Sunday, December 30, 2018

இன்று 31.12.2018 பணி ஓய்வு பெறும் 
கடலூர் பொது மேலாளர் அலுவலகத் தோழியர்கள் 
C.சம்மனசு மேரி O.S
உஷா கோபாலகிருஷ்ணன் O.S
ஆகியோரின்
பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய 
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Saturday, December 22, 2018


Image result for prapanjan writer
அஞ்சலி…..
பிரபஞ்சத்தின் ஒருதுளியெனத்தான்
உன் இருப்பு இருந்தது...
ஆனால் படைப்புலகில்
நீயும் ஒரு சூரியனாகத்தான்
இருந்தாய்...

பெண்மையை போற்றிய
பெருந்தகைநீ...
உன்எழுத்துக்கள்
உழுதமனங்களில்
என்றும் பசுமையே
வேர்விட்டிருக்கும்.

புதுவைஉன்னால்
இன்னொரு மகுடத்தை
சுமந்துகொண்டிருந்தது..
சிலவெற்றிடங்களை
எதைக்கொண்டும்
நிரப்பமுடியாது.

மென்மையான
உனதுகுரல்...
சாந்தமானகுணம்
ஒரு எழுத்தாளனுக்கானதல்ல..
ஆயினும் உனது போர்குணம்
எதற்கும் சமரசம்
செய்துகொண்டதில்லை...

எழுத்துச்சிற்பியே
வாழும்போது
வாழ்ந்தவன் நீ...
போய்வா..
தமிழிருக்கும்வரை
நீயும் இருப்பாய்.

NFTE செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நமது தோழர் சிரில்  அறக்கட்டளை தமிழ் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்Image may contain: 5 people, including Sridhar Ramachandran, people smiling, people standing
Wednesday, December 19, 2018


CMD உடன் சந்திப்பு:
நமது அகில இந்தியத்தலைவர் மற்றும் பொதுச்செயலர் ஆகியோர் CMD-யை சந்தித்தனர் தலைவர்கள் தற்போது நிலவியுள்ள நிதிநெருக்கடிபற்றி விவாதித்தனர், மேலும்   நிர்வாகம் தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அது கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து துவங்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். GPF, ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவைகளை அரசுக்கு செலுத்தாமல் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட வங்கிக் கடன்கள் வங்கிகளுக்கு செலுத்தப்படாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டினர். CMD  தற்போதைய நிலைமை 15 நாட்களுக்குள் தளர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.


Tuesday, December 18, 2018


தோழர் PS அவர்களின் இறுதி சடங்கு இன்று(18.12.2018) மாலை 7.00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெறும். 

விலாசம்: எண் 6 கல்லூரி ஆசிரியர் நகர் (சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடிகோண்டூர் அஞ்சல்கடலூர் 


வருந்துகிறோம்…
கடலூர் வெளிப்பகுதித் தோழர் S.நவாப்ஜான் TT (FriendsNagar Exge) அவர்களின் தாயார், திரு.ஷேக் (Retd Cable Splicer) அவர்களின் மனைவி இன்று 18.12.2018 மதியம் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி நாளை 19.12.2018 கடலூர் வண்ணாரப்பாளையம் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

Monday, December 17, 2018
தோழரது இறுதி நிகழ்வு புதன்கிழமை(19.12.2018) காலை அவரது இல்லத்தில் நடைபெறும். 
விலாசம்: எண் 6 கல்லூரி ஆசிரியர் நகர் (சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் 


அஞ்சலி
கடலூர் முன்னணித் தோழரும், நீண்ட காலமாக மாவட்டப் பொருளாளர் பணியில் சிறப்பாக மணியாற்றியவரும், மாவட்ட செயலராக பணிபுரிந்தவருமான,  அனைவராலும் PS என்று அழைக்கப்படும் தோழர் P. சுப்ரமணியன் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

தோழரது விலாசம்: எண் 6 காலேஜ் ஆசிரியர்கள் நகர்,(சாவடி புத்துக்கோவில் அருகில்) உண்ணாமலை செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் 

Wednesday, December 12, 2018


முன் வைக்கப்படும் கோரிக்கைகள்

  • 1.     அக்டோபர், நவம்பர் மாத சம்பள பிரச்சனை
  • 2.     EPF, ESI , BONUS முறைகேடுகள்
  • 3.     வேலையிலிருந்து நீக்கப்பட்ட தோழர்களுக்கு  உடணடியாக பணி
  • 4.     ஆட்குறைப்பு
  • 5.     பணி மாற்றல்கள்
  • 6.     2009 நிலுவை தொகை
  • 7.     பணித்தன்மைக்கேற்ப ஊதியம்
  • 8.     தொழிலாளர் நல ஆணையத்தில் ஒப்பந்தகாரர் மீது புகார் அளிப்பது


Friday, December 7, 2018

TMTCLU 

மாவட்ட செயலக கூட்டம் - பண்ருட்டி 


8-12-2018 அன்று காலை 9.00 மணியளவில்  பண்ருட்டி AITUC  தொழிற்சங்க மாவட்ட அலுவலகத்தில்  நமது TMTCLU சங்கத்தின் மாவட்ட செயலக கூட்டம் நடைபெறும். கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட  பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளவும்.

