கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தின்
பின்புறமுள்ள கட்டிடத்தின் மேல்மாடி Sunshade
நேற்று இரவு 7.00 மணியளவில் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக கீழே
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Car முற்றிலுமாக
சேதமடைந்துவிட்டது. இதுவே பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் சேதம்
ஏற்பட்டிருக்கும்.
(இது சம்மந்தமாக ஏற்கனவே மாவட்ட சங்கம்
தொடர்ச்சியாக பிரச்சனை எடுத்துள்ளோம். குறிப்பாக திண்டிவனம், உளுந்தூர்பேட்டை,
சிதம்பரம், கடலூர் குடியிருப்பு பிரச்சனையை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு
வந்துள்ளோம்) நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாவட்ட முழுவதுமுள்ள தொலைபேசி நிலையம்,
ஊழியர் குடியிருப்புகள் ஆகியவற்றை கண்காணித்து உடனடியாக சரிசெய்திடுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
கிளைச்செயலர்கள் பழுதடைந்த இலாக்கா கட்டிடங்களை கண்காணித்து,
புகைப்படங்களுடன் உடனடியாக மாவட்ட செயலர் Whatsapp
எண்ணிற்கு (9443212300) தெரிவிக்கவும்.
பொறையாரில் நடைபெற்ற நிகழ்வுபோல் துயரசம்பவம் நடைபெறாமல் இருக்க
நாம் விழிப்புடன் இருப்போம்.
NFTE கடலூர் மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment