.

Sunday, June 30, 2013


DA உயர்வு 

மே 2013 மாத விலைவாசிக்குறியீட்டெண் உயர்வு அடிப்படையில் 01/07/2013 முதல் விலைவாசிப்படி IDA  4 சதம் உயர்கின்றது. 
தற்போதையை DA 74.9 சதம் ஆகும்.
01/07/2013 அன்று மொத்தப்புள்ளிகள் 78.9 சதம் ஆகும்

Thursday, June 27, 2013

JCM உறுப்பினர் நியமனம்

JCM உறுப்பினர்  நியமனம்  தொடர்பாக BSNL உத்திரவு 


மாநில செயற்குழு வேலூர் -25-06-2013

மதுரை  மாநில மாநாட்டுக்கு பிறகு நடைபெற்ற முதல் மாநில செயற்குழு. 
BSNL -இல்  அங்கீகார  தேர்தலில் NFTE  வெற்றி பெற்று அங்கீகார உரிமையோடு நடைபெற்ற முதல் செயற்குழு.

ஆறு மாதங்களாக எதிர்மறையாக செயல்பட்ட, எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத தோழர்கள்  மாநில செயற்குழுவில் கலந்துக்கொண்டது வரவேற்கத்தக்கது.

தேசிய கொடியை தோழர் S. தமிழ்மணி ஏற்றினார். சம்மேளனக் கொடியை வேலூர் மூத்த தோழர் P.மதியழகன் ஏற்றினார். வேலூர் மாவட்ட செயலர் K.அல்லிராஜாவும் தோழர் சென்னகேசவனும் வரவேற்ப்புரையாற்றினர்.
மாநில தலைவர் H.நூருல்லா  தலைமையுரையாற்றினார். மாநில உதவி தலைவர் V.லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார். மாநில செயலர் R.பட்டாபிராமன்  ஆய்படுபொருளை அறிமுகபடுத்தி உரையாற்றினார்.




மதுரை மாநிலமாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தோழர் சேதுவையும் தோழர் ஜெயபாலையும் நீக்கவேண்டுமென்று ஆறு மாதங்களாக ஒதுங்கிஇருந்த தோழர்கள் அடம்பிடித்தனர். மாநில தலைவரும் செயலரும் அவர்களின் கருத்துக்களை அமைப்பு நிலையில் விவாதிக்கலாம் என்று உறுதிமொழி கொடுத்த பின்பும் அந்த சில தோழர்கள் செவி சாய்க்காமல் கூச்சல் போட்டுவிட்டு அவையிலிருந்து வெளியேறினர்.

மாநில தலைமை அவர்களை சமரசம் செய்வதற்கு ஒரு குழுவை அமைத்தது.  தங்களில் இரு தோழர்களை  சிறப்பு அழைப்பாளர்களாக  நியமிக்க கோரிக்கை வைத்தனர் . இதனை மாநில செயற்குழு  பரிசீலிக்கும் என்று உத்திரவாதம் அளித்தது. இடையில் திடீரென்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்த பின்பு அந்த சில தோழர்கள் தடுமாறி நமது அரங்கை விட்டு வெளியேறி வேறு அரங்கிற்கு சென்றுவிட்டனர்.

நமது மாநில செயற்குழு தொடர்ந்து இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் சேது, தோழர் ஜெயபால், குன்னூர் ரங்கன்,தருமபுரி முனியன், தோழியர் ஷைலா பானு, இளைஞர் குழு சார்பாக குடந்தை விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

அகில இந்திய அமைப்பு செயலர் S.S.கோபாலகிருஷ்ணன், முன்னாள் சம்மேளன செலயர் தோழர் R.K ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் S.தமிழ்மணி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நமது மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர்  நமது கடலூர் மாவட்ட பிரத்யோக பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டு தனது உரையை பதிவு செய்தார்.
குறிப்பாக தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமான வாக்குகளை பெற்ற சூழலில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் உறுப்பினர் எண்ணிக்கையை விட குறைவான வாக்குகளை பெற்றதனை அதிருப்தியுடன் குறிப்பிட்டார்.