Sunday, December 2, 2018செயலாளர்-டெலிகாம் மற்றும் AUAB ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இன்று 2.12. 2018 நடைபெற்றது. 
அரசு விதிமுறைப்படி 4 ஜி ஸ்பெக்ட்ரம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் பிஎஸ்என்எல் மூலம் ஓய்வூதிய பங்களிப்பு செலுத்துதல் ஆகியவற்றில் ஒதுக்கீடு செய்வதற்கான சிக்கல்களில் முன்னேற்றங்கள் உள்ளன. 
இருப்பினும், 3 வது சம்பள மறுபரிசீலனை பிரச்சினையில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்த பிரச்சினையின் நிலை குறித்து செயலாளர், டெலிகாம் அளித்த பதிலில் நம்பிக்கை இல்லை.
இத்தகைய சூழ்நிலைகளில், தகவல் தொடர்புத்துறை அமைச்சருடன் கலந்துரையாட வாய்ப்பளிக்கும் வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு, AUAB தலைவர்கள் ஒரு வாரம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது. அமைச்சருடனான   சந்திப்பில் பயனுள்ள தீர்வு காணப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தம் 10-12-2018 அன்று 00:00 மணி முதல் தொடங்கும்.

Saturday, December 1, 2018வருந்துகிறோம்
கடலூர் CAF Section-ல் பணிபுரியும் தோழர் S.ரமேஷ் Asst Off.Supdt அவர்களின் தகப்பனார் இன்று 1.12.2018 அதிகாலை  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வருந்தும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம். அன்னாரது இறுதி சடங்கு இன்று 1.12.2018 மாலை 4.00 மணியளவில் கடலூர் பீச்ரோடு தீயணைப்பு நிலையத்தின் அருகிலுள்ள திருவள்ளுவர் நகர், 29ம் இலக்கமுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Friday, November 30, 2018

வாழ்த்துகிறோம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற 18வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நமது தமிழக அணி இரண்டாம் இடத்திற்கு தகுதி பெற்றுள்ளது. அணியில் இடம் பெற்ற நமது கடலூர் இளம் தோழர் A.சகாயசெல்வன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வெற்றி வாழ்த்துக்கள். 


பணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்…


இன்று 30.11.2018 பணி ஓய்வு பெறும்

திரு. V.சங்கர் AGM Marketing கடலூர்

தோழர் P.ஃப்ரான்சிஸ் TT- கெடார்-விழுப்புரம்

இவர்களின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்..

Thursday, November 29, 2018

அனைத்து மத்திய சங்கங்கள் ஆதரவு…..
AUAB ஆல் வழங்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து பிரதான மத்திய தொழிற்சங்கங்களும் மாண்புமிகு மானோஜ் சின்கா மத்திய அமைச்சர் ( தொலைத்தொடர்பு) அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளன. அவற்றில் ”நாடு முழுவதும் டிசம்பர் 3ல் BSNL அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நட்த்தவுள்ள போராட்டத்திற்கான கோரிக்கைகளை மிகவும் நியாயமானதாகக் கருதுவது மட்டுமல்லாமல் BSNL ல் அவர்களின் உறுதிப்பாட்டையும் காட்டுகின்றன" ஆகவே தாங்கள் தலையிடுமாறு வலியுறுத்துகிறோம்”  எனக் கடிதம் கொடுத்துள்ளன.பேருருவாய் எழுவோம், பெரும்பணி முடிக்க!
டிசம்பர் 3 முதல் நாடுதழுவிய
காலவரையறையற்றப் பெருந்திரள் வேலைநிறுத்தம் !
BSNL நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (AUAB கூட்டமைப்பு) 2018 டிசம்பர் 3ம் தேதி தொடங்கி ஒரு சக்தி மிக்க, பெருந்திரள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளது.  கோரிக்கை, மக்கள் பணியாற்ற BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றையை உடனே வழங்கு, தாமதமின்றி ஊதிய மாற்றத்தை அமலாக்கு, ஓய்வூதிய மாற்றத்தைச் செய், ஓய்வூதிய பங்களிப்பில் உள்ள முரண்பாடு களைந்து, ஊழியர்கள் பெறும் உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடு ( அதாவது, தவறான கணக்கீட்டில் நிறுவனத்திடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான தொகையைத் திரும்ப வழங்கு) மற்றும் முந்தைய 2வது ஊதிய மாற்றக்குழுவின் போது தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வை என்பதே ஆகும். 


