.

Monday, October 30, 2017

மத்திய சங்க செய்தி....
JE இலாக்கா தேர்வு எழுத டெலிகாம் மெக்கானிக் பயிற்சிக்காலத்தையும்  கணக்கில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மத்தியசங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது.
  
பணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்!!
31.10.2017  அன்று பணி ஓய்வு பெறும்

தோழர்  T .சந்திரபாபு   AOS/TRA  கடலூர்
தோழர் N. ரஞ்சன் TT –கடலூர்
தோழர் S.மனோகரன்  TT கடலூர் 
தோழர் A .ராஜேந்திரன்  TT விழுப்புரம்
தோழர் N.தனசேகரன்  TT கடலூர் 

 மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் 
தோழர் B.வீரமணி JE விருத்தாசலம் 
தோழியர் N.சாந்தி   TT சிதம்பரம் 

ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!! 

Friday, October 27, 2017

மத்திய அரசு உத்தரவு படி ஆதார் எண் மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு மாவட்டத்தின் சில CSC / Agency களில் சேவை கட்டணம் வசூலிப்பதாக NFTE மாவட்ட சங்கத்திற்கு நேரடியாக தகவல் வந்ததின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர்  மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனை ஏற்றுக்கொண்ட முதன்மைப் பொதுமேலாளர் திரு. R.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் பத்திரிகைக்கு செய்தி அளித்துள்ளார். இதனையும் மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் தோழர்கள் உடனடியாக மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும்.

Wednesday, October 25, 2017


 NFTE-BSNL
  BSNL கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுக...

        கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தின் பின்புறமுள்ள கட்டிடத்தின் மேல்மாடி Sunshade நேற்று இரவு 7.00 மணியளவில் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Car முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது. இதுவே பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
         (இது சம்மந்தமாக ஏற்கனவே மாவட்ட சங்கம் தொடர்ச்சியாக பிரச்சனை எடுத்துள்ளோம். குறிப்பாக திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, சிதம்பரம், கடலூர் குடியிருப்பு பிரச்சனையை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்) நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாவட்ட முழுவதுமுள்ள தொலைபேசி நிலையம், ஊழியர் குடியிருப்புகள் ஆகியவற்றை கண்காணித்து உடனடியாக சரிசெய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  கிளைச்செயலர்கள் பழுதடைந்த இலாக்கா கட்டிடங்களை கண்காணித்து, புகைப்படங்களுடன் உடனடியாக மாவட்ட செயலர் Whatsapp எண்ணிற்கு (9443212300) தெரிவிக்கவும்.

பொறையாரில் நடைபெற்ற நிகழ்வுபோல் துயரசம்பவம் நடைபெறாமல் இருக்க நாம் விழிப்புடன் இருப்போம்.


NFTE கடலூர் மாவட்ட சங்கம்

Friday, October 20, 2017

NFTE-  BSNL,     TMTCLU,      TAMILNADU CIRCLE.

காண்டிராக்ட் ஊழியர்கள் பிரச்சனை
சமரச  பேச்சுவார்த்தை

20/10/2017 அன்று காலை 11 00 மணியளவில் திரு.அண்ணாதுரைALC அவர்களிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தோழர்கள் P.காமராஜ் ,மாநிலதலைவர்   R. செல்வம் பொதுச்செயலர், என்.கே.சீனுவாசன் சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாக பிரதிநிதி ராஜசேகரன்            (AGM admn ) கலந்துகொண்டனர்.
v போனஸ் சட்டப்படி ரூ7000/= தமிழகத்தில் BSNL காண்டிராக்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை எடுத்து கூறியபின்,,நிர்வாகம் போனஸ் குறித்து காண்டிராக்டர் மட்டுமே பொறுப்பு என கூறியது.  ALC CLIAM மனு தாக்கல் செய்திட ஆலோசனை கூறியுள்ளார். அதன் மூலம் மாநில நிர்வாகத்திற்க்கு உத்திரவு வழங்க முடியும் என கூறினார்..

v பணிதன்மை கேற்ற ஊதியம் வழங்க நிர்வாகம் உத்திரவு வெளியிட்டாலும் அமுலாக்கம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கால கெடு விதிக்க வலியுறுத்தியபின், ஜனவரி 31க்குள் அமுலாக்கம் செய்திட மாநில நிர்வாக்ம் வழிகாட்டுதல் உத்திரவு வெளியிட ஏற்றுக்கொண்டது.

v மற்ற பிரச்சனைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்க ஏற்கப்பட்டது.


