.

Sunday, November 25, 2018

கடலூர் மாவட்  BSNL  குடும்ப உறுப்பினர்கள்
என்பதற்குப் பெருமை கொள்வோம் !

நன்றி தோழமைகளே !

அன்புடையீர் !        வணக்கம்
            நீறு பூத்த நெருப்புமேகம் மூடிய நிலவுதுடைக்கப்படாத வைரம்தூசு படிந்த கண்ணாடிதூண்டப்படாத விளக்கு . . . இப்படி இவை எல்லாமே கூட்டுப் புழுவாய் சலனமற்று இருப்பவைதான்சந்தர்ப்பமும், வேளையும் வாய்க்கும்போது தன் குணம் காட்டி தங்கமாய் தகதகக்கும், வண்ணச் சிறகசைத்து வான் பறக்கும் !


          நமது மாவட்டத்தைச் சேர்ந்த BSNL குடும்ப உறுப்பினர்கள்ஒப்பந்த ஊழியர் தொடங்கி, அதிகாரி ஈராய்அத்தனை பேரும் அப்படித்தான்!

          ’கோடிக்கால் பூதமடாஎன்று தோழர் ஜீவா தொழிலாளர்களைக்கோபத்தின் ரூபமடாஎன்பார்கோபத்தில் மட்டுமல்ல, வாரி அணைப்பதில், ஓடோடிச் சென்று உதவுவதிலும் நமது தோழர்கள் கோடிக்கால் ரூபத்தின் வாரிசுகள் தாம்.
         
கோவையிலே நமது மாநிலச் சங்கச் செயற்குழு அறைகூவலை ஏற்று, தமிழகத்திற்குச் சோறிடும் அன்னையாம் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பைத் துடைக்க நிவாரண நிதி திரட்டும் பணியில் நமது மாவட்டத்தின் பங்கைச் செலுத்த வேண்டுகோள் விடுத்தோம்.
          தாங்கள் யார் என்பதை நமது தோழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
நிவாரண உதவி என்பது காலத்தே உடனே செய்வது என்ற வகையில் நமது மாவட்ட அதிகாரிகளும் ஊழியர்களும், நண்பர்களும் தாரளமாக முன்வந்து வழங்கி உள்ளனர்.
          கடலூர் மாவட்டப் பங்காக நாம் இதுவரை ரூ40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) தொகையை அனுப்பி வைத்து விட்டோம்.  (நிவாரண உதவி, அத்தியாவசிய உடனடித் தேவை பொருட்களாக   வழங்கிட      குடந்தை


மாவட்டச் செயலர் தலைமையில் செயல்படும் நிவாரணக்குழுத் தோழர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்)

இதுவரை நிதி அளித்த அத்தனைத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், நண்பர்களுக்கும்  --    விழியோரம் நீர் பெருக்கி,
நமது நெஞ்சத்தின் ஈரத்தால் நன்றி சொல்வோம் !

          உங்களை எண்ணித்தான் ஒரு கவிஞன் இப்படிப் பாடினான் போலும்,

                                     ” இந்தப் பூமிப்பந்தின்
                               எந்த ஒரு மூலையில்
                               கண்ணீர் சிந்தினாலும்,
                              அதைத்  துடைக்க எம்
                               சுட்டுவிரல் நீளும்! ”               
               
நன்றி தோழமைகளே!...

குறிப்பு : சொர்க்கத்தின் கதவை கடவுள் திறந்தே தான் வைத்திருக்கிறான், கடைசி மனிதன் வருவதற்காகவும்என்பார்கள்நன்கொடை வழங்காத தோழர்கள், உதவி செய்ய முடியாமல் போனதாக வருந்த வேண்டாம்இன்றைக்குஇப்போது -- தாருங்கள்அடுத்த தவணையாக அனுப்பி வைப்போம்
                                                                                        தோழமை வாழ்த்துக்களுடன்,
                                                                                                     இரா.ஸ்ரீதர்

                                                                                        மாவட்டச் செயலாளர், NFTE

No comments:

Post a Comment