மேலும் மாவட்ட மாநாட்டுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்சிகளையும் மாநில செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். குறிப்பாக மாவட்ட மாநாடு முடிந்து நான்கு மாதங்களாகியும்  பீரோ சாவி கொடுக்கபடாததையும் நிதியினை ஒப்படைக்காததையும் சுட்டிக்காட்டினார்.

கடலூர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தல் நடைபெற்ற விதத்தையும் அதன் காரணமாக  ஏற்பட்ட  பிரச்சினைகளையும் தெளிவாக குறிப்பிட்டார்.மாவட்ட செயலருக்கு (இரா.ஸ்ரீதர்) எதிராக  கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில உதவி செயலர்  தோழர் L .சுப்பராயன்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றியது கண்டனத்திற்குரியது  என்று பதிவு செய்தார்.

கடலூர் மாவட்டத்தின்  பிரத்யோக சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  செயற்குழுவில் வலியுறுத்தினார் . மேலும் JTO பதவி உயர்வு தேர்வில் உள்ள குளறுபடிகளை மிக தெளிவாக சுட்டிக்காட்டி மாநில சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
TM போட்டி தேர்வுக்கான கல்வி தகுதியை நீக்கி தேர்வு நடத்த 
கேட்டுக்கொண்டார்.
 78.2 IDA Merger  பெற்றுத்தந்த மாநில, அகில இந்திய சங்கத்திற்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அதனால் நமது மாவட்டத்தில் 80 தோழர்களுக்கு மேல் ஏற்படும் தேக்கநிலையை நீக்க மாநில சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன்  தனது சிறப்புரையில் மாநில செயற்குழுவினை பற்றியும் நமது மாவட்ட செயலரை பற்றியும் நாகரீகமற்ற முறையில் பேசினார். நமது மாவட்ட செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து  மத்திய சங்க  செய்திகளையும்  பிற பயனுள்ள செய்திகளையும் பேசாதது நமக்கு ஆச்சர்யம் தரவில்லை.
நமது மாவட்ட செயலர் பதிவு செய்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு ஓன்று அமைக்க வேண்டும் என்று செயற்குழுவினை சம்மேளன செயலர் கேட்டுகொண்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில செயற்குழு, தோழர்கள் லட்சம்,விஜயரங்கன், காமராஜ்,அசோக்ராஜ்,சென்னகேசவன் ஆகியோரை கொண்ட ஒரு விசாரணை குழுவை  அமைத்தது.
விசாரணையில் வெள்ளை தாளின் மர்ம முடிச்சிகள், மாவட்ட சங்க கணக்கு வழக்குகள், பீரோ சாவி, குறிப்பேடு பதிவுகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வரும்.

மாநில செயற்குழுவினை சிறப்பாக ஏற்பாடு செய்து உணவு உபசரிப்பு அளித்த வேலூர் மாவட்ட சங்கத்தை நன்றியுடன் பாராட்டுகிறோம்.


நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட தலைவர் R.செல்வம், மாவட்ட துணை தலைவர் P.அழகிரி, மாவட்ட உதவி செயலர்கள் K.கிருஷ்ணகுமார், K.பாண்டியன் ,D.ரவிச்சந்திரன் மாவட்ட அமைப்பு செயலர்கள் G.ரங்கராஜன்,A.ரவிச்சந்திரன் மற்றும் பல முன்னணி தோழர்கள்  கலந்துகொண்டனர்.

மாநில செயற்குழு தீர்மானங்கள் 







பணி ஓய்வு பாராட்டு விழா - ஜூன் - 2013



30.06.2013 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள்

1.தோழர்.S.சுபாஷ், TM,சிதம்பரம்

2.தோழர்.S.சந்திரசேகர், STS, கடலூர்    

3.தோழர்.M .பாலச்சந்தர், MotorDriver, கடலூர்       
 
4.தோழர்.G .கிருஷ்ணமூர்த்தி, TM,பண்ருட்டி



பணி ஓய்வு பெறும் அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை 

வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது


Saturday, June 22, 2013

சிதம்பரம் தோழர். S.சுபாஷ் TM 
 பணிஓய்வு பாராட்டு கூட்டம்

ஒப்பந்த ஊழியர் சம்பளம்

பல மாவட்டங்களில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 10-தேதிக்குள் பட்டுவாடா செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்  என மாநில நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. உத்தரவு நகல் காண சொடுக்கவும்  

