.

Friday, June 7, 2013

ஜெகன் நினைவைப் போற்றுவோம் !


தலைவனே! 
உன்னால் ஈர்க்கப்பட்ட நாங்கள் உன் லட்சியப் பணியில் , உன் படைவரிசையில் முதல் அணியாய்  நிற்போம்!
நீ வழி நடத்து!
 நாங்கள் உன் வழி நடப்போம்!




தொழிலாளர் இயக்கத்திற்கு
 நம் தலைவர் காட்டிய வழியில்
நம்மை மறு அர்ப்பணம் செய்வோம்!




காசிலே கறார் .......


68-இல் போராட்டம் முடிகிறது. மாநிலச் செயலருக்கு வேலையில்லை, அலுவலகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். இந்தக் காலத்திற்கு மாதம் ரூ.300 உதவிப்பணம் தருவதென்று முடிவு செய்யப்பட்டு தரப்படுகின்றது.இப்படி 14 மாதங்கள். இந்த 14 மாத காலத்தை வேலை இல்லாத காலமாகக் கருதப்படும் என இலாக்கா உத்தரவிடுகிறது. ஆனால் பாதி சம்பளம் தரப்படும் என்று உத்தரவிடப்பட்டு பட்டுவாடா செய்தது. உடன் ஒன்றைச் செய்தார் அந்த மாநிலச்செயலர் , இலாக்கா  தந்த பாதிச் சம்பளம் , சங்கம் தந்த உதவி இரண்டையும் சேர்த்து கணக்கிட்டு இழப்பிற்கு மேல் உள்ளதைத் திருப்பி தந்து விடுகின்றார். ஆனாலும் அவருக்கு இறுதியில் இழப்பு ரூ.950. பணத்தில் கடுமையான கறார் தன்மையைக் கையாண்ட அந்த நேர்மையாளர் தான் தோழர். ஜெகன்.    
   - " அக்னிக் குஞ்சு " -ஒலிக்கதிர்  வெளியீட்டில் சில துளிகள் 

நம் தலைவர் காட்டிய வழியில்
வழி நடப்போம்!

1 comment:

  1. GREAT JOB COMRADES. BEST WISHES TO COM SRINANTH &
    NANDHAKUMAR.

    ReplyDelete