.

Monday, August 26, 2013

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை- 14ஆம் ஆண்டு தமிழ் விழா -24-08-2013

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை சார்பில் 14-ஆம் ஆண்டு தமிழ் விழா மற்றும் பொது தேர்வுகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கடலூர் ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில் 24-08-2013 அன்று மாலை நடைபெற்றது.

 உளுந்தூர்பேட்டை மாவட்ட செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரில் அறக்கட்டளை தலைவர் க .சீனிவாசன் தலைமை தாங்கினார் . 

அறக்கட்டளை செயலாளர் வீ லோகநாதன் பரிசு பெறும் மாணவ மாணவிகளை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார் .

தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நமது முதுநிலை பொது மேலாளர் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்.

 துணை பொது மேலாளர்( நிதி) திரு P.சாந்தகுமார் , சம்மேளன செயலாளர் கோ. ஜெயராமன், வாசிப்போர் இயக்க அமைப்பாளர் தோழர் பால்கி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

சாகித்ய அகடெமி உறுப்பினராக விளங்கும் சிறப்பு விருந்தினர் ட்ரான்ஸ்பயர் ஆங்கில காலண்டிதழ் ஆசிரியர் முனைவர் ராஜ்ஜா, தான் கலந்து கொண்ட பல்வேறு இலக்கிய விழாக்களில் ஒரு தொழிற்சங்கம் நடத்தும் இந்த தமிழ் விழா சிறப்பானது என்றும் குழந்தைகளுக்கு கதை சொல்வதின் அவசியத்தையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

அறக்கட்டளை உறுப்பினர் க.ஜெயசந்தர் நன்றியுரையாற்றினார் 

 செவிக்கு உணவாய் தமிழ் சுவை பருகிய அனைவருக்கும் வயிற்றுக்கும் உணவாய்  சிற்றுண்டி வழங்கப்பட்டது.  சிறப்பு விருந்தினர்களுக்கும்  மாவட்ட சங்க அலுவலத்தில் இன்சுவை சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. 

கடலூர் தமிழ் சான்றோர்களும்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளான தோழர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த அறக்கட்டளை தலைவர் க.சீனிவாசன் செயலர் வீ லோகநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது . 







பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (197/200) பெற்ற செல்வி பெ.நித்யா சார்பில் அவரது தாயார் தோழியர் மு.பார்வதி SSS கடலூர்  பரிசு பெறுகிறார் 
பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (187/200) பெற்ற  செல்வன் அ சந்தோஷ் த/பெ  வீ அருள்செல்வம் TM விருத்தாசலம் பரிசு பெறுகிறார் 
பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (187/200) பெற்ற  செல்வி ஜெ விஷ்ணுப்பிரியா த /பெ  ரா ஜெயபிரகாஷ்  TM கடலூர் சார்பில் அவரது சகோதரர் பரிசு பெறுகிறார் 

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (187/200) பெற்ற  செல்வி வெ ரேணுகா சார்பில் அவரது தந்தை சு வெங்கட்ராமன் SDE  பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (97/100) பெற்ற 
செல்வி பா அபிநயா தா/பெ பா கீதா SSS கடலூர் பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (97/100) பெற்ற 
செல்வன் ச ராகவ் த /பெ வெ சங்கர் SDE விருத்தாசலம்  பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் பரிசு (97/100) பெற்ற 
செல்வி மோ திவ்யா த/பெ சி மோகன்குமார் TM முண்டியம்பாக்கம்  பரிசு பெறுகிறார் 
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் இரண்டாம்  பரிசு (93/100) பெற்ற 
செல்வி செ கிருபாலட்சுமி த/பெ அ செல்வகுமார் TM லால்பேட்டை பரிசு பெறுகிறார் 



















No comments:

Post a Comment