Friday, June 21, 2013

TTA பயிற்சி வகுப்புகள்

நமது கடலூர் தொலைதொடர்பு மாவட்டத்திலிருந்து T.T.A தேர்வில் வெற்றி பெற்ற கீழ்கண்ட 7 தோழர்கள் வருகிற 24.06.13 அன்று பயிற்சி வகுப்பிற்கு செல்கின்றனர். அவர்களது பயிற்சி காலம் வெற்றிகரமாகவும் சிற்ப்பாகவும் அமைய மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

1.      தோழர்.  R.ஸ்ரீநாத்,
2.  தோழியர். S.புவனேஸ்வரி
3.  தோழர். R.நந்தகுமார்.
4.  தோழர். P. செந்தாமரை
5.  தோழர் T. சக்திமணாளன்
6.  தோழர். V. இளங்கோவன்

மற்றும் நமது மாவட்ட/மாநில சங்கத்தின் முயற்சியால்

7. தோழர் V. கிருபாகரன்

2006 முன் ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆறாவது மத்திய ஊதிய கமிஷன் படி ஒரு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்  என்று தில்லி உயர் நீதிமன்றம் ஆணைஇட்டுள்ளது .

முன்னதாக 2012 பின்  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மட்டுமே  அதிகரித்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் மனு தள்ளுபடி செய்து உத்தரவு இட்டது.

Tuesday, June 18, 2013



SEDOT / REDOT ஊழியர்களின் இல்லத் தொலைபேசியில்  OFF NET கால்களுக்கு விதித்திருந்த தடையிலிருந்து விலக்கு  அளித்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


வங்கிக் கடன் 


ORIENTAL BANK OF COMMERCE வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 05/04/2014 வரை
ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.

தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 12.75 சதம் ஆகும்.


Monday, June 17, 2013

கருத்தரங்கம்

கடலூர் தொழிற்சங்கஅரசுப் பணியாளர் கூட்டமைப்பு (CFTSA) சார்பாக 18-6-2013அன்று கடலூர் நகர் மன்றத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக
முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். தமிழ்மணி
சம்மேளனச் செயலர் தோழர். ஜெயராமன்,
மாநில துணைத் தலைவர் தோழர்.லோகநாதன்,

கடலூர் வெளிப்பகுதி கிளத் தலைவர் தோழர். இளங்கோவன் கருத்தரங்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்.
செய்திகள் 


#          நமது சங்க மாதச்சந்தா  ரூ.15/=  ஆக உயர்த்தப்பட்டு ஜூன் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய BSNL நிர்வாகம்  17/06/2013 அன்று உத்திரவிட்டுள்ளது. அகில இந்திய சங்கம் ரூ. 5, மாநிலச்சங்கம் ரூ.4, மாவட்டசங்கம் ரூ.6 (இதில் கிளைச்சங்கம் ரூ.3) என பிரித்தளிக்கப்படும்.


#          HRA உள்ளிட்ட அனைத்துப் படிகளும் 78.2 சத IDA நிர்ணயப்படியே வழங்க வேண்டும் எனவும், 01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய சங்கம் BSNL  நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. வேண்டும் எனவும், 01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய சங்கம் BSNL  நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
TTA பயிற்சி வகுப்புகள் 24-6-2013 அன்று RGMCTTC -ல் துவங்குகிறது -
                                                         ORDER COPY

Saturday, June 15, 2013

TTA பயிற்சி வகுப்பு

TTA Training Class begins on Monday 24-6-2013. 