தமிழ் மாநில NFTE சங்கத்தின்  ஆதரவு பெற்ற ,AITUC  சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  ஒரே ஒப்பந்த ஊழியர் சங்கம்   TMTCLU சங்கம் ,




Wednesday, October 18, 2017

வருந்துகிறோம்!
கடலூர் OT தொலைபேசி நிலைய தோழர் J.சித்தார்த்தன் JE அவர்களின் தந்தையார் இன்று இரவு (18.10.2017) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை (19.10.2017) மாலை 3.00 மணியளவில் கடலூர் OT சான்றோர்பாளையம் இல்லத்தில் நடைபெறும். 

Tuesday, October 17, 2017


Junior Engineer( TTA) இலாக்காத்தேர்வு
2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான இலாக்காத்தேர்வு அறிவிப்பு. தேர்வு ONLINE முறையில் நடைபெறும்.
தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774
OC/OBC பிரிவு = 591... SC பிரிவு=122... ST பிரிவு= 61
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் – 15/12/2017
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/01/2018
தேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018
தேர்வு OBJECTIVE ரகம்.
தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும்
01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது
இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.
01/07/2016 அன்று 5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும்.
தோழர்களே தயாராவீர்!!

ஒப்பந்த ஊழியர் போனஸ்
2017
தோழர்களே!..
           நமது  NFTE, BSNLEU,  TMTCLU, TNTCWU  நான்கு சங்கங்களின் சார்பாக  16-10-2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம்  தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர் NFTE,                           தோழர் A. அண்ணாமலை மாவட்ட தலைவர் BSNLEU, தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் TMTCLU, தோழர் S.V.பாண்டியன் மாவட்ட தலைவர் TNTCWU , ஆகியோரின் கூட்டுத் தலைமையில்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இந்தக்  தர்ணா கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும், 50க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும், கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் அனைத்து சங்க மாநில, மாவட்ட , கிளை சங்க நிர்வாகிகள்  கண்டன உரையாற்றினார்கள்.   தர்ணா போராட்டத்தினை வாழ்த்தி  தோழர் R.அசோகன் CWC Member ( SNEA ) உரையாற்றினார். இறுதியாக தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU,கடலூர் நன்றியுரை கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது.
         நமது  தொடர்  போராட்டத்தின் காரணமாக  நிர்வாகம்   சென்ற ஆண்டு இருந்த EXSERVICEMEN SECURITY-PONDY, NACCS- MADURAI, SRI BALAJI AGENCIES  ஆகியோரிடம்  பேசி  ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்  உறுதிபட தெரிவித்தனர். அதன் விளைவாக   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது.
Zone – I (NACCS- MADURAI) – Rs 2130  Sri BALAJI AGENCIES) Rs 2173 = Rs 4303/-
EOI - SRI BALAJI AGENCIES  - Rs 3600/-
Cable and other Zone Sri BALAJI AGENCIES– Rs 2256 +  (EXSERVICEMEN SECURITY-PONDY) Yet to be Credited .
        SRI BALAJI AGENCIES  01-06-2017   முதல் ஒப்பந்த எடுத்ததன் காரணமாக இந்த  நான்கு மாத்திற்கான போனஸ்  தருவதாகவும், மீதி  தொகையினை மார்ச்-2018ல் தருவதாகவும்  நிர்வாகத்திடம் உறுதிபட தெரிவித்துள்ளார். அதனை நமது மாவட்ட செயலர்களிடம்  முதுநிலை பொதுமேலாளர் அவர்கள் தெரிவித்ததுமட்டுமில்லாமல் தர்ணா போராட்டத்தினை   முடித்து கொள்ளுமாறும், போனஸ் பிரச்சனை  இனிமேல் வராமல்  இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் கூறினார். அதன்படி  நமது இந்த தர்ணா போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
        குறிப்பு:- சென்ற ஆண்டு  ரூபாய் 2000/- கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது
        இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி,,,,ஆதரவளித்த  SNEA, AIBSNLEA மாவட்ட சங்கங்களுக்கும் நன்றி...
     தோழமையுடன்
NFTE – BSNLEU – TMTCLU - TNTCWU

மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.




