Sunday, July 31, 2016

பணிஓய்வு பாராட்டு-உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை தோழர் P.மணிபாலன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு கூட்டம் 27.7.2016 அன்று உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் தோழர் K.அம்பாயிரம் தலைமையில் நடைபெற்றது. 

 
  பணிஓய்வு பாராட்டு-விருத்தாசலம்

விருத்தாசலம் தோழர் A.செல்வராஜ் அவர்களின் பணிஓய்வு பாராட்டு விழா 28.7.2016 அன்று கிளைத் தலைவர் தோழர் D.அருள் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாநில,மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் உட்பட ஓய்வுபெற்ற தோழர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி பேசினர்.
Saturday, July 30, 2016


சம்மேளனச்செயலர் தோழர் ஜி.ஜெயராமன் 
அலுவலகப்பணி பணியினின்று நிறைவு பெறுகிறார்.


பண்ருட்டி ஜி.ஜெயராமன் 31.07.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். நமது ஒப்பற்ற சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலர். முந்நாள் தமிழ் மாநில சங்கத்தின் ஆற்றல் மிகு மாநிலப்பொருளர். முந்நாள் கடலூர் மாவட்டச்செயலர் என வரலாறு பல படைத்தவர்.
ஓய்விலாசூரியனாய் இயக்கப்பணியைத்தொடரும் ஜி.ஜெயராமன் நமது தோழர்களின் இயக்க செயல்பாட்டுக்கு ஊற்றுக்கண். தனக்கு எத்தகைய பேராபத்து வந்தபோதும் நேர்மையற்ற நிர்வாகத்தின் ஓரம் சாராதவர் தமிழ் மாநில சங்கப் பொருளராகப் பொறுப்பில் இருந்த போது சென்னை மாநகரில் நமது மாநில சங்ககக்கட்டிடம் கம்பீரமாய் எழுந்து நிற்பதற்கு ஆதாரமாகி உழைத்தவர். கடலூரில் தமிழ் மாநில நான்காம் பிரிவு சங்கத்தின் மாநாடு நிகழ்ந்தபோது NFPTE சங்கத்தின் செங்கொடி உயர்த்தி ஆனைமீது அமர்ந்து வெற்றிக்கோஷமிட்ட சங்கப் பொறுப்பாளி.
கடலூரின் பெருமைமிகு தோழர்கள் தொழிற்சங்க வரலாற்றில் தடம் பதித்த வழிகாட்டிகள் ரகு, ரெங்கனாதன் இவர்களுக்கு உற்ற தோழமை. தோழர்கள் இடையே மேடை ஏறி பேசத்துவங்கிவிட்டால் தான் ஏற்றுகொண்ட கொள்கையை விவாதிப்பதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். தமிழின் பாசமிகு அரண். தமிழ் இலக்கியத்திற்கு தொழிற்சங்க அரங்கிலே குளிர் நிழல் ஈந்த ஒரு எடுத்துக்காட்டு.  தமிழ் ஆழமாய் அறிந்த மார்கசீயவாதி. கடலூர் தமிழ்ச்சான்றோர்கள் பலரின் அன்பிற்குப் பாத்திரமானவர்.
ஒரு கவிஞர். வெளிச்சப்புள்ளிகள்- என்னும் கவிதைத்தொகுப்பு, வள்ளளலார் ஒரு சமூக ஞானி, மக்கள் பக்கம் வள்ளலார் -என்னும் உரை நடை நூல்கள் தந்தவர். ஆழ்ந்த தமிழ் அறிவுப்பெட்டகம் புதுக்கவிதைக்காரர் ஞானக்கூத்தன் அவர்களால் 'ஒரு நல்ல கவிஞர்' என பாராட்டப் பெற்றவர். நாமும் நமது தோழர் தமிழ்ப்பற்றினைப் போற்றி வணக்கம் சொல்வோம்.


தொழிற்சங்கப்பொறுப்புக்கள் கூடிச் சவால்களை சந்திக்கும் தக்க ஒரு தருணம் இது.
அவரோடு நாம் நம்மோடு அவர்
சவால்கள் எதுவரினும் எதிர்கொள்வோம்
நமக்கு முன்னால் 
நமது இயக்கச்செங்கொடி மட்டுமே.
இன்றும் என்றும்

மாவட்ட சங்கம் - கடலூர்

Friday, July 29, 201631.7.2016 அன்று பணி ஓய்வு பெறும் நமது சம்மேளனச் செயலர் தோழர்.G.ஜெயராமன் அவர்களின் பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

31.07.2016 பணி ஓய்வு பெறும் தோழர்கள்...
தோழர் P.மணிபாலன் Off.Supdt உளுந்தூர்பேட்டை
தோழர் R.ஜெயராஜ் Telcom Techn  கடலூர்
தோழர் D.இராஜேந்திரன் Off.Supdt  நெய்வேலி டவுன்ஷிப்
 தோழர் A.செல்வராஜ் Telcom Techn  விருத்தாசலம்
தோழர் V.ஜகன்னாதன் Off.Supdt அரகண்டநல்லூர்
தோழர் P.அய்யானரப்பன் Telcom Techn  கடலூர்
தோழர் T.சுந்தர் Telcom Techn  பண்ருட்டி
தோழர் V.சுப்புராயன் Asst,Telecom Tech, கடலூர் -OT
மற்றும்
திரு.P.வெங்கடேசன் DE IMPCS கடலூர்