Wednesday, June 12, 2013

TTA பயிற்சி வகுப்பு

TTA பயிற்சி வகுப்பு இம்மாத  இறுதி வாரம் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
சங்க அலுவலக அறை ஒதுக்கீடு 

இன்று நிர்வாகத்தால் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு  TRA அலுவலக பகுதியில் உள்ள LEGAL CELL அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 AGM admn திரு.ஞானசேகரன் அவர்கள் 
அதற்குரிய சாவியை மாவட்ட செயலர் ஸ்ரீதர் அவர்களிடம்ஒப்படைத்தார்.
முன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.தமிழ்மணி 
 மாவட்டப் பொருளாளர் தோழர்.சாதிக் பாஷா, மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழியர்.கீதா  தோழர்.தினகரன், தோழர்.முகுந்தன்,வெளிபகுதி தலைவர் தோழர்.இளங்கோவன் மற்றும் முன்னனி தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முறையான  சங்க அலுவலகத் திறப்புவிழா விமரிசையாக கொண்டாடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



Tuesday, June 11, 2013

BSNL orders for 78.2 IDA  issued effect from 10-6-2013

click here order for..  NON EXECUTIVE

Monday, June 10, 2013

இன்று (10/06/2013 ) BSNL  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 78.2% சத IDA இணைப்பிற்கு ஒப்புதல்  அளித்து DOT  உத்திரவிட்டுள்ளது. 

# 01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
உத்திரவு தேதியான 10/06/2013-ல் இருந்து இது அமுலுக்கு வரும்.

 # நிலுவை வழங்கப்பட மாட்டாது.

# BSNL தனது சொந்த நிதியில் இருந்து இந்த   நிதிச்சுமையை ஏற்கவேண்டும்.
 இது சம்பந்தமாக நிதி உதவி வழங்கப்பட  மாட்டாது.





Friday, June 7, 2013

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற  செயற்குழுவின் முடிவின் அடிப்படையில் பிரச்சனை தீர்விற்கான FORMAL மீட்டிங் அடுத்த வாரம் நடைபெறும். பிரச்சனைகள்  தீர்வில் நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் பிரச்சனைகள் விரைவில் தீரும் என நம்புகிறோம்.



ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனைத் தீர்வில் மாவட்ட சங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. வெகு விரைவில் தீர்வு ஏற்படும்.
மாவட்ட நிர்வாகம் TRA அலுவலக வளாகத்தில் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு  இடம் ஒதுக்கியுள்ளது. விரைவில் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெறும். 




CMD., BSNL has conveyed to Com Islam, President, NFTE, that DOT has approved merger of 78.2% IDA.
" வரூம்   ஆனால்  வராது "  -  வந்தேவிட்டது !
ஜெகன் நினைவைப் போற்றுவோம் !


தலைவனே! 
உன்னால் ஈர்க்கப்பட்ட நாங்கள் உன் லட்சியப் பணியில் , உன் படைவரிசையில் முதல் அணியாய்  நிற்போம்!
நீ வழி நடத்து!
 நாங்கள் உன் வழி நடப்போம்!




தொழிலாளர் இயக்கத்திற்கு
 நம் தலைவர் காட்டிய வழியில்
நம்மை மறு அர்ப்பணம் செய்வோம்!




காசிலே கறார் .......


68-இல் போராட்டம் முடிகிறது. மாநிலச் செயலருக்கு வேலையில்லை, அலுவலகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். இந்தக் காலத்திற்கு மாதம் ரூ.300 உதவிப்பணம் தருவதென்று முடிவு செய்யப்பட்டு தரப்படுகின்றது.இப்படி 14 மாதங்கள். இந்த 14 மாத காலத்தை வேலை இல்லாத காலமாகக் கருதப்படும் என இலாக்கா உத்தரவிடுகிறது. ஆனால் பாதி சம்பளம் தரப்படும் என்று உத்தரவிடப்பட்டு பட்டுவாடா செய்தது. உடன் ஒன்றைச் செய்தார் அந்த மாநிலச்செயலர் , இலாக்கா  தந்த பாதிச் சம்பளம் , சங்கம் தந்த உதவி இரண்டையும் சேர்த்து கணக்கிட்டு இழப்பிற்கு மேல் உள்ளதைத் திருப்பி தந்து விடுகின்றார். ஆனாலும் அவருக்கு இறுதியில் இழப்பு ரூ.950. பணத்தில் கடுமையான கறார் தன்மையைக் கையாண்ட அந்த நேர்மையாளர் தான் தோழர். ஜெகன்.    
   - " அக்னிக் குஞ்சு " -ஒலிக்கதிர்  வெளியீட்டில் சில துளிகள் 

நம் தலைவர் காட்டிய வழியில்
வழி நடப்போம்!

