Wednesday, November 21, 2018


37வது தேசிய கூட்டாலோசனைக் கூட்ட நிகழ்வுகள்தேசிய கூட்டாலோசனைக் குழுவின் 37வது கூட்டம் திருமதி T.சுஜாதா ரே ,இயக்குநர் மனிதவளம் அவர்களது தலைமையில் 20.11.2018 அன்று நடைபெற்றது.


திரு A.M.குப்தா, GM(SR) அவர்கள் குழு உறுப்பினர்களை வரவேற்று பேசுகையில் நமது நிறுவனம் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளதாகவும். இக்குழு ஊழியர் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பேசிக் களைவதற்கான தளமாகும் என்றார். நாம் 4ம் தலைமுறை தொழில்நுட்பத்தை பற்றி திட்டமிடுகையில் தொழில் நுட்பம் 5ம் தலைமுறைக்கு பெரும் வேகமெடுத்த தாவ தயராகிவிட்டது என்றார். நமது நிறுவனம் தடைகளை தாண்டி பயணிக்குமே தவிர ஒருகாலும் தயங்கி நிற்காது என்றார். 

கூட்டத்தின் தலைவர் திருமதி சுஜாதா ரே தனது நீண்ட உணர்ச்சி பூர்வமான உரையில் ஊழியர் பிரச்சினைகள் முன்னிலைப் படுத்தப்பட்டு நிறுவனத்தின் அதிகாரமிக்க குழுவால் தீர்க்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். சந்தேகமின்றி நிறுவனம் கடினமான காலத்தில் பயணிப்பதாகவும் ஊழியர் தரப்பு நிர்வாகத்திற்கு SWAS and BSNL at your doot Step போன்ற இயக்கங்களின் மூலம் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நிதி சுழற்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை ஊழியர்களின் நலனையும் நிர்வாகத்தின் நலனையும் பாதித்துள்ளதாகவும், பணம் சம்பந்தமான விசயங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும் சூழ்நிலை ஊழியர்களின் பெரும் பங்களிப்பினால் மேம்பட்டு வருவதாகவும் கூறினார். பல்வேறு அரசு திட்டங்களை நமது நிறுவனம் செயலாற்றி வருவதால் அடிப்படையான செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுக்காக்கப்பட்டு வருவதாகவும், கடினமான சூழ்நிலையில் நாம் ஒன்றுபட்டு வலிமையாக திகழ வேண்டும் என்றார். நமது நிறுவனம் முதன்மையான நிறுவனம் எனவும் தேசிய பேரிடர் காலங்களில் அதன் பங்களிப்பை நமது இலாகா அமைச்சகம் பாராட்டியுளதாகவும் குறிப்பிட்டார். 


தோழர் சந்தேஸ்வர் சிங் தனது உரையில் வளர்ச்சி, மேன்மை மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து பேசியமைக்காக கூட்டத்தின் தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இருதரப்பும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்பதாக குறிப்பிட்டார். 
பீகார் , உத்தரபிரதேசம் , மத்திய பிரதேசம் , அசாம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் TSM தோழர்களுக்கு Presidential Order வெளியாவதில் உள்ள பிரச்சினை தீர்க்கப்படமால் உள்ளதைக் குறிப்பிட்டார். பீகார் மாநிலத்தில் மட்டும் 65 தோழர்களுக்கு Presidential உத்தரவு வெளியாகமல் உள்ளது எனவும் ஓய்வு பெற்ற TSM தோழர்களுக்கு Presidential உத்தரவு கிடைக்காததால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். நிர்வாகப் போட்டித் தேர்வுக்கான கால அட்டவணையில் டெலிகாம் டெக்னீசியன் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினார். கேசுவல் ஊழியருக்கான ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும் முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்தும் விவகாரம் தற்போது வரை தீர்க்கப்படவில்லை என்பதையும் , ஊழியர்களின் உள்நோயாளிக்கான சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் வழங்கப்படாமல் உள்ளதையும் , ரூல் 8 மாற்றும் 9ன் கீழான மாற்றலில் மாற்றல் மற்றும் விடுவிப்பதில் உள்ள சிக்கல்களையும் தனது உரையில் குறிப்பிட்டார். 

