.
Wednesday, June 6, 2018
Tuesday, June 5, 2018
BSNL-ல் பணிபுரியும் non-executive ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 மதிப்பிலான இலவச அழைப்புகளுக்கான தொகைக்குப்
பதிலாக இனி மூன்று மாதம் செல்லுபடியாகும் (90 நாட்கள்) வகையில் (ரூ.600 மதிப்பு) தினந்தோறும் 1GB Data, 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும்
வரம்பற்ற (Unlimited) Voice கால் வசதியுடன் கூடிய இலவசங்களை வழங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- கடந்த ஆண்டு நவம்பர் 2017ல் நமது மத்திய சங்கம் 35 வது NJCMல் எடுத்து விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் இவ்வுத்தரவை மத்திய நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
- உத்தரவு எண்: No. 26-07/2018-T&C-CM Date: 05.06.2018
கண்ணீர் அஞ்சலி
சிதம்பரம் சேத்தியாத்தோப்பு தொலைபேசி
நிலையத்தில் பணியாற்றும் தோழர் B.மோகன்
TT அவர்களின் தாயார் திருமதி.பிரேமாபாய் அவர்கள் 04.06.2018 மதியம் 01:00 மணியளவில்
காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது
பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்டச்
சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
அம்மையாரின் இறுதி சடங்கு 05.06.2018 காலை 10:00 மணிக்கு சேத்தியாதோப்பு அவரது இல்லத்தில் நடைபெறும்.
Friday, June 1, 2018
தோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)
பணி ஓய்வு பாராட்டு விழா - கடலூர்
நமது
பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இம்மாத பணி ஓய்வு பெறும் தோழியர் J.ஜோதி அவர்கள் பணி ஓய்வு பெறவுள்ளார்.
அவரது 30ஆண்டு கால இலாகா சேவையினை பாராட்டும் விதமாக நமது TMTCLU கடலூர்
கிளைச் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் தோழர் P.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் அனைவரையும்
வரவேற்றார். NFTE மாவட்டத்
தலைவர் தோழர் G.கனேசன் , TMTCLU பொதுச்
செயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட
செயலர் தோழர் A.S.குருபிரசாத்,
மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார், NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், வெளிபுறப்பகுதி கிளைச் செயலர் தோழர் E.வி நாயகமூர்த்தி, பொது மேலாளர்
அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன், மூத்த தோழர் சு.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினார்கள்.
இறுதியாக நமது மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் தமது உரையில் தோழியரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய
வாழ்த்துக்களையும் தோழியரின் பணி நிரந்திர சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில்
இருப்பதனால் மிக விரைவில் முடித்து
தருவதற்கு நமது சங்கம் உறுதுணையாக இருக்கும். அதே போல் தோழியருக்கு கிடைக்க
வேண்டிய EPF பணம்
கிடைக்கவும் நாம் ஏற்பாடு செய்து
தருவோம் என நம்பிக்கை தந்து தமது சிறப்புரையினை நிறைவு செய்தார்.
இறுதியாக தோழர் M.மணிகண்டன் கூட்டத்திற்கு
வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது. கூட்ட்த்திற்கு
வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திட்ட திண்டிவனம் தோழரும் NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் S.குமார் அவர்களுக்கு நமது மாவட்ட
சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பணி ஓய்வு பெறும் தோழியருக்கு தாரளமாக
நிதியுதவி அளித்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு NFTE-TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில் நன்றியினை
தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி
தோழமையுடன்
NFTE-TMTCLU ,
மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.
கன்டன
ஆர்ப்பாட்டம் - கடலூர்
தூத்துக்குடியில் பொது மக்களின் நலனுக்காக 100 நாட்கள் அறவழியில் போராடிய அப்பாவி பொது மக்களின் மீது
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர்
BSNLலிலுள்ள
அனைத்து சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25-05-2018 அன்று மதிய உணவு
இடைவேளையின் போது நடந்ததது.
