Tuesday, January 29, 2013

 31/01/2013 அன்று பணி ஓய்வு பெறும் கீழ்க்கண்ட தோழர்களின் பணி ஓய்வுக்காலம் ஆரோக்கியத்துடனும், நல் வளத்துடனும் அமைந்திட மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.


1. திரு. செல்வரஜ்   N, SSS/Cuddalore
2. திரு.கலிவரதன் P. STS, VLU
3. திரு. யூசூஃப்கான் L. TM/VLU
4. திரு. மனோகரன் P.V. TM/CDL
5. திருமதி. அஃப்ரோஸ் வஜித் SSS/GIE  
6. திரு. மணி B, TM/VALAVANUR

Saturday, January 26, 2013

சுதந்திர தின வாழ்த்துக்கள் 

Tuesday, January 22, 2013

COMRADE GUPTA IS IMMORTALWhen  I think of comrade OPG my thoughts automatically goes back to 1976 when I first met him along with Mrs. Janak Gupta at the Tamil Nadu Joint Circle Conference of E3 & E4 Unions in Kumbakonam. Then I was a branch secretary and was attending the said E3 conference as a delegate from Chenglepattu branch
union. Frankly speaking I was in the anti-Gupta camp at that time because I was fed with wrong and false information about him by several comrades ever since I entered the RMS Union during 1972. But after hearing his inspiring speech for the first time at Kumbakonam I was completely swayed and begin to rethink about all the things fed in to my mind against Comrade OPG. Since then for the last 36 years. I am a proud follower of com.Gupta. I beleived he had paralleled leadership Qualities and long term solutions for the challenges faced by the working people. Although on some occasions I differed with Comrade Gupta mainly on political issues I always kept him in high esteem and respect till last. Our relationship was one of  the father and son. He did not like my political ideas and naturally criticized me for that but yet he was generous to openly appreciate my organizing capacity. 

Com.Gupta was a original thinker and always put the interest of the worker on the top of his mind. He was very very frank and open. He led a simple life throughout and was a shining example for Public Service with humility. At one time I requested him to come to a hotel for lunch since it was too late and we could not
reach well in time the venue of a conference. But he stubbosuly refused and told me that we should take food only at the conference venue and that too along with all our delegates. He jokingly told me that “Rich men eats when he wants but poor man eats when he gets food” Com Gupta is a builder of P & T trade union movement brick by brick. No other leader is taller than comrade Gupta in leading  the mass of workers for struggles. He was the most “abused” and “misunderstood” trade union leader in the country. There is no recreationor any other activities for him except the trade union activities. He loved every  human being. He was the only leader in the country who had to spend 13 long months in Prison just for signing the strike notice. He was also the only leader who was ousted by his own comrades from the Union Post while in prison for “not discharging the responsibilities and duties of the secretary” He donated his plot in Patel Nagar to the E III Union and on it Dadagosh Bhavan was built in New Delhi. But some unleashed false Propaganda that the said property was in the name of Mrs. Janak Gupta. Now everyone knows that the Dadagosh Bhavan property is only in the name of the Union and not in the name of any individual. I consider the following three achievements of Com.Gupta as the most important landmarks in his six decades of Union service 

1. Ensured Government Pension to all 3.5 lac employees  who were transferred to BSNL on corporatisation of DTS in October 2000. 

2. Despite ‘ban on recruitment’ more than one lakh casual and part-time employees were regularized on the eve of the corporatisation in Sep 2000. 

