Sunday, July 30, 2017


தோழர் ஆர்.கே அவர்களின் 55 ஆண்டுகால நமது தொழிற்சங்கப் பணியினைப் பாராட்டி ஆகஸ்ட்’5 சென்னையில் நடைபெறும் விழாவிற்கான முதல் தவணை நிதி ரூ.10,000 யை கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மாநில தலைவர் தோழர் P.காமராஜ் அவர்களிடம் வழங்கினார்.

குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் தனது மாவட்ட முதல் தவணை நிதியினை மாநில தலைவர் தோழர் P.காமராஜ் அவர்களிடம் வழங்கினார்.

Friday, July 28, 2017

AITUC சார்பில் நடைபெற்ற கோட்டை நோக்கி பேரணியில்
TMTCLU சங்கத் தோழர்கள்
தமிழக AITUC சார்பில் பல்வேறு துறைகளில் பணிபுரியும்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  உச்ச நீதிமன்றம் வழங்கிய சமவேலைக்கு சமஊதியம் தீர்ப்பை அமுல்படுத்திட  வலியுறுத்தி இன்று (28.7.2017) சென்னையில் AITUC மாநில செயலர் தோழர் T.K.மூர்த்தி தலைமையில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். AITUC மாநில செயலர் தோழர் சுப்புராயன், தோழியர் வஹிதாநிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது பகுதியிலிருந்து மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 500க்கும்மேற்பட்ட  TMTCLU ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தோழர்கள் மாநிலப் பொதுச்செயலர் தோழர் R.செல்வம் தலைமையில் திரளாக கலந்து கொண்டனர். தோழர்கள் P.காமராஜ், தோழர் K.நடராஜன், தோழர் சேது, தோழர் விஜய், மாவட்ட தோழர் இரா.ஸ்ரீதர், தோழர் V.இளங்கோவன் உள்ளிட்ட தோழர்களுடன், கடலூர் மாவட்டத்திலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான TMTCLU சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.  முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. APJ.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கூட்டம் 27.7.2017 அன்று திண்டிவனம் NFTE கிளையின் சார்பில் நடைபெற்றது. அதிகாரிகள்,தோழர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.   

Wednesday, July 26, 2017

பணித்தன்மைக்கேற்ப ஊதியம்


     நமது மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக நமது நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மைக்கேற்ப ஊதியம்   வழங்கிட  மாநில நிர்வாகம் உத்திரவு வழங்கியுள்ளது.   நமது NFTE , TMTCLU  மாவட்ட சங்க நிர்வாகிகள் இதன் மீது உரிய கவனம் செலுத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மற்றும் தொழிலாளர் மீது அக்கறையோடு செயல்பட்ட நமது NFTE , TMTCLU  மாநிலச் சங்களுக்கு நன்றி..        25.7.2017 இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதி விலக்குக் கோரியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வலியுறுத்தியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று கடலூரில் AITUC மாவட்ட துணைச்செயலர் தோழர் குளோப் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது ஆகியுள்ளனர்.
      நமது TMTCLU மாநில இணைப்பொதுச்செயலர் தோழர் S.தமிழ்மணி மறியலில் பங்கேற்று கைதாகியுள்ளார்.
         கடலூர் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டு பின்னர் கைதாகி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தோழர்களை வாழ்த்திப்பேசினர்.


Monday, July 24, 2017

வேலைநிறுத்த
ஆதரவு ஆர்ப்பாட்டம்..
இன்று (24.7.2017) டெல்லியில் நடைபெற்ற நமது கூட்டணி சங்கங்களின் கூட்ட அறைகூவல் படி
BSNLEU, SNEA உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் விடுத்த ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு 
ஆதரவாக
26.7.2017 அன்று  ஆர்ப்பாட்டம்...
27.7.2017 கருப்பு பேட்ஜ் அணிந்து
 தார்மீக ஆதரவு....
கிளைகள் தோறும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
கடலூர் கிளைகள் இணைந்து
26.7.2017 மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம்.
அனைவரும் பங்கேற்போம்...


பொதுத்துறை ஊதிய மாற்றத்தில் அபாயம்
PERILS OF PAY REVISION IN PUBLIC SECTOR UNIITS
Article by R. Pattbiraman  (New Age Weekly 65 /29 dt/July 16 – 22. 2017)

பட்டாபி அவர்களின்  முழு கட்டுரைக் காண...

