.

Sunday, February 28, 2016

பணிஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்
                                                                       
                                                                         29-02-2016 பணி ஓய்வு பெறும்


திரு.P. சாந்தகுமார் DGM Fin கடலூர்
தோழர் M. நசீர்பாஷா TM-எலவனாசூர்கோட்டை
    தோழர் M.தனசங்கு TTA          ஸ்ரீநெடுஞ்சேரி                                           தோழர் M.சௌந்திரராஜன்                                     TM-திண்டிவனம்

இவர்களது பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

பாட்னாவில் மார்ச் 1,2-ல் நடைபெறும் மத்திய செயற்குழுவில் மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் கலந்து கொள்கிறார். மாவட்ட செயலர் வரும் வரை மாவட்ட பொறுப்புகளை மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன்,TTA கடலூர்  அவர்கள் கவனிப்பார். மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளைசெயலர்கள் தோழரை தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு செல்பேசி எண்: 7598775139

மாவட்ட சங்க அலுவலக எண்: 04142-284647

Friday, February 26, 2016

நெஞ்சம் நிறைந்த விழா
         
 இம்மாதம் ஓய்வு பெற உள்ள துணைப் பொது மேலாளர்      திரு, . சாந்தகுமார் அவர்களுக்குப் பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றம் சார்பாக நேற்று மாலை அலுவலக திறந்தவெளி மாடியில் சிறப்பான பிரிவு உபசார விழா நடைபெற்றதுமனமகிழ் மன்றம் என்ற ஒன்று தற்போது செயல்பட வில்லை என்பதுதான் உண்மைஎன்றாலும், அதனினும் சிறப்பாக GM அலுவலக அனைத்துத் தளங்களில் செயல்படும் அனைத்து செக்ஷன்களின் சார்பாக ஓரே விழாவாக நடத்த வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவுவெற்றி -- தான் இந்த விழாதோழியர்கள் தோழர்கள் அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஊழியர்கள் என திரளான நல்உள்ளங்கள் மகிழ்வாக நடத்திய விழா.
     விழாவின் மிகப்பெரிய வெற்றி மீண்டும் மனமகிழ் மன்றத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற ஆவல் அனைவர் மனங்களிலும் எழுந்துள்ளதேயாகும்.
     விழாவிற்கு AGM (Admn)  திரு மகேஷ் தலைமையேற்க, துணைப்பொதுமேலாளர்(சிஎம்) திருமதி ஜெயந்திஅபர்ணா,  துணைப் பொதுமேலாளர் (சிஎப்ஏ) திரு.சமுத்திரவேலு முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக நமது முதுநிலைப் பொதுமேலாளர் திருமதி.லீலா சங்கரி அவர்கள் மாலைநேர விழாவில் முழுமையாகப் பங்கேற்றது விழாவின் வெற்றிக்கு மகுடம் சூட்டியதாக அமைந்தது.
     ஓய்வு பெறஉள்ள திரு, சாந்த குமார் அவர்களை வாழ்த்தி GM அலுவலத்தின் கீழ்க்கண்ட அதிகாரிகள் ஊழியர்கள் உரையாற்றினர். திரு, R அசோகன் (AGM Trans). திரு S இரவி SDE (vig) திரு சௌந்திரராஜன் CAO திரு தனசேகரன் AO திரு பாண்டுரங்கன் AGM , திருமதி பூங்குழலி JAO, திருமதி கலைவாணி SDE- திரு சிவாஜி JAO, ஊழியர்கள் திருவாளர்கள் A.அண்ணாமலை, இரா.ஸ்ரீதர், P.ஜெயபாலன்  என பலரும் சிறப்பாக சுருக்கமாக வாழ்த்துரைத்தனர்
    
