அஞ்சலி…..
பிரபஞ்சத்தின் ஒருதுளியெனத்தான்
உன் இருப்பு இருந்தது...
ஆனால் படைப்புலகில்
நீயும் ஒரு சூரியனாகத்தான்
இருந்தாய்...
பெண்மையை போற்றிய
பெருந்தகைநீ...
உன்எழுத்துக்கள்
உழுதமனங்களில்
என்றும் பசுமையே
வேர்விட்டிருக்கும்.
புதுவைஉன்னால்
இன்னொரு மகுடத்தை
சுமந்துகொண்டிருந்தது..
சிலவெற்றிடங்களை
எதைக்கொண்டும்
நிரப்பமுடியாது.
மென்மையான
உனதுகுரல்...
சாந்தமானகுணம்
ஒரு எழுத்தாளனுக்கானதல்ல..
ஆயினும் உனது போர்குணம்
எதற்கும் சமரசம்
செய்துகொண்டதில்லை...
எழுத்துச்சிற்பியே
வாழும்போது
வாழ்ந்தவன் நீ...
போய்வா..
தமிழிருக்கும்வரை
நீயும் இருப்பாய்.
NFTE செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
மறைந்த
எழுத்தாளர் பிரபஞ்சன் நமது தோழர் சிரில் அறக்கட்டளை
தமிழ் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்
No comments:
Post a Comment