.

Thursday, May 2, 2019

அண்ணாச்சி DR அவர்களின்
மூன்றாம் ஆண்டு நிணைவு நாள்


கடலூர் மாவட்ட NFTE சங்கத்தின் பலம்
ஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும்
DR
என்றும்அன்புடன் அழைத்த

தொழிற்சங்க வழிகாட்டி
தோழர் கடலூர் D ரங்கநாதன்

பனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த கருணைச் செங்குன்று!
கோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்!

அவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம் – அதன் உறுப்பினர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் பெருக்கம்!

அண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்தி—தொலைபேசி கம்பிப் பாதைகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம். ஆனால், அவர் கட்டி வளர்த்த கொள்கை வீரர்கள் உண்டு—அண்ணாச்சி போற்றிய
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!

மறைந்த நம் தலைவருக்கு
செங்கொடி தாHழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

அண்ணாருக்கு நமது தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..உடன் நமது மாவட்ட செயலர் மற்றும் நமது தோழர்கள்....





மே தின பேரணி

தோழர்களே!. தோழியர்களே!!..


             01-மே-2019 அன்று  கடலூர் திருப்பாப்புலியூர் ரெஜிஸ்டர் அலுவலகத்திலிருந்து AITUC-CITU சார்பில்  மே தினப் பேரணி  புறப்பட்டு தேரடித் தெருவில் முடிந்தது. பேரணியில் நமது மாவட்டச் செயலர் உட்பட  தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் AITUC  சார்பாக நமது மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் அவர்கள் பேரணியில்  விண்ணதிரும்  வகையில் கோஷமிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். 


Monday, April 22, 2019


+
உண்ணாவிரதம் போராட்டம் ஒத்திவைப்பு

நாளை 23-04-2019 நடைபெறுவதாக இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது.

 போரட்டத்திற்கு ஆயத்தமாகவிருந்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்..


Saturday, April 6, 2019


சமூக நீதிப் புரட்சியாளர் 
டாக்டர்அண்ணல் B.R.அம்பேத்கர்
அவர்களின் 128வது பிறந்தநாள்

உலக தொழிற்சங்கத் தலைவரும்
மேனாள் மத்திய உள்துறை அமைச்சர்
தோழர் இந்திரஜித் குப்தா 
அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள்

தொழிற்சங்கப் பிதாமகன் ஒற்றுமை நாயகன்
தோழர் O.P.குப்தா 
அவர்களின் 98வது பிறந்தநாள்

ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் விழா
11.4.2019 மாலை கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது.
தோழர் க.முத்தியாலு
தோழர் குடந்தை R.ஜெயபால்,
ஆகியோர் கலந்துகொண்டு பெருமகன்களுக்கு புகழாரம் செய்து சிறப்பு செய்வர்.

அனைவரும் பங்கேற்பீர்!!

Thursday, April 4, 2019


உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு.

நாளை 5.4. 2019 அன்று நடைபெறவிருந்த மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இன்று  4.4.2019 கடலூர் மாவட்ட பொது மேலாளர் திரு. ஜெயக்குமார் ஜெயவேலு அவர்கள் நாம் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நம்மைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்து இருந்தார். அவருடன்   சுமார் இரண்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.   அவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும், அவர் நமது ஊழியர் பிரச்சினைகளை இரண்டொரு நாட்களில் தீர்ப்பதாக உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில் நாளை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சனைகளில் தீர்வு ஏற்படாவிட்டால் வருகின்ற 12.4.2019 அன்று மீண்டும் நமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது  என நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் தோழர் இரா ஸ்ரீதர், மாநில உதவிச்  செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு  அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுமேலாளர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட சங்க பொறுப்பு செயலர் தோழர் D.குழந்தை நாதன், மாவட்டத் தலைவர் தோழர் G.கணேசன், மாவட்டப் பொருளர் தோழர் A.S. குருப்ரசாத், மாவட்ட உதவிச் செயலர் தோழர் S.மணி, மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் R.பன்னீர்செல்வம், GM அலுவலக கிளைச் செயலாளர் தோழர் S.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday, March 30, 2019



 வாழ்த்துக்கள்

30.3.2019 இன்று பணி ஓய்வு பெறும்...

திருமதி கலாராணி இளங்கோவன் SDE கடலூர்
திரு. S.P. ராஜேந்திரன் SDE விழுப்புரம்



தோழர்கள்
T.வைத்தியநாதன் AOS பண்ருட்டி
P.லட்சுமணன் TT பண்ருட்டி
R.சுப்பிரமணியன்-I TT  வீரபாண்டி
P.சந்திரன் TT கல்பட்டு
R.சுந்தரமூர்த்தி TT அரகண்டநல்லூர்
S.பன்னீர்செல்வம் TT பரங்கிப்பேட்டை
D.பழனிவேலு TT கடலூர்
N.R. பஞ்சநாதன் TT விழுப்புரம்

கடலூர் மாவட்ட சங்கத்தின்  சார்பில் பணி ஓய்வு நாள் 
சிறக்க வாழ்த்துகிறோம்.....

