தை இழந்து, 

"ஆமாம் சாமி"   போடும் BSNLEU கூட்டம் 

இனியும் நமக்குத் தேவையா?


தொழிற்சங்க பேடிகளை அதற்குண்டான 

இடத்தில் அமரவைப்போம்!  


மீண்டும் நமது நிறுவனம் தலை நிமிர்ந்து நிற்க, 

நாம்  வளமாக இருந்திட வாக்களியுங்கள் NFTE 

-க்கு! 


நல்ல  தீர்ப்பினை வழங்குங்கள் 


மறவாதீர் எண் (15) 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 1. ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை கையில் வைத்திருக்கவும். இல்லையனில் உடணடியாக, கிளைச்செயலரையோ, முன்னனித் தோழர்களையோ அணுகவும். கிளைச்செயலர்கள், அனைவரும் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. வாக்குச் சீட்டில், அவசரமின்றி, நிதாணமாக, வரிசை எண் (15)-ஐ பார்த்து, சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக, குறிப்பிட்ட இடத்தில் வாக்களிக்கவும்.  முன்னனித் தோழர்கள் மாதிரி வாக்குச் சீட்டைக் காண்பித்து எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அனைவருக்கும் சொல்லித் தரவேண்டும்.

3. வாக்குச் சீட்டை மடிக்கும் பொழுது, எவ்வாறு நமக்கு மடித்துத் தரப்பட்டதோ, அவ்வாறே மடித்து வாக்குப் பெட்டியில் போடவும்.  நீங்கள் அளித்த வாக்கு வேறு ஒரு சின்னத்தில் தப்பிதமாக பட்டுவிடாமல் கவணமாக இருக்கவும்.  செல்லாத வாக்கு என்று ஒன்று கூட வரக்கூடாது.

4. வாக்குச் சாவடியில் , தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, கவணமாக 
நடந்து கொள்ள வேண்டும். 


5. எவராவது, தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டால் வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள். தேர்தல் அதிகாரியையோ, அல்லது முன்னனித் தோழர்களையோ அணுகவும்

6. எந்தவிதமான PROVOCATION-க்கும் இடம் கொடாமல் அமைதியாக தேர்தல் நடந்தேறுவது ஒன்றே குறியாகக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

7. கூடுமானவரை காலையிலேயே அனைவரும் வாக்களித்துவிட வேண்டும்.

8. கிளைச் செயலர்கள் வாக்களித்தோர் விபரத்தினை கையில் வைத்திருங்கள். வாக்களிப்பு நிலவரத்தை அவ்வப்போது, மாவட்டச் செயலருக்கு தெரியப்படுத்தி விடுங்கள். 


அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Wednesday, April 10, 2013


கவிழ்ந்தது போதும்.. 

கவிழ்த்து விடு..


எண்ணெய்  நிறுவன ஊழியர்கள் 
என்னைப்பார் என 
எழுந்து  நிற்கின்றார்கள் 

நிலக்கரி இந்தியா 
நிமிர்ந்து நிற்கின்றது 

தூக்கி விடுகின்றான் காலரை 
துறைமுகத் தொழிலாளி 

அடுத்த ஊதியப்பேச்சு வார்த்தை 
ஆரம்பமாகிவிட்டது.. 
வங்கியிலே பொங்குது.. மகிழ்ச்சி.. 

ஐம்பது சத கிராக்கிப்படியை 
அடிப்படைச் சம்பளத்தோடு 
இணைக்கக்கோரி 
கோரிக்கைச்  சத்தம் 
தடதடக்குது  ரயில்வேயிலே ..

ஏழாவது  ஊதியக்குழுவை 
எப்படியும்  2016ல் முடிக்க வேண்டும் என 
மார் தட்டி நிற்கின்றனர் மத்திய அரசு ஊழியர்கள் 

ஆனால்  BSNLலில் 

தாழ்ந்த நிலையில்..
தலை கவிழ்ந்து நிற்கின்றோம்..
தானென்ற அகம்பாவம்  தலைதூக்கியதால்..
அங்கீகாரம்...  அகங்காரமாக.. 
ஆட்டம்  போட்டதினால் 
தட்டிக்கேட்கும் திராணியை 
தவற விட்டதினால் 

78.2 ஐக்கூட  இன்னும் பெற முடியாமல் 
தலை கவிழ்ந்து  நிற்கின்றோம் 

தலை நிமிர்ந்து நின்ற தோழனே!
தலை நிமிர்த்து.. 
இணைந்த கரம் உயர்த்து ..