ஊழியர் தரப்புச் செயலர் தலைமை உரையில் குறிப்பிடப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பு தொடரும் என மறுதலித்தார். அனைத்து கேடருக்குமான போட்டித் தேர்வுகளயும் எழுத்துத் தேர்வாக நடத்துவது. டெர்ம் குருப் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்வது, ஓய்வூதியப் பலன்களை உயர்த்துவது, ஊதிய கமிட்டி மீண்டும் கூடி வீட்டு வாடகைப்படி விவகாரத்தால் முடங்கிப் போயுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வது ஆகியவை குறித்து பேசினார். கூட்டத்தின் தலைவர் பதிலளிக்கையில் கேசுவல் ஊழியர் சம்பளதிருத்தம், இணையம் மூலமான போட்டித் தேர்வுக்கு முன்னதாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள சாதமாக பரிசீலிக்கபடும் என தெரிவித்தார். 

விவாதக் குறிப்புகள் 

1. 01.08.2018 அன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கேசுவல் ஊழியர் நிரந்தரம். 

10 வருட சேவை முடித்த கேசுவல் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கு நீதிமன்ற தீர்ப்பின் மீது Legal Opinion பெறப்படும். 

2. 01.10.2000க்குப் பிறகு TSM ஆக இருந்து TM ஆக நியக்கக்கப்பட்ட ஊழியர்களுக்கு Presidential Order வெளியிடுதல். 

தேவையான விபரங்கள் தொலைத்தொடர்பு இலாகாவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

3. 01.10.2000 அன்றோ அல்லது பின்போ நிரந்தமாகிய TSM ஊழியர்களை DOT ஊழியர்களாக கருதி NEPP திட்டத்தின் கீழ் பதவி உயர்வு வழங்குதல். 

இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது நிறுவனத்தின் CMDன் பரிசீலனைக்குப்பிறகு DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

4.ஹிமாச்சல் பிரதேச மாநில DOT CELL அதிகாரிகள் GPF Payment மேற்கொள்ளும் பணியை ஏற்க மறுக்கும் விவகாரம். 

Director(Finance) அவர்கள் DOT இலாகாவின் Member(Finace) அவர்களுடன் கலந்துபேசி முடிவு செய்வார். 

5. 10+2 முடிக்காமல் நேரடியாக பட்டப் படிப்பு முடித்தவர்கள் JE 07.06.2015 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெற்றுள்ளனர் அவர்கள் மீது ஹைதராபாத் உயர் நீதி மன்றம் 2017ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்து. 

தீர்ப்பு அமுல்படுத்தப்படும். 

6.சொத்து வாங்குவதற்கான அனுமதி பெறுவதற்கான தகுதி மதிப்பை உயர்த்திடுக. 

தொகையை உயர்த்துவதற்கு வழியில்லை. சட்ட வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

7. முதுநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் ( Sr.Hindi Translator ) மற்றும் ராஜ் பாஷா பதவிகளுக்கு ஆளெடுப்பு செய்திடுக 

ஒரு மாத காலத்திற்கு காலிப் பணிடங்கள் குறித்து அறிவிக்கப்படும். 

8. ஆந்திர மாநில ஊழியர்கள் ஹைதராபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக் கடிதம் வழங்க ஆந்திர மாநில CGMன் ஒப்புதலின்றி ஆந்திர மாநில GMகளுக்கு அதிகாரம் வழங்கிடு. 

நிர்வாகம் கோரிக்கையை ஏற்கவில்லை இருப்பினும் மேற்கு வங்கம் , கொல்கத்தா தொலைத் தொடர்பு மாநிலங்களில் கையாளப்பட்ட வழிமுறைகள் பரிசீலிக்கப்படும். 

9. குவாஹாத்தி – இட்டாநகர் – அஸ்ஸாமின் வடக்குப்பகுதி ஆகிய பகுதிகளுக்கிடையேயான இணைப்பை கண்ணாடி இழை கேபிள் மூலம் NETF வழியாக மீட்டிடுக 

தடையற்ற சேவை தொடர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

10. TSM ஊழியர்களை BSNL ஊழியர்களாக இணைத்துக் கொள்வதற்கான Presidential Order வெளியாவதில் ஏற்றுக் கொள்ள முடியாத காலதாமதம். 

பீகார் , மத்தியப் பிரதேசம் , உத்திரப்பிரதேசம்(மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநில நிர்வாகங்களிடமிருந்து இதுகுறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உத்திரப்பிரதேச(கிழக்கு) மாநில நிர்வாகம் விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. 

11. BSNL Non.Executive ஊழியர்களுக்கு Term Grup Insurance திட்டத்தை அமுலாக்கு. 

மார்ச் -2019க்கு முன்பாக அமுலாக்கம் குறித்து இறுதி செய்யப்படும். 

12. BSNL தலைமையகம் சீராய்வு மனுக்களை தேவையற்ற வகையில் சமர்ப்பிப்பதை தவிர்த்திடுக 

முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்தும் விவகாரம் லக்னோ உயர்நீதி மன்றம் வெளியிடும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். 

13. 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9000/- ஆக உயர்த்திடுக. 

Director(HR) DOT இலாகாவுடன் பேசி முடிவெடுப்பார். 

14. இணையம் மூலமான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள Non-Executive ஊழியர்களுக்கு கணினிப்பயிற்சி வழங்கிடுக. 
பயிற்சி விரைவில் வழங்கப்படும். 

15. கேசுவல் ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 

கூட்டத்தின் தலைவர் 3வது ஊதிய மாற்றத்தோடு கலக்காமல் தனியாக பரிசிலிக்க உத்தர விட்டார்.

Tuesday, November 20, 2018

புயல் பாதிப்புதுயர் துடைக்க முன்வருவீர்!


அன்புள்ள தோழர்களே, தோழியர்களே!
            வணக்கம்நாம் தான் எதிர்பார்த்தோம், நம்மைத் தேடி வருமென்று!   தயாராகக் கூட இருந்தோம். அனுபவப்பட்டவர்களாயிற்றே!    கஜா புயல் குறித்துத்தான் இந்த வேண்டுகோள்!
          தானே தந்த துயரம் தலைமுறையும் மறவாது.  ‘கேட்டிலும் நன்மை உண்டு என்பார் வள்ளுவர்அல்லலுற்று கையறுநிலையில் இருக்கும் போதுகை கொடுப்பார் யார்? கண்ணீர் துடைப்பார் எவர்? வாரி வழங்கா விடினும், ஆறுதலாய் ஒருசொல் கூறவோர் மனிதருண்டோ?
           மனித மனங்கள் பதறுரும்அதை நாம் அனுபவித்திருக்கிறோம் …  அது மட்டுமாமனிதம் இன்னும் மாண்டுவிடவில்லை என்று உதவிக்கரங்கள் ஓடோடி வந்தனபாலம் கட்டுவதாய் பெரும் பணி, அணிலாய் அதில் சிறு பங்கு எனகுடந்தை, தஞ்சை, கோவை, காரைக்குடி, சென்னை என  தோழர்கள் நிவாரணப் பொருட்களோடு வந்தார்களே …   நம் நெஞ்சை எல்லாம் நிறைத்தார்களே...

                தமிழகத்திற்கே சோறிடும் சேற்று பூமியாம் காவிரிப்படுகை மாவட்டங்கள் இன்றுகஜா புயலடித்து ஓய்ந்த பின்னும்புயலின் பாதிப்பிலிருந்து மீளாதிருக்கின்றனர்தஞ்சை விவசாயிகளின் கவலைஆச்சரியப்பட வைக்கிறது.
                வள்ளுவர் வாழ்த்திய விவசாயியல்லவா, என் பசிக்கு இன்று யார் தருவார் என்பது அவர்கள் கவலை யில்லையாம். . . நாளை தமிழகம் அரிசி இன்றி பசியால் வாடுமோபுயலால் இந்த போகம் போனதேபோன கரண்டு இன்னும் வரலையே . . . எப்படிப் பயிர் வைப்பேன்வானம் பார்த்து ஓங்கிய தென்னை போர்க்களத்து வீரர்களாய் முறிந்து போனதுவே …  மகிழ்வைக் கூட்டும் குடந்தையின் வெற்றிலைக் கொடிக்கால்கள் நாசமானதுவேஎன    அழுவது அல்ல, எழுவது என்று அவர்கள் மனத்தளவில் தயாராகி விட்டார்கள்
நாம் என்ன செய்யப் போகிறோம்?
                புயல் காணா புதுக்கோட்டை, வேதாரண்யம், இராமநாதபுரம் என புதிது புதிதாய்  இடங்களைத் தேடி புயல் புரட்டிப் போட்டு விட்டு சென்றுள்ளது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?
கோவையில் நடைபெற்ற நமது மாநிலச் செயற்குழுவில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டபோது –       உங்களின் உதவும் கரங்களை நம்பி --      பிறர் துயர் காணச் சகியாத நெஞ்சின் ஈரம் எண்ணி--   நமது மாவட்டச் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நிதியாக          முதல் தவணை   தொகை  ரூபாய் பத்தாயிரம்  ரூ10,000/--                 வழங்கி உள்ளோம்.                விரைந்து உங்கள் பங்கைச் செலுத்துங்கள் எனத் தோழமையோடு  வேண்டுகிறோம் !
            கூடுதலாக நிதி திரண்டி, இரண்டாம் தவணையைத் தந்திடுவோம்!
            புயலெனப் புறப்படுங்கள் !   மழையெனப் பொழியுங்கள்,  நன்கொடைகளை !!
 எவ்வளவு வழங்கினாலும் நமது உள்ளம் திருப்தியுறாதுஏனெனில் கைமடங்கா விவசாயிகள் கை ஒடிந்து உள்ளார்கள்.   நமது நெஞ்சம் சற்றே அமைதியுற அள்ளித் தாருங்கள் 

எனத் தோழமையோடு வேண்டும்,
 G. கணேசன்                       A.S. குருபிரசாத்                    இரா. ஸ்ரீதர்

            மாவட்டத் தலைவர்           மாவட்டப் பொருளாளர்            மாவட்டச் செயலாளர்
NFTE - TMTCLU
கடலூர் மாவட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து NFTE - TMTCLU  சார்பில் 17.11.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம்  ஒப்பந்தக்காரை உடனடியாக ஊதியம் வழங்க உத்திரவிட்டது . ஒப்பந்தக்காரர்  (20-11-2018 ) இன்று நமது மாவட்டத்தில் அனைத்து தோழர்களுக்கும் தவணையாக ரூபாய் 5000 /- வழங்கியுள்ளார்.

இருப்பினும் நமது மாவட்ட சங்கம் முழுமையான ஊதியம் வழங்க வேண்டும், 2009க்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் எனவும், விடுப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியும் வரும்   22-11-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும், 28-11-2018 அன்று கடலூர் பொது மேலாளர் அலுவலக முன்பாக மாபெரும் தர்ணா நடைபெறும்.

ஆகவே நமது உரிமையை நிலைநாட்டிட!....
ஒன்றுபட்டு போராடிடுவோம்!...
வெற்றி பெறுவோம்!...
         
தோழமையுடன்
NFTE-TMTCLU

                                                          மாவட்டச் சங்கங்கங்கள் 

Wednesday, November 7, 2018

வருந்துகிறோம்

        நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர் R.குணசேகரன் TT/CDL அவர்களின் தாயார்  இன்று காலை ( 07-11-2018 ) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
      அன்னாரின்  பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                 அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை    ( 07-11-2018 ) புதுப்பாளையம் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                                                                  By
                                                                                                     NFTE –TMTCLU
                                                                                                மாவட்டச் சங்கங்கள்

                                                                                                          கடலூர்.

Monday, November 5, 2018


இரங்கல் செய்தி ...

நெய்வேலி டவுன்ஷிப் தோழர் M.பன்னீர்செல்வம் TT அவர்களின் தாயார் இன்று 5.11.2018 அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று மாலை5.00 மணியளவில் விழுப்புரம் அரசூர் என்ற ஊரில் நடைபெறும்.

--------------------------------------------------------------------------------

சிதம்பரம் திரு.S.ராஜூ SDE அவர்களின் தாயார் இன்று 4.11.2018  மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்த த்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அம்மையாரது இறுதி நிகழ்ச்சி நாளை 5.11.2018 மதியம் 12.00 மணியளவில் சிதம்பரம் சாந்தி நகரில் உள்ள அனுகிரகா அப்பார்ட்மெண்ட் இல்லத்தில்  நடைபெறும். அம்மையாரின் மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.
------------------------------------------------------------------------------------

Saturday, November 3, 2018

NFTE-TMTCLU
மாவட்ட செயற்குழு
( 28-10-2018 )

28-10-2018 அன்று மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர் R.பன்னிர்செல்வம் வரவேற்புரையாற்றிட, தோழர் G.ரங்கராஜ்   நமது TMTCLU  சங்கம் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களுக்காக நேர்மையாகவும், கொள்கை பிடிப்போடும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதில் பெருமிதம் என தமது துவக்கவுரையில் பதிவு செய்தார்.