Thursday, March 21, 2019

வருந்துகிறோம்
 BSNLEU மாநில உதவிச்செயலரும், TNTCWU மாநில தலைவருமான தோழர் எம். முருகையா அவர்கள் இன்று 21.3.2019 இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

Monday, March 18, 2019

கண்ணீரஞ்சலி...

தோழர் S. நவாப் ஜான் TT அவர்களின் தந்தையும் ஓய்வுபெற்ற  கேபிள் ஜாயின்டர் திரு.ஷேக் ஹுசைன் அவர்கள் 17.3.2019  மாலை 3.00 மணியளவில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்க்குகிறோம்.  இறுதி நிகழ்ச்சி இன்று 12.30 க்குள் கடலூர் வண்ணார பாளையம் தொலைபேசி நிலைய ஊழியர் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Monday, March 11, 2019


மகளிர் தினம் 08-03-19
கடலூர் மாவட்ட AUAB சார்பாக சர்வதேச மகளிர் தினம் 08-03-19 தொலைபேசி நிலையத்தில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில் உணவு இடைவேளையில் தோழியர்கள் V.கீதா NFTE, சற்குணவதி கனகசபை BSNLEU கூட்டுத் தலைமையில் தோழியர் S.மணிமேகலை SNEA வரவேற்புரை வழங்கிட தோழியர் K.சாந்தா DGM (CFA) துவக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக முனைவர் ஜெ. சியாமளா உதவி பேராசிரியர் (தமிழ்த்துறை) பெரியார் அரசு கலைக் கல்லூரி கடலூர் சிறப்பான சிறப்புரையாற்றினார். தோழியர். சித்ரா நாகராஜன் AIBSNLEA கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினருக்கும், ஏற்பாடு செய்த AUAB மாவட்ட சங்கத்திற்கும் நன்றி கூறினார் 




Saturday, March 2, 2019

வருந்துகிறோம்...
சின்ன சேலம் தோழர் A.ரவிச்சந்திரன்  TT அவர்களின் தாயார் திருமதி பிரேமா அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரது பிரிவால் வருந்தும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.  இறுதி நிகழ்வு நாளை மாலை 3 மணி அளவில் சென்னை பொத்தேரியில் நடைபெறும்.

Thursday, February 28, 2019

தோழர்களே , வணக்கம். இந்த மாத சம்பளம் காலதாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளையிலிருந்து (1/3/2019)  5 நாட்கள் ERP BLOCK OUT DAY என்பதால், சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க வேண்டும் எனவும் , உடனடியாக சம்பள பட்டுவாடா நடத்திக் கோரியும் நாளை  1/3/2019 அனைத்து கிளைகளிலும் AUAB சார்பில் ஆர்பாட்டம் நடத்திட உள்ளது. மாவட்ட  பொது மேலாளர் அலுவலகத்தில்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் AUAB சார்பில் நடைபெற உள்ளது. அனைத்துத் தோழர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீர் அஞ்சலி
கடலூர் தோழியர் P.பச்சையம்மாள் ATT இன்று காலை 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழியரது பிரிவில் வருந்தும் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணிக்குமேல் கடலூர் வண்ணாரப்பாளையம் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.


பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்…
இன்று 28.2.2019 இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்.

பணி ஓய்வு பெறும் தோழர்கள்:
1. M.ஆறுமுகம்   TT  விருத்தாசலம்
2. S.கோபால்சாமி TT       கடலூர்
3. S.ஜோசப்             TT  திண்டிவனம்
4. G.நாகராஜன்  OS(T) விழுப்புரம்
5. N.P.பழனிவேலு TT      விருத்தாசலம்
6. P.ராஜேந்திரன்      TT  விழுப்புரம்            

பொறுப்பு மாவட்ட செயலர்


நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சற்று ஓய்வு எடுக்கவிருப்பதால் சில நாட்கள் மாவட்ட உதவிச்செயலர்
 தோழர் D.குழந்தைநாதன் மாவட்ட பொறுப்புசெயலராக 
பணிகளை கவனிப்பார்.
தோழரின் தொடர்புக்கு 75987 75139  

Tuesday, February 26, 2019


வாழ்த்துகிறோம்….

இன்று 26.2.2019 காரைக்காலில் நடைபெற்ற குடந்தை மாவட்ட மூன்றாவது மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். குடந்தை மாவட்ட மாநாட்டில் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட பொறுப்புசெயலர் தோழர் D.குழந்தைநாதன் வாழ்த்துரை வழங்கினார். தோழர் R.பன்னீர்செல்வம் மாவட்ட அமைப்புச்செயலர், மற்றும் தோழர் A.C.முகுந்தன் சிரில் அறக்கட்டளை உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தலைவராக தோழர் பாலசுப்ரமணியன் – மயிலாடுதுறை


செயலராக தோழர் விஜய் ஆரோக்கியராஜ்-குடந்தை

பொருளராக தோழர் பன்னீர்செல்வம்- காரைக்கால்




கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்…..