பின்னர் துணைப்பொது மேலாளர் (சிஎம்) திருமதி ஜெயந்தி அபர்ணாதுணைப்பொது மேலாளர் (சிஎப்ஏ) திரு சமுத்திரவேலு மற்றும் நமது முதுநிலைப் பொதுமேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்களும் சிறப்புரையாற்றினர்.
     வாழ்த்துரைத்த அனைவரும் ஓய்வு பெற உள்ள              திரு ப.சாந்தகுமார் அவர்களுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை அதன் மூலம் அறிந்து கொண்ட அவரது நல்லியல்புகளை, பணி நேர்த்தியை, தாம் சந்தித்த பிரச்சனைகளின் போது அவர் வழிகாட்டிய மேன்மையை அளித்த ஆலோசனைகளைஅவரது எளிமையை சிறப்பாக எடுத்துக் கூறினர். அனைவராலும் அவரது மனித நேயமும் ஓடிச் சென்று நலியுற்றவர்களுக்கு உதவும் தயாள குணமும்  புகழ்ந்துரைக்கப்பட்டது.. 
     தமது ஏற்புரையில் புகழுரைகளைத் தன்னடக்கத்துடன் மறுதலித்து, தாம் வாழ்வில் கடைபிடித்தொழுகும் தனிமனித ஒழுக்கம் என்ற ஒன்றே தன்னுடைய இலாக்கா பணியில், பழகும் அணுகுமுறையில் பிரதிபலித்தது என்றார்.  இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றி தாம் பெற்ற அனுபவங்கள் ஏராளம். தென்கோடி குமரி  போல மேற்கு முனை இங்கிருந்து 2000 கிலோ மீட்டர் உள்ள பூஜ் மாவட்டத்தில் மொழியறியா சூழ்நிலையில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பல இடங்களில் பணியாற்றியதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஊழியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..  கடலூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தின் வருவாய் ரூபாய் 100 கோடியைத் தாண்டியுள்ளதுசெலுவுகளை இன்னும் குறைக்க விரும்பும் நமது GM அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாததற்கு காரணத்தைக் கூறிய போது பிரச்சனையை வெறும் எண்களாகப் பார்க்காது வேர் பிடித்த மண்ணின் தன்மையோடு பார்க்கும் ஆழமான பார்வை புரிந்தது.
திரு சாந்த குமார் கூறினார் இந்த கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டம் கடலூர் விழுப்புரம் என்ற பரந்து விரிந்த இரண்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது. மேலும் 60 சதத்திற்கும் மேல் கிராமப்புறங்களை உள்ளடக்கியதுகிராமங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் வருவாய் குறைவு என்றாலும் நாம் தாம் தமிழகத்திலேயேவேண்டுமெனில் தஞ்சையைச் சொல்லலாம்நிறைவான கிராமப்புற சேவையை அளிக்கிறோம் என்றார்மேலும் இப்போதுதான் பல தொலைபேசியகங்கள் மற்றும் டவர்களின் பேட்டரிகளைப் புதிதாக மாற்றி உள்ளதால் செலவு கூடி உள்ளதுஆனால் அந்த முதலீடுகளால் தான் நமது சேவை மேம்பட்டு நமது வருவாய் அதிகரித்துள்ளது எனக் கூறி நிறைவு செய்தார்.
     திருமதி சித்ரா AO நன்றி கூறினார். தமது நன்றி உரையில் நமது அலுவலகத்தில் விழாகள் இதுபோல ஒன்றாகவே நடத்தப்பட வேண்டும் என்ற விழைவை வெளிப்படுத்தினார்.
                GM அலுவலகத்தின் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் திரு. சாந்த குமார் அவர்களுக்கு தனித்தும் இணைந்தும் நினைவுப் பரிசு அளித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியது அடித்தட்டு மக்களோடு அவர் கொண்ட நேயமான உறவை அவரது எளிவந்த தன்மையை எடுத்துக் கூறுவதாக இருந்தது.
     விழா முடியும் வரை அனைவரும் பங்கேற்றது நெஞ்சம் நிறைந்ததாக அமைந்தது. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான சுவையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
     களப்பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிவிழாவின் வெற்றியில் விழாக் குழுவில் இடம் பெற்ற தோழர்களின் ஒன்றிணைவும் உழைப்பும் வெளிப்பட்டது.

     தொடர்க தோழமைசிறக்கட்டும் செயல்பாடு