        மாவட்ட செயலர்   தோழர் A.S.குருபிரசாத் தமது அறிமுகவுரையில்  ஆய்படுபொருளை தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து கூறினார்.  தோழர்கள் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச் செயலர்  உரையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் TMTCLU மாவட்டச் சங்கத்தை மனதார பாராட்டுக்கிறேன். மாநிலச் சங்கத்தின் சார்பில் செயற்குழு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தோழர் V.இளங்கோவன் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் உரையில் உன்னதமான  முறையில் செயல்படும்  மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் கூறினார்.

        NFTE மாவட்ட தலைவர் தோழர் G.கணேசன் கஷ்டப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  அன்றிலிருந்து இன்று வரையில் துடிப்போடும்  சிறப்போடும் செயல்படும் ஒரே  சங்கம் TMTCLU  சங்கம் தான் என தனது உரையில் பதிவு செய்தார்.

மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உரையில்  தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் உறுதியாகவும், கொள்கைப் பிடிப்போடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்டச் செயற்குழு வெற்றி பெற NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தார். தோழர் A.சுப்ரமணியன் மாநில உதவிச் செயலர்  நமது சங்கம் மிகச் சரியான பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றும் நமது சங்கத்தில் இணைந்துள்ள பாரதி உள்ளிட்ட தோழர்களை மாநிலச்  சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்.  தோழர் S.ராமசாமி  நாம் என்றும் NFTE பேரியக்கத்தில் இருப்பதில் தான் மகிழ்ச்சி. ஆகவே  தான் NFTCL சங்கத்திலிருந்து விலகி நான் NFTE-TMTCLU  இணைந்தேன் என்று  தனது உரையில் பதிவு செய்தார்.

தோழர் பாரதி   NFTE-TMTCLU  சங்கங்கள்  தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடும் சரியான பாதையில்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.   நான் TNTCWU சங்கத்தில் இருக்கும் போதெல்லாம் இச்சங்கத்தில் குறைவான தோழர்கள்தான் இருக்கிறார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இச் செயற்குழுவில் நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான தோழர்கள் வந்திருப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், அதிகப்படியான தோழர்களைக் கொண்ட மாவட்டச் சங்கம் என இப்போது தான் தெரிந்து கொண்டேன். உண்மையில்  நான் இச்சங்கத்தில் இணைந்ததில் மிக பெருமையடைகிறேன். இச்சங்கத்தில் தொடந்து பயணிப்பேன் என்று தமது உரையில் பதிவு செய்தார்.

தோழர் R.அகஸ்டீன் NFTE மாவட்ட அமைப்புச் செயலர், தோழர் S. மணி NFTE மாவட்ட உதவிச் செயலர் , தோழர் P.ராஜா மாவட்ட துணைத் தலைவர், தோழர் டெல்லிபாபு  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தோழர் S.தமிழ்மணி மாநில இணைப் பொதுச் செயலர்  எதற்காக இச்சங்கம் துவங்கப்பட்டதோ அதனை நோக்கி இச்சங்கம் சிறப்பாக செயல்படுகிறது . ஆகவே மிகச் சரியான பாதையை நோக்கி பயணியுங்கள் , வாழ்த்துக்கள்.

        தோழர் விஜய் ஆரோக்கியராஜ் மாநிலப் பொருளாளர்  என்றும் தனது பாணியில் சங்கம் எவ்வாறு செயப்படுகிறது, நாம் எப்படி இருக்கிறோம், நாம் நமது சங்கத்தின்பால் எவ்வறு இருக்க வேண்டும். நமது துறைக்கும் அரசியால் சார்ந்து எப்படி புரிதல் வேண்டும்,  நமது தேவைகளை நிறைவேற்ற அரசியல் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும். பிற சங்கங்களை போல் அல்லாமல் நமக்கென தனி அடையாளம் இருக்க ஒவ்வொவ்வரும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும். நமது NFTE-TMTCLU  சங்கங்கள்  கடலூர்,குடந்தை, தஞ்சாவூர் ஆகிய உறுதியால் நாம் போனஸ் முழுமையாக பெற்றுள்ளோம். ஆகவே நமது சங்க தலைமையோடு ஒன்றினைந்து வலு சேர்ப்போம் என தமது உரையில் பதிவு செய்தார்.

