தோழர் ஜெகன்
87வது பிறந்தநாள் “இளைஞர்களின் எழுச்சிநாள்”
சிறப்புக்கூட்டமாக
கடலூர்
GM அலுவலக வாயிலில் 17.5.2017 அன்று மாலைப்பொழுதில்
மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு செயலர்
தோழர் D.குழந்தைநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத்துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் V.இளங்கோவன்,
N.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளைஞர்களின்
எழுச்சி சக்தி-ஜெகன் என கருத்துரை வழங்கினர் மாநில அமைப்புசெயலர்
தோழர் P.பாலமுருகன், மாநில உதவிச்செயலர்
தோழர் D.ரமேஷ். மனித நேயம், தோழமை இதன்பெயர் தோழர் ஜெகன் என தங்களது உரையில் விளக்கினர் தோழர்கள் சு.தமிழ்மணி-முன்னாள் மாநிலச்செயலர், தோழர் G.ஜெயராமன்–சம்மேளனச்செயலர்.
அவர்களைத் தொடர்ந்து மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்
கருத்துரை வழங்கினார். இறுதியாக இந்தியக்கம்யூனிஸ்ட் மாநிலத்
துணைச்செயலர் தோழர் மு.வீரப்பாண்டியன் இளைஞர்களுக்கு உத்வேகம்
அளிக்கும் வகையில், சிறப்புமிக்க எழுச்சியுரை யாற்றினார்.
பின்னர் மாவட்ட உதவிச்செயலர் தோழர் D.இரவிச்சந்திரன்
நன்றியுரை வழங்கினார். கூட்ட நிகழ்வுகளை சிறப்பாக செய்திட்ட தோழர்
குழந்தைநாதன், இரவு உணவு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட தோழர்
குருபிரசாத், தோழர்களுக்கு பேருதவி செய்திட்ட தோழர்கள்
S. இராஜேந்திரன், E.விநாயகமூர்த்தி, R.பன்னீர்செல்வம், தோழர் M.S.குமார்
தலைமையில் உழைத்திட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் மாவட்ட
சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம். சிறப்புக்கூட்டத்தில் திரளாக
கலந்திட்ட கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விழுப்புரம்
தோழர்கள் அனவரையும் வாழ்த்துகிறோம்.
நிகழ்வுகள் சில..
No comments:
Post a Comment