.

Sunday, May 28, 2017

சென்னை கூட்டுறவு சங்கம்- பென்சன்
சென்னை கூட்டுறவு சங்கத்தில் 20வருடம், 25வருடம் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கான (2016-2017 வருடத்திற்கான) பென்சன்அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. உரிய படிவத்தை பூர்த்தி செய்து கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும். தங்களது சேமிப்பு கணக்கில் பற்று வைக்கப்படும்.
அன்புடன்
V.கிருஷ்ணமூர்த்தி
இயக்குனர்-GTECS

Saturday, May 27, 2017

கடலூர் GM அலுவலக மனமகிழ் மன்ற
பணி ஓய்வு  பாராட்டுக் கூட்டம்
31-5-2017 அன்று  பணி ஓய்வு பெறும் திரு.மேகநாதன் JAO, திரு. வெங்கோபன் AOS(G) ஆகியோருக்கு கடலூர் GM அலுவலக மனமகிழ் மன்றத்தின் சார்பில் 26.5.2017 – மாலை பணி ஓய்வு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. பாராட்டு விழாவில் அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.





Thursday, May 25, 2017

வருந்துகிறோம்

             விழுப்புரம், S.G.புரம் தொலைபேசி நிலையத்தில் பணி புரியும்  தோழர் K.தண்டபானி TT  அவர்கள் இன்று  (25-05-2017)  இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்த்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
      அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (26-05-2017) அவரது சொந்த ஊரான விழுப்புரத்தில் நடைபெறுகிறது.
                                                                                                          By
                                                                                       NFTE-மாவட்ட சங்கம்

கடலூர்.

Wednesday, May 24, 2017

பணி ஓய்வு பாராட்டு விழா
நமது பொது மேலாளர் அலுவலகத்தில்  பணி புரியும் தோழர் R.வெங்கோபன் AOS(G) இம்மாதம் (May-2017) பணி ஓய்வு பெறவுள்ளதையொட்டி நமது பொது மேலாளர் அலுவலக கிளை சார்பாக 23-05-2017 அன்று கிளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையாக  தோழர் A. சகாயசெல்வன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். வாழ்த்துரையாக தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர், V.இளங்கோவன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மற்றும் மாவட்ட செயலர் (பொறுப்பு) D.குழந்தைநாதன், தோழர் N.அன்பழகன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மாவட்ட பொருளாளர் தோழர் A.சாதிக் பாஷா, தோழியர் V.கீதா மாவட்ட துனைத் தலைவர், கடலூர் வெளிப்புறப் பகுதி செயலர் தோழர் E.விநாயக மூர்த்தி  அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
 தோழர் R.வெங்கோபன் அவர்களுக்கு தோழர் P.S மேனாள் மாவட்ட செயலர் நினைவு பரிசு வழங்க தோழர் S.ராஜேந்திரன் (கிளைச் செயலர் ) கதர் ஆடை அணிவித்தார்நிறைவாக  தோழர் இரா ஸ்ரீதர்  (மாவட்டச் செயலர்) சிறப்புரையாற்றினார். தோழர் P.ஜெயராஜ் நன்றி கூற விழா முடிவுற்றது.
விழாவிற்கு உணவு ஏற்பாடு செய்த தோழர் A.S குருபிரசாத், மற்றும் விழாவிற்கு TMTCLU மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார்  தலைமையில் உறுதுணையாக இருந்த TMTCLU தோழர்கள் S .கணபதி, M.சுரேஷ், M.மணிகண்டன், K.தீபன்ராஜ், மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் S.அண்ணாதுரை ஆகியோருக்கும்  நன்றி


