.

Monday, October 31, 2016


தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
                கடலூர் மாவட்ட சங்கம்
                           

வன்மையாக கண்டிக்கின்றோம்

தோழர்களே!
           நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மீது கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பாலாஜி ஏஜென்சி திரு  பாண்டியன் பொய்யான குற்றசாட்டை சுமத்தியுள்ளார். இது குறித்து நிர்வாகம் விசாரித்ததில் அது ஆதாரமற்ற குற்றச்சசாட்டு என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

           நியாயமான  போனஸை ஒப்பந்த ஊழியர்களுக்குத்  தராமல் ஏமாற்றுவது மட்டுமல்லாமல், ஒப்பந்த ஊழியர்களுக்காகத் தொடர்ந்து நியாயமாகப் போராடி வரும் NFTE  மீது அவதூறு செய்யும் பாலாஜி ஏஜென்சியை வன்மையாக கண்டிக்கின்றோம்.

          இச்செயலைக் கண்டித்து 01/11/2016  செவ்வாய் கிழமை அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

                                                                                தோழமையுடன்
                                                                                                NFTE - மாவட்டச் சங்கம்கடலூர்.

குறிப்பு: நமது பொது மேலாளர் அலுவலகத்தில் 01/11/2016  செவ்வாய் கிழமை மதிய உணவு நேர இடைவேளயின் போது ர்ப்பாட்டம் நடைபெறும் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்


                                                                                                             

சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தற்காலிக, ஒப்பந்த  ஊழியர்களுக்கும் சம்பளம்

சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறை அனைத்து பணி மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் தினசரி ஊதியம், தற்காலிக பணியாளர், ஒப்பந்த ஊழியர் ஆகியோருக்கு நிரந்தர பணி யாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவுக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது, அடிமைத் தனமாகக் கருதப்படும். அடக்கு முறை, அடக்கி ஆளுதல், சிறுமைப் படுத்தல் ஆகியவை போலத்தான் கருதப்படும். தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்து துறையிலும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதிய மானது குறைந்தபட்ச ஊதிய விதி யைக் கூட பூர்த்தி செய்யவில்லை என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அளிக்காம லிருக்க பல்வேறு செயற்கையான காரணங்கள் கூறப்படுவதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடி யாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறைந்த ஊதியத்திற்காக யாருமே பணியாற்ற முன் வருவ தில்லை. ஆனால் அவ்விதம் நிர் பந்திக்கப்படுகின்றனர். அந்த குறைந்தபட்ச ஊதியத்தின் மூலம் தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளதுதான் நிதர்சனம். இதனாலேயே தங்களது சுயமரி யாதை மற்றும் சுய கவுரவத்தை இழந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்ட விதிகளில் பல்வேறு விளக் கங்கள் இருந்தாலும் இந்திய அரசி யலமைப்பு விதி 141-ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஊழியர் நிரந்தரப் பணியாளரா அல்லது தற்காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனை வருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                               நன்றி: தி தமிழ் இந்து...

Thursday, October 27, 2016

ஒப்பந்த ஊழியர்களின் மாலை நேர தர்ணா

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த ஷரத்தின்படி முறையான போனஸ் வழங்கிடக்கோரி NFTE/TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில் கடலூர் GM அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் மாலைநேர தர்ணா போராட்டம் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் நடைபெற்றது. GM அலுவலகக் கிளை செயலர் தோழர் S.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். TMTCLU மாநிலப் பொருளரும், குடந்தை NFTE மாவட்ட செயலருமான தோழர். விஜய்ஆரோக்கியராஜ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் D.குழந்தைநாதன், V.முத்துவேலு, G.ரங்கராஜு, K.சீனிவாசன், A.சுப்ரமணியன், M.கணேசமூர்த்தி, D.ராஜா, மற்றும் மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மூத்தத் தோழர் S.தமிழ்மணி, மாநில பொதுசெயலர் தோழர் R.செல்வம், NFTE கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர்.சுரேஷ் நன்றியுரையுடன் தர்ணா நிறைவுற்றது. மாவட்ட முழுவதுமிருந்து கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.






