.

Monday, September 29, 2014

கிளை மாநாடுகள் ஒத்திவைப்பு



கள்ளகுறிச்சி மற்றும் செஞ்சி கிளை மாநாடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன 

Saturday, September 27, 2014

28-09-2014 அன்று நடைபெறவிருந்த 
டெலிகாம் மெக்கானிக் போட்டித்தேர்வு
(TM LICE ) 
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Friday, September 26, 2014

மங்கள்யான்




பத்து மாதங்களில் 66 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்த மங்கள்யான் ஆய்வுக்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக வலம்வரத் தொடங்கி, செவ்வாயைப் புகைப்படம் எடுத்து அனுப்பவும் தொடங்கிவிட்டது.
செவ்வாய்க்கு ஆய்வுக்கலத்தை அனுப்பும் முயற்சியில் தோற்ற நாடுகள் பல இருக்க, முதல்முறையிலேயே அந்தக் கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் சேர்த்திருக்கிறார்கள் நம் நாட்டின் விஞ்ஞானிகள்.
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்புவதைவிட, செவ்வாய்க்கு அனுப்புவது துணிச்சலும் சவால்களும் நிறைந்தது. பூமியின் ஈர்ப்புவிசையிலிருந்து ஆய்வுக்கலம் விடுபட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகள் சிக்கல்களும் சவால்களும் நிறைந்தவை. அதற்கு ஏராளமான கணக்குகளைப் போட்டு விண்கலத்தின் வேகம், திசை போன்றவற்றில் மாறுதல் செய்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பதைத்தான் மகத்தான வெற்றியாக உலகமே பாராட்டுகிறது. சுற்றுப்பாதையில் சேர்ந்து செயல்படத் தொடங்குவதற்கு முன்னால், சிறிது நேரம் புவியிலிருந்து கட்டளைகளைப் பெற முடியாத நிலையில் விண்கலம் தானாகவே செயல்பட வேண்டியிருந்தது. அந்த நேரம்தான் உண்மையிலேயே சோதனையான கட்டம். அதையும் கடந்து ஆய்வுக்கலம் இந்தியாவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குச் சமிக்ஞைகளை அனுப்பியிருப்பதுதான் இந்த முயற்சியில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றிக்கு அடையாளம். சுமார் 300 நாட்களாக இயங்காமல் இருந்த விண்கல இன்ஜின் மீண்டும் சரளமாக இயங்கியது, விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அதைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகிய மூன்று மட்டுமே இதற்கு முன் இந்த ஆய்வில் - சில முயற்சிகளுக்குப் பிறகே - வெற்றி பெற்றன. விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகக் களம் இறங்கிய இந்தியா, சுய முயற்சியில் தொடர்ந்து சாதிக்க இந்த வெற்றி, நல்ல ஊக்குவிப்பாகத் திகழும். இந்தியாவின் மங்கள்யான், அமெரிக்காவின் 2 ரோவர் கலங்கள், ‘மாவென்’ கலம் என்று நான்கு ஆய்வுக்கலங்கள் இப்போது செவ்வாயைச் சுற்றிவருகின்றன. செவ்வாய் ஆய்வை இணைந்து மேலும் பயனுள்ள வகையில் எப்படி மேற்கொள்ளலாம் என்று இந்திய, அமெரிக்க விண்வெளி முகமைகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. செவ்வாய் ஆய்வுக்கு இப்போது அனுப்பிய ஆய்வுக்கலத்தைவிட அதிக எடையுள்ள விண்கலத்தை இனி அனுப்புவது என்று முடிவெடுத்தால், அதற்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தயாரித்து வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்த கிரையோஜெனிக் இன்ஜினுடன் நாம் தயாராகவே இருக்கிறோம். ஆக, விண்வெளி நம் வசப்படுகிறது.
தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இத்தகைய சூழல்கள்தான், நம்முடைய இளைய தலைமுறையிடம் அறிவியல் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கச் சரியான தருணம். பிரதமர் மோடி சொன்னதுபோல, பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளிடம் இந்த வெற்றிச் செய்தியைத் தொடர் கொண்டாட்டமாகக் கொண்டுசெல்ல வேண்டும்; அந்தக் கொண்டாட்டங்கள் கனவு விதைகளாக உருமாற்றப்பட்டு, குழந்தைகளிடம் விதைக்கப்பட வேண்டும்.
                                                                              
