Thursday, February 28, 2019

தோழர்களே , வணக்கம். இந்த மாத சம்பளம் காலதாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளையிலிருந்து (1/3/2019)  5 நாட்கள் ERP BLOCK OUT DAY என்பதால், சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க வேண்டும் எனவும் , உடனடியாக சம்பள பட்டுவாடா நடத்திக் கோரியும் நாளை  1/3/2019 அனைத்து கிளைகளிலும் AUAB சார்பில் ஆர்பாட்டம் நடத்திட உள்ளது. மாவட்ட  பொது மேலாளர் அலுவலகத்தில்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் AUAB சார்பில் நடைபெற உள்ளது. அனைத்துத் தோழர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீர் அஞ்சலி
கடலூர் தோழியர் P.பச்சையம்மாள் ATT இன்று காலை 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழியரது பிரிவில் வருந்தும் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணிக்குமேல் கடலூர் வண்ணாரப்பாளையம் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.


பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்…
இன்று 28.2.2019 இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்.

பணி ஓய்வு பெறும் தோழர்கள்:
1. M.ஆறுமுகம்   TT  விருத்தாசலம்
2. S.கோபால்சாமி TT       கடலூர்
3. S.ஜோசப்             TT  திண்டிவனம்
4. G.நாகராஜன்  OS(T) விழுப்புரம்
5. N.P.பழனிவேலு TT      விருத்தாசலம்
6. P.ராஜேந்திரன்      TT  விழுப்புரம்            

பொறுப்பு மாவட்ட செயலர்


நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சற்று ஓய்வு எடுக்கவிருப்பதால் சில நாட்கள் மாவட்ட உதவிச்செயலர்
 தோழர் D.குழந்தைநாதன் மாவட்ட பொறுப்புசெயலராக 
பணிகளை கவனிப்பார்.
தோழரின் தொடர்புக்கு 75987 75139  

Tuesday, February 26, 2019


வாழ்த்துகிறோம்….

இன்று 26.2.2019 காரைக்காலில் நடைபெற்ற குடந்தை மாவட்ட மூன்றாவது மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். குடந்தை மாவட்ட மாநாட்டில் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட பொறுப்புசெயலர் தோழர் D.குழந்தைநாதன் வாழ்த்துரை வழங்கினார். தோழர் R.பன்னீர்செல்வம் மாவட்ட அமைப்புச்செயலர், மற்றும் தோழர் A.C.முகுந்தன் சிரில் அறக்கட்டளை உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தலைவராக தோழர் பாலசுப்ரமணியன் – மயிலாடுதுறை


செயலராக தோழர் விஜய் ஆரோக்கியராஜ்-குடந்தை

பொருளராக தோழர் பன்னீர்செல்வம்- காரைக்கால்
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்…..

Thursday, February 21, 2019

BSNL/MTNL மறு சீராய்வு

ன்று 21/02/2019 DCC எனப்படும் DIGITAL COMMUNICATIONS COMMISSION (முந்தைய TELECOM COMMISSION)தொலைத்தொடர்பு ஆணையம் டெல்லியில் கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
DCC தொலைத்தொடர்பில் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த உச்சக்கட்ட அமைப்பாகும்.எனவே இந்தக் கூட்டம் மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.
இன்று நடைபெறும் DCC கூட்டத்தில் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்  என தெரிகிறது.
BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அவற்றில்
·       ஓய்வு பெறும் வயதை 58 என குறைப்பது… 
·       அதன் மூலம் 2019-20 நிதியாண்டில் சுமார் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைக்க வகை செய்வது
·       விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மேலும் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைப்பது
·       4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது
·       காலியாக உள்ள கட்டிடம் மற்றும் இடங்களை வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது
போன்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
இது தவிரசீரமைப்பு சம்பந்தமாக DOT தனது பங்காக சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது..
அவற்றில்
ஊழியர்களின் சம்பளச்செலவு நிறுவனங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவதால், மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL, BHARAT NET போன்ற நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம்
சம்பளச் செலவினங்களை பரவலாக்குவது
நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்,  நிதி ஆதாரங்களை  உறுதிப்படுத்தவும் வங்கிகளிடம் கடன் கோருவது….போன்ற ஆலோசனைகளை DOT முன்வைத்துள்ளது.
இன்றைய DCC கூட்டத்தில்
BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்
BSNL நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இறுதி ஒப்புதல் மத்திய அமைச்சரவையிடம் பெறப்படும்.
எனவே இன்று நடைபெறும் DCC கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காக போராடியும் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை அரசிற்கு மிக வலுவாக தெரிவித்துள்ளதால்..
இன்று நடைபெறும் DCC கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகளை  நிதானத்தோடு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி: காரைக்குடி வலைப்பதிவு