அதில் நமது அனைத்து சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு இறந்த போனவர்களுக்கு அஞ்சலியையும், துப்பாக்கி சூடு நடத்தியதனை கண்டித்தும் உரையாற்றினார்கள் . கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரளாக
பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பல... சில காட்ச்சிகள்
Thursday, May 31, 2018
+2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தோழர்
சிரில் நினவு அறக்கட்டளை கூட்டம் அதன் தலைவர் தோழர் க.சீனிவாசன் அவர்கள் தலைமையில்
கடலூர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிரில் அறக்கட்டளை
செயலர் தோழர் வீ.லோகநாதன், அறக்கட்டளை உறுப்பினர்கள் தோழர்கள் இரா.ஸ்ரீதர், A.C.முகுந்தன்,
R.செல்வம்-II,தோழியர் C.சுசரிதா OS/CDL ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் தோழர் G.கணேசன், மேனாள்
மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,தோழர் சிரில் நினவு அறக்கட்டளை சார்பில் 10-வது
மற்றும் +2 தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் BSNL
ஊழியர்களின் மாணவச் செல்வங்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வினை இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்துவது என
முடிவு செய்யப்பட்டது. 15-06-2018 அன்று விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
நிதி சம்மந்தமாக மாவட்ட மாநாட்டின் முடிவின்படி மாவட்டச்
செயலரும்,சிரில் அறக்கட்டளையின் உறுப்பினர் தோழர் இரா.ஸ்ரீதர், தோழர்
P.சுந்தரமூர்த்தியிடம் மாநில உதவிச்
செயலர் வங்கிக்கணக்கை மாற்றுவது குறித்து கலந்து பேசுவது எனவும்
முடிவெடுக்கப்பட்டது.
Wednesday, May 30, 2018
வருந்துகிறோம்
விழுப்புரம் CSCயில் பணிபுரியும் தோழர் A.சுந்தர் STMO அவர்களின் துணைவியார் 30-05-2018 இரவு 7.30 மணியளவில் மாரடைப்பால் மரணமுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவரது
குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Thursday, May 24, 2018
தூத்துக்குடி அராஜகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே!
நினைந்து பார்க்கவே
நெஞ்சம் நடுங்குகிறது.
தமிழக வரலாற்றில்
கடந்த செவ்வாய் கிழமை மே
22-ஆம் தேதி கறுப்பு செவ்வாய் ஆகிவிட்டது. 11 அப்பாவி பொதுமக்கள், அதில் ஒரு பத்தாம் வகுப்புச் சிறுமியும் கூட, தமிழகக் காவல்துறையினரால்
காக்கைக் குருவிகளைப்
போலச் சுட்டுக் கொல்லப்பட்டு
விட்டார்கள்.
அவர்கள் செய்த குற்றம் அமைதியாகப்
பேரணி போனதுதான். அந்தச் சாதாரண மக்களின் அசாதாரணமான
கோரிக்கை, எங்களை வாழ விடு என்பதுதான்—காற்றை மாசாக்கி, நிலத்தடி நீரை எல்லாம் குடிக்க முடியாமல் நஞ்சாக்கி, மெல்லச் சாகடிக்கும் ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை நிரந்தரமாக மூடி – எங்களை வாழவிடு என்பதுதான்.
கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
உள்ளுர் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம்
துவங்கி அன்று செவ்வாய்க்
கிழமை 100-வது நாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியான பெருந்திரள்
பேரணி.
பொறுக்க முடியாத நிர்வாகமும், அதன் காவல்துறையும் – எல்லாவிதமான
சட்டபூர்மான
வழிமுறைகளையும்
தூக்கியெறிந்து – 13 உயிர்களைச் சுட்டுப் பொசுக்கி தூத்துக்குடியைச்
சுடுகாடு ஆக்கிவிட்டார்கள். தமிழ்ப் பூங்காவைக்
குருதியில்
மூழ்கடித்து
இன்னொரு ஜாலியன் வாலாபாக் ஆக்கிவிட்டார்கள்.
கண்ணீரில் மூழ்கினாலும், கண்டனக் குரல் எழுப்ப கடமை அழைக்கிறது.
NFTE கூட்டணி சங்கங்களின் சார்பில் கடலூர் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு,,,.. 25-05-2018
உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம்
தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்து!
இனி ஒரு துயரம் கூடாது!
ஒன்றிணைந்து
முழங்குவோம்! சுற்றுச் சூழல் காப்போம்! மக்கள் நலம் காப்போம்!
நச்சு ஆலையை நிரந்தரமாக மூடச் செய்வோம்!
தோழமையுடன்
அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்கள்,கடலூர்.
Subscribe to:
Posts (Atom)