                                                                          நன்றி தி ஹிந்து தமிழ் 

Thursday, September 25, 2014


JAC சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் கடலூர் 23-09-2014

JAC சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் கடலூர் GM அலுவலகம் முன்பு  23-09-2014 அன்று நமது மாவட்ட செயலரும் JAC தலைவருமான இரா ஸ்ரீதர் தலைமையில்  நடைபெற்றது. BSNLEU மாவட்ட செயலரும் JAC கன்வீனருமான KT சம்பந்தம் துவக்கவுரை ஆற்றினார். தோழர்கள் R செல்வம் மாவட்ட தலைவர்,NFTE , V  லோகநாதன் மாநில துணை தலைவர் NFTE , N அன்பழகன், மாநில அமைப்பு செயலர் NFTE , D சிவசங்கர் மாநில தலைவர் SNATTA , V குமார் மாவட்ட பொருளாளர் BSNLEU , N சுந்தரம் மாவட்ட துணை தலைவர் BSNLEU R ஜெயபாலன் மாவட்ட செயலர் FNTO , D ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் FNTO ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.தோழர் பால்கி SNEA , தோழர் P வெங்கடேசன் AIBSNLEA , தோழர் S முத்துகுமாரசாமி AIBDPA , தோழர் K ரவீந்திரன் AIBSNLPWA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.NFTE சம்மேளன செயலர் G ஜெயராமன் நிறைவுரையாற்றினார். தோழர் S பரதன் நன்றியுரை கூறினார்.

Monday, September 22, 2014

தமிழக தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்-கடலூர் மாவட்ட மாநாடு-பண்ருட்டி. 21-09-2014

பண்ருட்டியில் நடைபெற்ற மாவட்ட மாநாடு தோழர் M.S.குமார் அவர்கள் 

தலைமையில் நடைபெற்றது. தேசிய கொடியை 

தோழர்.T.வைத்தியநாதன் கிளைத்தலைவர்-பண்ருட்டி.சம்மேளன 

கொடியை தோழர்.கணபதி.TM.பண்ருட்டி அவர்களும் ஏற்ற 

தோழர்.G.ரங்கராஜ் எழுச்சிமிக்க கோசங்களை முழங்கினர். ஒப்பந்த 

ஊழியர் சங்க மாநில பொதுசெயலர் தோழர்.R.செல்வம், மாநில 

துணைபொதுசெயலர் தோழர்.S.தமிழ்மணி, NFTE  மாநில 

துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்,மாநில சங்க சிறப்பு 

அழைப்பாளர் தோழர்.சேது, கடலூர் மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், 

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.G.ரங்கராஜ், 

ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொருளாளர் தோழர்.M.விஜய் 

ஆரோக்கியராஜ் குடந்தை, மற்றும் NFTE மாவட்ட, கிளை சங்க 

நிர்வாகிகளும், பண்ருட்டி கிளை உறுப்பினர்களும், 60 க்கும் மேற்பட்ட 

ஒப்பந்த ஊழியர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.






மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஒப்பந்தஊழியர் மாவட்ட சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்:                                          தோழர்.     M.S.குமார். ஒ.ஊ.கடலூர்.



துணைத்தலைவர்கள்:                      தோழர்.    S.நடராஜன்.TM/VLU.

                                                                  தோழர்.    G.ஜெயச்சந்திரன்.TTA/TNV.

                                                                  தோழர்.    D.ரவிச்சந்திரன்.TM/CDM


                                                                  தோழர்.    M.கலைச்செல்வன். CL/ULD.

                                                        தோழியர். G.கீதா. CL/ULD.

                                                        தோழர்.    E.பாலமுருகன்.CL/PRT.

                                                                  

செயலாளர்:                                    தோழர்.    G.ரங்கராஜி.TM/PRT.



துணைசெயலாளர்கள்:                    தோழர்.    R.மணி.CL/VLU.

                                                       தோழர்.    S.பாலகணபதி.CL/CDL.

                                                                தோழர்.     V.கிருஷ்ணகுமார்.CL/CDM.

                                                       தோழர்.    K.சங்கர்.CL/PRT.

                                                                தோழர்.     P.ராஜா.CL/சின்னசேலம்.



பொருளாளர்:                                 தோழர்.    S.அண்ணாதுரை.CL/CDL.

அமைப்பு செயலர்கள்:                   தோழர்.    V.இளங்கோவன்.TTA/ARA.

                                                                தோழர்.     V.முத்துவேல்.TM/CDL.

                                                       தோழர்.    M.மணிகண்டன்.CL/CDL.

                                                                தோழர்.     N.சரவணன்.CL/VLU.

                                                       தோழர்.    ராஜேந்திரன்.CL/VDC.

                                                                தோழர்.     K.சுந்தரராஜன்.CL/CDL.



தணிக்கையாளர்:                           தோழர்.    K.செல்வராஜ்.STS/CDL.



மாநாட்டு தீர்மானங்கள்:

 1.மாத ஊதியம் பிரதிமாதம் 7 ந்தேதிக்குள் வழங்கப்படவேண்டும்.

