Thursday, January 31, 2019

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு...
DOT கூடுதல் செயலர் சந்திப்பு...

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள்., DOT கூடுதல் செயலர் திரு. அன்ஷு பிரகாஷ் அவர்களை 30-01-2019 இன்று சந்தித்தனர். 
இன்றைய கூட்டத்தில்...
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக., தோழர். C.சந்தேஷ்வர் சிங் NFTE., தோழர். P.அபிமன்யூ BSNLEU., தோழர். K.செபாஸ்டின் SNEA., தோழர். பிரகலாத்ராய் AIBSNLEA ஆகியோரும்.,
DOT தரப்பிலிருந்து., திரு. R.K.காண்டேல் வால் Jt.Secretary (Admn)., திரு. S.K.ஜெய்ன் DDG (Estt)., திரு. ராஜீவ் குமார் DDG (Budget) ஆகியோரும்.,
BSNL தரப்பிலிருந்து., திருமதி. T.சுஜாதா ராய் Director (HR)., திரு. A.M.குப்தா GM (SR) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றம்., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு., வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகிய கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 3-வது ஊதிய மாற்றத்தைப் பொறுத்த மட்டில் DOT தரப்பிலிருந்து 5% ஊதிய நிர்ணயத்தை வழங்க தயாராக உள்ளதாகவும்., AUAB தலைவர்கள் இதனை ஏற்றுக் கொண்டால் 05-02-2019 அன்று நடைபெற உள்ள டிஜிட்டல் டெலிகாம் கமிஷன் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு அதன் பிறகு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
கூட்டமைப்பின் தலைவர்கள் 5% பிட்மன்ட் என்பது மிகவுக் குறைவானது எனக் கூறி அதனை ஏற்க மறுத்தனர். அதன் பின் DOT-யின் கூடுதல் செயலர் இது குறித்து CMD BSNL அவர்களுடன் விவாதித்த பின் ஒரிரு நாளில் தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறு ஆலோசனை கூறினார். 

கடந்த முறை DOT கூடுதல் செயலருடன் நடைபெற்ற கூட்டத்தில் 0% பிட்மன்ட் தான் தர முடியும் என DOT தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது தோழர்களுக்கு நினைவிருக்கலாம். 

தோழர்களே நம்பிக்கையோடு காத்திருப்போம்...
போராட்ட களமும் நம்மை 
எதிர் கொண்டு காத்திருக்கிறது...

Wednesday, January 30, 2019

ஆர்ப்பாட்டம்

மாநிலச் சங்கத்தின் அறைகூவலுக்கேற்ப நமது  கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு   கடந்த இரண்டு மாதங்களாக  சம்பளம் வழங்காதததினை கண்டித்து 31-01-2019 அன்று மாலை நமது பொது மேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                    
                                                                                                            தோழமையுடன்
மாவட்டச் சங்கம், TMTCLU

  கடலூர் .


பணி ஓய்வுக்காலம் சிறக்க நல்வாழ்த்துக்கள்

31.1.2019 பணி ஓய்வு பெறும்
திரு. S.குருபரன் SDE DTax கடலூர்
மற்றும்
தோழர் V.அசோகன் TT திண்டிவனம்

ஆகியோருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்..

Tuesday, January 29, 2019


அரசு ஆசிரியர்கள் போராட்ட
ஆதரவு ஆர்ப்பாட்டம்.

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் போராடும் ஜாக்டோ-ஜியோ சங்கங்களுக்கு ஆதரவாக ஆதரவு ஆர்ப்பாட்டம் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கிளைகளிலும் நடைபெற்றது. ஆர்பாட்டம் நடத்திட்ட அனைத்துக் கிளைத்தோழர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.

தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்ட செயலர்
ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
( மேனாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் )

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். ரயில்வே ஊழியராக இருந்த இவர் தொழிற்சங்கம் மூலம் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களிலும் பங்கேற்றுஅதன் பின்னர் நேரடி அரசியலில் குதித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து முதன் முறையாக 1977-ம் ஆண்டில் எம்.பியாக தேர்வானார். பின்னர், 1989 முதல் 1990 வரை நடந்த ஐக்கிய ஜனதா ஆட்சியில் ரயில்வே அமைச்சாராக பெர்னாண்டஸ் பணியாற்றியுள்ளார்.
2000-ம் ஆண்டு மத்தியில் அமைந்த பாஜக தலைமையிலான கூட்டணி   அரசில் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 2004-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற அவர் டெல்லியில் வசித்து வந்தார்.
அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் தனது 88 வயதில் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 28, 2019


அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்ட
ஆதரவு ஆர்ப்பாட்டம்.