3. He understood the inevitability of very fast technological advancement in the Telecom sector and wanted to offset the adverse impact of modern technology and hence demanded implementation of “Restructuring” of cadres  which  has resulted in the creation of Telecom Mechanic,/ Sr TOA and TTA Cadres. Due to the Cadre restructing a casual lation previously longing for a group ‘D’ post on regularisation was not only made regular but also got the promotion to a group ‘C’ Cadre straight away. Com.Gupta was a sumbol of unity and struggle. Even after relinquishing the post of secretary general of NFTE-BSNL at ‘Saharanpur’ All India conference he never stopped worrying about the workers. His last unfinished job is to get the government Pension to the employees of MTNL for which he travelled all the way to Mumbai at the old age and filed a court case. His family is made of the employees of BSNL in particular and working class in general.He fought the ‘Verbose’and sectarians’ tooth and Nail throughout his trade Union career. Had he accepted the theory of “No promotions; only running scale” advanced by com K.G.Bose and others what would have happend to our workers? In BSNL a casual labour could become JTO. Similarly if “No modernisation; No computarisation” theory of comrades Morni Bose and Namboodri was accepted what would have happened to the BSNL to-day? When private  telecom companies had already introduced state of the art technologies Can BSNL lag behind any more?. On both the “Promotions” and “Modernisation” Com. Gupta stood firm despite nasty propaganda against him by the so called resolutionaries (?). He boldly bagained with the management for initially “ 20% Promotions” and then “Time bound Promotions” as in the case of ITS/IPS cadre officers in Central Goverment Service. He is immortal in true sense. His memory will last long among the working people of our country. Let us pledge to move forward to
strengthen the NFTE-BSNL which was built and protected by comrade OPG for long. May be that is the fittest tribute to his devoted and sincere service to all of us in Telecom Sector.
                                                                                                              C.K.Mathivanan

                                                                                                              Dy.General Secretary,
                                                                                                              NFTE-BSNL
-courtesy Chennai Telephones 

Wednesday, January 16, 2013

LICE (Examination) for promotion to the cadre of JTO under 35% quota will be held on 02-06-2013


Eligibility for 35% LDCE to the cadre of JTO

Age Limit: Below 50 years.

(I)                35% By promotion through limited internal competitive examination from amongst following Group‘C’ employees below 50 years of age as on the date of such examination of the engineering wing namely: Phone Inspector/ Auto exchange assistants / wireless operator/ transmission assistant/ Telecom Technical Assistants/Sr. Telecom office Assistant and possessing the following essential qualification and experience.

(ii)  [A] Bachelor of Engineering, Bachelor of Technology or equivalent Engineering  Degree in any of the discipline viz Telecommunication/ Electronics/ Electrical/Radio/Computer.
        OR      Bachelor of Science with Physics and Mathematics
  OR      3 years diploma in Telecom/ Electronics/ Electrical/Radio/ Computer
                                   And

 (B)  7 years regular service in post in Group ‘C’
   Eligibility for 35% LDCE to the cadre of JTO

Age Limit: Below 50 years.

(I)                35% By promotion through limited internal competitive examination from amongst following Group‘C’ employees below 50 years of age as on the date of such examination of the engineering wing namely: Phone Inspector/ Auto exchange assistants / wireless operator/ transmission assistant/ Telecom Technical Assistants/Sr. Telecom office Assistant and possessing the following essential qualification and experience.

(ii)  [A] Bachelor of Engineering, Bachelor of Technology or equivalent Engineering  Degree in any of the discipline viz Telecommunication/ Electronics/ Electrical/Radio/Computer.
        OR      Bachelor of Science with Physics and Mathematics
  OR      3 years diploma in Telecom/ Electronics/ Electrical/Radio/ Computer
                                   And

 (B)  7 years regular service in post in Group ‘C’
   

Saturday, January 12, 2013

இன்று சுவாமி விவேனந்தரின் 150-வது பிறந்த நாள்


அவரது பொன்மொழிகள் சில :

* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.

* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.

* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.

* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.

* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.

* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.

* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.

உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்

மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்ததாகும் எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும் மனிதர்களே உயர்ந்தவர்கள். மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.

அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.

மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.

கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத் தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.*

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான
வாழ்க்கை ஆகும்.*

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.*

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.*

வீரர்களே,
கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!*

இளைஞனே,
வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான

வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!*

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.*

நமது
சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை

முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்


நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.

பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.

உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன


http://sivabalann.blogspot.in/

Monday, January 7, 2013

Comrade Guptha......


Veteran P&T Trade Union leader  Com.O.P.Gupta,  was cremated today at Lodhi Crematorium in New Delhi today at 11.30 hours. A large number of BSNL, Postal, Telecom  comrades, in addition to the family, relatives and friends were present. Leaders of all Postal and Telecom unions, paid their respect to the great leader.  A condolence meeting held. Many leaders addressed the meeting.  Red Salute to Com. O.P.Gupta!