   

Tuesday, October 25, 2016

தோழர்களே!       
          கும்பகோணத்தில் 10-09-2016ல் நடைபெற்ற TMTCLU  மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நாம் நமது மாநில நிர்வாகத்தை 20-09-2016 அன்று சந்தித்து கடிதம் கொடுத்து விவாதித்ததும், துணைப் பொது மேலாளர் (நிர்வாகம் ) அவர்கள் நமது தலைமை பொது மேலாளர் வந்த பிறகு விவாதித்து முடிவு செய்யலாம் என்று கூறினார். அதன் அடிப்படையில் 20-10-2016 அன்று தலைமைப் பொது மேலாளர் அவர்களை NFTE மாநில தலைவர் தோழர் P.காமராஜ், மாநில செயலர் தோழர் K.நடராஜன், மாநில உதவி செயலர் தோழர் G.S.முரளிதரன்  மற்றும் TMTCLU மாநில பொதுச்செயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் சந்தித்து ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை விவாதித்தனர். முக்கியமாக, கேரள மாநில BSNL நிர்வாகம்  ஒப்பந்த ஊழியர்களை Skilled/Semiskilled என வகைப்படுத்தி அவர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது, அதே முறையை நமது தமிழகத்திலும்  கடைபிடிக்க மாநில நிர்வாகத்தை வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது. CGM அவர்களும் இதனை மத்திய நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி ஒப்புதல் பெற்றபின் அமுல்படுத்த ஆவண செய்வதாகக் கூறினார்.  அதன் முதல் பலனாக இன்று (25-10-2016) அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் காலக்கெடு தேதியிட்டு  கடிதம் அனுப்பியுள்ளது.

கடிதத்தின் சாரம்: 
1. இந்த வருடத்திற்கான போனஸ் நிர்வாகத்தின் வழிகாட்டு- தலின்படியும் மற்றும் ஒப்பந்த ஷரத்தின்படியும் உடனடியாக வழங்க வேண்டும். 
2. மத்திய/மாநில நிர்வாகத்தின் உத்தரவுகள் முறையாக அமுல்படுத்தப் படுகிறதா என்பதை கண்காணிக்க NODAL அதிகாரியை அனைத்து மாவட்டங்களிலும் நியமித்து, அவர்களுடைய பெயர்,பதவி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை 15-11-2016 -க்குள் மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும். 
3. 15-11-2016 க்குள் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் அடையாள அட்டை ஒப்பந்த தாரர்கள் மூலம் வழங்கப்படவேண்டும்.
4.  30-11-2016 க்குள் அனைவருக்கும் ESI அட்டை வழங்கிடப்படவேண்டும்.
5.  ஒப்பந்த ஊழியர்களது EPF முறையாக கட்டப்பட உறுதிசெய்ய வேண்டும்.
மேற்கண்ட அனைத்து விவரங்களையும் 30-11-2016க்குள் மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும். 

தோழமையுடன்,
R.செல்வம்
மாநில பொது செயலர் TMTCLU 

தமிழ்மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
      
 மாவட்ட சங்கம்


மாலை நேர தர்ணா

இடம்: பொது மேலாளர் அலுவலகம், கடலூர் .     நாள் : 26-10-2016 புதன் மாலை 05:31.
தலைவர்:                     தோழர் M.S.குமார் மாவட்டத் தலைவர், TMTCLU
வரவேற்புரை:             தோழர் R.பன்னீர்செல்வம் கிளை செயலர், TMTCLU
துவக்கவுரை:               தோழர் M.விஜய் ஆரோக்யராஜ்மாநில பொருளாளர், TMTCLU
கண்டன உரை:         தோழர் D.குழந்தை நாதன் மாவட்ட உதவிச் செயலர், NFTE
                                    தோழர் G.ரங்கராஜ் மாவட்ட செயலர்,TMTCLU
தோழர் .V.இளங்கோவன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், NFTE
                                    தோழர் V.முத்துவேல் மாவட்ட அமைப்புச் செயலர், TMTCLU
                                    தோழர் D.ரவிச்சந்திரன்  மாவட்டச் செயலர், NFTE
                                    தோழர் A.சுப்ரமனியன் மாநில உதவிச் செயலர், TMTCLU
                                    தோழர் G.ஜெயசந்திரன் கிளைத் தலைவர், NFTE
                                    தோழர் K.சுந்தர் கிளை அமைப்பாளர், TMTCLU சிதம்பரம்
                                    தோழர் A..பாஸ்கர்  கிளைச் செயலர், TMTCLU,உளுந்தூர்பேட்டை
                                    தோழர் P.ராஜா மாவட்ட துனைத் தலைவர், TMTCLU கள்ளக்குறிச்சி
                                    தோழர் D.ராஜா கிளைச் செயலர், TMTCLU பண்ருட்டி
                                    தோழர் M.மணிகண்டன் மாவட்ட அமைப்புச் செயலர், TMTCLU
                                                தோழர் R.செல்வம் மா நில பொதுச் செயலர்,TMTCLU
                                                தோழர் S.தமிழ்மணி மாநில இனைப் பொதுச் செயலர், TMTCLU
                                    தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர், NFTE
 நன்றியுரை:                தோழர் S.அண்ணாதுரை மாவட்ட பொருளாளர், TMTCLU



தோழமையுடன்: G.ரங்கராஜ் மாவட்ட செயலர்,TMTCLU