அடுத்தப்படியாக தோழர் R.செல்வம்  மாநிலப் பொதுச் செயலர்   நமது NFTE-TMTCLU மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக தமிழ்நாட்டிலேயே  முதன் முதலில் ரூ 7000/- போனஸ் பெற்றது  நமது கடலூர் மாவட்டம் தான். அதன் தொடர்ச்சியாக தான் மற்ற மாவட்டங்கள் பெற்றுள்ளன. அதன் வழியில் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

இறுதியாக  நமது NFTE மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்  கடலூர் NFTE-TMTCLU  மாவட்டச் சங்கம் கொள்கையில் உறுதியோடு  செயல்படுவதின் காரணமாகத்தான்    நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் பெற்றுத் தந்துள்ளோம். அதன்வழியே நாம் இன்னும் பற்பல கோரிக்கைகளை வென்றெடுக்க  நமது சங்கத்தை இன்னும் பலமுள்ளதாக கட்டிட தொடர்ந்து பயணிப்போம், புதிதாக இணைந்த தோழர்களுக்கு NFTE சங்கத்தின் வாழ்த்துகள். செயற்குழு வெற்றி பெற வாழ்த்துக்கள் என தமது உரையில் பதிவு செய்தார்.

இறுதியாக தோழர் J.கந்தன் மாவட்டப் பொருளாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

மாவட்டச் சங்க நிர்வாகிகளில் 18 தோழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும், சுமார் 30 நிரந்தர ஊழியர்களும் இச்செயற்குழுவில் பங்கேற்றனர்செயற்குழுவில் பங்கேற்று உரையாற்றிய தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டத் தலைவர்களுக்கு நன்றிசெயற்குழுவிற்கு  வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிப்புக்கு  நிதி அளித்து  உதவி செய்திட்ட  மூத்த தோழர் V. நீலகண்டன், தோழர் N.ராஜாராமன், தோழர் T.பாலாஜி அவர்களுக்கும்  நமது நன்றி...

மாவட்ட செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

v இந்த ஆண்டு போனஸ் ரூ7000/- பெற்றே தீருவோம் என்று போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் பெற்றோம். போராட்டத்திற்கு உறுதுணையாக  நின்ற NFTE மற்றும் BSNLEU  மாவட்டச் சங்கங்களுக்கும், உறுதியாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி.

v நமது மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிப்காட், பெண்ணடம் பகுதி  தோழர்களுக்கு மீண்டும் விரைந்து பணி வழங்க வேண்டும்.  மேலும் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தும் வகையில் தோழர் ராமநாதன் அவர்களுக்கும் பணி வழங்கிட  மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v A/C  பிளாண்ட் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதா மாதம்  சம்பள பட்டுவாடா நடைபெறுவதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களும் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை;  ஆகவே A/C பிளாண்ட் பகுதி ஒப்பந்த ஊழியர்களை House Keeping Tender ல் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v TMTCLU மாவட்டச் சங்க நடவடிக்கைகளை விரிவாக்கிட மூன்று புதிய பதவியினை உருவாக்க இச்செயற்குழு அங்கீகரிக்கிறது. தோழர் M.பாரதிதாசன் மாவட்ட இணைச் செயராகவும், தோழர் S.ராமசாமி மாவட்டத் துணைத் தலைவராகவும், தோழர் M.கபிலன் மாவட்ட அமைப்புச் செயலராகவும் இச்செயற்குழு ஒருமனதாகத் தேர்வு செய்கிறது.. புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

v இந்த ஆண்டு குறைந்த பட்ச போனஸ் ரூ 7000/= வழங்கப்பட்டாலும் அது அனைவருக்கும் ஒரே அளவில் வழங்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  பல ஒப்பந்த ஊழியர்களுக்குப் போனஸ் குறைவாக வழங்கிய ஸ்ரீபாலஜி ஏஜென்ஸி அது கணக்கிடப்பட்ட விவரத்தை உடனடியாக நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும்.. அந்த விவரத்தைப் பெறவும், மேலும் விடுபட்ட தோழர்களுக்கு  போனஸ் வழங்கிடவும்  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

v BSNLEUவின் ஒப்பந்த ஊழியர் சங்கமான  TNTCWU  சங்கத்திலிருந்து விலகிய அதன்  மாவட்டச் செயலர்  தோழர் M.பாரதிதாசன், TMTCLU  சங்கத்தின் செயல்பட்டால் ஈர்க்கப்பட்டு, TMTCLU சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.    தோழர் M.பாரதிதாசன் மற்றும் அவரோடு இணைந்த  அனைத்துத் தோழர்களையும் , மற்றும் தோழர் S. ராமசாமி உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் வாழ்த்தி  TMTCLU மாவட்ட சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
                                                                   தோழமையுடன்
                                                                   A.S.குருபிரசாத்
                                                                 மாவட்டச் செயலர்