Thursday, June 6, 2013

இன்றைய பேச்சுவார்த்தை 
DOT  செயலருடன் இன்று அனைத்து சங்க தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.

BSNL சீரமைப்பு  சம்பந்தமாக அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் அமைச்சர்கள் குழுவிற்கு அளித்த மனுவின் நகல் அவருக்கு அளிக்கப்பட்டு அதன் முக்கிய அம்சங்கள்  விவாதிக்கப்பட்டன.

மேலும்  78.2 சத IDA இணைப்பு  சம்பந்தமாக  உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக DOT  செயலர்  உறுதி அளித்துள்ளார். 
நாளை 07/06/2013 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

பெருந்திரள் தர்ணா - 05.05.2013

பெருந்திரள் தர்ணா - GM அலுவலகம் முன்பு - 05.06.2013 அன்று 78.2% இனைப்பிற்காக நடைபெற்ற போராட்ட களத்தின் சில காட்சிகள் காண மேலே கிளிக் செய்யவும்.

தோழர் B.R நினைவேந்தல் கூட்டம்

தோழர்.B.R நினைவேந்தல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

குறிப்பு: பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் அஞ்சலி செலுத்திய தோழர்களின் படங்கள் தர்ணவிலேயே எடுத்ததாலும், Cameraவில் போதிய சார்ஜ் இல்லாத்தாலும் தோழர்.B.Rஇன் கூட்டத்தில் பேசிய காட்சிகளை பதிவு செய்ய இயலவில்லை. தர்ணாவில் பேசாத தோழர்களின் படங்கள் மட்டும் எடுக்கப்பட்டது. இது பின்வரும் காலங்களில் தவிர்க்கப்படும்.

Tuesday, June 4, 2013



The theme for this year’s World Environment Day celebrations is 1.3 billionThink. Eat. Save. Think. Eat. Save is an anti-food waste and food loss campaign that encourages you to reduce your foodprint. According to the UN Food and Agriculture Organization (FAO), every year  tonnes of food is wasted. This is equivalent to the same amount produced in the whole of sub-Saharan Africa. At the same time, 1 in every 7 people in the world go to bed hungry and more than 20,000 children under the age of 5 die daily from hunger.  
Given this enormous imbalance in lifestyles and the resultant devastating effects on the environment, this year’s theme – Think.Eat.Save – encourages you to become more aware of the environmental impact of the food choices you make and empowers you to make informed decisions.  
While the planet is struggling to provide us with enough resources to sustain its 7 billion people (growing to 9 billion by 2050), FAO estimates that a third of global food production is either wasted or lost. Food waste is an enormous drain on natural resources and a contributor to negative environmental impacts. 
This year’s campaign rallies you to take action from your home and then witness the power of collective decisions you and others have made to reduce food waste, save money, minimise the environmental impact of food production and force food production processes to become more efficient.
If food is wasted, it means that all the resources and inputs used in the production of all the food are also lost. For example, it takes about 1,000 litres of water to produce 1 litre of milk and about 16,000 litres goes into a cow’s food to make a hamburger. The resulting greenhouse gas emissions from the cows themselves, and throughout the food supply chain, all end up in vain when we waste food.
In fact, the global food production occupies 25% of all habitable land and is responsible for 70% of fresh water consumption, 80% of deforestation, and 30% of greenhouse gas emissions. It is the largest single driver of biodiversity loss and land-use change.
Making informed decision therefore means, for example, that you purposefully select foods that have less of an environmental impact, such as organic foods that do not use chemicals in the production process. Choosing to buy locally can also mean that foods are not flown halfway across the world and therefore limit emissions.     

So think before you eat and help save our environment!