Saturday, July 22, 2017


  உச்ச நீதிமன்ற தீர்ப்பு - சம வேலைக்கு சம ஊதியம்


 முன்னாள் மாநிலச் செயலர் 
தோழர் பட்டாபி
தமது உரையில்:

          தோழர்களே இந்த கருத்தரங்கம் யாரையும் திருப்திப்படுத்த அல்லயாரையும் விமர்சனம் செய்யவும் அல்லநிஜ நாடகம் அறிவிப்பு நிலையிலேயே பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்ததுஆனால் அந்த நாடகமும் கூட அரசுக் கொள்கைகளை விமர்சித்துத்தான் நம்முன்னே நடித்துக் காட்டப்பட்டது.
          இன்றைய அரசு public employment எனப்படும் அரசு வேலை / அரசுப் பணி என்பதை வெகுவாகக் குறைத்து ஒப்பந்த முறை பணிகளை அதிகப்படுத்தி வருகிறதுபொதுச் சேவையை வழங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களிலும் கான்டிராக்ட் மூலமாக / தனியார் பணியமர்த்தல் ஒப்பந்தம் மூலமாகவே வேலைகள் நடைபெறுகின்றனஅந்தத் தொழிலாளிகள் BSNL க்காக வேலை செய்வார்கள் ஆனால் அவர்களின் முதலாளி கடலூரில் பாலாஜி ஏஜென்சி போல ஒரு தனியார் கான்டிராக்ட் நிறுவனமாக இருக்கும்.
          இந்த நிலைமைதான் தொழிற்சங்கத்திற்கு சவாலாக இருக்கிறதுஉரிமைகளுக்காகக் கோரிக்கை வைத்து நிரந்தரத் தொழிலாளிகளைத் திரட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனாலும் ஒப்பந்த ஊழியர்களைத் திரட்டுவது என்ற சவாலான பணியை NFTE எடுத்துள்ளது. அதன் ஒரு அம்சம்தான் இந்தக் கருத்தரங்கம்.
          சமவேலைக்கு சம ஊதியம் தீர்ப்பில் பல்வேறு தீர்ப்புகள் அடங்கி உள்ளன. இதுகுறித்து சுமார் 20 தீர்ப்புகள் உள்ளனநமக்குள்ள அனுபவம் காசுவல் லேபர் என்றதினச்சம்பளக்காரர்கள்பற்றியது. 1975 மைசூரில் நடைபெற்ற சம்மேளளக்குழுக் கூட்டத்தில் ( Organise the Unorganised ) திரட்டப்படாத தொழிலாளிகளைத் திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
          1954 ல் ஈடி / காசுவல் மஸ்தூர் அனைவரையும் நிரந்தரம் செய் என்ற முரட்டுக் கோரிக்கையை விடுதலை பெற்ற நேரு சர்க்கார் எதிர்கொண்டது. இந்தியாவில் முதலாளிகள், தொழிலாளர் சங்கங்கள், ஆளும் அரசு இவர்களின் பிரதிநிதிகள் கூடி விவாதிக்க முத்தரப்பு மாநாடு கூட்டப்பட்டது.   சில சட்ட உரிமைகள், சட்டப் பாதுகாப்பு, எனச் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
          நம்முடைய நாடு சட்டத்திற்கு உட்பட்டு ஆளப்படும் நாடு. இதில் பாராளுமன்றம் / நீதிமன்றங்கள் என்பன சட்டங்கள் இயற்றவும், அப்படி கொண்டுவரப்படும் சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்ட வரையரைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் செய்யும். இதைத் தாண்டி இந்திய நாட்டில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
          சட்டத்திற்கு உட்படாத, சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்கின்றன நமது நாட்டின் முதலாளிகளின் கூட்டமைப்புகள்.  இந்திய முதலாளிகள் சங்கமான ஃபிக்கியும் ( FICCI---Federation of Indian Chamber of Commerce and Industries)  மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) எனப்படும்  The Confederation of Indian Industry  (CII ) போன்றவையும். 
            சட்டப்படியான சம்பளம் மற்றும் உரிமைகளை அமலாக்கமாட்டோம் என அடம் பிடிக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புகளைப் பற்றிக் கூறிப்பிடும் போதுதான் தோழர் சுப்புராயன் அறைகூவல் விடுத்த அணி திரளுங்கள்’  என்பது வருகிறது.
          பல தீர்ப்புகள் அடங்கி உள்ளன என முன்பு நான் கூறியதில் முக்கியமானது 2006 ல் உமாதேவி வழக்குஎன அறியப்படும் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் பென்ச்சு வழங்கிய தீர்ப்பு. அதன் முக்கியமான அம்சம் அரசாங்க பணி இடங்களை நிரப்புவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆளெடுப்பு விதிகள் மூலமாக மட்டுமே நடைபெற முடியும் ; வேறு வகையில் காலி இடங்களை நிரப்ப முடியாது.
          அதன் மூலமாகத்தான் கான்டிராக்டர் மாறினாலும் ஊழியர்களை மாற்ற முடியாது, ஊழியர்கள் தொடர்ந்து பணி அமர்த்தப்பட வேண்டும் என வேலை மறுக்கப்பட்ட 250 தோழர்களைக் காப்பாற்றினோம்.
          நம்முடைய சம்மேளனத்தின் முயற்சியால் DG (P&T) யிடமிருந்து உத்தரவு பெற்றோம் வருடத்திற்கு 240 நாட்கள் வீதம் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் நிரந்தர ஊழியர் சம்பளத்தில் முக்கால் சம்பளம்அதுவே, ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு சம்பளம் என்ற முன்னேற்றங்களைக் கண்டோம்
          