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் போராடும் ஜாக்டோ-ஜியோ சங்கங்களுக்கு ஆதரவாக ஆதரவு ஆர்ப்பாட்டம் நாளை மாலை 5.00 மணியளவில் கடலூர் டவுன்ஹால் எதிரில் உள்ள டாக்ஸி ஸ்டான்ட் அருகே நடைபெறும். நமது கடலூர் தோழர்கள் அனைவரும் திரளாக  தவறாது கலந்து  கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு  அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
கிளைச் செயலர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் போராட்டதிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்ட செயலர்

Saturday, January 26, 2019

NFTE-TMTCLU
வாழ்த்தி வரவேற்கிறோம்

தோழர் பிரான்சிஸ் அவர்கள் NFTCL  சங்கத்திலிருந்து  விலகி  நமது TMTCLU  சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழரை வாழ்த்தி வரவேற்கிறோம்.தோழர் K.வெங்கடேசன் அவர்கள் NFTCL  சங்கத்திலிருந்து  விலகி  நமது TMTCLU  சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழரை வாழ்த்தி வரவேற்கிறோம்.

தோழர் பரமசித்தன் அவர்கள் மாற்று சங்கத்திலிருந்து  விலகி  நமது TMTCLU  சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழரை வாழ்த்தி வரவேற்கிறோம்.

                                                                                         வாழ்த்துக்களுடன்

                                                                             TMTCLU  மாவட்டச் சங்கம், கடலூர்.

Friday, January 25, 2019Ftth Broadband விழிப்புணர்வு பேரணி

கடலூர் நகரில் உள்ள பொதுமக்கள் அறியும் வகையில் கடலூர் செம்மண்டலம் ஆஞ்சனேயர் கோயில் அருகிலிருந்து நாம் அளித்துவரும் ftth Broadband வசதி பற்றிய விழிப்புணர்வு பேரணி வருகின்ற 30.1.2019 புதன்கிழமை காலை சரியாக 9.30 மணியளவில் தொடங்கவுள்ளது. நமது பொதுமேலாளர் திரு.ஜெயக்குமார் ஜெயவேலு அவர்கள் துவக்கிவைக்கிறார். கடலூர் பகுதியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொண்டு நமது BSNL வளர்ச்சியை முன்னெடுத்து செல்வோம். அனைவரும் நீல நிற மேல்சட்டை அணிந்து வரவும், தோழியர்கள்  நீல நிற சேலை அணிந்து வரவும். அவசியம் இரண்டு சக்கர வாகனத்துடன் கலந்துகொள்ளவும். 