Sunday, May 21, 2017

தோழர் ஜெகன் 87வது பிறந்தநாள்இளைஞர்களின் எழுச்சிநாள்

சிறப்புக்கூட்டமாக கடலூர் GM அலுவலக வாயிலில் 17.5.2017 அன்று மாலைப்பொழுதில்  மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு செயலர் தோழர் D.குழந்தைநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத்துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் V.இளங்கோவன், N.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளைஞர்களின் எழுச்சி சக்தி-ஜெகன் என கருத்துரை வழங்கினர் மாநில அமைப்புசெயலர் தோழர் P.பாலமுருகன், மாநில உதவிச்செயலர் தோழர் D.ரமேஷ். மனித நேயம், தோழமை இதன்பெயர் தோழர் ஜெகன் என தங்களது உரையில் விளக்கினர் தோழர்கள் சு.தமிழ்மணி-முன்னாள் மாநிலச்செயலர், தோழர் G.ஜெயராமன்சம்மேளனச்செயலர். அவர்களைத் தொடர்ந்து மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கருத்துரை வழங்கினார். இறுதியாக இந்தியக்கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச்செயலர் தோழர் மு.வீரப்பாண்டியன் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், சிறப்புமிக்க எழுச்சியுரை யாற்றினார். பின்னர் மாவட்ட உதவிச்செயலர் தோழர் D.இரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார். கூட்ட நிகழ்வுகளை சிறப்பாக செய்திட்ட தோழர் குழந்தைநாதன், இரவு உணவு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட தோழர் குருபிரசாத், தோழர்களுக்கு பேருதவி செய்திட்ட தோழர்கள் S. இராஜேந்திரன், E.விநாயகமூர்த்தி, R.பன்னீர்செல்வம், தோழர் M.S.குமார் தலைமையில் உழைத்திட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம். சிறப்புக்கூட்டத்தில் திரளாக கலந்திட்ட கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விழுப்புரம் தோழர்கள் அனவரையும் வாழ்த்துகிறோம்

நிகழ்வுகள் சில.. 








 மேலும் காண கிளிக் செய்ய......

இரங்கல் செய்தி!!
சிதம்பரம் அண்ணாமலைநகர் தொலைபேசிநிலையத்தில் பணிபுரியும் தோழர் J.ஜெயராஜ் TT அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை கடலூர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. தோழரது பிரிவில் வாடும் தோழரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழரது இறுதி நிகழ்ச்சி நாளை காலை 10-மணியளவில் சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெறும்.

Saturday, May 20, 2017

தோழர் சிரில் நினைவு தினம் -19.5.2017

தோழர் ஜெகனின் தொழிற்சங்க ஆசானும், கடலூர் மாவட்ட சங்க முன்னோடியுமான தோழர் சிரில் நினவுதினம் 19.5.2017 அன்று நெய்வேலியில் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று மாலையிட்டு வணங்கினர். பின்னர் நெய்வேலி தொலைபேசி நிலையத்திலுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினர்.

Friday, May 19, 2017


NFTE-TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்டச் சங்கம். கடலூர்.
தோழர்களே!
          நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் அவசர மாவட்ட செயற்குழு  கூட்டம் தோழர் M.S.குமார் அவர்களின் தலைமையில்  NFTE மாவட்ட சங்க அலுவகத்தில் நடைபெற்றது. வரவேற்புரையாக  தோழர் G.ரங்கராஜ் அவர்களை செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். செயற்குழுவில் A.C.சுப்ரமனியன் மாநில உதவிச் செயலர், R.பண்ணீர்செல்வம் கிளைச் செயலர் , மற்றும் தோழர் S.அண்ணாதுரை, M.மணிகண்டன் , M.சுரேஷ், முருகன் (திண்டிவனம்) , சிதம்பரம் பகுதி தோழர்கள் K.சுந்தர், கிருஷ்னகுமார்,தோழர் கென்னடி (KTL) உள்ளிட்ட பல பகுதியிலிருந்து வந்திருந்த தோழர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

        வாழ்த்துரையாக தோழர் D.ரமேஷ் மாநில உதவிச் செயலர், விருது நகர்(NFTE), அவர்களின் உரையில் கடலூர் மாவட்டம் எப்போதும் உத்வேகத்துடன் செயல்படும் தோழர்கள் நிறைந்த மாவட்டம் என்றும் உங்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்தார். அடுத்தப்படியாக தோழர் P.பாலமுருகன் மாநில அமைப்புச் செயலர் (NFTE),குடந்தை, அவர்களின் உரையில் எங்களது பகுதியில் சுமார் 80%க்கு மேல் ஒப்பந்த தொழிலாளர்கள் நமது TMTCLU சங்கத்தில் தான் உள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியினை எங்களது பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கு நிலுவை தொகையுடன் வாங்கி கொடுத்தோம் என்பதனை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த கடலூர் மாவட்டம் எல்லா விதமான ஆக்கப் பூர்வாமான செயல்பாடுகள்  உருவாக்கும் வீரம் விளைந்த மண் . அந்த வகையில்   நீங்களும் உங்களது அமைப்பை பலப்படுத்தி பலம் பொருந்திய சங்கமாக உருவாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

 நமது மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம் அவர்கள்  நமது சங்கம் சமவேலைக்கு சம ஊதியம் பெறுவதற்கும், விடுமுறை  நாட்களுக்கு சம்பளம் பெறுவதற்கும் வழக்கு தொடுத்துள்ளோம்.  மிக விரைவில் பலனடைய போகிறோம் என்று கூறினார். அடுத்தப்படியாக  மாநில இணைப் பொதுச் செயலர் சு.தமிழ்மணி அவர்களின் உரையில் மிக விரைவில்  TMTCLU சங்கம் அகில இந்திய சங்கமாக உருவாக NFTE  மாநில , மத்திய சங்கம்  எல்லா விதமான முயற்சிகளை செய்து வருகிறது என்றார். அடுத்தப்படியாக நமது மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜ் அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து  தீர்மானங்களை தொகுத்து வழங்கினார்.

