ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை குறித்து
நமது முதன்மைப் பொதுமேலாளர் 27/07/2016 கடிதத்தின் சாரம்சம்
••• நீதிமன்ற வழக்கு – முன்னுரிமை •••
பொருள் ஒப்பந்த ஊழியர் – கார்பரேட் அலுவலக
உத்தரவுகள் – அமலாக்கம் --- தொடர்பாக
மேதகு சென்னை உயர்நீதி மன்ற ஆணையை ஏற்று கார்பரேட் அலுவலகமும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 20—05—2009
முதல் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..
சில
மாவட்டங்கள் இந்த உத்தரவை அமல்படுத்திய போதும் வெவ்வேறு வித்தியாசமான தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளன. இது
மேதகு சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு எதிரானது. பலமுறை
வழிகாட்டுதல்கள் வழங்கி அறிவுறுத்திய பிறகும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை, எனவே, கோர்ட் அவமதிப்பைத் தவிர்க்க கீழ்க் கண்ட வழிகாட்டுதல் தரப்படுகிறது
(a)
தரப்பட வேண்டிய நிலுவைத் தொகைக்கான உரிய பில்லை அந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப உடனே சமர்ப்பிக்கும்படி தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் அவசரமாகக் கடிதம் அனுப்பவும்
(b)
(அதே பொழுது பில்வரும்வரைக் காத்திராமல்) அலுவலகத்தில் கைவசமுள்ள ரெக்கார்டுகள் அடிப்படையில் தரப்பட வேண்டியிருக்கும் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு, நிதி ஒதுக்கீட்டு ஒப்புலைப் பெற்று தயாராக வைக்க வேண்டும். இதனால் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் பில்லை சமர்ப்பித்ததும் உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்க ஏதவாக இருக்கும்.
பிரச்சனை எண் 2 முதல் 4 வரை: ஒவ்வொரு
மாதமும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய காலத்தில் (அதாவது, 7ம் தேதி அல்லது அதற்கு முன்பு) சம்பளம் வழங்கப்படுதல், EPF / ESI பிடித்தம் முறையாக செய்யப்படுவது, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது முதலானவை தொலைத் தொடர்பு மாவட்டத் தலைமையால் நியமிக்கப்படும் “நோடல் அதிகாரி” முன்பு
ஒப்பந்ததாரர்களால்
அமல்படுத்தப்படுகிறதா
என்பன குறித்து ஒவ்வொரு மாவட்டமும் அறிக்கை / விமர்சனக் குறிப்புகளோடு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு ஒப்பந்த ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளம் பிடித்தம் முதலிய விவரங்களோடு கூடிய சம்பளப் பட்டியல் ( wage slip) வழங்கப்படுதல் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஒவ்வொரு ஒப்பந்த ஊழியர்களுக்குமான e—பாஸ் புக், UAN எண்ணை ஒப்பந்ததாரர்கள் பெற்றுத் தர வேண்டும் என்பது ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தப்பட வேண்டும்.
ஒப்பந்ததாரர்களிடமிருந்து இந்த தகவல்கள் குறித்து அறிக்கை பெறப்பட வேண்டும்.
பிரச்சனை எண் 5 : ஒப்பந்த டெண்டர் கன்டிஷன்படி ஒப்பந்ததாரர்கள் உரிய போனஸ் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலே
குறிப்பிட்ட பிரச்சனைகளை மாநில நிர்வாகம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், அதாவது ஒரு வாரத்தில் , மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
எனவே மாவட்டங்கள் ஒவ்வொரு பிரச்சனை மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை (Action Taken Report) ஒரு வாரத்திற்குள் கீழ்க் கண்ட அதிகாரிக்கு அனுப்பவும்,
அடுத்த வாரம் அடுத்த பரிசீலனைக் கூட்டத்தில் பரிசீலிக்க வசதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
(ஒ-ம்) M.S. திருபுரசுந்தரி
பிரச்சனை
மிக மிக அவசரம். DGM (Admn) O/o CGM, BSNL, CNI
No comments:
Post a Comment