உன் தலை கவிழக் 
காரணமானவர்களின் 
கனமேறிய தலையைக்
கவிழ்த்து விடு..
ஏப்ரல்  16ல்...  
                                                                                                                             நன்றி: காரைக்குடி 

தோழமைச் சங்க மாநாடு

 BSNL PEWA மாவட்ட மாநில மாநாடு
                                                Click here


Monday, April 8, 2013

காரைக்குடி கலக்குறாங்க...


BSNL  ஊழியர்கள்
சாதாரணமாக செத்தால்   ஒரு லட்சம்..
அடிபட்டுச்  செத்தால் 2 லட்சம்..
நீத்தார் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை - LIC
நிறைய  வாங்கித்தந்தது BSNLEU   சங்கம்..
இது BSNLEU சங்கத்தின் மாபெரும் மரண சாதனை ..

என்றொரு எட்டாண்டு சாதனைகள் பட்டியலைப்
படிக்க வேண்டிய
மரண  வேதனை நமக்கு நேரிட்டது.

INSURANCE என்பது இலவசம் அல்ல..
மாதாமாதம் பணம் பிடிக்கப்பட்டு 
மரித்த பின்போ ஓய்வுக்குப் பின்போ 
உரிய தொகை அளிக்கப்படுகின்றது.
இதில் சாதனைக்கு எங்கே இடம்?


இறப்பிலும் சாதனை சொல்லும் 
இந்தப் பாவிகளைப் பார்த்து
இறந்த ஆவிகளும் பரிகாசம் பண்ணும் ..
அவர்கள் பிடிக்கும் செங்கொடியே  
அவர்களைப் பார்த்து சிரிக்கும்..

காப்பீட்டுத்திட்டத்தில்
கணக்கின்றி அடித்த கூட்டம்
105 ரூபாய் இழப்பீட்டுத்திட்டத்தில்
35 ரூபாயை இழப்பாக்கிய   கூட்டம்

மரித்தவர்  மனைவிக்கு
மதிப்பெண் போடச்சொல்லி
மதிப்பிழந்த கூட்டம்

பாடை ஏறியவரையும்
பரலோகம் சென்றவரையும்
எட்டாண்டு  இமாலய சாதனைப் பட்டியலில்
இணைத்து வாக்கு கேட்கும்
இந்த வ(வா )க்கற்ற
நிலையை நினைக்கும்போது
மனம் நொந்து வெந்து போகின்றது..

எட்டாண்டில் செயலற்று
மரித்த நிலையில் இருந்து விட்டு
இப்போது மரித்தவருக்கு
லட்சம் வாங்கித்தந்தோம் என்று கூவுவது
நல்ல தொழிற்சங்க  லட்சணமாகுமா?


"ஏமாற்றுவதைக் காட்டிலும்
தோற்றுப்போவது மரியாதைக்குரியது"

என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்
BSNLEU  சங்கத்திற்கு அப்படியே பொருந்தும்..

Monday, March 25, 2013

மத்திய-மாநிலத் தலைவர்கள் நமது பகுதியில் பிரச்சாரம்

 நமது மத்திய, மாநிலச் சங்க  நிர்வாகிகள் மார்ச் மாதம் 26,27 மற்றும் 28 தேதிகளில் நமது மாவட்டத்தில் சுற்றுப்பயனம் மேற் கொள்கின்றார்கள். தலைவர்களின் பங்கேற்பை கிளைச் செயலர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் சங்கம் கேட்டுக் கொள்கிறது. சுற்றுப்பயண விபரங்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------- 
26/03/2013
நேரம்:  மாலை 5 மணி:      
இடம்: பொது மேலாளர் அலுவலகம்.