 2.சம்பள பட்டுவாடா வங்கி மூலம் வழங்கப்படவேண்டும்.


 3.2,4,6 மணிநேர ஊழியரை 8 மணிநேர ஊழியராக உயர்த்தப்படவேண்டும்.


 4.EPF க்கு E.PASSBOOK துவங்கப்படவேண்டும்.


 5.ஒப்பந்ததாரர் மாறினாலும் EPF ஒரே கணக்கு எண்ணாக தொடரப்படவேண்டும். 


 6.அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.


 7.உறுப்பினர்களின் சந்தா ரூ.20/= வசூலிக்கப்படவேண்டும்.


 மேற்கண்ட தீர்மானத்தை இந்த மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது.

 தோழர்.D.ராஜா. நன்றியுரை வழங்க இனிதே மாநாடு நிறைவுற்றது.

தகவல் பலகைக்கு 
மேலும் படங்கள்

Saturday, September 20, 2014


இரங்கல்

ஓய்வு பெற்ற    தோழர்   N குமார்  STS  /விழுப்புரம்    அவர்கள் நேற்று 19-09-2014 இரவு   இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.


இறுதி நிகழ்ச்சிகள் வளவனூருக்கு அருகில் அவரது சொந்த கிராமத்தில் இன்று மாலை   நடைபெறும் .

Wednesday, September 17, 2014

கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 
ஒத்திவைப்பு

இன்று மாலை 17-09-2014 DGM அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில்  பிரச்சனை தீர்வில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக 
நாளை (18-09-2014)  நடைபெறவிருந்த  
கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -18-09-2014


தோழர்களே..
     தோழியர்களே...

ஊழியர்களின் பிரச்சனையில் போதுமான கவனம் செலுத்தாத நமது மாவட்ட நிர்வாகத்தின் போக்கில் மாற்றம் காண 18-09-2014 அன்று மதியம் 1 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இடம்: பொதுமேலாளர் அலுவலகம், கடலூர்         
நேரம்: 1 மணி.( மதிய உணவு இடைவேளை)
தேதி: 18-09-2014


கோரிக்கைகள்
1. 2013, feb 20,21 ஆகிய தேதிகளில் strike leave periodக்கான பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தினை திரும்ப பெறுதல்.
2. POWER PLANT –dutyனை சட்டப்படியான DUTY CHART போடுதல்.
3. திருக்கோயிலூர் indoor dutyனை முறைப்படுத்துதல்.
4. சென்னை மாற்றல் கேட்டுள்ள ஊழியர்களின் மனுவினை உடனடியாக மாநில நிர்வாகத்திற்கு அனுப்புக.
5. தோழர் சந்திரசேகரன்sso அவர்களின் விழுப்புரம் மாற்றலை உடனடியாக முறைப்படுத்துக.
6. TTA  தோழர்களின் விருப்ப மாற்றல்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
7. வாடிக்கையாளர் சேவை மையம் / பொது மேலாளர் அலுவலகங்களில் கணிப்பொறி திறனை மேம்படுத்துதல்.
8. OUT-DOOR  பகுதியின் பணிபுரியும் ஊழியர்களுக்கு தகுந்த உபகரணங்களை வழங்க வேண்டும்.
9. NPC, BROADBAND  போன்றவற்றுக்கு தேவைக்கேற்ப DROP WIRE வழங்குதல்.
10. ஒப்பந்த ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பள பட்டுவாடா  நடைபெற வேண்டும்.
11. உளுந்தூர்பேட்டை பகுதியில் தொழில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும். 
       தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்

தோழமையுடன்
 மாவட்டச் சங்கம், NFTE,
  கடலூர்.


Friday, September 12, 2014

12-09-2014 ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டத்தில் பிரச்சினை தீர்வில் உள்ள தேக்கநிலையை கண்டித்து 12-09-2014 அன்று அனைத்து கிளைகளிலும் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் DGM உடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 18-09-2014- க்கு  ஒத்திவைக்கப்படுகிறது.

Tuesday, September 9, 2014

30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம்...