Tuesday, January 22, 2019

TMTCLU
இணைப்பு விழா கூட்டம் ( 19-01-2019)
அன்புள்ள தோழர்களே!.. வணக்கம்...
           நாம் திட்டமிட்டப்படி ஒத்த  கருத்துடைய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றுபட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகம் சென்னை NFTE  சங்க அலுவலகத்தில் 19-01-2019 அன்று மரியாதைக்குரிய தலைவர் ஆர்கே அவர்கள்  தலைமையில் NFTCL  மாநிலச் செயல் தலைவர் காரைக்குடி தோழர் V. மாரி ,    NFTCL  திருச்சி மாவட்டச் செயலர் தோழர் Y.மில்டன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. மறைந்த தலைவர்கள் சவுகத்அலி ( காரைக்குடி  ) ராமகிருஷ்ணன் ( திருநெல்வேலி), P.சுப்ரமணியன் (கடலூர்)  மாரிச்சாமி (ஓப்பந்த ஊழியர், குடந்தை ) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்து
          மாநிலச் செயலர் தோழர் R. செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். துவக்கவுரையாக  K. நடராஜன்  மாநிலச் செயலர் NFTE அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளியின் நேற்றைய நிலைமை இன்று மாறுப்பட்டுள்ளது. எப்படி நாம் நடத்திய போராட்டங்கள் வாயிலாக வங்கி கணக்கு மூலம் ஊதியம், EPF, ESI முறைப்படுத்தியது. UAN  எண்  வாங்கியது, போனஸ் பெற்றது, பணித்தன்மைக்கேற்ற ஊதியம் இவை அனைத்தும் NFTE சங்கமும் , TMTCLU  சங்கமும் இணைந்து நடத்திய  போராட்டத்தின் விளைவாக கிடைத்தது என்றால் மிகையாகாது. ஆகவே நாம் ஒப்பந்த தொழிலாளிக்கு இன்னும் பல நன்மைகள் செய்திட ஒன்றுப்பட வேண்டியது அவசியம். அதற்காக மத்திய சங்கம் அமைக்க வேண்டும் என்று தனது உரையில் பதிவு செய்தார்.
          ஒற்றுமைக்கான  வித்தாக முத்தான கருத்துரையாக தோழர் K. அசோகராஜன் ( NFTCL  அகில இந்திய துணைத் தலைவர்,புதுவை ) ஒன்றுபட்ட அமைப்பு இன்றைய தேவைக்கு நல்லது என்று உரையில் பதிவு செய்தார்.  அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்திருந்த NFTE, TMTCLU, NFTCL உள்ளிட்ட சங்கங்களின் 30 க்கும் மேற்பட்ட செயல் வீரர்கள்  மேலும் ஒற்றுமையை பலப்படுத்த  வேண்டுமென தங்களது  கருத்துகளைப் பதிவு செய்தனர்.
          மத்திய சங்க நிர்வாகிகள்  தோழர் P.காமராஜ், தோழர்  A.செம்மலமுதன்மாநில உதவிச் செயலர் தோழர் G.S .முரளிதரன், மூத்த தொழிற்சங்க தலைவர்கள் சேது, தமிழ்மணி மற்றும் TMTCLU  மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ் ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
          மாநில முழுவதும் உள்ள  ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண ஒன்றுபட்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் தோழர் P.காமாராஜ், தோழர் V.மாரி, தோழர் M.விஜய்  ஆரோக்யராஜ், தோழர் Y.மில்டன், தோழர் A.S.குருபிரசாத் ஆகிய உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
          இக்குழு ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை விளக்க மாநாடு நடத்த, அகில இந்திய சங்கம் அமைப்பதை  துரிதப்படுத்திட,  மாநில முழுவதும் ஒற்றுமையைக் கட்டி ஒப்பந்த ஊழியர்களை ஒன்றுபடுத்த மாவட்ட மாநாடுகளை நடத்தி பிறகு மாநில  மாநாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
          இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை ஒன்றுபடுத்த முன் முயற்சி எடுத்த ஆர்கே, சேது , தோழர்கள் V.மாரி, S.முருகன்( காரைக்குடி ),  தோழர்கள் பழனியப்பன், மில்டன் (திருச்சி) , தோழர் ராஜேந்திரன் ( மதுரை), தோழர்கள் M.விஜய் ஆரோக்யராஜ் , ராஜேஷ் ( குடந்தை) , தோழர்கள்  இரா.ஸ்ரீதர் . A.S.குருபிரசாத், D.குழந்தைநாதன்   M.S.குமார்  ( கடலூர்), தோழர்கள் தங்கமணி  நாகலிங்கம் ( புதுவை), தோழர்கள் கிள்ளிவளவன், கலைச்செல்வன் ( தஞ்சை), தோழர் ஜெயசீலன், ராம்சேகர் (விருது நகர்), தோழர்கள் Kமணி, D.வீரமணி, விஸ்வநாதன் (தருமபுரி), தோழர்கள் ராபர்ட்ஸ், ராஜாதம்பிதுரை  ( கோயம்புத்தூர்), தோழர்கள் அல்லிராஜா, ராஜ்குமார் (வேலூர்), தோழர்கள் பாலகுமார், இசையரசன்( சேலம்) தவிர்க்கமுடியாத காரணத்தால் வர இயலாமையை தெரிவித்த  மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னணி தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தோடு கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
         
  1. தமிழகத்திலுள்ள ஆளில்லா தொலைபேசி நிலையங்கள், CSC, SALES, BROAD BAND, TOWER Maintance, அலுவலகப் பிரிவு ஆகிய பகுதிகளிலுள்ள இடங்களில் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி காலியிடங்களை  நிரப்பிடுக..
  2. ஒப்பந்த ஊழியர்கள் பயன் பெறும் வகையில் EPF, ESIக்கு பிடித்தம்   செய்யப்பட்ட தொகையை அந்தந்த அலுவலங்களில் முறையாக மாதாமாதம் செலுத்திவதை  கண்கானிக்க வேண்டும்.
  3. போனஸ் வழங்குவதில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உத்திரவின்படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச போனஸ் ரூ 7000- வழங்குவதை  நிர்வாகம்  உறுதி  செய்திட வேண்டும்.
  4. கிராஜ்விட்டி :- பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972ல் உள்ளபடி BSNLல் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்குக் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  5. ஊதியம்:- மத்திய தொழிலாளர் நல ஆனையத்தின் உத்திரவு படி மாதா மாதம் 7ந் தேதிக்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஊதியம் வழங்க வேண்டும்.
  6. மத்திய சங்கம்:- NFTCW  என்ற புதிய பெயரில் மத்திய சங்கம் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  7. மாநில மாநாடு:- தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மாநாடுகளை நடத்திய பிறகு  மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  8. கருத்தரங்கம்:- ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை விளக்க கருத்தரங்கம் பிப்ரவரியில் திருச்சியில் நடத்துவது.
  9. சமவேலைக்கு சம ஊதியம்: மாநில உயர்நீதி மன்றத்தில் உள்ள சம வேலைக்கு சம ஊதியம் , வாராந்திர ஓய்வு ஊதிய வழக்கு  துரிதப்படுத்த வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

நன்றியுரை: தஞ்சை தோழர் நாடிமுத்து அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
                                                                                                                                                                                                                                                                                   தோழமை வாழ்த்துக்களுடன்
    R.செல்வம்
 மாநிலப் பொதுச் செயலர்,                                     TMTCLU.