Tuesday, November 27, 2018போராட்டம் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து 28.11.2018 நடைபெறவிருந்த தர்ணாப் போராட்டத்தை ஒட்டி நமது கடலூர் பொதுமேலாளர் தனது குடும்ப துக்க நிகழ்வுக்கு இடையே 26.11.2018 மதியம் 1.00 மணியளவில் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்திட கடலூர் வந்திருந்தார். தோழர்கள் இரா.ஸ்ரீதர், D.குழந்தைநாதன், A.S.குருபிரசாத், R.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற விவாதத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் பொதுமேலாளர் தனது நிகழ்வுகளை முடித்தபின் இரண்டு நாட்களில் மீண்டும் விவாத்திக்கலாம் எனக்கூறியதன் அடிப்படையில் நமது போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.  

Sunday, November 25, 2018

நினைவைப் போற்றுவோம்

கடலூர் மாவட்  BSNL  குடும்ப உறுப்பினர்கள்
என்பதற்குப் பெருமை கொள்வோம் !

நன்றி தோழமைகளே !

அன்புடையீர் !        வணக்கம்
            நீறு பூத்த நெருப்புமேகம் மூடிய நிலவுதுடைக்கப்படாத வைரம்தூசு படிந்த கண்ணாடிதூண்டப்படாத விளக்கு . . . இப்படி இவை எல்லாமே கூட்டுப் புழுவாய் சலனமற்று இருப்பவைதான்சந்தர்ப்பமும், வேளையும் வாய்க்கும்போது தன் குணம் காட்டி தங்கமாய் தகதகக்கும், வண்ணச் சிறகசைத்து வான் பறக்கும் !


          நமது மாவட்டத்தைச் சேர்ந்த BSNL குடும்ப உறுப்பினர்கள்ஒப்பந்த ஊழியர் தொடங்கி, அதிகாரி ஈராய்அத்தனை பேரும் அப்படித்தான்!

          ’கோடிக்கால் பூதமடாஎன்று தோழர் ஜீவா தொழிலாளர்களைக்கோபத்தின் ரூபமடாஎன்பார்கோபத்தில் மட்டுமல்ல, வாரி அணைப்பதில், ஓடோடிச் சென்று உதவுவதிலும் நமது தோழர்கள் கோடிக்கால் ரூபத்தின் வாரிசுகள் தாம்.
         
கோவையிலே நமது மாநிலச் சங்கச் செயற்குழு அறைகூவலை ஏற்று, தமிழகத்திற்குச் சோறிடும் அன்னையாம் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பைத் துடைக்க நிவாரண நிதி திரட்டும் பணியில் நமது மாவட்டத்தின் பங்கைச் செலுத்த வேண்டுகோள் விடுத்தோம்.
          தாங்கள் யார் என்பதை நமது தோழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
நிவாரண உதவி என்பது காலத்தே உடனே செய்வது என்ற வகையில் நமது மாவட்ட அதிகாரிகளும் ஊழியர்களும், நண்பர்களும் தாரளமாக முன்வந்து வழங்கி உள்ளனர்.
          கடலூர் மாவட்டப் பங்காக நாம் இதுவரை ரூ40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) தொகையை அனுப்பி வைத்து விட்டோம்.  (நிவாரண உதவி, அத்தியாவசிய உடனடித் தேவை பொருட்களாக   வழங்கிட      குடந்தை


மாவட்டச் செயலர் தலைமையில் செயல்படும் நிவாரணக்குழுத் தோழர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்)

இதுவரை நிதி அளித்த அத்தனைத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், நண்பர்களுக்கும்  --    விழியோரம் நீர் பெருக்கி,
நமது நெஞ்சத்தின் ஈரத்தால் நன்றி சொல்வோம் !

          உங்களை எண்ணித்தான் ஒரு கவிஞன் இப்படிப் பாடினான் போலும்,

                                     ” இந்தப் பூமிப்பந்தின்
                               எந்த ஒரு மூலையில்
                               கண்ணீர் சிந்தினாலும்,
                              அதைத்  துடைக்க எம்
                               சுட்டுவிரல் நீளும்! ”               
               
நன்றி தோழமைகளே!...

குறிப்பு : சொர்க்கத்தின் கதவை கடவுள் திறந்தே தான் வைத்திருக்கிறான், கடைசி மனிதன் வருவதற்காகவும்என்பார்கள்நன்கொடை வழங்காத தோழர்கள், உதவி செய்ய முடியாமல் போனதாக வருந்த வேண்டாம்இன்றைக்குஇப்போது -- தாருங்கள்அடுத்த தவணையாக அனுப்பி வைப்போம்
                                                                                        தோழமை வாழ்த்துக்களுடன்,
                                                                                                     இரா.ஸ்ரீதர்

                                                                                        மாவட்டச் செயலாளர், NFTE