          நேரு யுவ கேந்திரா ஊழியர்கள் சங்கம் சல்யூட் செய்யப்பட வேண்டியவர்கள்.  அவர்களிடம் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடையப் பகுதிக்கு சம வேலைக்கு சம சம்பளம் தீர்ப்பைப் பெற்றார்கள்.  அந்தத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தபால் தந்தித் துறையில் பாரதிய சங்கம் வழக்கு தொடர்ந்தது. தலைவர் குப்தா நம்முடைய சங்கத்தையும் அந்த வழக்கில் இணைத்துக் கொண்டு கடுமையாக      முயன்றதற்குப் பிறகுதான1986  உச்சநீதி  மன்றம்  கேசுவல்  மஸ்தூர்  ஊழியர்களை நிரந்தரம் செய்ய  வழிவகை  செய்த ஒரு  போற்றத்தக்க  தீர்ப்பை   வழங்கியது.   ஓராண்டு   தொடர்ந்து   பணியில் இருந்திருந்தாலே நிரந்தரம் செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என  அரசை அறிவுறுத்தியது.  நிரந்தரம்  செய்தது மட்டுமின்றி ஊதிய  நிலுவைத் தொகையைதயும் பெற்றுத் தந்தோம்.
            P&T மேனுவலிலேயே காசுவல் மஸ்தூர்களை பணியமர்த்தும் ஷரத்துகள்  நீக்கப்பட்டு விதிகள் திருத்தப்பட்டன.
     கேசுவல் / ஒப்பந்த ஊழியர் / தற்காலிக ஊழியர் என அழைக்கப்படும் பணித்தன்மைகளில் சட்டரீதியான நுட்பமான வித்தியாசங்கள் உள்ளன.
          தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு ஹரீஷ் ராவத் அவர்களிடம் ஒப்பந்த ஊழியர்களுக்கு கிராக்கிப் படி சேர்த்து வழங்க கோரிக்கை மனு அளித்தோம்தோழர் தமிழ்மணியும் முரளியும் தொடர்ந்து முயற்சி செய்து டிஏவை சேர்த்துத் தர உத்தரவு பெற்றனர். இப்படி ஒப்பந்த ஊழியர்களின் தொடர் வேலைப் பாதுகாப்பையும் சம்பளத்தையும் உத்தரவாதப்படுத்தியுள்ளோம்.
          1970 ஒப்பந்த ஊழியர்கள் ( ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்ட விதி 25 ல் துணை விதி 2 ன் கீழ் iv  என்பது சம்பளம் எப்படி அமைய வேண்டும் எனப் பேசுகிறதுஅது 1948 சட்டத்தின் படி அல்லது ஒருவர்க்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில்தான், குறைந்த பட்ச ஊதியத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016 ல் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வரைவு அறிக்கை (Draft மசோதா) வந்ததுஅது நகல் மசோதாவாகவே இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாக உத்தரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள் / அமைப்புகள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டனஇன்றைக்கு நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபார்சு அதிகம் என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்த பட்சம் ரூபாய் 15,000/=.  ஆனால் ஏழாவது சம்பளக் குழு அறிக்கைக்கு பின்னர் மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூ 18, 000/=.  இது தர்க்க அடிப்படையிலானது.
          நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் முதலாளிகள் பிரதிநிதிகளுடன் பேசியது. ஒரு நாளைக்கு ரூ 350/-வீதம் 26 நாட்களுக்கு ரூபாய் 9100/= குறைந்த பட்சமாக மாற்றியமைக்கலாம் எனத் தெரிவித்தது.  முதன்முறையாக ஒரு குறிப்பிட்ட தொகையை ரூபாயாக அறிவித்தது இதுவே முதன்முறை என்பது வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள்  இந்தத் தொகை  குறைவானது,  அநீதியானது என  ஏற்க மறுத்து விட்டன.     நகலை அசலாக்க நாம் பயணிப்போம்.      நன்றி! வணக்கம்