அஞ்சலிதோழர் குப்தா ஒரு சகாப்தம்

கடலூர் பொது மோலாளர் அலுவலக வாயிலில் 07/01/2013 அன்று காலை 10 மணியளவில், அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தோழர் குப்தா அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  அனைத்து தொழிற்சங்கங்களும்,  தங்களது சங்கக் கொடிகளைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

தலைவர்கள் நிகழ்த்திய அஞ்சலி  உரைகளின் தொகுப்பு

·         தோழர் குப்தாவின் சிறப்புகளையும், பெருமைகளையும், அவரது தனித்துவமான அணுகுமுறைகளையும் ஒரிரு மணிகளில் தெரிவித்து விட முடியாது. அவரது தொழிற்சங்க வாழ்வே நமக்கு ஒரு பாடம்.

·         இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு நமக்கு ஒரு பென்ஷன் திட்டத்தினைப் பெற்றுத்தந்தவர். நாம் BSNL  ஆக மாறும் போது, அவரது சிந்தனையில் அனைத்து ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, பென்ஷன், ஊதிய உயர்வு ஆகியவை மட்டுமே நிறைந்திருந்தது.

·         தபால் தந்தி – மற்றும் தொலை தொடர்புத்துறை ஊழியர்களிடையே மிகச்சிறந்த தலைவராக விளங்கியவர் தோழர் குப்தா. அவரைப் புறக்கணித்துவிட்டு நமது துறைகளின் சரித்திரத்தை எழுத இயலாது.

·         நம்புவதற்கரிய, ஆகப்பெரிய மனித நேயர். அவருடன் சற்றே பழகியிருந்தாலும் அவரது உண்மையான அன்பையும், மனைத நேயத்தையும், எளிமையினையும் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியாது. தொழிற்சங்க வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து அனைத்து தலைவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேரன்பைப் பொழிந்தவர்.

·         தற்போதைய “தாதா கோஷ் பவன் தோழர் குப்தாவிற்கு உரிமையானது. அதனை தொழிற்சங்கத்திற்காக மனமுவந்து அளித்த மகான். அத்தகைய மனம் எவருக்கு வரும்?

·         தொலைதொடர்பு மற்றும் தபால் தந்தி இயக்கத்தில் ஒரு இடதுசாரி சிந்தனையை உருவாக்கியதில் அவரது பணி மகத்தானது.

·         ஒருக்காலும் ஒருபொழுதும் EGO அவரை நெருங்கியதே இல்லை. எத்தகைய பெரிய பதவி வகித்தாலும், தற்பொழுது நம்மிடையே காண்பதற்கு கடினமாக இருக்கும் EGO பிரச்சினையினை  விட்டொழித்தவர். பழகுவதற்கு மிக எளிமையானவர். அனைத்து தரப்பு ஊழியர்களிடமும் நம்புவதற்கு அரிய எளிமையுடன் வாழ்ந்து காட்டியவர்.

·         தள்ளாத வயதிலும் சென்ற வருடம் நடந்த “பாராளுமன்றத்தினை நோக்கிய பேரணியில் தானாகவே முன்வந்து வந்து கலந்து கொண்டவர். இறுதி வரை போராட்டமும், ஊழியர்களின் நலன்களுமே அவரது சிந்தனையில் இருந்தது.

·         ஊழியர்களின் பிரச்சினைகளை மிக நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர். அனைத்து பிரச்சனைகளையும் முன் கூட்டியே அனுமானிக்கக் கூடிய தொழிற்சங்க விஞ்ஞானி. அதற்கான தீர்வுகளையும் சொல்லக் கூடிய திறமைசாலி.

·         ஆரம்ப காலங்களில் சிதறிக் கிடந்த தொழிற்சங்கங்கள் அனைத்தையும் திரட்டி UPTW  என்ற அமைப்பினை உருவாக்கிய சிற்பி.

·         P&T ஆக இருந்த போதிலும் சரி, DOT ஆக இருந்த போதிலும் சரி, பின்பு BSNL ஆக மாறிய போதும் சரி, குப்தாவின் தாக்கம் இல்லாத ஊழியர்கள் நலன் பற்றிய நிர்வாக முடிவுகள் மிகக் குறைவே.