தோழர்களுக்கு  கடலூர் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வருந்துகிறோம்
கடலூர் தோழர் R.ஜெயராஜ் (TT-Power Plant)அவர்களின் தந்தை இன்று (29.7.2016)அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடுப்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 4.00 மணிக்கு ஷண்முகம் பிள்ளைத்தெருவில் (ARLM பள்ளி அருகில்) உள்ள இல்லத்தில் நடைபெறும்.

Thursday, July 28, 2016

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை குறித்து
நமது முதன்மைப் பொதுமேலாளர் 27/07/2016 கடிதத்தின் சாரம்சம்
                                                                            
  •••       நீதிமன்ற வழக்கு முன்னுரிமை  •••

                                                பொருள் ஒப்பந்த ஊழியர்கார்பரேட் அலுவலக
                                  உத்தரவுகள்அமலாக்கம் --- தொடர்பாக   

        மேதகு சென்னை உயர்நீதி மன்ற ஆணையை ஏற்று கார்பரேட் அலுவலகமும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 20—05—2009 முதல் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..

        சில மாவட்டங்கள் இந்த உத்தரவை அமல்படுத்திய போதும் வெவ்வேறு வித்தியாசமான தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளனஇது மேதகு சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு எதிரானது.  பலமுறை வழிகாட்டுதல்கள் வழங்கி அறிவுறுத்திய பிறகும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை, எனவே, கோர்ட் அவமதிப்பைத் தவிர்க்க கீழ்க் கண்ட வழிகாட்டுதல் தரப்படுகிறது

(a)    தரப்பட வேண்டிய நிலுவைத் தொகைக்கான உரிய பில்லை அந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப உடனே சமர்ப்பிக்கும்படி தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் அவசரமாகக் கடிதம் அனுப்பவும்
(b)   (அதே பொழுது பில்வரும்வரைக் காத்திராமல்) அலுவலகத்தில் கைவசமுள்ள ரெக்கார்டுகள் அடிப்படையில் தரப்பட வேண்டியிருக்கும் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு, நிதி ஒதுக்கீட்டு ஒப்புலைப் பெற்று தயாராக வைக்க வேண்டும். இதனால் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் பில்லை சமர்ப்பித்ததும் உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்க ஏதவாக இருக்கும்.

பிரச்சனை எண் 2 முதல் 4 வரைஒவ்வொரு மாதமும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய காலத்தில் (அதாவது, 7ம் தேதி அல்லது அதற்கு முன்பு) சம்பளம் வழங்கப்படுதல், EPF / ESI பிடித்தம் முறையாக செய்யப்படுவது, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது முதலானவை தொலைத் தொடர்பு மாவட்டத் தலைமையால் நியமிக்கப்படும் நோடல் அதிகாரி”  முன்பு ஒப்பந்ததாரர்களால் அமல்படுத்தப்படுகிறதா என்பன குறித்து ஒவ்வொரு மாவட்டமும் அறிக்கை / விமர்சனக் குறிப்புகளோடு அனுப்ப வேண்டும்.

        ஒவ்வொரு ஒப்பந்த ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளம் பிடித்தம் முதலிய விவரங்களோடு கூடிய சம்பளப் பட்டியல் ( wage slip) வழங்கப்படுதல் உறுதி செய்ய வேண்டும்.

        மேலும், ஒவ்வொரு ஒப்பந்த ஊழியர்களுக்குமான  eபாஸ் புக், UAN எண்ணை ஒப்பந்ததாரர்கள் பெற்றுத் தர வேண்டும் என்பது ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தப்பட வேண்டும்
        ஒப்பந்ததாரர்களிடமிருந்து இந்த தகவல்கள் குறித்து அறிக்கை பெறப்பட வேண்டும்.

பிரச்சனை எண் 5  :  ஒப்பந்த டெண்டர் கன்டிஷன்படி ஒப்பந்ததாரர்கள் உரிய போனஸ் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

                மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை மாநில நிர்வாகம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், அதாவது ஒரு வாரத்தில் , மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

                எனவே மாவட்டங்கள் ஒவ்வொரு பிரச்சனை மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை (Action Taken Report) ஒரு வாரத்திற்குள் கீழ்க் கண்ட அதிகாரிக்கு அனுப்பவும்,

                அடுத்த வாரம் அடுத்த பரிசீலனைக் கூட்டத்தில் பரிசீலிக்க வசதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
                                                                                  (-ம்) M.S. திருபுரசுந்தரி
                பிரச்சனை மிக மிக அவசரம்.                            DGM (Admn) O/o CGM, BSNL, CNI