 மருத்துவ விடுப்பிற்கு பிறகு கலந்து கொண்டு நிறையாற்றிய நமது NFTE  மாவட்டச் செயலர் தோழர் இரா ஸ்ரீதர் அவர்களின் உரையில் நாம் நமது அமைப்பினை பலம் பொருந்திய சங்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பாடுபட வேண்டும் எனவும்.  ஊதிய மாற்றத்தை நோக்கி நாம் பயணிப்போம். நிச்சயம் கடலூர் NFTE மாவட்ட சங்கம் மட்டுமில்லை அகில இந்திய சங்கமும்  உங்களோடு உறுதுணையாக இருக்கிறது. ஆகவே தோழர்களே நம்பிக்கையோடு செயல்படுங்கள் நிச்சயம் மாற்றம் வரும். நியாயமான தீர்மானங்களை எடுத்துள்ளீர்கள் . இந்த நியாயமான தீர்மானங்கள்  வெற்றி பெற NFTE மாவட்ட சங்கம் உங்களுக்கு உறுதியாக இருக்கும்  பதிவு செய்தார்.

இறுதியாக தோழர் S.அண்ணாதுரை மாவட்ட பொருளாளர் அவர்கள் நன்றியுரை கூறினார். 

TMTCLU
அவசர மாவட்ட செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1.  தொடர்ச்சியாக காலதாமதமாக ஒப்பந்த ஊழியருக்கு சம்பள பட்டுவாட செய்யப்பட்டு வருகிறது. இச்செயல்  கவலை தருகின்ற அம்சம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குறித்த தேதியில் சம்பள பட்டுவாட செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

2.ZONE-Iல் பணிபுரியும் எந்தவொரு ஒப்பந்த ஊழியரையும் எந்த சூழ்நிலையிலையும் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என்று இம்மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.

3. கடலூரில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட  தோழர்களை உடனடியாக  பணி வழங்கிட இம்மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4.அடையாள அட்டை வழங்குவதில் தொடர்ச்சியாக நிர்வாகத்தினை வலியுறுத்தியும், அதன் முக்கியத்துவத்தை  உணராத மாவட்ட நிர்வாகத்தின் போக்கை இம்மாவட்ட செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது.

5.   புதிதாக ஆள் எடுப்பதற்கு முன்பாக பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியராக மாற்றுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. தனி நபர் பிரச்சனைகள் 1.தோழர் முருகன் (திண்டிவனம்) வேலை பார்ப்பது  EOI-ல் ஆனால் சம்பளம் பெறுவது HOUSE KEEPING ஓப்பந்தகாரர் மூலம். 2. தோழர் கோபி ஏற்கனவே முழு நேர ஊழியராக  திண்டிவனம் பகுதில் பணிபுரிந்த அவரை ஆட்குறைப்பு என்ற பெயரில் 2மணி நேர ஊழியராக விழுப்புரத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். 3.லால்பேட் பகுதியில் பணிபுரிந்து இறந்து போன தோழர் வேலுமணி அவரின் மனைவிக்கு வேலை வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. 4. நெல்லிக்குப்பத்தில் கேபிள் பகுதியில் பணிபுரியும் தோழர் P.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு 6மணி நேர வேலையை 8மணி நேர வேலையாக மாற்ற வேண்டும்.  5.தோழர் நீலமேகம் அவர்களுக்கு 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் இன்னும் மாவட்ட அளவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது அதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

7. 01-04-2016 அன்று மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியை கணகீட்டு நிலுவை தொகையினை ஒப்பந்த ஊழியர்களுக்கு உடணடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திடவும் இம்மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட கோரிக்கை தீர்விற்கு கூட்டியக்கம் நடத்துவதற்கு   மாவட்ட செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தோழர்களே!..
நாம் போராட தயராகுவோம்....
வெற்றி பெறுவோம்....
  தோழமையுடன்
                                                                                            G.ரங்கராஜ்
 மாவட்டச் செயலர்

                TMTCLU,கடலூர்.