அருமைத் தோழர்களே! நாடுமுழுவதும்  30அம்ச கோரிக்கைக்காக JAC வேலை     நிறுத்தம்...
போனஸ் உள்ளிட்ட பிரனைகளை தீர்க்கக் கோரி அதிகாரிகள் அல்லாத ஊழியர் சங்கங்களின்  கூட்டு நடவடிக்கைகுழுவின்  JAC கூட்டம் NFTEBSNL பொதுச் செயலர் தோழர் C.சிங் அவர்கள்   தலைமையில்          5-9-14   அன்று டெல்லியில் நடைபெற்றது.கன்வீனர் தோழர் P.அபிமன்யூ-G.S-BSNLEU அவர்கள்  பிரச்னைகளின்இன்றைய நிலையைப் பற்றி விரிவாக விளக்கி கூறினார். கூட்டத்தில்  NFTE, BSNLEU, BSNL MS, TEPU, SNATTA, BTEU, FNTOBEA, BTU and BSNL WRU ஆகிய சங்கங்களின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  அதன் பிறகு விவாதங்கள் தொடர்ந்தன.பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய நாடு முழுவதும் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட ஒன்றுபட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* 23-09-14 அன்று தர்ணா - மத்திய,மாநில,மாவட்ட தலைநகரங்களில்.
* 30-09-14 அன்று இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்- 11 TO 13 Hrs.
அடுத்தகட்டமாக நவம்பர் மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது.

என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்டு போராடி கோரிக்கைகளை வென்றிடுவோம் !!

கூட்டுறவு சங்க செய்திகள்

05-09-2014 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.   நிரந்தர வைப்புத்தொகை ஓய்வுபெற்ற ஊழியர்கள் முதலீடு செய்திருந்தால் அது முதிர்வடைந்திருந்தால் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி பணியில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

2.   விழாக்கால முன்பணம் ரூ. 10000/= அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும். தவணை 10 மாதம் வட்டி 14.5%.

3.   2013-2014 ஆம் ஆண்டுக்கான டிவிடென்ட்  RGB கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நவம்பர் (அ ) டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

4.   புதியதாக சங்கத்தில் R D திட்டம் தொடங்கப்படும். மாதம் 1 க்கு குறைந்த பட்சம் ரூ. 1000/=அதற்கு மேலும் சேர்க்கலாம். வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக கிடைக்கும்.இந்த திட்டம் வரும் RGB கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அமுல்படுத்தப்படும்.(மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்).

5.   வாராக்கடன் சம்மந்தமாகவும்,ஒழுங்கு நடவடிக்கை சம்மந்தமாகவும் இரண்டு கமிட்டிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.கமிட்டியில் இயக்குனர்கள் 7 அல்லது பேர் உறுப்பினர்களாகவும் இருப்பதால் தலைவர்,துணை தலைவர் இருவரும் இரு கமிட்டியிலும் இடம் பெறுவார்கள்.

6.   பெங்களூரு சங்க உறுப்பினர்களுக்கு இதுவரை ரூ.400000/= மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது.இனிமேல் அது ரூ.500000/=ஆக உயர்த்தி வழங்கப்படும். அதுபோல் விழாக்கால கடன் ரூ.10000/= ,கல்விக்கடன் ரூ.10000/= இரண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும்.


                          V.கிருஷ்ணமூர்த்தி.
                                Director/Chennai-GTECS.

Friday, September 5, 2014

மாவட்ட செயலக கூட்ட முடிவுகள்

03-09-2014 அன்று நடைபெற்ற மாவட்ட செயலக கூட்டத்தில் நிறைவான கிளைசெயலர்கள் கலந்துகொண்டனர். விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1.அகில இந்திய மாநாட்டுக்கு வரும் சார்பாளர் விவரங்களை 12-09-2014க்குள் மாவட்ட செயலரிடம் அளிக்கவேண்டும்.
2.பிரச்சினை தீர்வில் உள்ள தேக்கநிலையை கண்டித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 12-09-2014 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும் 24-09-2014 அன்று தர்ணாவும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
நமது மூத்த தோழர் V நீலகண்டன் SSS கடலூர் - பானுமதி தம்பதியினரின் திருமண வெள்ளிவிழா விருந்தோம்பல் நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கத்தில் 03-09-2014 அன்று நடைபெற்றது. நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர்,  மாவட்ட தலைவர் செல்வம்,  மாநில துணை தலைவர் லோகநாதன், மூத்த தோழர்  ரகு, தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை மேனாள் செயலர் எஸ்ஸார்சி உட்பட  450க்கும் மேற்பட்ட நிறைவான தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். வாழ்த்திய தோழர்களுக்கு தோழர் சிரில் அவர்களின் சிறுகதை தொகுப்பை வழங்கிய தோழர் நீலகண்டனை பாராட்டுகிறோம். மறுபதிப்பு செய்ய அனுமதியளித்த மாநில சங்கத்திற்கு நன்றி.

Monday, September 1, 2014

வாழ்த்துக்கள்

03-09-2014 அன்று 
திருமண வெள்ளிவிழா 
கொண்டாடும் 
தோழர் வெ நீலகண்டன் SSS BSNL கடலூர் -சீ பானுமதி 
தம்பதியினருக்கு 
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 



மாவட்ட செயலக கூட்டம் 03-09-2014

மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 03-09-2014 அன்று மாலை  3 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.