பங்கேற்கும் தலைவர்கள்

1. தோழர் C.K.மதிவானன்   (துணைப்பொதுச் செயலர்),
2. தோழர் ஜி. ஜெயராமன் (சம்மேளணச் செயலர்)
3. தோழர் டி. சிவசங்கர்   (மாநிலத் தலைவர், SNATTA)
4.  தோழர் வி. ஹரிகிருஷ்ணன் (மானிலச் செயலர் – 
                                                        பாட்டாளி தொழிற்சங்கம்)
------------------------------------------------------------------------------------------------------------------------


27/03/2013
செஞ்சி          : காலை ஒன்பது மணி
திண்டிவனம்     : மதியஉணவு இடைவேளை
விழுப்புரம்       : மாலை ஐந்துமணி    
                    (தொலைபேசியகம்)

பங்கேற்கும் தலைவர்கள்
1.      தோழர் ஆர். பட்டாபிராமன் (மாநிலச் செயலர்)
2.      தோழர் கே. அசோக்ராஜன்  (மாநிலப் பொருளர்)
3.      தோழர் எஸ். தமிழ்மணி    (முன்னாள் மாநிலத் தலைவர்)
 ---------------------------------------------------------------------------- 
27/03/2013
நெய்வேலி         : காலை ஒன்பது மணி
விருத்தாஜலம்     : மதியஉணவு இடைவேளை
கள்ளக்குறிச்சி      : மாலை ஐந்து மணி 
                     (தொலைபேசியகம்)1.
1.      தோழர் L.  சுப்பராயன்  (மாநில உதவிச் செயலர்)
2.     தோழர் ஏ. ராபர்ட்     (மாநில உதவிச் செயலர்)
3.      தோழர் வி. லோகநாதன் (மாநில உதவித் தலைவர்)
4.      தோழர் என். அன்பழகன்  (மாநில அமைப்புச் செயலர்)
  ----------------------------------------------------------------------------------------  


28/03/2013

அரகண்டநல்லூர்    : காலை ஒன்பது மணி
உளுந்தூர்பேட்டை   : மதியஉணவுஇடைவேளை
பண்ருட்டி           : மாலை ஐந்து மணி 
                      (தொலைபேசியகம்)

1.      தோழர் L.  சுப்பராயன்  (மாநில உதவிச் செயலர்)
2.     தோழர் ஏ. ராபர்ட்     (மாநில உதவிச் செயலர்)
3.      தோழர் வி. லோகநாதன் (மாநில உதவித் தலைவர்)
4.      தோழர் என். அன்பழகன்  (மாநில அமைப்புச் செயலர்)

 ---------------------------------------------------------------------------------------- 
28/03/2013
சிதம்பரம்:   காலை ஒன்பது மணி 
கடலூர்  :   மதியம் தோழர்/ தோழியர்களை 
            நேரடியாக்ச் சந்தித்தல்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிளைச் செயலர்கள், நமக்காக வருகை தரும் தலைவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். 

-மாவட்டச் சங்கம்

தேர்தல் பொறுப்பாளர்கள்

 ஆறாவது தேர்தல் பிரச்சார துவக்க விழா 19/03/2013 அன்று மதியம் பொது மேலாளர் அலுவலகத்தில் துவங்கியது. இது பற்றிய செய்தித் தொகுப்பு முன்னரே நமது வலைத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கடலூர்:
தோழர்கள் A. சாதிக் பாஷா, எம். தினகரன், 
எஸ். ஆனந்தன், ஏ.ஸி. முகுந்தன், வி. கீதா.

சிதம்பரம்:
தோழர்கள் P. பிச்சைப்பிள்ளை, D. ரவிச்சந்திரன், K. கிருஷ்ணகுமார்.

விருத்தாஜலம்
தோழர்கள் வி. லோகனாதன், என். அன்பழகன், எஸ். அன்பழகன், கே.அம்பாயிரம்.

நெய்வேலி
தோழர்கள் ஜி. ரங்கராஜ், பி. சுந்தரமூர்த்தி.

கள்ளக் குறிச்சி
தோழர்கள் B. ராஜேந்திரன், பி. அழகிரி,
 வி. இளங்கோவன்.

