Friday, August 30, 2013

பணி ஒய்வு

 31-08-2013 அன்று  பணி ஒய்வு பெறும் தோழர்கள் 

K.தக்ஷ்ணாமூர்த்தி TM கடலூர் 

A.சுப்பிரமணியன் SDE விழுப்புரம்  

ஆகியோரின் பணி ஒய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது .

Wednesday, August 28, 2013

மார்டின் லூதர் கிங்-ன்  "I Have a Dream " பேச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவு  
கடலூர் தொலைபேசி கிளை சார்பில் தோழர் K தக்ஷ்ணாமூர்த்தி TM பணி ஓய்வு பாராட்டு விழா 27-08-2013

          கடலூர் தொலைபேசி கிளை சார்பில் தோழர் K தக்ஷ்ணாமுர்த்தி TM பணி ஓய்வு பாராட்டு விழா மூத்த தோழர் K பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தொலைபேசி கிளை சார்பில் ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில் முதன்முறையாக நடைபெற்ற விழாவின் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது .

         நமது அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் C K மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் தோழரை வாழ்த்தினார்.  அவர் தனது உரையில் புதுதில்லியில் நடைபெற்ற BSNL கருத்தரங்கத்தை பற்றியும் போனஸ் பற்றியும் விரிவாக பேசினார். கடலூர் மாவட்டம் போராட்ட குணம் கொண்ட மாவட்டம் என்றும் அனுபவமிக்க மாவட்ட செயலரை கொண்டுள்ளது என்றும் எந்த பிரச்சினையாயினும் ஒன்றுபட்ட இயக்கத்தால் மட்டுமே தீர்வு காண வேண்டியுருக்கும் இந்த நேரத்தில் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது சரியல்ல என்றும் அறிவுருத்தினார்.

          மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் தனது வாழ்த்துரையில் தோழர் தக்ஷ்ணாமூர்த்தியின் இயக்க பற்று மற்றும் தோழமை  உணர்வை பற்றி நினைவு  கூர்ந்தார்.  தான் எந்த நேரத்திலும் பண்பாடற்ற வார்த்தைகளை வலைத்தளத்தில் பயன்படுத்தியதில்லை என்பதை புதுவை மற்றும் கோவை தோழர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் பேசினார் .
          
        விழாவில் சம்மேளன செயலர் G ஜெயராமன் , மாநில பொருளாளர் அசோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் தோழரை வாழ்த்தினர் 

      GM அலுவலக கிளை சார்பில் மூத்த தோழியர் K விஜயலட்சுமி மற்றும் பொறுப்பு செயலர் S ராஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர் 
         
    தோழர் தக்ஷ்ணாமூர்த்தி  பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம்  
        
    தோழர் CKM இன் வேண்டுகோளின் படி இனி நண்பர்கள் எதிர்மறை போக்கை கைவிட்டு ஒற்றுமை பாதைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 


Tuesday, August 27, 2013#ஜூன் 2013 மாதத்திற்கான 78.2%IDA இணைப்பு நிலுவை இந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.

#இந்த மாத சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் வரிச் சலுகை பெற தேவையான ஆவணங்கள் இருப்பின் உடனடியாக சமர்ப்பிக்கவும். 

#ரூ 200/- IDA இணைப்பு நன்கொடை அனைவரும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 


Monday, August 26, 2013

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை- 14ஆம் ஆண்டு தமிழ் விழா -24-08-2013

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை சார்பில் 14-ஆம் ஆண்டு தமிழ் விழா மற்றும் பொது தேர்வுகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கடலூர் ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில் 24-08-2013 அன்று மாலை நடைபெற்றது.

 உளுந்தூர்பேட்டை மாவட்ட செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரில் அறக்கட்டளை தலைவர் க .சீனிவாசன் தலைமை தாங்கினார் . 

அறக்கட்டளை செயலாளர் வீ லோகநாதன் பரிசு பெறும் மாணவ மாணவிகளை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார் .

தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நமது முதுநிலை பொது மேலாளர் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்.

 துணை பொது மேலாளர்( நிதி) திரு P.சாந்தகுமார் , சம்மேளன செயலாளர் கோ. ஜெயராமன், வாசிப்போர் இயக்க அமைப்பாளர் தோழர் பால்கி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

சாகித்ய அகடெமி உறுப்பினராக விளங்கும் சிறப்பு விருந்தினர் ட்ரான்ஸ்பயர் ஆங்கில காலண்டிதழ் ஆசிரியர் முனைவர் ராஜ்ஜா, தான் கலந்து கொண்ட பல்வேறு இலக்கிய விழாக்களில் ஒரு தொழிற்சங்கம் நடத்தும் இந்த தமிழ் விழா சிறப்பானது என்றும் குழந்தைகளுக்கு கதை சொல்வதின் அவசியத்தையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

அறக்கட்டளை உறுப்பினர் க.ஜெயசந்தர் நன்றியுரையாற்றினார் 

 செவிக்கு உணவாய் தமிழ் சுவை பருகிய அனைவருக்கும் வயிற்றுக்கும் உணவாய்  சிற்றுண்டி வழங்கப்பட்டது.  சிறப்பு விருந்தினர்களுக்கும்  மாவட்ட சங்க அலுவலத்தில் இன்சுவை சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. 