Monday, October 16, 2017


BSNLEU                 NFTE                 SNEA           AIBSNLEA  SEWA-BSNL          TEPU             AIGETOA              
NFTE-STR
அனைத்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
11.1.2017 முதல் நடைபெற வேண்டிய ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தக் கோரியும், 2வது ஊதிய மாற்றக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும்,

 BSNL யை நலிவடையச் செய்யும் துணை டவர் நிறுவனத்தை உருவாக்கத்தை கண்டித்தும், 

இன்று 16.10.2017 மதிய உணவு இடைவேளையில்
 கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலக வாயிலில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் 
ஆர்ப்பாட்டம் 
நடைபெறும்.


அனைவரும் கலந்துகொள்வோம்!! ஆர்ப்பரிப்போம்!!

Thursday, October 12, 2017

NFTE- TMTCLU
மாவட்டச் சங்கங்கள், கடலூர்

ஏன் இந்த போராட்டம் என்று எண்ணி பார்க்க வேண்டாமா???...
காலதாமதம் என்றால் காரணங்கள் வேண்டாமா???....
01-06-2017 கடலூர் மாவட்ட நிர்வாகம்    2 மணி நேரம், 4 மணி நேரம், 6மணி நேரம் , 8மணி நேரம் வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு ஒப்பந்த தொழிலாளரை வைத்து  பணி செய்வதற்கு சேவை கட்டணமாக ஒப்பந்தகாரருக்கு      ( Service Charge)  நமது BSNL  நிர்வாகம் சுமார் ரூ69/- வழங்கப்படுகிறது. இதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஒப்பந்த ஊழியரால் ஒப்பந்தகாரருக்கு  ஒரு  நாள் சர்வீஸ் சார்ஜ் ரூ69/- 
மாதத்திற்கு     26 X 69 = 1794                                 ஆண்டிற்கு  1794 X 12 = 21528
ஒரு தொழிலாளருக்கு  சர்வீஸ் சார்ஜாக  ஒரு ஆண்டிற்கு பெறப்படும் தொகை     =ரூ 21528/-
சுமார் 430 ஒப்பந்த தொழிலாளர் மூலம் பெற்றப்படும் தொகை ரூ 21528 X 430= 9257040

ஆக மொத்தம் BSNL  மாவட்ட நிர்வாகம் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஒப்பந்தகாரருக்கு  ரூ  92,57,040/-  ( தொன்னூற்று இரண்டு லட்சத்து ஐம்பத்தேழாயிரத்து நாற்பது ரூபாய் ) வழங்குகிறது.

இதில் சுமார் 430 ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸாக              7000  X 430= 3010000/-
(முப்பது லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஆகும் )
9257040 – 3010000 = 6247040  
ஒப்பந்த தொழிலாளருக்கு போனஸ்  கொடுத்தது போக மீதம் அவருக்கு கிடைக்கும் லாபம் மட்டும் ரூ6247040/-
( அறுபத்திரண்டு லட்சத்து நாற்பத்தேழாயிரத்து நாற்பது ரூபாய் )
ஒப்பந்தகாரர் கட்டும் EMD பணத்தினை காட்டிலும் இது  அதிகம்...

இப்போது சிந்தியுங்கள் தோழர்களே  நமது போரட்டத்தின் நியாயத்தை...
இது நமது உழைப்பால் கிடைக்கும் பணம்,
இது  நமது BSNL  நிறுவனத்தின் பணம்….
இது கொள்ளை போக அனுமதியோம்...
போராடுவோம்... வெற்றி பெறுவோம்...
தோழமையுடன்
NFTE-  TMTCLU

      மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.

Wednesday, October 11, 2017

இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.7000 போனஸ் வழங்கக்கோரி BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA , TMTMCLU, TNTCWU உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்


சிதம்பரம் 


திண்டிவனம்


கள்ளக்குறிச்சி




 விழுப்புரம்