விழுப்புரம்
தோழர்கள் இரா. ஸ்ரீதர், எம். மஞ்சினி,
 கே.மகேஷ்வரன், ஏ.ரவிச்சந்திரன்

திண்டிவனம்
தோழர்கள் ஆர். செல்வம், கே. பாண்டியன்,
 ஜி. ஜெயச்சந்திரன்.
----------------------------------------------------------------------------------
குறிப்பு: சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களை, அவரது சுற்றுப்பயனத்திற்கு ஏற்ப, கிளைகளில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
---------------------------------------------------------------------------------

எட்டாண்டு கால வறட்சி போதாதா? எண் 15-ல் NFTE க்கு வாக்களிப்போம்.

Tuesday, March 19, 2013

தோழர் இஸ்லாம்

ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் துவக்க விழா இன்று (19/03/2013) மதியம் பொது மேலாளர் அலுவலக வாயிலில் துவங்கியது. விழாவில் நமது அகில இந்திய சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அண்டை மாவட்டத் திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் இஸ்லாம் அவர்களது உரையினை நமது ஆசான் தோழர் ரகு அவர்கள் தமக்கே உரித்தான வகையில் சிறப்பாக மொழி பெயர்த்தார். 

விழாவில் SNATTA மாநிலத்தலைவர் தோழர் D. சிவசங்கர்  அவர்களும், PEWA மாவட்ட பொருளாளர் தோழர் சிதம்பரம் மனோகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. சம்மேளனச் செயலர் தோழர் ஜி. ஜெயராமன் உரையாற்றினார்.

மேலும் இம்மாதத்திய  மாவட்ட சங்க  இதழ் 
"தொலைபேசித் தோழன் " தோழர் ரகு அவர்கள் வழங்கப்பட்டு  தோழர் ரங்கநாதன் அவர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.



இனி தோழர் இஸ்லாம் உரையிலிருந்து சில பகுதிகள்

முதலில் தோழர்கள் ரங்கனாதன், ரகுநாதன் அவர்களின் ஆசியினைக் கோருகிறேன்.

அறுபது வருட வரலாற்றினையும், செழுமிய அனுபவங்களையும் உள்ளடக்கிய நமது சங்கம், இப்பொழுது ஒரு தீர்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இப்பொழுது இல்லை எனில் பின் எப்பொழுதும் இல்லை என்ற ஒரு நெருக்கடியான சூழலில் உங்களைச் சந்திக்கிறேன். நான் "இப்பொழு இல்லையெனில்.."  என்று கூறுவது நமது நிறுவனத்தை காப்பாற்றுவது பற்றி! 
ஊழியர்களின் எதிர்காலம் பற்றி !

ஒரு தொழிற்சங்கத்திடம் தொழிலாளி எதிர்பார்ப்பது என்ன? குறைந்த பட்சமாக தொழிலாளர்களை, அவர்கள்து ஆசைகளை, கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்பது தானே? ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக விளங்கும் நம்பூதிரி சங்கம் யாரின் பிரதிநிதியாக செயலாற்றினார்கள்? சொன்னால் வெட்கம் தோழர்களே! அவர்கள் நிர்வாகத்தின் பிரதி நிதியாக செயலாற்றினார்கள். 

அவர்கள் சொன்னதிற்கும், செய்ததிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! 

ஓய்வு பெற்றவர்களுக்கும் போனஸ் கொடு என்றார்கள்! பணியில் இருப்பவர்களுக்கே போனஸ் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

நம்பூதிரியின் காலத்தில்தான் நாம் பெரும்பாலன சலுகைகளை இழந்தோம். போனஸ் LTC, மருத்துவப்படி மற்றும் இன்னும் பல.....

ஏன் சரியாக ஆடவில்லை என்றால் மேடை கோணலாக இருக்கிறது என்று பதில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, நம்பூதிரி சங்கத்தில் பதில்கள் எல்லாம்.

அவர்கள் சங்கம் நடத்தத் தெரியாதவர்கள்; கோரிக்கைகளை வடிவமைக்கத் தெரியாதவர்கள்! கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாதவர்கள்.

ஏன் இப்படி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் என வினவினால், அடுத்தமாதம் சம்பளம் வருகிறதா என்று பார் என பதிலுரைக்கிறார்கள்!