கடலூர் தமிழ் சான்றோர்களும்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளான தோழர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த அறக்கட்டளை தலைவர் க.சீனிவாசன் செயலர் வீ லோகநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது . பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (197/200) பெற்ற செல்வி பெ.நித்யா சார்பில் அவரது தாயார் தோழியர் மு.பார்வதி SSS கடலூர்  பரிசு பெறுகிறார் 
பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (187/200) பெற்ற  செல்வன் அ சந்தோஷ் த/பெ  வீ அருள்செல்வம் TM விருத்தாசலம் பரிசு பெறுகிறார் 
பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (187/200) பெற்ற  செல்வி ஜெ விஷ்ணுப்பிரியா த /பெ  ரா ஜெயபிரகாஷ்  TM கடலூர் சார்பில் அவரது சகோதரர் பரிசு பெறுகிறார் 

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (187/200) பெற்ற  செல்வி வெ ரேணுகா சார்பில் அவரது தந்தை சு வெங்கட்ராமன் SDE  பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (97/100) பெற்ற 
செல்வி பா அபிநயா தா/பெ பா கீதா SSS கடலூர் பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (97/100) பெற்ற 
செல்வன் ச ராகவ் த /பெ வெ சங்கர் SDE விருத்தாசலம்  பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (97/100) பெற்ற 
செல்வி மோ திவ்யா த/பெ சி மோகன்குமார் TM முண்டியம்பாக்கம்  பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (93/100) பெற்ற 
செல்வி செ கிருபாலட்சுமி த/பெ அ செல்வகுமார் TM லால்பேட்டை பரிசு பெறுகிறார் நன்கொடையாளருக்கு நன்றிகள்

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளைக்கு நன்கொடையளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 

நன்கொடையாளர் பட்டியல் 
தோழியர் பார்வதி SSS கடலூர் அறக்கட்டளை உறுப்பினர்            ---ரூ 4500/-
தோழர்  ராமானுஜம் TM வளவனூர் அறக்கட்டளை உறுப்பினர்  ---ரூ 3500/-
தோழர் அருள் லாரன்ஸ் STS விருத்தாசலம் 
                                                                         அறக்கட்டளை உறுப்பினர்  ---ரூ 3000/-
தோழர் அழகிரி STS கள்ளகுறிச்சி அறக்கட்டளை உறுப்பினர்      ---ரூ 2000/- 
தோழியர் சிவசுந்தரி TTA சென்னை                                                           ---ரூ 2000/-
தோழர் நடராஜன் SDE திண்டிவனம்                                                         --- ரூ 2000/-
தோழர் விஜயகுமார் SSS கடலூர்                                                              --- ரூ 1000/-
தோழர் வெங்கட்ராமன் SDE கடலூர்                                                        --- ரூ 1000/-
தோழியர் ரேவதி STS கடலூர்                                                                      --- ரூ   500/- 
தோழியர் நிர்மலா SSS கடலூர்                                                                   --- ரூ   500/-
தோழர் தேவராஜன் STS காட்டுமன்னார்கோயில்                            
                                                                        அறக்கட்டளை உறுப்பினர் ---  ரூ   500/-
தோழர் சீனிவாசன் STS கடலூர் அறக்கட்டளை தலைவர்           ---  ரூ   500/-
தோழர் ஸ்ரீதர் SS கடலூர் மாவட்ட செயலர்                                         ---  ரூ   500/-
தோழர் ஜெயச்சந்தர் TTA எலவனாசூர் கோட்டை 
                                                                        அறக்கட்டளை உறுப்பினர் ---  ரூ   500/-
தோழர் செல்வராஜூ STS கடலூர்                                                            --- ரூ    500/-
தோழர் குழந்தைநாதன் TTA உளுந்தூர்பேட்டை                                ---- ரூ  500/-
தோழர் பாலாஜி TTA மங்கலம்பேட்டை                                                ---- ரூ  500/-
தோழர் லோகநாதன் STS நெய்வேலி அறக்கட்டளை  செயலர்  ---  ரூ   500/-
தோழர் அப்துல்லா TM நெய்வேலி கிளை செயலர் நெய்வேலி  --- ரூ    500/-

Sunday, August 25, 2013

தோழர் D தியாகராஜன் STS க்கு நன்றி

பணி ஓய்வு பெற்ற தோழர் D  தியாகராஜன் STS  தமிழ் விழாவில் கௌரவிக்கப்பட்டார் . துணை பொதுமேலாளர் பொன்னாடை அணிவித்தார். முதுநிலை பொதுமேலாளர் நினைவு பரிசு வழங்கினார் .
தோழர் தியாகராஜன் ரூ 1000/- நன்கொடை வழங்கினார். 
தோழருக்கு நெஞ்சு நிறை நன்றிகளை உரித்தாக்குகிறோம்  


Saturday, August 24, 2013

விசாரணை குழு 22-08-13

வேலூர்  மாநில செயற்குழு முடிவின் படி அமைக்கப்பட்ட, தோழர்கள் லட்சம்,காமராஜ்,அசோகராஜன், சென்னகேசவன், விஜயரங்கன் ஆகியோரை கொண்ட  விசாரணை குழு தனது முதற்கட்ட பணியினை
 22-08-13 அன்று கடலூரில் தொடங்கியது .
முறையான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் மாதம் நடைபெறும்.

Friday, August 23, 2013

ஒலிக்கதிர் பொன்விழா குழு கூட்டம் -குடந்தை -21-08-13


தொழிற்சங்க பத்திரிக்கை வரலாற்றில் 50 ஆண்டுகளாக வெளிவரும் சிறப்பு கொண்ட நமது ஒலிக்கதிரின் பொன்விழா குழு கூட்டம் குடந்தையில் 21-08-13 அன்று நடைபெற்றது . 
ஒலிக்கதிர் பொன்விழாவை கடலூர் மாவட்டத்தில் நடத்துவது என்று முடிவெடுக்க பட்டது.


குடந்தை மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா 21-8-13