Wednesday, February 29, 2012

பணி ஒய்வு - பிப்ரவரி 2012இன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள் 


1.  M. இராமச்சந்திரன் (T.T.A) விழுப்புரம்

2. K மூர்த்தி (T.M)  அரகணடநல்லூர். 

3. R. விஜயகுமார் (STS)  விருத்தாசலம்

4. T. ராதாகிருஷ்ணன் (STS)  குறிஞ்சிப்பாடி

ஆகியோரின் பணி ஓய்வுக்காலம், ஆரோக்கியத்துடனும், வளமுடனும் அமைய NFTE  மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.

தோழமையுடன்,


P. சுந்தரமூர்த்தி
(மாவட்டச் செயலர்)


Printable format - Click here

Tuesday, February 28, 2012

T.T.A Examination (LDCE) Notes in Tamil

சரித்திரத்தில் ஒரு நாள்.....

1947ஆம்ஆண்டிற்குப்பின், முதன் முறையாக, இந்தியா வின் அனைத்துத் தொழிற்ச ங்கங்களும், கட்சி பேதங்க ளுக்கு அப்பாற்பட்டு, ஒன்றி னைந்து,  மகத்தானதொரு வேலை நிறுத்தத்தை நடத்திக் கொண்டுள்ளன!


அரசாங்கத்தின் தாரளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய நாசகார கொள்கை களால், விளைந்த நன்மை களைகாட்டிலும் , பொதுத்துறை நிறுவனங் களும், தொழிலாளர் வர்க்கமும், சாதாரண மக்களும் அனுபவிக்கும் துயரங்கள் சரித்திரம் காணாதது! இக்கொள்கை பணக்காரர்களையும், பன்னாட்டு நிறுவனங் களயும் மேலும், மேலும் கொழுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 


இப்பொழுது கூட நாம் எதிர்ப்பைக் காட்ட வில்லையெனில், பின் எப்பொழுது காட்டு வோம்?  இவ்வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது நமது வர்க்கக் கடமை. 


வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
===============================================================


COUNCIL AGAINST CORRUPTION IN TELECOM

===============================================================


Friday, February 24, 2012

போராட்ட விளக்கக் கூட்டம் -கடலூர்.

24/02/2012 அன்று கடலூர், ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில், ஃபிப்ரவரி 28 போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர் வி. இளங்கோவன், 
தோழியர் கே.விஜயலட்சுமி ஆகியோர் தலைமையேற்க, தோழர் மகேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த் தினார். தோழர்கள் செல்வம், சுந்தரமூர்த்தி, விஜயலட்சுமி ஆகியோர் போராட்டத்தின் தேவை குறித்து உரையாற் றினர். 


 தோழர் கே.நடராஜன், தஞ்சை மண்ணுக்கே உரிய, எளிய சரளமான நடையில், கருத்தாழமானதொரு உரை நிகழ்த்தினார். 


தோழர் ஜி.ஜெயராமன், சுருக்கமாக 'நச்' சென போராட்டதில் கலந்து கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
தோழர் நடராஜன்


தோழர் சுந்தரமுர்த்தி 

தோழியர் விஜயலட்சுமி 

 கூட்டத்தின் ஒரு பகுதி
தோழர் ஜி. ஜெயராமன் 

தோழர் செல்வம் 

New Land Line Plans

Tuesday, February 21, 2012

 கடலூர் கிளைகள்
பிப்ரவரி -28 பொது வேலைநிறுத்தம்
கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம். 

========================================================================

ஒருங்கிணைந்த சேவை வளாகம், கடலூர்

24-02-2012  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

========================================================================


தலைமை

   தோழர். N.   செல்வராஜ்             தோழர் V. இளங்கோவன்
   மாவட்ட அலுவலக கிளைத் தலைவர்                   தொலைபேசி கிளைத்தலைவர்

வரவேற்புரை: தோழர் மகேஸ்வரன் (மா.அ.கி. செயலர்)சிறப்புரை:  தோழர் ஜி.ஜெயராமன் (சம்மேளனச் செயலர்)
             தோழர்  கே. நடராஜன்   (மாநில உதவிச் செயலர்)

தோழர்கள்:  R. செல்வம்    (மாவட்டத்தலைவர்)
          P. சுந்தரமூர்த்தி (மாவட்டச் செயலர்)
          K. விஜயலட்சுமி (மாவட்ட துணைத் தலைவர்)
          S. ஆனந்தன்     (TMTCLU - மாவட்டச் செயலர்)
          E. வினாயகமூர்த்தி (தொலைபேசிக் கிளைச் செயலர்)
       பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்

வர்க்கக்கடமை யாற்றுவோம்!
வேலை நிறுத்தத்தை மகத்தான வெற்றியாக்கிக் காட்டுவோம்!!

        தோழமையுடன்
        கே. மகேஸ்வரன்                       E. வினாயகம்
மா.அ.கி.செயலர்                       தொ.பே.கி. செயலர்
==========================================================================

Click here for printable format
==========================================================================

Monday, February 20, 2012

Clarifications and Modifications on NEPP

BSNL eyes private sector to rebuild management Kalyan Parbat, ET Bureau | Feb 20, 2012, 10.22AM IST

 KOLKATA: Bharat Sanchar Nigam Ltd (BSNL) may be forced to tap the private sector to rebuild its senior management team with its recruitment rules failing to woo back executiveswho had left for the department of telecom (DoT) last year. 

In November, a majority of the Indian Telecom Service (ITS) officers deputed to BSNL had opted for a transfer to the telecom department, where the pension is higher, robbing BSNL of its middle and top management. BSNL's effort to woo them back has failed to elicit any response. 

A top executive with direct knowledge of the matter told ET that the state-run telco's new recruitment rules are not acceptable to the ITS officers as moving back to BSNL would mean loss of seniority and lower compensation. 

"Where is the logic in first giving ITS officers the option to return to DoT, and now urging them to return to BSNL with less pay and zero protection on the seniority front," said two ITS officers who have returned to DoT. The new recruitment rules do not address these issues, they added. 

Another turn-off stems from the decision to disqualify ITS officers in the 58-plus age group from applying for re-employment. This has sparked off rumours that the retirement age at BSNL may soon be revised to 58, from 60 at present. 

BSNL had more than 1,300 ITS officers when it was carved out as a separate entity from DoT. 

The stakes are high for the majority of the ITS officers who are of the rank of general manager in 45-55 age group. 

If they opt to return to BSNL, they will have to first retire from government service and their pension will be linked to their current basic salary. But if they remain in central government service, their pension will be higher as it will be linked to their final basic salary. 

"The ITS officers have sought several clarifications on issues like compensation, seniority and pension impact in the new recruitment rules. We expect more people will opt for re-employment once BSNL clears the air on these issues," said a BSNL director directly involved with the hiring exercise. 

In a related development, the interior ministry has dismissed the telecom department's plea to move redundant ITS officers in the 58-plus age group to the surplus cell under the department of personnel. It is learnt to have questioned the rationale of declaring a sizeable number of senior BSNL officers as surplus when nearly 1,000 senior managerial slots remain vacant in the telco. A majority of these officers are in the rank of BSNL circle heads. 


--source Times of India

NE 12


After a Long persuasion DOT Secretary Approved NE 12 scale to Non Executives. This order will  not be with retrospective effect; Only prospective. Hundreds of Senior comrades has lost their legitimate right. 

No proposal to reduce the retirement Age to 58

Thursday, February 9, 2012

                            பிப்ரவரி -28   பொது வேலை நிறுத்தம்           

Saturday, February 4, 2012

CHQ News - 04/02/2012

1. NFTE wrote to CMD to utilize the opportunity (Cancellation 122 of licenses of 2G) to grab the subscribers through  the process of portability. It also requested the management to take appropriate steps , to that the BSNL get advantage of situation.

2. 28th February Strike : BSNL workers Alliance unions met on 3rd February, 2012 and decided to participate in the Strike of 28th February.BSNLWA is in favour that the Joint Notice and circular should be from all non- executive unions and not from any forum/ Alliance.  In the strike notice the following demands will be included. 1. Financial support to BSNL by Govt. And no Disinvestment / Privitisation. 2. No retrenchment of staff. 


Friday, February 3, 2012

2G- Verdict

2G

 2ஜி: 122 உரிமங்கள் ரத்து (தினமணி செய்தி)

First Published : 03 Feb 2012 05:48:12 AM IST

புது தில்லி, பிப் 2: மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக திமுகவின் ஆ. ராசா இருந்தபோது 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122 "2ஜி அலைக்கற்றை' உரிமங்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்கவேண்டும் என்ற பிரதமரின் அறிவுரையை ராசா புறக்கணித்துள்ளார் என்றும், சட்டத்துக்கு முரணான முறையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறி, ராசாவை நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
 மேலும், 2ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டில் பயனடைந்து, அதன் பிறகு விதிகளை மீறி பங்குகளை விற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 வீடியோகான், ஸ்வான், அலையன்ஸ் இன்ஃபராடெக் நிறுவனங்களுக்கு தலா ரூ. 4 கோடி, எடிசலாட், டாடா டெலிகாம், யூனிநார் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 கோடி, லூப், எஸ்ஸôர், எஸ்-டெல், சிஸ்டெமா ஷாம் நிறுவனங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த அபராதத் தொகையில் 50 சதவீதத்தை உச்ச நீதிமன்ற இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவிலும், மீதித் தொகையை பிரதமரின் பொது நிவாரண நிதியிலும் செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 "2ஜி அலைக்கற்றைக்கான உரிமங்கள் ஏல முறையில்தான் ஒதுக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறை குறித்த புதிய பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தர வேண்டும். அதையடுத்து ஒரு மாதத்தில் அதன் மீது மத்திய அரசு முடிவு எடுக்கவேண்டும். மொத்தத்தில், இன்றைய தேதியிலிருந்து நான்கு மாதத்துக்குப் பிறகு உரிம ரத்து அமலுக்கு வரும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஓருவரான நீதிபதி கங்குலி வியாழக்கிழமை பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதனால், உச்ச நீதிமன்ற மரபுப்படி, தலைமை நீதிபதி கே.எச். கபாடியா இடம்பெற்ற அமர்வில் பங்கேற்று அவர் விசாரணை நடத்தினார். அதனால், நீதிபதி கங்குலியுடன் சேர்ந்து 2ஜி வழக்கை விசாரித்து எழுதிய தீர்ப்பை மற்றொரு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி நீதிமன்றத்தில் வாசித்தார்.
 தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விஷயத்தில், மத்திய அரசு பின்பற்றிய "முதலாவதாக வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு' என்ற முறை கண்டனம் செய்யப்படக் கூடியது. இது முழுக்க முழுக்க அரசியல் சட்டத்துக்கு முரணானதும், பொது நலனுக்கு எதிரானதுமாகும்.
 தேசத்தின் மிக முக்கியமான பொதுச்சொத்தை, மிகக் குறைவான விலைக்கு ராசா ஒதுக்கீடு செய்துள்ளார். தேசத்தின் பொதுச்சொத்துக்கள் பொது நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேணடுமே தவிர, சில தனியார் நிறுவனங்களுக்காக அல்ல.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றப்பட்டிருந்தால், அதன் மூலம் நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.
 இந்த விஷயத்தில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு முரணான வகையில் உள்ளன. முறையற்ற வகையில் அலைக்கற்றை ஓதுக்கீடு செய்வதற்கு, அந்தப் பரிந்துரைகள் ராசாவுக்கு வசதியாக அமைந்துள்ளன.
 இந்தத் துறையில் அனுபவமில்லாத சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் நோக்கில், அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை அக்டோபர் 1, 2007-லிருந்து அந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதிக்கு ராசா தன்னிச்சையாக மாற்றியுள்ளார். சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த ஓதுக்கீடு நடைபெற்றுள்ளது. 1999-ம் ஆண்டின் தேசிய தொலைதொடர்புக் கொள்கையின் நோக்கங்கள் மீறப்பட்டுள்ளன.
 அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. சமூக அக்கறையுள்ள சில குடிமக்களின் முயற்சி காரணமாக இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இல்லாவிட்டால், அலைக்கற்றை என்ற பொது சொத்து, பணபலம் வாய்ந்தவர்களின் கைகளுக்குச் சென்றிருக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் மனு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணையைக் கண்காணிப்பது தொடர்பான மனுவின் கோரிக்கை பற்றி மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
 ஒரு வாரத்துக்குள் அதன் முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதற்கு வசதியாக, இதுவரை நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணை விவரத்தைக் கண்காணிப்பு ஆணையத்திடம் சிபிஐ உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 "2ஜி வழக்கு விசாரணையை சிபிஐ நேர்மையாக விசாரிக்கவில்லை என்பதால் அதன் விசாரணையைக் கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் பொதுநல வழக்காடு மையம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 இவரும் சுப்பிரமணியன் சுவாமியும் சேர்ந்து 2008-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வழங்கிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மூன்று வழக்குகளிலும் விசாரணை முடிவடைந்து ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

 உரிமம் ரத்து விவரம்
 யூனிடெக் (இந்தியா முழுவதும்) 22
 லூப் டெலிகாம் (மும்பை தவிர்த்த அனைத்து நகரங்கள்) 21
 சிஸ்டெமா (ராஜஸ்தான் தவிர்த்த பிற மாநிலங்கள்) 21
 டாடா டெலிகாம் (அசாம், ஜம்மு காஷ்மீர்,
 வடகிழக்கு மாநிலங்கள்) 3
 எடிசலாட் டிபி (பிகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரம்,
 தில்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகம், கேரளம்,
 ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு,
 உத்தரப் பிரதேசம் கிழக்கு, உத்தரப் பிரதேசம் மேற்கு) 15
 எஸ்-டெல் (அசாம், வடகிழக்கு மாநிலங்கள், பிகார்,
 ஒடிசா, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்) 6
 வீடியோகான் (பஞ்சாப் தவிர்த்த அனைத்து மாநிலங்கள்) 21
 ஐடியா (அசாம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், மேற்கு வங்கம், கொல்கத்தா வட்டம், வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா,
 பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்) 9
 ஸ்பைஸ் - ஐடியா (ஆந்திரப் பிரதேசம், தில்லி,
 ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள்) 4

 சிதம்பரம் விவகாரம்

 அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காகக் கட்டணம் நிர்ணயித்த விவகாரத்தில் ராசா தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்க முடியாது. அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் இதில் சமமான பங்கு உள்ளது. அதனால் சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
 "சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமா? இல்லையா? என்பதை விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம். இது தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 

Wednesday, February 1, 2012

புயல் நிவாரணம்

 மாநில சங்கச் செய்தி

தானே புயல் நிவாரணமாக, ஊழியர்களுக்கு ரூபாய் 10,000/- வட்டியில்லா கடன் வழங்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது!

இது குறித்து, நிர்வாக உத்தரவுகள் வெளியானவுடன், ஊழியர்கள் விண்ணப்பம் கொடுத்து, இந்த நிவாரணத் தொகையினை, கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்க, கடலூர் தொலைதொடர்பு மாவட்டத்திற்கென, கார்பொரேட் அலுவலகம் ஒரு கோடி ரூபாயினை ஒதுக்கியிள்ளது.

நிர்வாகத்திற்கும், மாநில சங்கத்திற்கும் நமது நன்றி!

                                           தோழமையுடன்,
                                           சுந்தரமூர்த்தி
                                           (மாவட்டச் செயலர்)

Interpretation of Two Family Pension