இதற்காகவா நாம் இவர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

இப்பொழுது புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் நாம் கார்பொரேட் (BSNL) ஆனதுதானாம்! கார்பொரேஷன் ஆனதற்கும் கூட NFTE தான் காரணமாம்!

விந்தை! பொய் சொல்வதற்கும்  ஒரு அளவில்லை? நாமா கார்பொரேஷன் 
ஆக வேண்டும் என குதித்தோம்? அதை முடிவெடுத்து திணித்தது அரசாங்கம் அல்லவா? தோழர் குப்தா என்ன செய்தார்? ஒவ்வொருவருக்கும் பணி உத்தரவாதம்,பென்ஷன் உத்தரவாதம் ஆகியவற்றை உறுதி செய்தாரா இல்லையா?  நிறுவனத்தின் பொருளாதார சாத்தியக்கூறு பற்றி தோழர் முழங்காத மேடை உண்டா?

நாம் அங்கீகரிக்கப்படசங்கமாக இருந்த போது, நமது நிறுவனம் இலாபத்தில் இருந்ததா இல்லையா? 

நிறுவனம் வளமாக இருந்தால்தானே நாம் வளமாக இருக்க முடியும்? நிறுவனத்தை கட்டிக் காக்க தோழர் நம்பூதிரியின் திட்டம் என்ன? நிதி நெருக்கடியினைத் தீர்க்க நம்பூதிரி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?
அவரிடம் இருக்கும் ஒரே பதில் “எல்லா பழியும் NFTE-யே சேரும்” என்பது தான்.

ஆனால்  நம்பூதிரி சங்கத்தினர் பம்மாத்து கோரிக்கைகளை வைப்பதில் கில்லாடிகள். உதாரணமாக  “வாரத்தில் ஐந்து நாள் வேலை!” இது பெண்களின் ஓட்டுக்களை கவர்ந்து கொள்வதற்காக! அங்கீகாரத்திற்கு வந்து எட்டு வருடம் ஆயிற்றே? "ஐந்து நாள் வேலை" என்ற கோரிக்கை  என்னவாயிற்று என நாம் கேட்க வேண்டாமா?

இவர்கள்து காலத்தில்தானே 78.2 D.A மெர்ஜர் பிரச்சினை வந்தது? நமது நிறுவனத்தைத் தவிர அனைவரும் இந்த 78.2 D.A மெர்ஜரை பெற்றுவிட்டனரே?.  இதைக் கூட வாங்க முடியாத வக்கற்ற கூட்டம், கொஞ்சமும் வெட்கமின்றி மீண்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

ஏமாறாதீகள் தோழர்களே!

நாம் அங்கீகரிக்கப் பட்டால், தோழர்களே, நிதி நெருக்கடியிலிருந்து நமது நிறுவனத்தை மீட்க முடியும். 78.2 D.A மெர்ஜர் சாத்தியமாகும். போனஸ் பெற முடியும். இழந்த பல  சலுகைகளை பெற முடியும். NEPP என்பது பரோமோஷன் பாலிஸியா அல்லது பனிஷ்மென்ட் பாலிஸியா என்று புரியவில்லை. பலருக்கு ஊதிய பிடிப்பு நிலவுகிறது. இம்மாதிரியான  பதவி உயர்வு பிரச்சினையில் நிலவும் குளறுபடிகளை நம்மால் நீக்க முடியும்..

ஆகவே தோழர்களே! BSNL நிறுவனத்தை காத்திட, பொருளாதார ரீதியில் நிறுவனத்தை நிலை நிறுத்திட, ஊழியர்களின்-குறிப்பாக குரூப் CCccசி , மற்றும் D ஊழியர்களின் நலன் காத்திட, S.C / S.T ஊழியர்களின் நலன் காத்திட NFTE சங்கத்தினை தேர்ந்தெடுங்கள். வார்த்தை ஜாலத்தினையே துணையாகக் கொண்டு , நிர்வாகத்தின் பிரதி நிதியாக மட்டுமே விளங்கும் நம்பூதிரி சங்கத்தினை வீட்டிற்கு அனுப்புங்கள்.