·         தொழில் நுட்ப மாற்றங்கள் அனைத்தையும் மிக நுட்பமாக கவணிக்கும் ஆற்றலும், வல்லமையும் கொண்டவர். அத்தகைய தொழில் நுட்ப மாற்றங்கள் அனைத்தையும் ஊழியர்கள் கற்றுக் கொண்டாக வேண்டும், அதன் மூலம் பதவிகளை மேம்படுத்துதல் மற்றும் ஊதிய உயர்வுகளை பெற்றுததருதல் ஆகியவற்றை தன் உயிர் மூச்சாகக் கொண்டவர். எந்த முடிவாக இருந்தாலும் அடிமட்டத் தொழிலாளியின் நலன் அவரது கருத்தை விட்டு அகன்றதே இல்லை.

·         சிக்கலான பிரச்சனைகளை அவர் அணுகும் விதமே அலாதியானது. தனித்தன்மையானது.  எல்லா சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் முன் கூட்டியே அனுமானிக்கக் கூடியவர்.

·         அவர் இல்லாவிடில் நாம் பெற்றிறுக்கும்  பல்வேறு பதவி உயர்வுத் திட்டங்கள் கிடைத்திருக்க முடியாது.

·         “தொழிற்சங்க ஒற்றுமை என்பது அவரது உயிர் மூச்சாக இருந்தது. “Unity in Diversity” , “Unity at all Cost”   போன்றவற்றை ஒரு முழக்கமாகக் கொண்டவர்.

·         தனது 24 -வது வயதில், நமது துறையில் அவர் மேற்கொண்ட தொழிற்சங்கப் பணியினை 92-வது வயது வரை தளர்வின்றி  நடத்திக் காட்டிய போராளி.

·         நமக்குள் ஒற்றுமையை எப்பாடு பட்டேனும் கட்டிக்காப்பது மட்டுமே அத்தகைய மாமனிதருக்கு,  தோழருக்கு நாம் செலுத்தும் உண்மையான ஆஞ்சலியாகும்.

==========================================


Rural Postal Employees Union 

The Greatest and Unique leader in P&T Movement Com. O.P. Gupta, who sacrificed and dedicated entire life for the cause of Postal and Telecom Employees is no more.  Com. Gupta expired on 06-01-2013 evening leaving all the Postal, Telecom and Central Government Employees in deep sorrow. It is Great loss to the working class movement in general and to the P&T movement in particular. AIPEDEU Expressed the deepest Condolence to the bereaved family of departed leader. He left not only his sons and daughters but also thousands of followers. 

============================================
ALL INDIA RMS & MMS EMPLOYEES UNION

With profound grief we sadly announce the demise of our great unparalled leader  for 60 long years Com.O.P.Guptaji.The entire central Govt Employees, and particularly P&T employees owe their entire life to Him for his ontribution for their welfare.We pledge to carry forward his legacy. 
06-01-2013: Com.O.P.Gupta, ex Secretary General NFPTE , ex Founder General Secretary R IV the founder of NFTE and one of the tallest leaders of the P&T trade union movement passed away at 8 PM today the 6th January,2013. He was 90 years. CHQ R4 NFPE express deep condolences on the demise of Com.O.P.Gupta and directs all the branches of AI RMS &MME EU MGS &MTS of  to fly the union flag in half mast. 
============================================
AIBSNLOA CHQ

He was the inspiration and guidiling light to most of the erstwhile 
P&T and now the Telecom employees. He had a clear foresight
on various issues which confronted the employees, organised 
glorious struggles on those issues and invariably achieved 
success. His demise is an irreparable loss to the BSNL trade union  movement. 
============================================


Sunday, January 6, 2013

தோழர் குப்தா மறைந்தார்

 

இந்திய தபால் தந்தி மற்றும் தொலை தொடர்புத்துறையின் தொழிற்சங்க பிதாமகர் அருமைத் தோழர் O.P . குப்தா அவர்கள் இன்று (06/01/2013 - இரவு  எட்டு மணியளவில்) அமரரானர் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  தன்னிகரற்ற அந்த மாபெரும் தலைவருக்கு  நமது இயக்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது!